மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 22 மார்ச், 2017

10. என்னைப் பற்றி நான் - ஜோதிஜி

ந்த வாரம் தன்னைப் பற்றிச் சொல்பவர் நான் பிறந்த சிவகங்கை மாவட்டத்தில் எங்கள் ஊரில் இருந்து 20 கிமீக்குள் பிறந்து பணி நிமித்தம் திருப்பூரில் வசிக்கும் அண்ணன் ஜோதிஜி அவர்கள். இவரைப் பற்றி அறிமுகம் தேவையில்லை... எல்லாரும் அறிந்த பதிவர்... கலைமகள், அலைமகள், மலைமகள் என முப்பெரும் தேவியருக்கு தந்தை என்பதால் தன் தளத்தை தேவியர் இல்லம் ஆக்கி, மிகச் சிறப்பான கட்டுரைகளைப் பகிர்ந்து வருகிறார். தேவியர் நிறைந்த இல்லத்தில் வாழ்வதும் சுகமே. இவர் எழுதும் பதிவுகளெல்லாமே அரசியல், வாழ்க்கை, தொழில் என வித்தியாசமான களத்தில் பயணிக்கும்.   ஒவ்வொரு பதிவும் நீளமாய்... விரிவான அலசலாய் இருக்கும்... அங்கு வரும் பின்னூட்டங்கள் கூட தனிப் பகிர்வாக பகிரும் அளவுக்கு இருக்கும்.

'என்னைப் பற்றி நான்' எழுதுங்க அண்ணா என்று சொன்னபோது தொழில் நிமித்தமான பயணத்தில் இருப்பதால் விரைவில் அனுப்புகிறேன் என்று மின்னஞ்சல் அனுப்பினார். அதன் பின்னர் ஒருநாள் எழுதி அனுப்பி விட்டு பிடிச்சிருக்கான்னு பாருங்க என்றார். ஏறத்தாழ 15 பக்கங்கள்... வாசித்ததும் வியந்தேன்... என்னைப் பற்றி நான் என்பதை முழுவதும் உள்வாங்கி மூன்று தலைமுறைகளை நம் கண் முன் நிறுத்தி  தன்னைப் பற்றி மிக விரிவாய் எழுதியிருக்கிறார். 

டாலர் நகரம் என்னும் புத்தகத்தின் ஆசிரியரான இவரின் புத்தகம் ஆக வேண்டிய மிகச் சிறந்த படைப்புக்கள் எல்லாம் மின்னூலாய் ஆக்கப்பட்டிருக்கின்றன.  பழைய குப்பைகள் என்னும் அவரின் மின்னூல் குறித்தான பார்வையை என்னையும் எழுதச் சொல்லி தன் தளத்தில் பகிர்ந்து கொண்டவர். இனி அவரைப் பற்றி என்ன சொல்கிறார் என நீண்ட பதிவை பொறுமையாக வாசியுங்கள்... பதிவின் முடிவில் இந்த எழுத்துக்கு எத்தனை சக்தி என்பதை உணர்வீர்கள்... இதேபோல் நாமும் எழுத வேண்டும் என இனி எழுத இருப்பவர்களை கண்டிப்பாக நினைக்க வைக்கும்.


வாழ்க்கை என்பது ரசனையாகப் பார்க்க வேண்டியது. குறுகிய காலத்திற்குள் வாழ்ந்து முடிக்க வேண்டிய ஒரு சம்பவம்" என்று யாராவது உங்களிடம் வந்து சொன்னால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? வாழ்க்கையை அனுபவிக்கப் பணம் வேண்டுமே? பணம் என்ற காகிதத்தால் கட்டப்படும் வீடு தான் வாழ்க்கை என்பதாக மாறியுள்ளது.

விபரம் தெரிந்த நாட்கள் முதல் அடிப்படை பிரச்சனைகள் ஏதுமில்லை, வறுமை, துன்பம் போன்ற எதையும் வாழ்க்கையில் இதுவரையில் பார்த்ததில்லை. பணம் குறித்த வெறித்தனமும் மனதில் தோன்றவும் இல்லை. மக்கள் பெரும்பான்மையாக நம்பும் இந்தப் பணம் சார்ந்த கொள்கையைப் புறக்கணித்தே வந்த காரணத்தால் இன்று வரையிலும் நான் பிறந்த குடும்பமும் சரி, மனைவி வழி சொந்தங்களின் பார்வையிலும் இன்று வரையிலும் "அந்நியன்" போலவே தெரிகின்றேன்.

தொழில் சார்ந்த விசயங்களில் அதிர்ஷ்டம் என்ற தேவதை தூரத்தில் இருந்தபடியே தான் கவனிக்கும். ஆனாலும் தேவையான ஒவ்வொன்றும் அந்தந்த சமயங்களில் கிடைத்துவிடும். வீட்டில் மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் கேள்வி கேட்கும் வாழ்க்கை வாழ்ந்தாலும் என்னைக் கேலியாகப் பார்க்கும் வாழ்க்கை அமையாமல் இருந்தது தான் என் அதிர்ஷ்டம்.

நமக்கு முன்னால் வாழ்ந்து இறந்தவர்கள், சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் 90 சதவிகித மனிதர்கள் எவருமே வெற்றியாளர்களாக வாழ்ந்தது இல்லை. இங்கு நான் வெற்றி என்ற வார்த்தையால் குறிக்கப்படுவது அவரவர் அடிப்படைத் தேவைகளைப் போராட்டமின்றி இயல்பாகப் பெறுதல். இதற்கு மேலாகத் தாங்கள் உழைத்த உழைப்புக்கு உண்மையிலேயே கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம். ஆனால் இவை இரண்டுமே ஒவ்வொரு காலகட்டத்திலும் 10 சதவிகித மக்களுக்குக் கிடைத்து இருந்தால் கூட அது ஆச்சரியமாக உள்ளது. ஏன் என்று யோசித்துப் பார்த்தால் அவரவர் சூழ்நிலைகள் தான் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

இங்கு தான் "என் கதை" என்ற வார்த்தைகளும், "என்னைப் பற்றி" என்ற சுயதேடலும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இங்கு எவரும் தன்னைப் பற்றி முழுமையாக எழுத விரும்புவதில்லை. இதன் காரணமாக முக்கியப் பிரபல்யங்கள் எவருமே சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த  விரும்புவது இல்லை. ஆனால் தம்பி குமார் என்னிடம் கோரிக்கை வைத்த "அண்ணா உங்களைப் பற்றி எழுதுங்கள் " என்ற வாசகம் அடங்கிய மின் அஞ்சலை வாசித்த போது நேர்மையாக நம்மால் எழுத முடியுமா? என்று யோசித்தே பல வாரங்கள் கடந்து விட்டது.

கடந்த பத்தாண்டுகளாக எழுதும் ஆர்வம் வந்த பிறகே எங்கள் குடும்பப் பின்னணி குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவானது. என் வெற்றிக்கும் தோல்விக்கும் என்ன தான் நான் வாழும் சூழ்நிலையைக் காரணம் காட்டினாலும் ஒவ்வொரு இடத்திலும் என் குணாதிசியங்கள் தான் முக்கியப் பங்கு வகிக்கின்றது என்பதனை மறுக்க முடியாது. இதன் காரணமாகவே என் முந்தைய தலைமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.

உறவினர்களை ஒவ்வொரு விசேட நிகழ்ச்சியில் சந்திக்கும் போதெல்லாம் நான் பல கேள்விகள் எழுப்புவதுண்டு. ஆனால் எவரும் முழுமையான தகவல்களைப் பரிமாறத் தயாராக இல்லை. காரணம் அவர்களுக்கு அது குறித்த ஆர்வமும் இல்லை. வாழ்ந்து மறைந்தவர்கள் எவருமே சிறப்பான செயல்களைச் செய்தவர்களாகவும் இல்லை. இதற்கு மேலாக நம்மவர்களுக்கு வரலாறு என்பது பிடித்தமானதாக இல்லை. கசப்புகள் என்பதனை மறக்கவே விரும்புகின்றார்கள். ஒவ்வொருவரும் வாழ்க்கை முழுக்கப் போராட்டத்துடன் தான் வாழ்ந்து முடித்து மறைந்துள்ளார்கள்.

நவீனங்கள் ஆட்சி செய்யும் தற்காலத்தில் கூட வாசிப்பு ஆர்வம் என்பதே 90 சதவிகித மக்களுக்கு இல்லை என்பதோடு இதெல்லாம் தெரிந்து உனக்கு என்ன ஆகப் போகுகிறது? பிழைக்கிற வழியைப் பார்? என்ற ஒரு பதிலைத்தான் அத்தனை பேர்களும் சொல்லி வைத்தாற் போலச் சொல்லிவிட்டு நகர்ந்து விடுகின்றார்கள். சரி, நாம் தான் தவறான விதமாக யோசிக்கின்றோம்? இவர்கள் பணம் சார்ந்த விசயங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்துள்ளார்கள்? அவர்கள் நினைத்த வசதிகளை அடைந்துள்ளார்களா? என்று கேள்வி கேட்டால் அதிலும் முழுமையான தோல்வியைத் தான் தழுவியுள்ளார்கள். ஆக மொத்தத்தில் பணத்தைப் பற்றி மட்டும் யோசித்து, அதன் பின்னாலே அலைந்து அத்தனை பேர்களும் நிராசையுடன் தான் மறைந்துள்ளார்கள்.

இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டே என்னைப் பற்றி யோசித்த போது என் தலைமுறைகளைப் பற்றி நான் அறிந்த தகவல்களை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன். அதன் பிறகே என் சமகால வாழ்க்கையைக் கோர்த்து வைக்க முடியும் என்று நம்புகின்றேன்.

தாத்தாவின் அப்பா பெயர் ரெங்கசாமி. அவரைப் பற்றி எந்தத் தகவலையும் என்னால் திரட்ட முடியவில்லை. குறிப்பாக அவர் மனைவி குறித்துத் தெரிந்து கொள்ள மிகவும் பிரயாசைப்பட்டேன். அவர் பெயரோ, அவர் பின்புலம் குறித்தே எவருக்கும் தெரியவில்லை. ஆனால் இரண்டு ஆண்கள் ஒரு பெண் குழந்தை என்பதில் இருந்து குடும்பச் சங்கிலி தொடங்குகின்றது. இவர்கள் முந்தைய புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கீழ் உள்ள மடத்துப்பட்டி என்ற கிராமத்தில் வாழ்ந்துள்ளார்கள். அடிப்படை விவசாயம் சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள். தாத்தாவுடன் பிறந்த மற்றொரு சகோதரர் மற்றும் ஒரு சகோதரியுடன் மடத்துப்பட்டியில் வாழ்ந்து வந்தாலும் பஞ்சம் பிழைப்பது போல நான் பிறந்த புதுவயல் கிராமத்திற்குத் தாத்தா மட்டும் தன் மனைவியுடன் இடம் பெயர்ந்துள்ளார். இந்தக் கிராமம் பழைய இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தது. இப்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பெரிய ஊர் காரைக்குடி.

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தாத்தா இறந்து விட்டார். இவருடன் ஒரு வருடம் நெருங்கிப் பழகியுள்ளேன். ஆனால் இவர் எவருடனும் ஒட்ட மாட்டார். இவர் பெயர் சுப்பையா. இவர் என்னுடன் பழகியதற்கு முக்கியக் காரணம் பள்ளிவிட்டு வந்ததும் இவருக்கும் தினந்தோறும் மாலை சிற்றுண்டி கொண்டு போய்க் கொடுக்கச் செல்வேன். அப்போது அவரைத் தவிர மற்ற அத்தனை பேர்களையும் பற்றியும் குற்றச்சாட்டாக வைக்கும் பல விசயங்களை அமைதியாகக் கேட்டுக் கொண்டு அவருக்குக் கொடுக்கப்பட்ட இனிப்புப் பட்சணத்தை வாங்கித் தின்று விட்டு வந்து விடுவதுண்டு. அப்போது இவர் யார்? இவர் பின்புலம் என்ன? என்பதெல்லாம் கேள்வி கேட்கத் தெரிந்ததில்லை. குறிப்பாக அவர் மனைவி குறித்துத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லாம் இல்லை.

கிராம பின்புலத்தைக் கொண்டு வளரும் சிறுவர்களுக்கு என்ன தான் பத்திரிக்கைகள் வாசித்தாலும் வெளியுலகத்திற்கும் அவர்களின் அடிப்படைச் சிந்தனைகளுக்கும் எப்போது ஒரு பெரிய இடைவெளி இருந்து கொண்டேயிருக்கும். அப்படித்தான் என் 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரைக்கும் எனக்கும் இருந்தது. நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும். புதிய விசயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை நெறிப்படுத்த எவரும் இல்லை. ஆறாம் வகுப்பு முதல் வாசிப்பு என்பது வெறித்தனமான ஆர்வமாக இருந்தது. எங்கள் ஊரில் இருந்த நூலகத்தில் இருந்த பெரும்பாலான புத்தகங்களை வாசித்து முடித்துப் புதிய புத்தகங்கள் எப்போது வரும்? என்று நூலகரிடம் கேட்கும் அளவிற்கு வாசிப்பு என்பது உயிர்மூச்சு போல என்னுள் இருந்தது.

