அபுதாபி பாரதி நட்புக்காக அமைப்பு நடத்தும் நிகழ்வுகளுக்கு எல்லாம் தவறாமல் செல்வேன். அதற்கு இரு காரணங்கள் உண்டு... முதலாவது அபுதாபியில் மலையாளிகளும் கன்னடர்களும் அதிக விழாக்களை... பெரும்பாலும் சினிமா சம்பந்தமான நிகழ்வுகளை நடத்தும் போது நம் தமிழுக்காக நடத்தப்படும் விழா என்பதால்.... இரண்டாவது காரணம் நமக்கு நாலு பதிவு தேறுமே... அதை எழுதி உங்களையும் படுத்தி எடுக்கலாமே என்ற நல்ல எண்ணமே காரணம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அலைனில் இருந்து கூட விழாவுக்கு வந்திருந்தேன். இந்த முறை விழா நிகழ்வு அருகில்தான் என்றாலும் செல்ல முடியாத சூழல்... மிகச் சிறப்பாக, சிறந்த பேச்சாளர்களைக் கொண்டு நிகழ்ந்த சுழலும் சொல்லரங்கத்தை கேட்டு ரசிக்க முடியவில்லை. அங்கு செல்ல முடியாத நிலை என முகநூலில் சொன்ன போது, நான் என்னவோ மிகச் சிறப்பான விமர்சனப் பகிர்வு அளிப்பது போல்... (அப்படியே தொகுத்துக் கொடுப்பேன் அவ்வளவே) உங்கள் விமர்சனத்தை நாங்கள் இந்த முறை பார்க்க முடியாதே என பாரதி நட்புக்காக அமைப்பின் தலைவர்
திரு.இராமகிருஷ்ணன் சார் கருத்தாக பகிர்ந்திருந்தார். விழா குறித்த போட்டோக்களையாவது பதிவாக்கலாம் என கேமராக் கவிஞர் அண்ணன்
திரு. சுபஹான் அவர்களிடம் கேட்டதும் படங்களை உடனே அனுப்பிவிட்டார். விழா நிகழ்வுகள் படங்களாய் உங்கள் பார்வைக்கு....
|
(விழா மேடையில் நடனம்) |
|
(விழா மேடையில் நடனம்) |
|
(புலவர் இரெ.சண்முகவடிவேலு) |
|
(பேராசிரியர். திரு. இராமச்சந்திரன்) |
|
(திரு.மோகன சுந்தரம்) |
|
(பேராசிரியை. திருமதி. பர்வீன் சுல்தானா) |
|
(பார்வையாளர்களாய் ரசிப்பில்) |
|
(பார்வையாளர்களாய் ரசிப்பில்) |
விழாவை போட்டோ மூலம் ரசித்துக் கொள்ளுங்கள். ஒருவேளை நான் பார்க்க வீடியோ பகிர்வு கிடைத்தால் உங்களுக்கு பதிவாய் எழுதுகிறேன்...
-'பரிவை' சே.குமார்.
11 எண்ணங்கள்:
மகாகவியை நினைவு கூர்ந்த விழா சிறப்பு.. படங்கள் அருமை.. வாழ்க நலம்..
விழா சிறப்பு நண்பரே
திரு. மோகன சுந்தரம் எப்போதும் அசத்துவார்...
அருமை....
படங்கள் மிகவும் அழகு....அருமையான நிகழ்வு...அடுத்த முறை நீங்களும் சென்று சிறப்பிக்க வாழ்த்துக்கள்...
படங்கள் மிக அருமை.
விழா நிகழ்வினைப் பகிர்ந்த விதம் அருமை. பாராட்டுகள்.
Super
அசத்தல்!
த ம 4
படங்கள் பார்க்க முடியவில்லை. பிறகு வந்து முயல்கிறேன்.
நீங்கள் விழாவிற்குச் செல்லாததால் எங்களுக்கும் இழப்பு!
படங்களைப் பார்க்க முடியவில்லை குமார்.
நீங்கள் விழாவிற்குச் சென்றிருந்தால் பதிவு இன்னும் விரிவாக நுணுக்கமாக இருந்திருக்கும்! அவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் மிஸ்ஸிங்ததான்...
கருத்துரையிடுக