மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 8 பிப்ரவரி, 2017

4. என்னைப் பற்றி நான் - கரந்தை ஜெயக்குமார்

லையுலகில் நான் நேசிக்கும் ஐயாக்களில் ஒருவர்... ஊர் பெயரை தன்னோடு இணைத்துக் கொண்டவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட பிரியம் உண்டு. அதுவும் ஐயா மீதான நேசத்தை இன்னும் நெருக்கமாக்கியது. இதுவரை இணையம் மூலமே தொடர்பில் இருக்கிறோம். நான் அவர் பதிவுகளுக்குச் செல்லாவிட்டால் கூட என் பதிவுகளுக்கு  கருத்திடுவார். மிகச் சிறந்த எழுத்தாளர் ஐயா... ஆசிரியர்... கரந்தை ஜெயக்குமார் அவர்கள்.

வரலாற்று நிகழ்வா... நூல் விமர்சனமா... அதை ஆரம்பிக்கும் விதமும் முடிக்கும் விதமும் வேறு யாரும் எழுத முடியாத வகையில் அமையும். அவ்வளவு நேர்த்தியாக ஆரம்பித்து மெல்லப் பயணித்து சொல்ல வந்ததை இடையில் நகர்த்தி நம்மை ஈர்க்கும் விதமாக எழுதக்கூடியவர். 

பார்வை இருந்தும் குருடாய் இருக்கும் மனிதர்கள் மத்தியில் பார்வை இல்லாத நிலையில் தனிமனிதனாய் அமெரிக்காவில் படித்து ஆய்வு மேற்கொண்டு பல இன்னல்களுக்கு இடையில் சாதித்து உயர்ந்த வெற்றிவேல் முருகன் குறித்து ஐயா எழுதிய கட்டுரையை அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.

'என்னைப் பற்றி நான்' விவரம் சொல்லி மின்னஞ்சல் அனுப்பியதும் கொஞ்சம் வேலையாக இருக்கிறேன் அனுப்புகிறேன் என்று பதில் அனுப்பி பின்னர் எனக்கு அனுப்பி வைத்தார். அந்த அன்புக்கு நன்றி.

இனி ஐயா அவரைப் பற்றி மீட்டிய வீணை... எனை மீட்ட வலை உங்கள் பார்வைக்கு...



எனை மீட்ட வலை

ரந்தை.

நான் பிறந்தது கரந்தை
தவழ்ந்தது கரந்தை
நடந்தது கரந்தை
படித்தது கரந்தை
பணியாற்றுவதும் கரந்தை.

எனக்குத் தமிழ்ச் சொல்லிக் கொடுத்தது கரந்தை
என்னுள் தமிழ் உணர்வை ஊட்டியது கரந்தை
ஏடெடுத்து எழுதக் கற்றுக் கொடுத்ததும் கரந்தை

கரந்தை என் உலகு.

இவ்வுலகிற்கு உள்ளேயே வலம் வந்த எனக்கு, உழைத்தது போதும் என்ற ஞானத்தை ஊட்டியதும் கரந்தை.

இருபது வருடங்களுக்கும் மேலாக, குடும்பம் என்பதைத் துறந்து, எனக்கும் மனைவி மக்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து, ஓயாது உழைத்திருக்கிறேன், ஊர் ஊராய் சுற்றியிருக்கிறேன்.

தன்னலமற்றுத்தான் உழைத்திருக்கிறேன்.

யாசகம் என்று எதையும் இதுவரை யாசித்ததில்லை.

சலுகைகள் எதையும் அனுபவித்ததில்லை.

ஆயினும் பல கசப்பான நிகழ்வுகள். 

என்றென்றும் ஆறாத மனக் காயங்கள். 

இதயத்தை ரணமாக்கி உதிரத்தை உதிர வைத்த, வேதனைமிகு வார்த்தைகள்.

என்னை யோசிக்க வைத்தன.