கல்லூரி சென்ற போதும், சென்னையில் ஒரு வருடம் வாழ்ந்து பின்னர்த் திருப்பூர் வந்து சேர்ந்து 25 வருடங்கள் முடிந்த போதும் இன்னமும் அடிப்படைச் சிந்தனைகள் கிராமத்துவாசியாக உள்ளது. இந்த இடத்தில் தான் அவரவர் வாழ்ந்த குடும்பத்தின் தாக்கம் பங்கு பெறுகின்றது.

காரணம் என் இன்றைய குணாதிசியங்கள் எங்கே இருந்து தொடங்கியது என்றால் அடிப்படையில் தாத்தாவின் மரபணுவில் தொடங்கி அப்பாவின் மரபணு ஆழப்பதிந்து இன்று உன்னால் இதற்கு மேல் உன் சுபாவத்தை மாற்றிக் கொள்ள முடியாது என்கிற வரைக்கும் வந்து நிற்கின்றது.

தாத்தா புதுவயல் கிராமத்தில் வந்து சேர்ந்து கையில் வைத்திருந்திருந்த பணத்தை வைத்து சிறிய சிறிய தொழில்கள் செய்து வாழ்ந்து வந்துள்ளார். என் பாட்டியைக் குறித்து அதிகம் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டதற்கு முக்கியக் காரணம் உண்டு. அவர் வாழ்வில் நடந்த சில ஆச்சரியமான சம்பவங்கள். என் தாத்தாவிற்கு அவரின் கடுமையான முயற்சியின் பலனாகப் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் கடைசியில் மூன்று ஆண் குழந்தைகள் மட்டும் மிஞ்சியது. அதிலும் ஒரு சுவராசியம் என்னவென்றால் முதலாவது, இரண்டாவது குழந்தைகள் குறுகிய காலத்தில் இறந்து விட மூன்றாவதாக இவர்கள் ராமேஸ்வரத்தில் கடலில் நின்று மடிப்பிச்சை ஏந்தி இந்தக் குழந்தை தங்க வேண்டும். உன் பெயரை வைக்கின்றோம் என்று சொல்லி பிறந்தவர் இராமநாதன். இவர் தான் என் அப்பா. அடுத்து இரண்டு குழந்தைகள் இறந்து விடக் காசியில் போய் வேண்டு கொள் வைத்துப் பிறந்தவர் சித்தப்பா காசி விஸ்வநான். அடுத்து இரண்டு குழந்தைகள் இறந்து விடத் திருவண்ணாமலை போய் வேண்டுகோள் வைத்துப் பிறந்தவர் கடைசிச் சித்தப்பா அண்ணாமலை. மூன்று பேர்களும் கடைசி வரைக்கும் ஆரோக்கியமாக இருந்தார்கள். மூன்று பேர்களும் இப்போது இல்லை.

இந்தச் சுவராசியத்தை அம்மாவிடம் கேட்டுத் தெரிந்த போது வேறு சில தகவல்கள் கிடைத்தது. என்னுடன் கூடப் பிறந்தவர்கள் மொத்தம் 12 பேர்கள். பத்து வயதில் ஒரு பெண் குழந்தை இறந்து விட்டது. ஆறு ஆண்கள். ஆறு பெண்கள். இயற்கை சரியாக அதன் வேலையைச் செய்துள்ளது?

அதே போலக் கடைசிச் சித்தப்பாவுக்குப் பத்துக் குழந்தைகள். இவர்கள் இருவரும் தன் அம்மா சொன்ன வாக்கின்படி எக்காரணம் கொண்டு "கருத்தடை மட்டும் செய்யக்கூடாது" என்ற கொள்கையின் அடிப்படையில் அயராது பாடுபட்டு ஒரு சிறிய கிராமத்தை உருவாக்கினார்கள். நடுவில் உள்ள சித்தப்பா மட்டும் "போங்கடா நீங்களும் உங்க சபதமும் " என்று வேறுபக்கம் ஒதுங்கி விட இரண்டு ஆண் குழந்தைகளுடன் தப்பித்து விட்டார்.

இதே போல அம்மாவின் குடும்பத்திலும் மற்றொரு சுவராசியம் உண்டு. அம்மாவுடன் கூடப் பிறந்தவர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள். ஆனால் மற்ற அத்தனை பேர்களும் குறுகிய காலத்திற்குள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்து விட்டனர். அம்மா ஒருவர் மட்டுமே பிழைத்துள்ளார். பாட்டி (அம்மாவின் அம்மா) பயந்து கொண்டு 16 வயதிலேயே திருமணம் செய்து கொடுத்து விட்டார். என் மூத்த அண்ணன் பிறந்த போது அம்மாவின் வயது 18.

இன்று வரையிலும் அம்மாவிடம் (அப்பாவின் அம்மா) பாட்டியைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம் பூரிப்போடு பலவற்றைச் சொல்வார். ஆனால் தாத்தா பற்றிக் கேட்கும் போதெல்லாம் அவர் பற்கள் நறநறக்கும். காரணம் அப்படிப்பட்டவர் தாத்தா?

இன்று சாதி என்ற வார்த்தைகளை வெறுக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். ஆனால் இந்தச் சாதி என்ற கட்டமைப்பு பல குணாதிசியங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்கள் செய்யும் தொழில், அவர்கள் சார்ந்த உறவு முறைகளின் பழக்கவழக்கங்கள், சடங்கு, சம்பிரதாய வழிபாட்டு முறைகள் எனக் கலந்து கட்டி குறிப்பிட்ட குணாதிசியங்களை உருவாக்கியதாக இருக்கும். இது சரி? தவறு? என்ற வாதத்திற்குள் நான் செல்லவிரும்பவில்லை. ஆனால் செட்டியார் என்ற சமூகம் என்பது எதிலும் முரட்டுத்தனம் காட்டாத அமைதி வாழ்க்கையை விரும்பக்கூடிய சமூகத்தைக் கொண்டவர்கள் கொண்ட வாழும் அமைப்பு. ஆனால் தாத்தாவின் குணம் நேர்மாறானது. அப்பட்டமான முரடன். அதுவும் நான் நினைப்பது நடக்காவிட்டால் திரைப்படங்களில் பார்ப்பது போலக் குறிப்பாகப் பெண்கள் மேல் அதீத வன்முறை பிரயோகம் தான். அடித்தவர் மயக்கம் வந்து சாய்ந்தபிறகே அவர் சாமியாட்டம் நிற்கும். மூன்று பையன்களையும் அப்படித்தான் வளர்த்தார். அதற்கு மேலாகத் தன் மனைவியையும் அப்படித்தான் வைத்திருந்தார். இவருக்கு இந்தக் குணாதிசியம் உருவாகக்காரணம் என்ன? என்று அம்மாவிடம் கேட்ட போது "அந்த முரடனைப் பற்றிக் கேட்டு மேலும் மேலும் என் கோபத்தைக் கிளறாதே?" என்று முடித்து விட்டார். தாத்தாவின் முரட்டுத்தனம் எந்த அளவுக்கு நீண்டு இருந்தது தெரியுமா? என் பாட்டி இறப்பதற்கு முன்னால் வாழ்ந்த கடைசி ஐந்து வருடங்கள் மனநலம் பிறழ்ந்து இறக்கும் தருவாயில் தான் இருந்துள்ளார்.

அவர் மனநலம் பிசகி இருந்த போது நான் இரண்டு வருடக்குழந்தை. அம்மா கொல்லைப்புறத்தில் வேறேதோ வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பாட்டி என்னைத் தூக்கிக் கொண்டு அருகே ரயில்வே தண்டவாளத்தில் நடுவில் என்னைப் படுக்க வைத்துக் கொண்டு ரயில் வந்தவுடன் உனக்குக் காட்டுகின்றேன் என்கிற அளவுக்கு இருந்துள்ளது. அந்தப் பக்கமாக ஆடு மேய்க்க வந்தவர்கள் பாட்டியை இழுத்துக் கொண்டு என்னையும் தூக்கிக் கொண்டு வந்து வீட்டில் கொடுத்துள்ளார்.

இதனையும் தாண்டி பாட்டி கடைசி வரைக்கும் மகிழ்ச்சியாக வாழ்ந்ததற்குக் காரணம் என் அம்மா வரிசையாகப் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த குழந்தைகள். பேரக்குழந்தைகள் மேல் அலாதியான ஈடுபாடு. கணவரிடம் கிடைக்காத அத்தனை பிரியங்களையும் ஒவ்வொரு குழந்தைகள் மேல் திகட்ட திகட்டப் பகிர்ந்துள்ளார். இதே போல அம்மாவின் அம்மாவிற்கும் தனது பேரக்குழந்தைகள் மேல் அதிக ஈடுபாடு. காரணம் இரண்டு பாட்டிகளும் குழந்தைகள் என்பதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுக்கப் பணயம் வைத்திருந்த அபாக்கியசாலிகள்.

தாத்தாவின் குணாதிசியம் அவர் பெற்ற பையன்களில் இரண்டு பேருக்கு வந்து விட்டது. அப்பாவும், இரண்டாவது சித்தப்பாவும் அக்மார்க் முரடன்கள். அவரவர் மனைவிகள் பட்ட பாடுகள் அதுவொரு தனிக்கதை. குறிப்பாக என் அம்மா மூத்த மருமகள் என்ற பெயரில் அவர் உழைத்த உழைப்பு என்பது இன்றைய பெண்கள் உழைப்போடு ஒப்பிட்டுப் பார்த்தால் பத்துப் பெண்கள் செய்ய வேண்டிய வேலைக்குச் சமமாகவே இருக்கும்.

தாத்தா என் கணக்குப்படி அடிப்படைக் கல்வி அதாவது எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டிருப்பார் என்று நினைக்கின்றேன். எங்கள் ஊரில் அப்போது பள்ளி இல்லாத காரணத்தால் அருகே உள்ள கண்டனூரில் தான் அப்பாவும் இரண்டு சித்தப்பாக்களும் படித்துள்ளார்கள். மூன்று பேர்களுமே படிப்பில் சுமார் ரகம் தான். பத்தாம் வகுப்பை முடித்து விட்டு ஆளை விட்டால் போதும் என்று ஒதுங்கி விட்டார்கள். ஆனால் அப்பா தலையெடுத்தபிறகு தான் கடைகள், வயல்கள், சொத்துக்கள் என்று விரிவாக்கம் நடந்ததுள்ளது. 200 மடங்கு உழைப்பாளி. அதே சமயத்தில் தாத்தா போல முரட்டுத்தனம். எடுத்தவுடன் கை வைப்பது தான் அவர் கொள்கை. நான் பள்ளிக்கூடம் முடிக்கும் வரையிலும் பசுமாடு, காளைமாடு, ஆடு என்று பிராணிக்கூட்டம் ஒரு பக்கம், இவர்களைக் கவனிக்க வேலையாட்கள் மற்றொரு பக்கம், இதைத்தவிர வயல்வேலைகளுக்கு ஒரு கூட்டம், கடை வேலைகளுக்கு என்று வேலையாட்கள் கூட்டம். இது தவிர வருடந்தோறும் வந்து கொண்டிருக்கும் குழந்தைகள் எண்ணிக்கை. கூட்டுக்குடித்தனம். இப்போது யோசித்துப் பார்த்தாலும் அம்மா எப்படி இத்தனைக்கூட்டத்தையும் சமாளித்தார் என்று வியப்பாகவே உள்ளது. காலை, மதியம், இரவு மூன்று வேலையும் குறைந்தபட்சம் 40 பேர்களுக்காவது அடுப்பு எறிந்து கொண்டேயிருக்கும். வெள்ளிக்கிழமை தவிர அத்தனை நாட்களும் அசைவம் என்பது இயல்பான ஒன்றாக இருந்தது.