யோசித்தேன்.

கரந்தை மண்ணில் அமர்ந்து யோசித்தேன்.

கரந்தையே எனக்கு போதிமரமும் ஆனது.

கரந்தை உன் உலகாயிருக்கலாம், ஆனாலும் நின் மனைவி மக்களுக்கு, நீதான் உலகு.

பொட்டில் அறைந்தாற்போல் புரிய வைத்தது.

புது உலகின் வழி திறந்தது.

எழுந்து நடந்தேன்.

ஆயினும் ஓய்வு நேரங்கள், என்னை வாட்டி வதைத்தன.

ஓய்வின்றி உழைத்துவிட்டு, ஓரிடத்தில் அமர்ந்திருப்பது மனதுள் வெறுமையை வளர்த்தது.

கரந்தை என்றால் மீட்டல் என்று ஒரு பொருளுண்டு.

தமிழையே மீட்டெடுத்த கரந்தை, என்னை மீட்காதா, கரை சேர்க்காதா.

கரந்தை எனை மீட்டது, கரை சேர்த்தது.

இணையம் என்னும் வற்றாத தமிழ்க் கடலின் கரையில் என்னை நிறுத்தியது.

என் பெயருடன், தன்னையும் இணைத்து, வலைப் பூ என்னும் படகில் ஏற்றி, எழுதுகோலைத் துடுப்பாய் தந்தது.

இணையக் கடலில் துடுப்பைச் சுழற்ற, சுழற்ற, திரும்பும் திசையெல்லாம், நேசம் தவழும் பாசமிகு வரவேற்புகள்.

வட்டம், மாவட்டம், மாநிலம், நாடு என்ற எல்லைகளைக் கடந்த உறவுகள், நேசக் கரம் நீட்டி அரவணைத்துக் கொண்டன.

உடன் பிறந்த சகோதரி இல்லையே, என்ற என் நெடு நாளைய ஏக்கம், பஞ்சாய் பறந்து போனது.

பல்வேறு நாடுகளில் இருந்தும், காற்றில் மிதந்து வரும், எண்ணற்ற உடன் பிறவாச் சகோதரிகளின் பாச மழையில் நனைகின்றேன்.

நண்பர்கள்.

முகமறியா இணைய நண்பர்களின் குரலை, அலைபேசி வழி, கேட்கும் பொழுதெல்லாம் உள்ளம் குளிர்ந்து போகிறது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ஜெயக்குமாரா என நெஞ்சம் நெகிழ்ந்து போகிறது.

இணையம் என் இதயம்.

கரந்தை மண், 
கந்தக மண் - தமிழுணர்வு 
வெப்பமாகத் 
தகிக்கின்ற மண்.
                                               -ஈரோடு தமிழன்பன்

***************

ஐயாவின் எழுத்தை வாசித்திருப்பீர்கள்... அவரைக் குறித்து அறிந்திருப்பீர்கள்... அய்யாவுக்கு தங்களின் மேலான கருத்துக்களை வழங்குங்கள்.

'என்னைப் பற்றி நான்' என வலை ஆசிரியர்கள் தொடர்ந்து பேசுவார்கள்.

-'பரிவை' சே.குமார்.

34 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

அருமையான முகவுரை நண்பர் திரு.கரந்தையார் அவர்களின் தொண்டுள்ளம் நீடூழி வாழ்க...

Anuprem சொன்னது…

வணக்கம் ...

எனை மீட்ட வலை..

பொதுவாக வலையில் தான் அனைவரும் மாட்டுவார்கள்...ஆனால் இங்கு வலையே ஐயா வை மீட்டு இருக்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சி..


நான் மிக விரும்பி வாசிக்கும் ஒரு தளம்...குமார் அவர்கள் கூறியது போல் ஐயாவின் எழுத்து பாணி மிகவும் தனிதன்மையானது...

மீரா செல்வக்குமார் சொன்னது…

கரந்தை நட்புக்கும் உகந்தது..
மீசை தாண்டி விரியும் புன்னகை
வசீகரம்..
குழந்தைமை மாறாத உள்ளம்..
எழுத்தின் திண்மை..
நான் கரந்தையின் ரசிகன்.


வாழ்த்துகள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நண்பர் ஜெயக்குமார் பழகுவதற்கு இனிய பண்பாளர். எழுத்துலகில் அமைதியாக பெரிய சாதனைகளை நிகழ்த்துபவர். அவரைப் பற்றிய அவருடைய மதிப்பீட்டிற்கு வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பணிவு என்பதற்கு இலக்கணமானவர்...

என்றாவது ஒரு நாள் நாம் ஐயாவை நேரில் சந்திக்கும் போது வியப்படைவீர்கள்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எப்படியோ காலையிலிருந்து முயற்சி செய்து தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்...

vimalanperali சொன்னது…

தகுதியானவரைப்பற்றி தகுதியான கரத்து...!

ஸ்ரீராம். சொன்னது…

நானும் தஞ்சாவூர்க்காரன். அந்த வகையில் நானும் அவர் ஊர்தான்! வாழ்த்துகள் நண்பர் கரந்தை ஜெயக்குமார். ஆம், உங்களது பதிவுகள் ஒரு தனி பாணியில், எதையும் சுவாரஸ்யமாய் சொல்லத் தெரிந்தவர்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்றி நண்பரே
இந்த எளியேனையும்
நண்பராய் ஏற்று, பதிவினை வெளியிட்டுச் சிறப்பித்தமைக்கு
நன்றி நண்பரே.
கருத்துக்களால் என்னை நெகிழ வைத்த நண்பர்களுக்கும்
அன்புச் சகோதரிக்கும்
என் இதயப் பூர்வ நன்றிகளைக் தெரிவிப்பதில்
பெரிதும் மகிழ்கின்றேன்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிக மிக அருமையான வலைப்பதிவர் நண்பர்/சகோ! அவரது ஒவ்வொரு அறிமுகப்பதிவிலும் தமிழ் விளையாடும்! தனி வழி என்பது போல் அமைதி தன்னடக்கம் என்று அவரது எழுத்திலேயே அவை எல்லாம் வெளிப்படும். அமைதியாகச் சாதனைகள் பல புரிந்தவர்! அவர் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு சாதனையாளரும் போற்றுதலுக்குரியவர்கள்! வாழ்த்துகள் நண்பரே/சகோ! குமார் தங்களுக்கும் வாழ்த்துகள்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அய்யா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
காலையில் முயற்சித்து நேரமாச்சின்னு பொயிட்டேன்...
தாங்கள் முயன்றிருக்கிறீர்கள்... வெற்றியும் பெற்றிருக்கிறீர்கள்....
நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அய்யா...
எனக்கு அனுப்பிக் கொடுத்த தங்கள் அன்புக்கு நாந்தான் நன்றி சொல்லணும்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தனிமரம் சொன்னது…

நல்ல ஆசான் அவர் இவ்வருட சென்னைப் பயணத்தில் தனிப்பட்ட ரீதியில் அவருக்கு சென்னை வந்தேன் உங்களை நேரில் இவ்வாரம் சந்திக்க முடியுமா என்று கேட்க நினைத்தேன் ஆனால் எங்கள் பயணம் ஜல்லிக்கட்டு போராட்டத்தால் திசை மாறிவிட்டது ஆனாலும் அவரை என்றாவது சந்திப்பேன் என்ற நம்பிக்கை இருக்கு சகோ!

தனிமரம் சொன்னது…

பதிவு படித்தேன் மகிழ்ச்சி !

தனிமரம் சொன்னது…

நீண்ட காலத்தின் பின் உங்க தளத்தில் பின்னூட்டம் இடுவதுக்கு காரணம் கரந்தை ஐயா என்பதை தாழ்மையுடன் சொல்லியவண்ணம் இவன் தனிமரம்!