பக்தி, ஒழுக்கம், உழைப்பு இதை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த கூட்டத்தில் நான் இவர்களின் குணாதிசியத்தில் இருந்து வெளிவர 25 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. என்னுடன் பிறந்து ஆறு சகோதரிகளும் இன்று வரையிலும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கூடப்பிறந்த ஐந்து சகோதரர்களும் தெளிவான வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அடிப்படைப் பிரச்சனைகள் எதுவுமில்லை. அதிகப்படியான ஆசைகளையும் அவர்கள் வளர்த்துக் கொள்ளவில்லை. பட்டதாரிகள், முதுநிலைக்கல்வி என்று அப்பா தன் அடிப்படைக்கடமைகளைத் தெளிவாகவே செய்துள்ளார். எங்கள் குடும்பத்தில் மூன்று பேர்கள் அரசு ஊழியர்கள். ஆனால் என்னைத் தவிர வேறு எவருமே வெளியே ஒரு உலகம் உள்ளது என்பதனை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள். வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் என்று பயணப்பட்டதில்லை. உள்ளுருக்குள் தங்கள் எல்லையைச் சுருக்கிக் கொண்டவர்கள். வெளிநாடுகள் வரைக்கும் அலைந்து திரிந்த எனக்கு அவர்களின் எண்ணங்கள் ஆச்சரியமாக இருக்கும். அவர்களுக்கே என்னைப் பார்க்கும் போது ஆதங்கமாகத் தெரியும்.

முந்தைய தலைமுறைகள் போலத் தங்கள் உலகம் என்பது தாங்கள் வாழும் பகுதிக்குள்ளேயே முடிந்து விடும் என்று இன்றுவரையிலும் ஆழமாக நம்பிக் கொண்டு இருப்பவர்கள். இந்த ஒரு குணாதிசியமே இவர்களுக்கும் எனக்கும் ஒரு பெரிய அகழியை உருவாக்கிப் பிரித்து வைத்துள்ளது. நான் எவருடனும் நான் அதிகம் ஒட்டுவதில்லை. அதே சமயத்தில் விலகி நிற்பதுமில்லை. தேவைப்படும் சமயங்களில் தலையைக் காட்டிவிட்டு நகர்ந்து வந்து விடுவதுண்டு. எனக்கு முன்னால் என்னைப் பற்றி எவரும் பேசவே பயப்படுவார்கள். காரணம் தாத்தா, அப்பாவிடம் எனக்கு மட்டும் வந்து சேர்ந்த அந்த முரட்டுத்தன ஜீன் மூலக்கூறு.

தாத்தா, அப்பாவைப் பற்றிப் பேசிய போல இரண்டு பாட்டிகள் மற்றும் என் அம்மாவைப் பற்றிச் சொல்ல சில வார்த்தைகள் சில உண்டு. மூன்று பெண்களுமே அக்மார்க் உச்சகட்ட பிடிவாதம் கொண்டவர்கள். கணவன் என்பவன் தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டியவன் என்ற அவர்களின் அடிப்படைக் கொள்கை அடிவாங்க அவர்களின் மாற்ற முடியாத பிடிவாதங்களை ஆண்வர்க்கம் வன்முறை வெறியாட்டத்தின் மூலம் தான் தங்கள் ஆளுமையை நிலைநிறுத்தி உள்ளனர். இயற்கையிலேயே தாய்வழி சமூகமாக இருந்த அமைப்பு இன்று தந்தைவழி ஆதிக்கச் சமூகமாக மாறினாலும் இன்று என் மனைவி வரைக்கும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டவே விரும்புகின்றார்கள்.

மேலே சொன்ன இரண்டு தலைமுறைகளின் மொத்த குணாதிசியங்கள் என்னிடமும் இருந்தது. இவர்கள் தங்கள் ஆளுமையை வீட்டுக்குள் இருக்கும் பெண்களிடம் மட்டும் தான் காட்டியுள்ளனர். நான் பள்ளி முதல் திருப்பூர் வாழ்க்கையின் முதல் பத்து வருடங்கள் வரைக்கும் வெளி இடங்களிலும் எதற்கும் அஞ்சாத கலகக்காரனாகவே இருந்துள்ளேன். திருப்பூர் வாழ்க்கையில் தொடக்கக் காலத்தில் என் குடும்பத்தைச் சம்மந்தப்படுத்தித் தவறாகப் பேசிய முதலாளியைத் துணி வெட்டப் பயன்படுத்தும் கத்திரி மூலம் குத்தப் பாய்ந்துள்ளேன். உடன் பணிபுரிந்தவர்கள் தாங்கள் செய்த தவறுகளை என் மேல் சுமத்தி தப்பிக்கப் பார்த்த போது வெளுத்து வாங்கியுள்ளேன். நேர்மைக்கு மதிப்பு இல்லாத தொழில் நகர வாழ்க்கையில் வெளியே பகிர்ந்து கொள்ள முடியாத அத்தனை அழுத்தங்களும் உள்ளே வன்முறையாக மறைந்து இருந்ததை உணர்ந்து என்னை மாற்றிக் கொள்ள நிறையவே பிரயாசைப்பட்டுள்ளேன்.

இதன் காரணமாகவே குடும்பம் என்பதும், பெண்களை நமக்குக் கையாளாத் தெரியாது? என்ற பயத்தின் காரணமாகவே திருமணம் என்பது கூட வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தேன். அப்பா இறப்பும், குடும்பத்தினர் என்னால் படக்கூடிய துயரங்களும் மனதில் வலியை உருவாக்க 33 வயதில் குடும்பத்தினர் பார்த்து வைத்திருந்த வசதியான அழகான பெண்களைப் புறந்தள்ளி இயல்பான என் குணாதிசியத்தை மாமனாரிடம் தெரியப்படுத்தித் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தேன். என் நான்காவது அக்கா மூலம் பார்த்த வரன் இது. குடும்பத்தினர் இன்னும் சிறப்பான வசதிகளைக் குறிப்பாக அரசு பதவியில் உள்ள பெண்களைத் தேர்ந்தெடுக்க விரும்பினர். அவர்கள் விருப்பங்களை மீறியே செயல்பட்டேன்.

என் விருப்பப்படி, என் கட்டளைப்படி தான் மனைவி இருக்க வேண்டும் என்ற முரட்டுத்தனம் எனக்குப் பல இழப்புகளைத் தனிப்பட்ட பொருளாதார வாழ்க்கையில் உருவாக்கினாலும் இன்று மூன்று குழந்தைகளுக்கும் தேவையான அனைத்து விசயங்களும் மற்ற குடும்பங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் எதிர்பார்த்தற்கு மேலே நிறைவாக மனைவி மூலம் கிடைத்துள்ளது.

மனைவியைப் பற்றி எல்லாக் கணவர்களும் அவர் இறந்த பின்பு தான் பிரிவு சோகம் தாங்காமல் எழுத்துலகில் பகிர்கின்றனர். ஆனால் என் மனைவி ஒரு வகையில் பரிதாபப்பட வேண்டிய ஜீவன். காரணம் கடைசிக் குழந்தையாக அவர்கள் குடும்பத்தில் பிறந்த காரணத்தால் எது குறித்த அக்கறையும், கவலையும் இல்லாமல் வாழ்ந்து வந்தவர். என்னுடன் வாழத் தொடங்கியதும், அடுத்தடுத்துக் குழந்தைகள் வந்து சேர உழைக்க வேண்டிய உழைப்பும், அவருக்குள் இருக்கும் இயல்பான சோம்பேறித்தனமும் ஒன்றை ஒன்று கேள்விக் கேட்கத் தொடங்கி விட்டது?

என் மனைவியும் நான் பிறந்த குடும்பத்தைப் போலவே சில விசயங்களில் வாழ விரும்புவர். வீட்டுக்கு வெளியே ஒரு உலகம் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளாமல் தனக்கான ஒரு உலகத்தை உருவாக்கிக் கொண்டு வாழ்பவர். உலக நியதிகளை மீறி வாழ விரும்புவனுடன் வாழ்க்கைத் துணையாக இருந்தால் என்ன நடக்கும்? அது தான் திருமணமான தொடக்கத்தில் நடந்தது.
ஆனால் இரட்டைக்குழந்தைகள் மற்றும் அடுத்த வருடமே அடுத்தக் குழந்தை என்று வந்ததும் நிறையவே தடுமாறிவிட அத்தனை இடங்களிலும் நானே தாயுமானவன் போல இருந்தேன். அவரால் சமாளிக்க முடியவில்லை என்ற போதும் அத்தனை பாரங்களையும் நானே சுமந்தேன்.

காரணம் தொழில் வாழ்க்கை அழுத்தங்கள், நேர்மைக்குக் கிடைக்காத மரியாதை, தொழில் நகர மனிதர்கள் உருவாக்கிய வெவ்வேறு விதமான குணாதிசியங்கள் என்று அனைத்தும் என்னை அழுத்திக் கொண்டே இருக்க அனைத்தையும் இனம் பிரிக்கத் தெரியாமல் தோல்விகளையும், இழப்புகளையும் அவர் மேல் காட்ட முட்டல், மோதல் என்று வாழ்க்கை ரணகளமாக மாறியது. குழந்தைகள் வளர வளர என்னை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டேன். இன்று நம்பமுடியாத அதீத திறமைகள் கொண்ட குழந்தைகள் கொடுக்கும் அடியையும், வார்த்தைகளுக்கும் பயந்து கொண்டு அப்பா என்ற என் பதவியைக் காப்பாற்ற அப்பாவியாக மாறிப் போனது தான் என் வாழ்க்கையின் திருப்புமுனை.

கடந்த பத்தாண்டுகளாக முதலாளிக்கு அடுத்த நிலையில் உள்ள பதவி மற்றும் அதற்கேற்ற வசதிகள். ஆனால் நான் முதலாளியாக மாற முயற்சிக்கவே இல்லை. காரணம் முதல் தலைமுறை அல்லது இரண்டாவது தலைமுறை என்று எவராக இருந்தாலும் தொழிலதிபர் என்பது எளிதானது அல்ல. பணம் சார்ந்த எண்ணங்களில் உள்ள தீவிரம் தான் உங்களை வேலைக்காரனாக அல்லது முதலாளியாக மாற்றுகின்றது என்று உறுதியாக நம்புகின்றேன். நமக்கு எத்தனை ஆசை வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இயற்கையான சுபாவம் பலவற்றுக்கு ஒத்துழைக்காது. எனக்குக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இதற்குப் பின்னால் உள்ள நிதர்னம் புரிந்தது.

திருப்பூரில் உள்ள அத்தனை முதலாளிகளும் முதல் தலைமுறை தொழிலதிபர்கள். அவர்கள் தலைமுறையில் பணம் ,வசதி வாய்ப்புகள் என்பதனையே இந்தத் தலைமுறையில் தான் பார்க்கின்றனர். ஒரு தொழில் விரிவாக்கத்திற்கு இரண்டு முக்கிய விசயங்கள் தேவை. ஒன்று போட்டியில் வெல்லும் அளவிற்கு நிர்வாகத்திறமை மற்றும் குழுவினர்களின் அர்ப்பணிப்பான உழைப்பு. இரண்டாவது தனக்குச் சமமாக எவரையும் வளர விடாமல் தடுப்பது. இரண்டாவது தான் திருப்பூர் தொழிலில் நடந்தது. விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்கள் கூட இங்கே நேர்மையான முறையில் தொழில் செய்து வளர்ந்தவர்கள் இல்லை. தொழில் கொள்கைகள் என்பது மனித இரத்தங்களைச் சுவைக்கும் மனப்பான்மைக்குச் சமமாக இருக்க வேண்டும் என்று புரியத் தொடங்கிய போது என் பண வேகம் குறைந்து மன வேகத்தை என் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டேன்.

மேலும் என் தொழில் வாழ்க்கையில் நிர்வாகம் சார்ந்த விசயங்களில் எதற்குமே அஞ்சாத குணமென்பது ஒவ்வொரு சமயத்திலும் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த உதவியுள்ளது.

பத்துப் பேர்கள் எதிரியாக மாறி என் வீழ்ச்சிக்கான செயல்பாடுகளை முன்னெடுத்தாலும் யாரோ ஒருவர் என்னிடம் உள்ள நேர்மையான குணாதிசியத்தைக் கண்டு உதவியுள்ளனர். அது நம்பமுடியாத அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு உதவியுள்ளது. என்னுடன் பணிபுரிந்தவர்களில் 90 சதவிகித பேர்கள் இப்போது எவருமே திருப்பூரில் இல்லை. அவர்கள் அத்தனை பேர்களும் சமய சந்தர்ப்பங்களை அப்போதைய சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல மாற்றிக் கொண்டு அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து வந்து கொண்டிருந்தவர்கள். ஆனால் சூழ்நிலையை விட ஒழுக்கத்தையும், நேர்மையையும் நம்பிப் பயணப்பட்டு ஒவ்வொரு இடத்திலும் காயம்பட்டு வளர்ந்தேன். இது இன்றைய என் அமைதியான வாழ்க்கைக்கு முக்கியக் காரணமாக உள்ளது.