துரை செல்வராஜூ சொன்னது…

இனிமை எனும் அன்புக்குரியவர்..
எளிமை எனும் நற்பண்புக்குரியவர்..

கற்கண்டாய் வார்த்தெடுத்த கன்னித்தமிழ்
சொற்கொண்டு விதைக்கின்ற வித்தகம்..

அரியனவாய் புதியனவாய் அள்ளி வந்து
அறிவுக்கு விருந்து வைக்கும் புத்தகம்!..

பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!..

மகிழ்வுடன்
துரை செல்வராஜூ..

Avargal Unmaigal சொன்னது…

தெளிந்த நீரோடை போல இவரின் பதிவுகளூம் மிக தெளிவாக அழகாகவும் இருக்கும் சிலரிடம் பேசிப் பழகினால்தான் நமக்கு பிடிக்கும் ஆனால் பார்த்தாலே பிடிக்கும் இரு நபர்கள் இணையத்தில் உண்டு என்றால் திண்டுக்கல் தனபாலனும் கரந்தை ஜெயக்குமார் அவர்களும்தான்

கோமதி அரசு சொன்னது…

சகோ கரந்தைஜெயக்குமார் பற்றி அருமையான பதிவு குமார். வாழ்த்துக்கள்.
சகோ கரந்தை ஜெயக்குமாருக்கும் வாழ்த்துக்கள். அவர் பதிவின் மூலம் பலரை தெரிந்து கொண்டேன். அருமையான மனிதர்.

Yarlpavanan சொன்னது…

கரந்தை ஜெயக்குமார் அவர்கள்
என் உள்ளத்தில் நிறைந்த அறிஞர்
எனது பதிவுகளில் அவரது கருத்து இருக்கும்
பதிவர்களின் வலைப்பூக்களில்
அவரைக் காண்பேன் - அவர்
வலையுலகில் பலராலும்
போற்றப்படும் ஒருவர்! - அவரது
தமிழ்ப் பற்றுக்கு - நான்
தலை வணங்குகின்றேன்!

Unknown சொன்னது…

ithu thaan tamilin suvai yo? 5 inthu ilakanam konda tamilin thagal 2 var eluthil kandan vaalthukal.

தி.தமிழ் இளங்கோ சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Angel சொன்னது…

ஒரு இனிய கவிதையை வாசித்ததுபோலிருந்து ஐயா அவர்களின் //என்னை பற்றி //பதிவு

வாழ்த்துக்கள் .

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

கரந்தை என்றாலே எனக்கு அந்நாளில் நினைவுக்கு வருவது கரந்தை தமிழ்ச் சங்கம் ஒன்றே. இப்போது கரந்தை என்றால் எனது மனக்கண் முன்வந்து நிற்பவர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள். இங்கே இவர் மேற்கோடிட்டுக் காட்டிய விஷயங்கள் அனைத்தையும் அவரது பதிவுகளில் முழுமையாக வாசித்து இருக்கிறேன்.

Geetha Sambasivam சொன்னது…

தெரியாத பல அறிஞர்களை அறிமுகம் செய்து வைத்த கரந்தை அவர்களின் அறிமுகம் நன்று.

சொ.ஞானசம்பந்தன் சொன்னது…

கரந்தையார் அவர்களைப் பற்றி அவரே எழுதியதையும் அவரையறிந்த பிறர் தெரிவித்ததையும் வாசித்து அவரது பெருமையை விளங்கிகொண்டேன் . வாழ்க அவர் ! அறிமுகப்படுத்திய உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி .

சொ.ஞானசம்பந்தன் சொன்னது…

கரந்தையாரின் பெருமையை அறிந்தேன் . அவர் வாழ்க ! அறிமுகப்படுத்திய உங்களுக்கு மிகுந்த நன்றி .