ஒவ்வொரு சமயத்திலும் ஆயிரம் பேர் கொண்ட தொழிலாளர்கள் கொண்ட அமைப்பை கண்ணசைவில் கட்டுப்படுத்த முடிந்துள்ளது. வாழ்வின் தொடக்கம் முதல் என்னைச் சுற்றி சகோதரிகள் அதிகம் இருந்த காரணத்தால் திருப்பூரில் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் என்னுடன் பணிபுரிந்த நூற்றுக்கணக்கான பெண்கள் மேல் மயக்கம் உருவானது இல்லை. இயல்பாகவே பெண்கள் என்னிடம் நெருங்க முடியாத நபராக என் குணாதிசியம் இருந்த காரணத்தால் ஒழுக்கம் சார்ந்த விசயங்கள் என் வளர்ச்சிக்கு உதவியது. காரணம் திருப்பூரில் பெண்கள் என்பது எளிதான விசயமாகும்.

ஆனாலும் நான் எவருடனும் அதிகம் ஒட்டுவதில்லை. காரணம் என் அம்மா என்னைப் பற்றிப் பெருமையாகச் சொல்லும் வாசகத்தை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும். "நான் பெற்ற 12 லேயும் அதிகப்படியான திறமைசாலி நீ தாண்டா? வீணாய்ப் போன புத்திசாலி நீ மட்டும் தாண்டா?"

என் அம்மாவுக்கு வாழ்க்கை என்பது நான் சேர்த்து வைத்துள்ள சொத்தில் அடங்கியுள்ளது. ஆனால் எனக்கோ என் ஆரோக்கியம் சம்மந்தப்பட்டதாக உள்ளது. காரணம் எனக்குப் பின்னால் பிறந்தவர்கள் கூடப் பலவிதமான நோய்களில் தடுமாறுகின்றார்கள். எனக்கே என் பசியை அடக்க முடியாமல் மனைவியின் திட்டுதலை (தற்போது குழந்தைகளின் மிரட்டலை) பொருட்படுத்தாமல் ருசியான வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வாழ்கிறேன்.

 -ஜோதிஜி
******

மிக விரிவாய்... தெளிவாய்... இனி எழுத இருப்பவர்களை தன்னைப் பற்றி சுய தேடல் செய்ய வைக்கும்படியான எழுத்தாய்... மூன்று தலைமுறையையும் முரட்டுத் தனங்களையும் சொல்லிய மிகச் சிறப்பான பதிவைக் கொடுத்திருக்கிறீர்கள் அண்ணா... கேட்டதும் தங்கள் வேலைகளுக்கு இடையே விரிவாய் எழுதிக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

சொல்ல மறந்துட்டேன்... சென்ற வாரம் இரட்டை சதம் அடித்து நாட் அவுட்டாக இன்றும் நின்று ஆட வைத்த பிரபல பதிவர்கள் எல்லாம் இங்கும் அடித்து ஆடுங்க மக்களே....

அடுத்த வாரம் மற்றொரு வலை ஆசிரியர் தொடர்வார்....

-'பரிவை' சே.குமார்

117 எண்ணங்கள்:

மீரா செல்வக்குமார் சொன்னது…

அருமை குமார்..
வாழ்த்துகள்.

Avargal Unmaigal சொன்னது…

குமார் பதிவின் font size மிகப் பெரியதாக இருக்கிறதே படிக்க கஷ்டமாக இருக்கிறது வழக்கம் போல ரெகுலர் சைஸில் முடிந்தால் போடவும்

Avargal Unmaigal சொன்னது…

குமார் பதிவின் font size மிகப் பெரியதாக இருக்கிறதே படிக்க கஷ்டமாக இருக்கிறது வழக்கம் போல ரெகுலர் சைஸில் முடிந்தால் போடவும்

Avargal Unmaigal சொன்னது…

ஜோதிஜியின் பதிவு என்று முதலிலேயே சொல்ல வேண்டாமா? இருங்க இருங்க இப்ப ஒரு சூடா காப்பி குடித்துவிட்டு படிக்க ஆரம்பிக்கிறேன்

Avargal Unmaigal சொன்னது…

ஜோதிஜியிடம் எப்போதும் எதிலும் ஒரு மெனக்கடல் உண்டு அதுதான் அவரை மற்றவர்களிடம் இருந்து அவரை தனித்து காட்டுகிறது அவரின் தனித்தன்மை இங்கு இந்த பதிவிலும் வெளிப்படுகிறது

Avargal Unmaigal சொன்னது…

ஹலோ இங்கு இரவு 12 மணியாகுது அங்கு யாரவது இருக்கியாளா?

Avargal Unmaigal சொன்னது…

அடி ராக்காயி(நிஷா) மூக்காயி(அதிரா) குப்பாயி(ஏஞ்சல்)
செவப்பாயி( கீதா )கஸ்தூரி மீனாக்‌ஷி

நம்ம தங்கமான மாப்பிள்ளை ஜோதிஜி
இங்கு பதிவு போட்டு இருக்கிறார்
வந்து கருத்துகள் போட வாங்கடியோ(அம்மா)

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம்....

இங்கு font size சரியாக இருக்கே... தாங்கள் சொன்னதால் அலுவலகத்தில் வேறு சிஸ்டத்தில் திறந்தேன்.... சரியாகத்தானே இருக்கு....

'பரிவை' சே.குமார் சொன்னது…

பதிவை மறு பதிவு செய்திருக்கிறேன் பாருங்கள் சரியா இருக்கா?

Avargal Unmaigal சொன்னது…

தேவியர் இல்லம் என்பதற்கு அடுத்து எழுதியுள்ள பாராக்கள் கொஞ்சம் வழக்கதிற்கு மாறாக சற்று பெரிதாக இருக்கிறது

Avargal Unmaigal சொன்னது…

எங்க அதிராவை காணும் ஒரு வேளை முன்பு சொன்னது போல உண்மையாகவே தேம்ஸ் நதியில் குதிச்சிட்டாங்களோ என்னவோ??

Avargal Unmaigal சொன்னது…

இப்ப சரியாக இருக்கிறது நன்றி

Avargal Unmaigal சொன்னது…

ஏஞ்சல் எழுதிய பதிவை படித்துவிட்டு சில பேர் உங்களின் நடை அழகாக இருக்கிறது ( அதாவது எழுத்து நடையை சொன்னால்) சொல்ல அவரோ தன் நடைதான் நன்றாக இருக்கிறது என்று கருதி ஒரு நாளைக்கு பல தடவை வாக் போக ஆரம்பிச்சிட்டங்கா போல இருக்கு அதுதான் அம்மணியை இங்க காணும்

Avargal Unmaigal சொன்னது…

நிஷாவும் கீதாவும் ஏன் லேட்டுன்னு எல்லோருக்கும் தெரியும் அவங்க பதிவிற்கு கருத்து எழுத இப்பதான் ஆரம்பிச்சு இருக்காங்க நிச்சயம் நாளைக்குள்ள கஷடப்படு மிக மிக சின்னதாக எழுதி வெளியிட்டுவாங்க என் நினைக்கிறேன் அவங்க் எழுதுவது என்னவோ சின்ன கருத்துதான் ஆனால் அது மற்றவங்களுக்கு பெரிசாக தோணிச்சு என்று அது அவர்கள் தப்பு இல்லை ஹீஹ்ஹீ

Avargal Unmaigal சொன்னது…

மீ ரொம்ப நல்ல பையன் அதனால பெண்கள் வருகிற டைத்தில் நாம இங்க இருப்பது தப்பு அதுனால இடத்தை காலி பண்ணிடுவோம்

'பரிவை' சே.குமார் சொன்னது…

மறுபடியும் மாற்றியிருக்கிறேன்... சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். சொன்னதற்கு நன்றி.

Angel சொன்னது…

இனிய காலை வணக்கம் :) லண்டனிலிருந்து

Angel சொன்னது…

ஹா ஹாங் :) இருங்க இப்போதானே லண்டன் நேரம் 8;30 பொண்ணை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு ஒரு வாய் க்ளூட்டன் இல்லா பாரெட்ட்ஜ் குடிச்சிட்டு வரேன்

Angel சொன்னது…

ஹா ஹாஆ :) எங்களை படிக்க விடாம இவர் அட்டகாசம் செயகிறாரே குமார் அவர் கண்ணையும் கைகளையும் கட்டி விடுங்க கொஞ்சம்

Angel சொன்னது…

இறைவன் கொடுத்த வாழ்க்கையை மிகவும் ரசித்து வாழ்க்கை வாழும் ஒருவரால் மட்டுமே இவ்வளவு அழகாக தன்னைப்பற்றி எழுத முடியும் ...மிக அழகான பதிவு வாழ்த்துக்கள் நண்பருக்கு ..குழந்தை நிலா ஹேமா பக்கம் முன்பு பார்த்து அவ்வப்போது உங்கள் வலைபக்கம் எட்டிப்பார்ப்பதுண்டு ..பெரும்பாலும் பின்னூட்டங்கள் தராமல் அங்குள்ள பின்னூட்டங்களை வாசித்து மனதில் அசைபோட்டு வருவேன் ..சமீபத்து உங்கள் பதிவொன்றுக்குத்தான் தைரியமாக பின்னூட்டமிட்டேன் :)
தொடர்கிறேன் ,,

Angel சொன்னது…

பின்னூட்டங்கள்தொடரும் :)

Angel சொன்னது…

பணம் சார்ந்த கொள்கைகள் குறித்த பார்வை தான் எனதும் .இவ்வளவு போதும் இதற்கு மேல் அவசியமில்லை வாழ்க்கையின் தேவை இவ்வளவே என்று ஒரு கட்டுப்பாடு நியதி வைத்து வாழ்பவர்களை உலகம் ஏமாளியென்றும் பிழைக்கத்தெரியாதவர் என்றும் ஏளனம் செய்வது புதுசில்லையே பெரும்பாலானோருக்கு வாழ்க்கையின் இறுதி நொடி வரை பணத்தை துரத்தி கொண்டிருக்க வேண்டும் என்ற பேராசை ஒரு கட்டத்தில் அதை செலவழிக்கக்கூட முடியாத நிலை வரும் என் பார்வையில் அவர்கள்தான் ஏமாளிகள் வாழ தெரியாதோர்

Angel சொன்னது…

மனித வாழ்வில் சூழ்நிலைகளே காரணிகளாகவும் தீர்மானிகளாகவும் கிரியா ஊக்கி களாகவும் எப்போதும் அமைந்துள்ளன அதனாலேயே பெரும்பாலானோர் இன்னும் வெற்றிக்கனியை நெருங்கியும் எட்டி பிடிக்க இயலாது தோல்வியை சுவைத்து கொண்டிருக்கின்றனர் ..இன்றய அங்கேகாரத்தை நிர்ணயிப்பதும் சூழ்நிலைகளே .
நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் நான் உங்கள் அளவு முன்னோர் பற்றி ஆராய்ச்சி செய்யவில்லை ..அனால் 120ஆண்டுகளுக்கு முன் எனது பாட்டி தாத்தா ENDRU சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டபோது பல விஷயங்கள் கண்டுபிடித்தேன் ..அதே தான் உங்களைப்போல எனக்கும் பல தகவல்களை பெற இயலாத நிலை ..வாழ்ந்து முடிந்தோர் பற்றி சொல்ல எவரும் தயாராக இல்லை எனது தந்தை உயிருடன் இருந்திருந்தகள் பல கேள்விகளுக்கு விடை தந்திருப்பார்

Angel சொன்னது…

வாழ்க்கையை ரசித்து ருசித்து வாழ்கிறீர்கள் .நேர்மையான பகிர்வு அனைத்தையும் வாசித்து முடித்தேன் ...அருமையான சுயசரிதை படித்தது போன்றதொரு உணர்வு ..

Angel சொன்னது…

ஹலோ :) ப்ருந்தாவனத்து நந்தகுமாரன் :) ஆபிஸ்ல சுற்றி முழுக்க லேடீஸ்தானே இருக்காங்க :) என்னமோ :) அவங்க வந்தா இருக்க மாட்டாராம் ஹாஹாஆ :)

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா சொன்னது…

ஆவ்வ்வ்வ்வ் ஜோதியில் குதிக்க நானும் வந்துட்டேன்ன்ன் ஹையோ இது பின்னூட்ட ஜோதியை சொன்னேன்ன்ன்:)...
எனக்கு கதாசிரியரை தெரியாது, கறுப்பா சிவப்பா உயரமா(என்னைப்போல்) இல்ல கட்டையா(அஞ்சுவைப்போல்) எதுவும் தெரியாது.... அதனால என் தப்புக்களை எல்லாம் பொறுத்துக் கொள்ளோனும் எனச் சொல்லிக்கொண்டு... இருங்கோ படிச்சிட்டு வாறேன்ன்... போஸ்ட்டைத்தான்ன்ன்:)

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா சொன்னது…

நோஓஓஓ தேம்ஸ் ரொம்ப குளிருதூஊஉ இண்டைக்கு வாணாம் என திரும்பி வந்திட்டேன்ன்ன் ஜோதியில் குதிக்க... ஹையோ பின்னூட்ட ஜோதீஇ யை சொன்னேன்ன் இது மொபைல் எழுத்து சோஒ தப்பிருந்தால் அஜீஸ் பண்ணோனும் அல்லோரும்

Angel சொன்னது…

முதல்ல மை வைங்க அப்புறம் தேம்ஸில் நாங்களே தள்ளி விடறோம்

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா சொன்னது…

ஆஆவ்வ்வ்வ்வ் த்தோஓஈ மை வைக்கிறேன்ன்ன் ஆனா மை அழிக்க 50 பவுண்ட்ஸ் கேக்கிறாங்க... புளொக் ஓனரிடம் அல்லது கதாசிரியரிடம் வாங்கித் தராட்டில் அஞ்சுவைக் கலைச்சுப் பிடிச்சாவது 2 சமோசா தீத்திடுவேன்ன்ன் சொல்லிட்டேன்ன்:)

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா சொன்னது…

அச்சச்சோஒ மொபைல மொய் சொறி மை வைக்க முடியாதெல்லோ மறந்திட்டேன்ன்ன்:)

Avargal Unmaigal சொன்னது…

ஜோதிஜி இப்படியா பெண்களை பயமுறுத்தி வைப்பது...இப்ப பாருங்க ஒரு பெண் உங்கள் தளத்தில் தைரியமா வந்து கருத்து போட்டு இருக்காங்க......மிரட்டாதீங்க கொஞ்சம் ஸ்மைல் ப்ளிஸ்

Avargal Unmaigal சொன்னது…

பதிவை படித்து அதை உள்வாங்கி கருத்தை மிக அழகாக பதிந்த ஏஞ்சலுக்கு ஜோதிஜியின் சார்பாக நன்றிகள்... பதிவிற்கு கருத்து இடுவதுதென்றால் இப்படிதான் இடனும் என்பதற்கு உங்கள் கருத்தே உதாரணம் பாராட்டுக்கள் ஏஞ்சல்

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா சொன்னது…

ஸ்ஸ்ஸ் நான் தான் இங்கு ஒழுங்கான பிள்ளையாக்கும் இப்போதான் போஸ்ட் படிச்சு முடிச்சேன், ஒரு பெரீய குடும்பக்கதையை முடிந்தவரை சுருக்கிச் சொல்லிட்டார்ர், ஆனா கடேசி வரைக்கும் தன்னைப்பற்றி அவர் சொல்லவே இல்ல... சரி அது போகட்டும்...

உண்மைதான் ஏனோதானோ என இல்லாமல் வாழ்க்கையை அனுபவிச்சு வாழோனும்... எத்தனை வருடங்கள் வாழ்ந்தோம் என்பது முக்கியமில்லை எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம்.

Angel சொன்னது…

ஹாஹா :) உண்மையாக சொல்லனும்னா நிறைய பதிவர்கள் பக்கம் போகாத காரணம் பின்னூட்டங்களில் எங்கள் சிறுபிள்ளைத்தனம் வயதையும் மீறி எட்டி பார்ப்பதால்தான் அவசரப்பட்டு எதையாவது சொல்லி அவர்களை கோபமூட்டிடக்கூடாதில்லையா ..

Angel சொன்னது…

கேள்வி கேட்கும் வாழ்க்கை பற்றி சொல்லும்போது மூன்று தேவியர் கேள்வி கேட்கும் வாழ்க்கை அமைவது என்பது வரம் ..
ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளுக்கு ஞானம் அதிகம் ..எங்கள் வீட்டில் உள்ள ஒரே தேவியையே எங்களால் சமாளிக்க முடியலை ..

Angel சொன்னது…

ஹையோ நன்றி நன்றி !!இப்போ பார்த்து இந்த அதிராவை காணோம் பாருங்க ..யாரவது என்னை புகழுற நேரம் பார்த்து காணாம போயிடறாங்க கர்ர்ர்ர் ..

Avargal Unmaigal சொன்னது…

அதிரா இது ஜோதிஜியின் தோற்றம் பற்றிய பதிவல்ல . இது அவரின் பண்பை, பழக்க வழக்கங்களை, வாழ்க்கை நெறிமுறைகளை பின்பற்றி இது வரை அவர் வாழ்ந்த வாழ்க்கையை பற்றிய பதிவு

Angel சொன்னது…

எங்க ஊர்ல வாக்கிங் போக முடியாதபடி மழை கொட்டுது ....லண்டன் அமெரிக்க டைம் வித்தியாசம் அதான் லேட்டா வந்தேன்

கோமதி அரசு சொன்னது…

ஜோதிஜி மிக அருமையாக எழுதி இருக்கிறார்.
அவர் குடும்பம் பற்றி பகிர்ந்து கொண்டதில் நிறைய விஷயங்கள் அறிந்து கொள்ள முடிகிறது. அந்தக்கால பெண்கள் நிலை, ஆண்களின் மனோபாவம் எல்லாம் விளங்கி கொள்ள முடிகிறது.

தனுஷ்கோடி பதிவில் அவர் தன் மூன்று பெண் குழந்தைகளுக்கு கழுத்துக்கு பாசி மாலைகள் வாங்கி போனதை படித்த போதே அவர் தன் குழந்தைகளிடம் உள்ள பாசம் தெரிந்தது. பின்னூட்டத்தில் என் அப்பாவைப் பற்றி குறிப்பிட்டேன் என் அப்பாவும் எந்த ஊருக்கு சென்றாலும் எங்களுக்கு இது போல் வாங்கி வருவார்கள் என்று.

அது போல தொழில்சார்ந்த உண்மைகளை அவர் சொன்னது மிகவும் துணிச்சலான செயல். நேர்மையானவர் என்பதால் அச்சம் இல்லாமல் சொல்ல முடிகிறது.

அவரைப் பற்றி அவர் அம்மா சொன்னது நன்றாக இருக்கிறது. திறமையும், புத்திசாலிதனமும் இப்படித்தான் விமர்சிக்கப்படும்.

அன்பான அப்பாவிற்கு, திறமையான மனிதருக்கு வாழ்த்துக்கள்.(ஜோதிஜி)
குமாருக்கு நன்றி.




Avargal Unmaigal சொன்னது…

தாத்தா அப்பாவிடம் இருந்து வந்த இவரின் முரட்டு குணத்தை கட்டுப்படுத்த ஒரு பெண் குழந்தை இருந்தால் இவருக்கு போதாது என்பதால் மூன்று பெண் குழந்தையை இறைவன் கொடுத்து இருக்கிறான்...ஜோதிஜி முன்றாக இருந்தால் நன்றாக இல்லை அதனால் நான்காக ஒரு ரவுண்ட்ப் பண்ண இன்னும் ஒன்று பெற்றுக் கொள்ளுங்கள்......


என்னம்மா நான் சொல்வது சரிதானே......அதிரா நிஷா ஏஞ்சல் கீதா இதற்காக நீங்கள் ஒரு கூட்டு பிரார்த்தனை நடத்துங்கள்

Avargal Unmaigal சொன்னது…

மழை பெயவதற்கும் வாக்கிங்க் போவதற்கும் என்ன சம்பந்தம் மழையில் வாக்கிக் போனால் நீங்க என்ன கரைஞ்சா போய்விடுவீங்க

Avargal Unmaigal சொன்னது…

நானும் ஆரம்பத்தில் அப்படிதான் நினைத்து இருந்தேன் ஆனால் இப்ப எல்லாம் அப்படி இல்லை அதனால்தான் கீதா (ஆஸ்திரேலியா) போன்றவர்களின் பக்கம் போகாமல் இருந்தேன் ஆனால் இப்ப குளிர்விட்டு போச்சி அதனால் யாராக இருந்தாலும் என் அறிவிற்கு எட்டிய விதத்தில் கிண்டலாக கருத்துக்கள் சொல்லிவிட்டு வந்துவிடுவேன்

Angel சொன்னது…

ஆஹா !எனக்கு நல்ல புரிஞ்சிபோச்சி என்னை உசுப்பி விட்டு நான் வேகமா நடந்து சேற்றில் வழுக்கி விழுந்தா கை கால்க் கட்டு போட்ட ஏஞ்சல் மழையில் வாக்கிங் போனது சரியா தவறான்னு ஒரு பதிவு போட ஐடியா வச்சிருக்கீங்க அது நடக்கவே நடக்காது :)

Avargal Unmaigal சொன்னது…

ஓ மை காட் இன்னொரு தளத்தில் போட வேண்டிய கருத்து இது அதை இங்கே தப்பாக பதிந்து விட்டேன் ஆனால் அதில் எப்படி ஏஞ்சல் பெயர் வந்தது.....ஒரு வேளை ஏஞ்சல் ஹேக் பண்ணி இப்படி செய்து இருப்பார்களோ

Angel சொன்னது…

garrrrrrrrrrr :) ஒரு செகண்ட்ல இப்படி மாற்றி பேசக்கூடாது :)அந்த ஆங்கிலோ இண்டியன் பெண்ணை தேடும் முயற்சி கான்சல்ட் :)

ஸ்ரீராம். சொன்னது…

அருமையாக எழுதி இருக்கிறார். வாழ்த்துகள்.

ஸ்ரீராம். சொன்னது…

என்ன ஆச்சர்யம்? கமெண்ட் மாடரேஷன் இல்லை? !!!

Angel சொன்னது…

நானும் நீங்க அதிரா நிஷா கீதா இருக்கிற தைரியத்தில் எல்லா இடத்துக்கும் இப்போ தைரியமா நானா லாண்ட் ஆகிறேன்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஜோதிஜி ஐயா அவர்கள், தன் வாழ்க்கைப் பயணத்தைத் தன் அற்புத எழுத்தாற்றலால், விருந்தாக்கிப் படைத்துள்ளார்
போற்றுதலுக்கு உரியவர்
போற்றுவோம்

ஜோதிஜி சொன்னது…

அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு கிளம்பும் போது அரை மணி நேரத்திற்கு முன்பு என்னை தனிமைப்படுத்திக் கொள்வேன். அன்றைய தின நெருக்கடிகளை காற்றில் கரைத்து விடுவேன். அதன் பிறகே வீட்டுக்கு கிளம்புவேன். அந்த சமயத்தில் உங்கள் இந்தப் பதிலை அலைபேசி வாயிலாக படித்தேன். எப்போது எழுதிய பதிவை இன்னமும் நினைவில் அப்படியே வைத்திருப்பது ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது. மிக்க நன்றி. பலரும் பதில் அளித்துள்ளார்கள். நாளை பதில் அளிக்கின்றேன்.

நிஷா சொன்னது…

மற்றவர்கள் பின்னூட்டம் வாசிக்க முன் ஜோதிஜீ அவர்களின் பதிவைக்குறித்த என் பகிர்வை சொல்லி விடுகின்றேன். என்னைப்பற்றி நான் எப்படி எழுத வேண்டும் எனும் தீர்மானத்தில் இத்தனை தாமதம் செய்கின்றேனோ அதற்கு முன் மாதிரியாக.... அப்படியே நான் என்ன சொல்ல வேண்டுமோ அதையெல்லாம் சொல்லி இருப்பதை வாசிக்க வாசிக்க .. நான் நல்லதொரு நட்பை தவறவிட்டிருப்பதாக உணர்கின்றேன்.

வாழ்க்கையில் நிர்வாகம் சார்ந்த விஷயங்களில் எதற்கும் அஞ்சாத குணமென்பது.. அப்படி இருப்பவர்களாக நாம் இருப்பது தான் நமக்குள் இத்துணை தன்னம்பிக்கை, தைரியத்தினை விதைத்திருக்கின்றது என நினைக்கின்றேன்.

எவருடனும் ஒட்டாத தன்மைக்காக அம்மா சொல்லும் காரண்ம் எதுவென
கடைசியில் சொல்லி இருக்கின்றீர்கள் பாருங்கள். இது தான் சார் எனக்குமான பெரிய பிரச்சனையே. சிந்தனை வேகமாக பயணிப்பதும்,ஏனையோர் சிந்தித்த் முடிவெடுக்கும் நேரத்தில் நான் அதை செயலாக்கி விடுவதும் கூட நம்மை மற்றவர்களுடன் ஒட்டாமல் விலக்கியே நிற்க வைக்கின்றது.

இரண்டு பகுதியாக தொடரும் போடும் பதிவாக இருக்குமென நான் நினைத்திருந்தேன்.. இன்னும் உண்டா? எப்படி இருந்தாலும் உங்களைக்குறித்து எங்களுடன் மனம் விட்டு பகிர்ந்தமைக்கு நன்றியும்மகிழ்ச்சியும் சார்.

நிஷா சொன்னது…

ஆமாம்,என்னைப்பற்றி பதிவர்களின் கலாட்டாக்களுக்கும் பின்னூட்டங்களுக்கும் ஆர்வமூட்டல்களுக்குமாக ஏஞ்சல் பதிவின் மூலம் நாங்கள் குமாரிடம் வேண்டுகோள் வைத்தோம், அதனால் என்னைப்பற்றி பதிவு வரும் ஓரிரு நாட்கள் மட்டும் குமார் செட்டிங்க மாத்துவார்.

நிஷா சொன்னது…

நான் அதை செயலாக்கி விடுவதும் என்பதை நாம் என திருத்தி வாசியுங்கள். தட்டச்சில் நாம் நானாகி போனேன்.

நிஷா சொன்னது…

பதிவின் ஆரம்பம் சாதாரணமாக ஆரம்பித்து அதன் பின் தன் மூதாதையர் வரலாறு குண நலன் கூறி தன் குடும்பம் சார்ந்து விளக்கி, இறுதியில் இது தான் நான் என முடித்த விதம் அழகும் அருமையும். நான் பெரிய பதிவுகள் எழுதுவதாக பின்னூட்டங்களே பெரிய பதிவுகள் போல் இருப்பதாக சொல்லும் போதெல்லாம் நாம் மட்டுமா இப்படி என நினைப்பேன் ஆனால் குமாரின் பதிவுகள் எனக்குள் உந்துதல் தரும், அதே போல் உங்களின் என்னைப்பற்றி நானும் எனக்குள் என் எழுத்துக்கு நல்லதொரு ஊன்றுகோலானது. பகிர்வுக்கும் நன்றி.

நிஷா சொன்னது…

அப்போது இல்லை இப்போது இருக்கோம்,

நிஷா சொன்னது…

அட ராக்காயி. அம்மாடியோய் நல்லாத்தானே இருக்கியள் மதுரை அண்ணே? பேருல்லாம் புதுசா இருக்கே?

நிஷா சொன்னது…

கீதா வரட்டும் கொட்டு கொட்டென கொட்ட சொல்லி கொடுக்கின்றேன். இதெல்லாம் நல்லால்ல சொல்லிட்டேன்.என்னமோ நாங்க எழுதுவதில் சின்னதாகவாச்சும் கருத்தென ஒன்று இருக்கு,, அது கருத்தாகவும் இருக்கு என ஒப்புக்கிட்டதனால் பிழைச்சிப்போங்க என விட்டு விடுகின்றேன். இல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லன்னால் நடப்பதே வேற..
அவ்வ்வ்

நிஷா சொன்னது…

ஏஞ்சலம்மா எங்கள் பின்னூட்டங்களெல்லாம் சின்னப்பிள்ளைத்தன்மா இருக்கு என சொல்லாமல் சொல்லிட்டாங்கப்பா.. ஹாஹா. ஆனால் மதுரைத்தமிழரே.. கீதாக்கா போன்றவர்கள் பதிவில் பின்னூட்டம் இட தில் வேண்டும், அதெல்லாம் உங்களுக்கு எப்பவும் குளிர் விட்டே போகாதுங்கறேன் நான். அவங்க இலக்கியங்களையும் பறவைகளையும் ஆராய்ந்து போடும் பதிவைப்படிக்க மூளையை அடகு வைக்க வேண்டும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

தாங்கள்தான் நிஷா அக்காவின் பகிர்வு என்ற ஆவலில் இருந்தீர்களே... அதான் ஆவலைக் கெடுக்க வேண்டாம் என்று விட்டுவிட்டேன்... மிக நீண்ட பகிர்வு எனச் சொன்னதும் தங்களுக்கு ஜோதி அண்ணா ஞாபகத்தில் வரலையே... :)

'பரிவை' சே.குமார் சொன்னது…

உண்மைதான் அண்ணா... அவரது ஒவ்வொரு பதிவிலும் அந்த மெனக்கெடல் நன்றாகத் தெரியும்

'பரிவை' சே.குமார் சொன்னது…

அவரும் கத்திப் பாத்தாரு யாரையும் காணோம்... இப்ப அவரு ஆபீசில் இருக்கலாம்....

'பரிவை' சே.குமார் சொன்னது…

அடிச்சி ஆடுங்க... நான் எஸ்கேப் ஆகிக்கிறேன்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

தங்கள் கருத்துக்கு நன்றி... பலர் பணத்தின் பின்னே ஓட... சிலரை பணம் பக்கத்தில் வராமல் விரட்ட... இதுதான் வாழ்க்கையாக இருக்கிறது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

உண்மைதான்... நமக்கு முந்திய இரண்டு தலைமுறைகளைப் பற்றி அறிய முடிந்த நம்மால் அதற்கு முந்தைய தலைமுறைகளைப் பற்றி அறிய முடிவதில்லை...

'பரிவை' சே.குமார் சொன்னது…

உண்மைதான்... அவரின் ஒவ்வொரு பதிவிலும் அதிக மெனக்கெடல் இருக்கும் அக்கா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

அதுதான் அவரிடம் அப்பாவின் குணமும் தாத்தாவின் குணமும் வந்தது எனவும் அதனால் உறவுகள் தள்ளியே நிற்பதாகவும் சொல்லியிருக்கிறாரே...

Angel சொன்னது…

இல்லைப்பா நிஷா ..குழந்தைங்க தான் வெள்ளந்தியா மனதில் பட்ட கருத்துகளை பயப்படாம சொல்லுவாங்க அந்த அர்த்தத்தில் சொன்னேன்

'பரிவை' சே.குமார் சொன்னது…

உண்மைதான் அம்மா... தொழில் சார்ந்த பிரச்சினைகளை சொல்லும் துணிவு அவரிடம் உண்டு... அதேபோல் இது சரி இது தவறு என்றும் வெளிப்படையாகச் சொல்லிவிடுவார்...

தங்கள் கருத்துக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆமாம் அண்ணா...
என்னைப் பற்றி நான் பகிர்வில் தங்களுக்கு வரும் கருத்துக்களை அறிய ஆவலாய் இருப்பார்கள்... நான் அலுவலகம் விட்டு வரும்போது நம்ம ஊரில் 9 மணிக்குப் பக்கம் ஆயிரும்... அக்காக்கள் வேறு அடித்து ஆட தளம் கேட்டார்கள்... அதான் பதிவு வெளியிட்டு மூன்று நாட்களுக்கு மட்டும் கருத்து மட்டுறுத்தலை நீக்கிவிட முடிவு செய்திருக்கிறேன்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆமாம் ஐயா... மிகச் சிறந்த சிந்தனைவாதி... மிகச் சிறந்த மனிதர்.... விரிவாய் எழுதிக் கொடுத்து அசர வைத்துவிட்டார்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

மூன்று பதிவாக ஆக்கியிருக்கலாம் அக்கா... இருந்தாலும் அதில் சுவராஸ்யம் இருக்காது என்பதால் ஒரே பதிவாக போட்டிருக்கிறேன்... தங்கள் பதிவுக்கும் வெயிட்டிங்....

'பரிவை' சே.குமார் சொன்னது…

நானெல்லாம் வளவள கேசுதான் அக்கா... அண்ணாவின் பதிவுகள் படியுங்கள் அரசியல் முதல் வாழ்க்கை வரை அலசி ஆராய்ந்து எழுதுவார்....

Angel சொன்னது…

இல்லை குமார் ஒரே பதிவுதான் நல்லா இருக்கு ..முழுவதையும் படித்தாதான் நன்கு ஆழ்ந்து பதிவின் கருத்துக்களை புரிந்து கொள்ள முடியும் .ஸ்ப்ளிட் ஆனா பதிவு குறித்த கருத்துக்கோர்வையும் சிதறிவிடும் பெரியதாக இருந்தாலும் இது நல்லா இருக்கு

Angel சொன்னது…

உண்மைதான் பணம் விஷயத்தில் பல கேள்விகள் எனக்குமுண்டுஅவற்றுக்கு விடை காண்பது கடினம்

Angel சொன்னது…

ஹ்ம்ம் நமக்கு அதிகபட்சம் தெரிந்தது வீட்டு முன்னறையில் சட்டம் போட்டு மாட்டி வைத்துள்ள தாத்தா பாட்டி படங்கள் மட்டுமே ..

Yarlpavanan சொன்னது…

அறிஞர் ஜோதிஜி வாழ்க்கை
பலருக்கு முன்மாதிரி

மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

Avargal Unmaigal சொன்னது…

ஹலோ நான் சொன்னதற்காக இப்போ இவ்வள்வு சின்னதாகவா கருத்துக்கள் போடுவது. நான் என்ன சொன்னாலும் உங்க தனித்தன்மையை இழக்க கூடாது சரி சரி இந்த பதிவிற்க்கு இப்படி சின்ன கருத்துக்கள் சொன்னது மூலம் நீங்கள் இப்ப புள்ளிகள் இட்டு இருக்கிறீர்கள் என கருத்துகிறேன் சிக்கிரம் வந்து பெரிய கோலமாக போட்டு செல்லுங்கள்

ஜோதிஜி சொன்னது…

சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து ஒரு பெண் பதிவர் அழைத்து இருந்தார். பேசும் போதே தயக்கத்துடன் பேசத் தொடங்கினார். பேசிய ஐந்து நிமிடத்திற்குப் பிறகு சகஜ நிலைமைக்கு வந்துருந்தார். காரணம் கேட்ட பிறகு இவ்வளவு ஜாலியாக இயல்பாக பேசுறீங்க? கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கு என்றார். காரணம் கேட்ட போது உங்கள் எழுத்துக்களைப் படிக்கும் போது கறார் கந்தசாமி போல அல்லது சீரியஸ் சின்னச்சாமி போலவே இருக்கு. அது தான் உங்களை அழைத்துப் பேசவே யோசித்துக் கொண்டிருந்தேன் என்றார். சிரித்து விட்டேன். குழந்தைகளிடம் ஏதாவது கோபமாக பேசத் தொடங்கினால் அவர்கள் சொல்வது என்ன தெரியுமா? அப்பா உங்க மூஞ்சிக்கு செட் ஆகல. ரொம்ப காமெடியா இருக்குறீங்க? மூஞ்சிய மாத்திக்கிங்க? என்கிறார்கள். இது தான் நடைமுறை வாழ்க்கையின் எதார்த்தம்.

ஜோதிஜி சொன்னது…

நம் குழந்தைகளிடம் உள்ள சில தனிப்பட்ட ஆச்சரிய குணாதிசியங்களை ஆராய்ச்சி செய்தால் அது எங்கேயோ ஒரு மரபணு கடத்தி வந்ததாக உள்ளது. ரசனையுடன் அவர்களை கவனித்துப் பார்த்தால் புரியும். இரட்டையரில் இரண்டவதாக பிறந்தவர் என் மேல் அதிகபட்ச அன்பு செலுத்துபவர். அது எந்த அளவுக்கு என்றால் மற்ற இருவரும் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் பாடப் புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு பல பஞ்சாயத்துக்களை கூட்டிக் கொண்டு அம்மாவுடன் சண்டை போட்டுக் கொண்டு இருப்பார்கள். ஆனால் இவரோ நான் அலுவலகத்திற்கு செல்லும் வரையிலும் நான் என்ன உடை உடுத்த வேண்டும்? எனக்கு வேறு என்ன வேண்டும்? என்ற கவனத்தில் இருந்து கொண்டு அவர் வேலைகளை கோட்டைவிட்டுக் கொண்டு தினமும் அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டிருப்பார். அது போல அலுவலகம் விட்டு வந்ததும் எனக்காக காத்திருப்பது போல பல நாட்கள் பிரிந்தவரைச் சந்திப்பது போல வரவேற்பு கொடுப்பார். என் அம்மாவின் அம்மாவிடம் இந்த குணாதிசியம் அதிகமாக இருந்தது. மனைவியிடம் முரண்பாடு வரும் போதெல்லாம் இவரைக்குறிப்பிட்டு பேசத் தொடங்க இன்னமும் முறுக்கிக் கொண்டு வாக்குவாதம் தொடங்கும். டக் கென்று இவர் உள்ளே புகுந்து என்னை காப்பாற்றுவதில் குறியாக இருப்பார்.

நிஷா சொன்னது…

அது சரி நானே காலை ஏழிலிருந்து அலையோ அலை என அலைந்து களைத்து, இளைத்து வந்து உங்க பின்னூட்டங்கள் கண்டு மலைத்து போய் பின்னூட்டம் போட்டால் நீங்க சொன்னதற்காக பயந்துட்டேன் என நினைச்சிப்பிங்களோ? நினைப்புத்தான் பொழைப்பக்கெடுக்குமாம். அதுக்கு நிஷா லாயக்கில்லை. வேறாளைப்பார்த்துக்கோங்க. பல சில நேரங்களில் நிஷா நிஷா சொல்வதையே கேட்பதில்லை. ஏன் எங்கூரு பிரைம்மினிஸ்டர் வந்து சொன்னாலும் கேட்க மாட்டோமாக்கும். உண்மையில் செம்ம களைப்புப்பா. ஒருமாதமா ஓய்வே இல்லை. காலை ஏழு எட்டுக்கு ஆரம்பிக்கும் நாள் முடிய இரவு பதினொன்று ஆகுது தெரியுமா! இதில் நார்த்ட் இந்தியன்குருப் வேற வர ஆரம்பிச்சிட்டாங்க இப்ப ஒன்று வந்தாலும் ஏப்ரல் பத்திலிருந்து தினம் நான்கு பஸ்.. ஒரு பஸ்ல ஐம்பது பேர். அதுக்கு நிரம்ப ஆயத்த்ப்படுத்த ஓடிகிட்டிருக்கோம். அப்பப்ப இங்கேயும் எட்டி எட்டி தட்டி பார்க்கின்றேன். நீங்கல்லாம் இருப்பதனால் மன்சும் ரிலாக்சாகுது. உண்மையில் எனக்கிருக்கும் ஸ்ரெஸ்ஸுக்கு நான் உங்க எல்லோருக்கும் டாக்டர் பீஸ் கொடுக்கணும், எனக்கு இம்மாதிரி நல்ல புரிதலுள்ள நட்புக்களை தந்ததற்காக கடவுளுக்கு நன்றி

நிஷா சொன்னது…

ஆமாம் ஏஞ்சல், ஆனால் நான் பொன்னியின் செல்வன் ஐந்து பாகம் எழுதுவேனே,, அப்பவும் ஒரு பதிவும் தான் போடுவிங்களோ?

நிஷா சொன்னது…

ஏஞ்சலோ ஏஜ்சல் நானும் அப்படித்தான் சின்னப்பிள்ளை தனம்னு சொன்னேன். இப்ப என்னாச்சாம்?

நிஷா சொன்னது…

ஏஞ்சலோ ஏஜ்சல் நானும் அப்படித்தான் சின்னப்பிள்ளை தனம்னு சொன்னேன். இப்ப என்னாச்சாம்?

Anuprem சொன்னது…

திரு. ஜோதிஜி அவர்களின் என்னைப் பற்றி நான் என்பது...உண்மையில் மிக மிக வித்தியாசமாக இருந்தது..பொதுவாக அனைவரும் தன்னைப்பற்றி கூறுவதில் இருந்து தனிப்பட்டு...அவரின் குண நலத்திர்க்கான அலசல் வரை...அனைத்தும் மிக மிக சிறப்பு....

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஹஹஹஹஹஹ் ஐயையோ...யாரப்பா அங்க கூவுறது...இப்ப அவரு தூங்கிட்டிருப்பாரு...அட பாருங்க நிஷா ஏஞ்சல் நான் செவப்பாயியாம்..ஹஹஹஹ் சிப்புசிப்பா வருது...அப்ப நான் பாத்தது டூப்புத்தேன்!!! மதுரைத் தமிழன் நா கரீக்டா சொல்லியிருப்பாரு நான் கருப்பாயினு...ஹிஹிஹிஹி...சரி சரி ஏதோ ஒன்னு

நேத்தே வாசிச்சோம்....பாதி வாசிக்கும் போதே நெட் போச்சு....துளசிக்கு மொபைல்ல பெரிய பதிவ படிக்க முடியலை....அதான் லேட்டுங்கோ....

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஹஹஹஹஹஹ் ஐயையோ...யாரப்பா அங்க கூவுறது...இப்ப அவரு தூங்கிட்டிருப்பாரு...அட பாருங்க நிஷா ஏஞ்சல் நான் செவப்பாயியாம்..ஹஹஹஹ் சிப்புசிப்பா வருது...அப்ப நான் பாத்தது டூப்புத்தேன்!!! மதுரைத் தமிழன் நா கரீக்டா சொல்லியிருப்பாரு நான் கருப்பாயினு...ஹிஹிஹிஹி...சரி சரி ஏதோ ஒன்னு

நேத்தே வாசிச்சோம்....பாதி வாசிக்கும் போதே நெட் போச்சு....துளசிக்கு மொபைல்ல பெரிய பதிவ படிக்க முடியலை....அதான் லேட்டுங்கோ....

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மதுரை அந்த விஷயம் தெரியாதா? துளசியோட குறுநாவல்ல வர அந்த முரளியோட கால்ல கல்லு கட்டி தேம்ஸ்ல தள்ள ஒளிச்சு வைச்சுருக்காங்க இந்த அதிரா....அதான் வர லேட்டுஆகியிருக்கு

கீதா

G.M Balasubramaniam சொன்னது…

ஜோதிஜி பற்றிய செய்தி முதலில் படித்தது துளசி டீச்சர் அவர் வீட்டுக்கு சென்று வந்தபோது எழுதியது குமாரின் என்னைப் பற்றி நான் பகுதிக்கு இதுவரை எழுதியவர்கள் பல செய்திகள் வாசகர்களுக்குத் தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்று கருதினர் போலும் ஆனால் என்னைப் பற்றி நான் பகுதிக்கு ஜோதிஜி எழுதி ஒரு மாற்றத்தையே காண்பித்திருக்கிறார் பொதுவாக மனிதர்களிடம் தங்கள் குறைகளைச்சொல்லும் வழக்கம் இல்லை அதற்கு ஜோதிஜி ஒரு விதிவிலக்கு தனது முன்னோர்களின் ஜீன்ஸ் காரணமாக இருக்கலாம் என்கிறார் ஒருவனது குணாதிசயங்கள் அவனது மூன்று வயது காலத்துக்குள்ளாகவே நிர்ணயிக்கப் படுகிறதாம் இண்டெர் பெர்சொனல் ட்ரான் ஸாக்‌ஷன்ஸ் அவர்களட்ர்ஹு வளரும் பருவத்திலேயே விதைக்கப் படுகிறது இது குறித்து நானும் ஒரு பதிவு எழுதி இருந்தேன் அவரைப் பற்றி படித்ததும் அவரிடம் தொடர்பு கொள்ளும் எண்ணம் எழுகிறது அதை அவர் விரும்புகிறார் என்றால் அவரது மின் அஞ்சல் முகவரி வேண்டும் தருவாரா. மனசு குமாருக்கு வாழ்த்துகள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஏஞ்சலின் அன்ன நடையாக்கும் மதுரை!!! ஒயிலா வருவாங்க....

அது சரி ஏஞ்சல்...ஹஹஹ் ஆமாம் பதிவு போட விட்டுராதீங்க

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஹலோ யாரது!! நினைச்சேன் நிஷா அன்னிக்கு இப்படிச் சொல்லி வம்புக்கு இழுத்த போதே அட என்னடா நம்மள விட்டுப்புட்டாறே தப்பிச்சோம்னு நினைச்சேன்....இதா சொல்லிப்புட்டரு..

நிஷா நானும் ஒரு சப்பாத்தி ப்ரெஸ்ஸர் வாங்கிப்புட்டேன்...ஹஹ்ஹ்ஹ....

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கோபிகள் புடை சூழத்தான் இருப்பாரு அதான் ஒரு படம் கூட போட்டிருந்தாரே ஏஞ்சல்!!!அவர் தளத்துள...நல்லா கேட்டீங்க ..

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நாங்களும் முதலில் ஜோதிஜியின் பதிவுகளைப் படித்துவிட்டு கருத்திட யோசித்ததுண்டு...அந்த அளவிற்கு அறிவு உண்டா என்று...கருத்திட்டால் அது பொருள் உடையதாக இருக்குமா என்று. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக இடத் தொடங்கி இப்போது ஓகே சின்னப்புள்ளத்தனமாக இருந்தாலும் கருத்து இட்டு வருகிறோம்...

கீதா: எனக்கு ஆண்களிடம் பேசுவதற்குத் தயக்கம் என்றுமே இருந்ததில்லை.... நான் புதுக்கோட்டையில் பதிவர் விழாவில் ஜோதிஜியைச் சந்தித்த போது பேசுவதற்குக் கொஞ்சம் தயக்கம் இருந்தது. அதிகம் பேசவும் இல்லை. ஒன்னுமில்லை பேசும் அளவிற்கு எனக்கு அறிவு உண்டா என்று தோன்றியய்து. அந்த அளவிற்கு சப்ஜெக்ட் உண்டா என்னிடம் என்றும் தோன்றியது....அடுத்த காரணம் என் செவித்திறன். அது குறைந்துவிட்டது அலல்து இல்லை என்றும் சொல்லலாம். ஹியரின் எய்ட் போட்டிருந்தாலும் ஸ்பீக்கர் சத்தம் இருந்தால் அந்தச் சத்தத்திற்கிடையில் நம்முடன் இருப்பவர்களுடன் பேசுவது கஷ்டமாக இருக்கிறது. பல சத்தங்களுக்கிடையில் பேசும் சத்தம் கேட்பதில்லை....அதுவும் ஒரு காரணமாக இருந்தது நான் பலருடனும் பேசவில்லை அங்கு சென்றிருந்த போது...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இதுவரை நாங்கள் எழுதிய எங்களைப் பற்றி என்பதில் பல சொலல்வில்லை. மேம்போக்காகச் சொல்லிச் சென்றோம். ஒரு சில பொதுவெளியில் சொல்ல முடியாத சூழல். இருந்தாலும் பதிவும் பெரிதாகிவிடக் கூடாது என்ற ஒரு சாக்கு போக்கும் இருந்தது. அது ஒரு காரணமே அன்றி எழுதியிருக்கலாம் ஆனால் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் இத்தனை ஆழமாகச் சிந்தித்து எழுதவில்லை...எழுதத் தெரியவும் இல்லை எனலாம்.

உங்கள் பதிவு எல்லோருக்கும் ஒரு முன்னோட்டம் என்றால் மிகையல்ல. சுய தேடல் மற்றும் சுய ஆராய்ச்சி என்றும் சொல்லலாம். அருமையான பதிவு ஜோதிஜி!! நிறைய கற்றுக் கொண்டோம்.

கீதா: ஒரு சில பரம்பரை எனலாம். நமக்கு நேரடி தாத்தா பாட்டி என்றில்லை அதற்கும் முந்தைய மூதாதையரின் ஜீன் கூட வர வாய்ப்புண்டு. அதை எல்லாம் அறிய வேண்டும் என்றால் நம் தாத்தா பாட்டிக்கள் தங்கள் பெற்றோர், தாத்தா பாட்டிக்கள் பற்றி நன்றாக அறிந்திருக்க வேண்டும். இப்போது உதாரணமாக கோபம் என்ற உணர்வை எடுத்துக் கொண்டால், அது பரம்பரையில் வரும் ஒன்று என்று கொண்டாலும், சூழ்நிலையும் அதற்குக் காரணம் எனலம். பரம்பரை என்றால் அவர்கள் அந்தக் கோபத்தை ஒரு குணாதிசயமாக, கோபம் அதெல்லாம் அப்படித்தான் இருக்கும் அதாவாது கோபம் என்றால் முர்க்கத்தனமான கோபம் இயல்பு நிலையைப் பாதிக்கும் கோபம்....அதனை அவர்கள் கோபம் என்றே சொன்னார்கள் இல்லை பைத்தியம் என்று சொல்லிச் சென்றனரே அல்லாமல் அது ஒரு மனநிலை சம்பந்தப்பட்டது என்றோ அதற்கும் தீர்வு உண்டு முயற்சி செய்யலாம் என்றோ அறிந்திருக்கவில்லை.

எங்கள்: குடும்பத்தில் இக்குணம் முன்பு கோபம் மூர்க்கம் என்று சொல்லபப்ட்டது ஆனால் என் தலை முறையில் அது மரபணு என்று சொல்லபப்ட்டதோடு நிற்காமல் அதற்குக் கவுசலிங்க், சைக்கியாட்ரி என்று, மருந்துகளற்ற் தீர்வுகள் சில வற்றிற்கு மருந்துகள் என்று போகிறது.

நிச்சயமாக ஒவ்வொரு குடும்பத்திலும் சூழ்நிலை ஒருவரது இயல்புகளை நிர்ணயிக்கிறது. ஊக்குவிக்கிறது. இல்லை என்றால் தடம் புரள வைக்கிறது. இது பற்றி நிறைய பேசலாம்தான்....

அருமையாக அனலைஸ் செய்திருக்கிறீர்கள் ஜோதிஜி...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஒரு வேளை உங்கள் பதிவு, நிஷாவின் பதிவு (அவரும் கிட்டத்தட்ட இப்படித்தான் எழுதுவார் என்பதால்...ஜிஎம்பி சாரும் கூட இப்படித்தான் எழுதுவார்) எல்லாம் எங்கள் பதிவுக்கு முன்னரே வந்திருந்தால் எங்களின் கருத்துகளும் உங்கள் பதிவுகளின் தாக்கத்தில் மாறியிருக்கக் கூடும் என்றும் தோன்றுகிறது. சிறந்த உதாரணமாகியிருக்கிறது மட்டுமின்றி, உங்கள் எழுத்தில் காணப்படும் உழைப்பு இதிலும் தெரிகிறது. நீங்கள் உங்கள் தொழிலிலும் அப்படித்தான் என்பது தெரியும். எதைச் செய்தாலும் அதை பெர்ஃபெக்டாகச் செய்ய வேண்டும் என்ற உங்கள் உழைப்பு தெரிகிறது.

வாழ்த்துகள்! பாராட்டுகள்

கீதா

Angel சொன்னது…

ஆமாம் கீதா நானும் இதைப்பற்றி நேற்று சொல்ல நினைத்தேன் ..ஜோதிஜி அவர்களின் பதிவு முதலில் வந்திருந்தா நாமும் நம்மைப்பற்றி இன்னும் அதிகமா சுய பரிசோதனை செய்து விவரித்திருப்போம் ..நான் என்னைப்பற்றி மேம்போக்காக மட்டுமே சொல்லிச்சென்றேன் அதுவும் நிறைகளை மட்டும் ..குறைகளை கூற தோன்றவில்லை பாருங்க ..நான் என்பது நிறை குறை அனைத்தும் சேர்ந்தது இல்லையா

Angel சொன்னது…

ஆஹா :) ஐந்து பாகமா !! ஓகே அப்போ நிச்சயம் விலாவாரியா பதில் தருகிறேன்ப்பா நிஷா .
எனக்கு கப்பை சிப்ஸ் நேந்திரம் சிப்ஸ் பார்சல் அனுப்பிடுங்க நானா வந்துடறேன் பின்னூட்டத்துக்கு

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நீங்கள் உங்கள் வாழ்க்கையை அணு அணுவாக நுணுக்கமாகப் பார்ப்பது மட்டுமின்றி அதிலிருந்து கற்றும், ரசித்தும் வாழ்கிறீர்கள்! அதனால்தான் இத்தனை நுணுக்கமாகச் சிந்திக்கவும் எழுதவும் வருகிறது.

கிராமத்து இளைஞர்களுக்கும் வெளியுலகிற்கும் உள்ள இடைவெளி என்னதான் புத்தகம் வாசித்தாலும் எல்லாம் அப்படியே நான் சிறுவயதில் என் கிராமத்தில் இருந்த நினைவுகளைச் சொல்லியது....அதே கருத்து எனக்குள் இருந்தாலும் உங்களால் அதை மிக அழகாகச் சொல்ல வருகிறது எனக்கு வருவதில்லை!!!!

நானும் எனது கொள்ளுப் பாட்டிகள் தாத்தாக்கள் குறித்து அறிய முனைந்தது உண்டு. பல காரணங்களுக்காக. எனக்கு இயல்பாகவே உளவியலில் ஈடுபாடு உண்டு. அதன் காரணமாகக் கூட இருக்கலாம். வீட்டிலிருப்போர் நதி மூலம் ரிஷி மூலம் ஆராயக் கூடாது என்று எனக்கு அறிவுரை வழங்குவர். என்றாலும் எனக்கு அதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமுண்டு.

அப்படி எனது புகுந்த வீட்டில் அறிய முற்பட்ட போது ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்தது. எங்கள் தற்போதைய குடும்பத்து தலைமுறை மற்றும் வாரிசுகளிடம் பல தோல்விகள், குடும்பம் பிளவு, ஒரு சில குணாதிசயங்கள், எதிர்பாராத இறப்புகள், வளர்ச்சியின்மை, பொருளாதார நெருக்கடி என்று பல வந்த போது ஏதோ பேச்சு வாக்கில் என் புகுந்த வீட்டில் மாமனாரின் முந்தைய தலைமுறையில் வீட்டிற்கு வந்த மரும்களின் கணவன் இவ்வீட்டு ஆண் குடும்பத்தைப் பிரிந்த் ஓடிவிட்டார் என்பதால் அப்பெண் தனிமையில் இருந்து குடும்பம் இரு தலைமுறைகள் வீணாகிப் போகும் என்று இட்ட சாபம் என்றெல்லாம் சொல்லும் கதைகள் வந்தன. இப்படியும் ஒரு சில குணங்களும் தெரிய வந்தன....என்றாலும் அக்குணநலன்கள் அப்படியே வரவில்லை. சற்று மாறுபட்டு வந்திருப்பதைக் காண முடிகிறது ஏனென்றால் அடாப்டபிலிட்டி அதனால் மாறிய ஜீன்கள் என்று ஃபிசியாலஜியில் என் மகன் படித்ததை வைத்து அறிய முடிந்தது.....இப்படிப் பல சொல்லலாம் எனவே சூழ்நிலையும் மாற்றும் தன்மை கொண்டது எனலாம்....

கீதா

Angel சொன்னது…

ப்ருந்தாவன நந்த குமாரிகளே அந்த அவர்கள் உண்மைகளை அங்கேயே புடிச்சி வைங்க நானேதான் 100 வது பின்னூட்டம் போடும் வரைக்கும்

Angel சொன்னது…

ஹா ஹா :) பே வாட்ச் நினைவு வருது கீதா :) இதை எதுக்கு சொல்றேன்னா அவர் அங்கேயே இருக்கட்டும் நானா 100 பின்னூட்டம் போடும் வரை

Angel சொன்னது…

yes :) நான் இப்போல்லாம் ரொம்ப கவனம்

Angel சொன்னது…

பெண் குழந்தைகள் தாயின் மறு உருவம் தான் .அடக்கவும் இந்த மகளுக்கு நிச்சயம் உங்க அம்மாவழி மரபணுக்கள் இயற்கையாகவே அமைந்திருக்கு ..எல்லா மனைவிகளும் இந்த பொஸசிவ் விஷயத்தில் ஒன்றுதான் ..என் மகளுக்கு என்னைவிட அவங்கப்பா மேலே தனி பிரியம் ..தோளில் கைபோட்டு கொண்டு அவருடன் நடப்பதை பார்க்கும்போது எதோ இரண்டு நண்பர்கள் செல்வது போலிருக்கும் ..என்னிடம் சொல்லாத ரகசியமெல்லாம் அவரிடம் பரிமாறப்படும் :)
மகள்களுக்கும் அப்பாக்களுக்கு இடையிலான ஒரு தனி பாசப்பிணைப்பு அது
உங்க மகள் அதுவும் தனது வேலையை கூட மறந்து உங்கள வேலைகளை கவனிக்கிறாள் என்பது மனதுக்கு மகிழ்வாக இருக்கு

Angel சொன்னது…

நான் சிறு வயது முதலே இயற்கையாகவே கொஞ்சம் அழுக்கு என்றால் முகம் சுழிக்கும் வகை என் கணவரும் அப்படிதான்..(இப்போ கொஞ்சம் என்னை மாற்றிக்கொண்டேன் ) ஆனால் எனது கணவரின் அக்கா மிகுந்த பாசமுள்ளவராம் அவர்கள் வீட்டில் 10 பிள்ளைகள்
வெளியிடத்தில்சி று பிள்ளைகள் அழுக்கா மூக்கு சிந்தாமலிருந்தா தாயைப்போல சுத்தப்படுத்தி விடுவாராம் தன கைக்குட்டையால்
இந்த குணம் எங்கள் மகளுக்கு வந்திருக்கு அப்படியே ...அவளது 3 வயதிலேயே கிண்டர்கார்ட்டனில் நான் பார்த்தேன் உடனிருக்கும் இன்னொரு பிள்ளைக்கு தன் frock இனை தூக்கி அதனால் துடைத்து விடுவதை ;) அது அவளது புதிய பிறந்தநாள் ஆடை ..அன்பு பாசம் என நானா ஆயிரம் பேசினாலும் எங்க மகளுக்கு நீங்க சொன்ன அந்த அத்தையின் அரவணைக்கும் மரபணு வந்துள்ளது என்பது இப்போ புரிகின்றது

Angel சொன்னது…

ஆமாம் இயல்பை மாற்றினால் அது நமக்கு பொருந்தாது :) அதனால்தான் அப்படியே ஜாலியாவே இருந்துடறோம் நான் கீதா அதிரா எல்லாம் .

Angel சொன்னது…

கீதா அந்த கஸ்தூரி மீனாக்க்ஷி யாரா இருக்கும் ??

Anuprem சொன்னது…

அதுக்கு ஏன் வருத்தப்படுறீங்க...

பதிவு 2..னு போட்டு தொடருங்க..படிக்க நாங்க தயார்..

Kasthuri Rengan சொன்னது…

உண்மையில் இளைங்கர்களுக்கு வழிகாட்டும் பதிவு குமார்.
எழுத்துக்காரர் ஜோதிஜி முத்திரை பதித்திருக்கிறார்

ஜோதிஜி சொன்னது…

என் எழுத்தைத் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு உங்கள் இருவரின் பெருந்தன்மை எல்லா இடங்களிலும் விரவி உள்ளது. மிக்க நன்றி. ஒரு முறை தான் எழுதப் போகின்றோம். இணையத்தில் எப்போதும் வேண்டுமானாலும் எந்த வருடம் கழித்து வந்து படிக்க வேண்டும் என்று தோன்றுபவர்களுக்கும்? இவன் யார்? என்று ஏதோவொரு சமயத்தில் எண்ணம் வந்து என்னைப் பற்றி ஆராய முற்படுவோர்களுக்கு என்று எல்லாவிதங்களிலும் யோசித்துப் பார்த்தே இதனை விரிவாக எழுத வேண்டும் என்று தோன்றியது.

ஜோதிஜி சொன்னது…

அய்யா வணக்கம். என் மின் அஞ்சல் முகவரி powerjothig@yahoo.com

Avargal Unmaigal சொன்னது…

@கீதா ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி அது போலத்தான் ஜோஜிதியின் பாணி. அவர் முதலில் எழுதி இருந்தாலும் எனது பாணி மாறாது அப்படி அவரது பாணியில் நாம் சொல்ல நினைத்தாலும் அவரைப் போல சொல்ல முடியாமலும் நம்ம பாணியில் சொல்ல முடியாமல் கடைசியில் குழப்பபாணியில்தான் முடியும்.

அடுத்து பெரிதாக எழுதுவதா சிறிதாக எழுதுவதா என்று குழம்பாமல் சொல்ல வந்த விஷயத்தை சிறிதாகவோ பெரிதாகவோ வெளியிடுங்கள். சொல்ல வந்த விஷயங்கள் அர்த்தமுள்ளதாக இருந்தால் படிப்பவர்கள் அதன் அளவை பொருட்படுத்த மாட்டார்கள்

Avargal Unmaigal சொன்னது…

அடபாவிங்களா இளையராஜா இளையராஜா என்று மூச்சுக்கு முந்நூறு தடவை பேசும் தமிழர்க்ளுக்கு தெரியவில்லையே இது அன்னக்கிளி படத்தில் வந்த பாட்டு என்று அதை சொல்லி உங்களை அழைத்தேன் ஹும்ம்ம்ம்ம்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் உறவுகளே....
கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.
சிலரது கருத்துக்கு தன்னோட கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட இந்த வார என்னைப் பற்றி நான் - ஜோதி அண்ணாவுக்கும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கரீக்டா சொன்னீங்க ஏஞ்சல்!!

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வாவ் ஏஞ்சல்! அழுக்கு/அறுவருப்பு பார்க்காமல் அன்பு காட்டுவதுதான் உண்மையான அன்பு ஏஞ்சல்!! ஷரன் இஸ் அ ப்ளெஸ்ட் சைல்ட்!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கரெக்டுதான் தமிழன் முற்றிலும் ஒத்துக் கொள்கிறேன் உங்கள் கருத்தை! ஒரு உதாரணமாக அமைந்திருக்கும் என்பதுதானே அல்லாமல் அவரைப் போல் எழுத எல்லாம் முடியாது!! நல்ல கருத்து தமிழன். மிக்க நன்றி

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஜி உங்கள் எழுத்தை மிஞ்சிவிட முடியுமா? என்றாலும் மிக்க நன்றி தங்களின் அந்த வரிகளுக்கு... ஜோதிஜி நீங்கள் இப்படி எழுதியிருப்பது நிச்சயமாக இனி வாகிக்க வருவோருக்கும் ஒரு நல்ல அடையாளமாக, உதாரணமாக இப்படி ஒருவர் இருந்திருக்காரா? யாரிவர் என்று தேடவும் தங்கள் புத்தகங்களை வாசித்து அறிந்து கொள்ளவும் கூட வழிவகுக்கலாம். சரியாகச் சொன்னீர்கள் ஜி!!!

கீதா

r.v.saravanan சொன்னது…

பதிவர் திருவிழாவில் தான் ஜோதிஜி அவர்கள் அறிமுகம். பழக இனியவர். அவரது தலைமுறை பற்றியும் என்னை பற்றி நான் ல் நிறைய அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி சார்.