மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

மனசின் பக்கம் : மழையில் நனைத்த அன்பு

நேற்று நள்ளிரவில் ஆரம்பித்த மழை... தூறலாய் இன்னும் தொடர்கிறது. இன்று சுத்தமாக வெயில் இல்லை... மழை இல்லாமால் இருப்பதும் பின்னர் தூறுவதுமாக இருக்கிறது. பெரிய மழை என்றளவில் இல்லை... பெரும் தூறலாகவும் இல்லை... ஆனாலும் வெளியில் இறங்கி மழை நனைக்குமோ என்ற எண்ணத்திலேயே பார்க்க வேண்டிய வேலையை பார்க்காமல் இரண்டு முறை திரும்பிவிட்டேன். நாளையும் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏசி இல்லாமல் அறைக்குள் குளிர்கிறது. இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தால்... இன்பமாய் தூங்கலாம். அப்படித்தான் என்றும் மதியம் தூங்காதவன் இன்று தூங்கினேன். தீபாவளிக்கு முந்தின இரவு ஆரம்பித்து அன்றெல்லாம் நசநசவெனப் பெய்யுமே அதுபோல் இருக்கிறது. வெளியில் நல்ல குளிர்... அறைக்குள் இருக்கும் போது மழைக்காலத்தில் ஓட்டு வீட்டில் இருப்பது போல் இருக்கிறது... ரொம்ப நல்லாயிருக்குய்யா... ஆனா இதுக்குப் பின்னே ஆரம்பிக்கும் பாருங்கள்... வெயில்.... இந்த முறை கொன்னு எடுத்துரும்ன்னு நினைக்கிறேன். எது எப்படியோ வார இறுதி அழகான மழைச்சாரலோடும் இளங்குளிரோடும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

தோழா படம் பார்த்தேன்... நாகார்ஜூனா கலக்கல்... கார்த்திக் எப்பவும் போல்... தமன்னா சொல்லிக் கொள்ளும்படி இல்லை... குறிப்பாக கார்த்திக் தமன்னா காதல் காட்சிகளில் பையா, சிறுத்தை அளவுக்கு ஒரு ஒட்டுதல் இல்லை... காரணம் அதுவாக இருக்கலாம்... ஏமாற்றம் என்பது இதயத்தின் ஓரத்தில் எப்பவும் இருக்கத்தானே செய்யும்... அதை விடுங்க... வில்லன் இல்லாத... வில்லன் பிரகாஷ்ராஜ் ரொம்ப நல்லவராய் நடித்த... கலகலப்பாக செல்லும் படம்... எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். எல்லாரும் ஆஹா... ஒஹோன்னு புகழ்றாங்க... எல்லாம் சரிதான்... சில தவறுகள் நமக்கு மட்டும்தான் தெரியுமோ... இல்லை இதெல்லாம் சகஜமென பிரபல விமர்சகர்கள் எல்லாம் விட்டுட்டாங்களா தெரியலை... அது என்னான்னா...


பாரீஸூக்கு போறாங்க... சரி போகட்டும்... திருடனாய் திரிந்தவன் பாஸ்போர்ட் எடுத்து வைத்திருந்தானா தெரியலை... சரி அதை விட்டுடுவோம் ஏன்னா நாகார்ஜூனாதான் பெரிய... பெரிய... மில்லினராச்சே... நம்ம மல்லையா மாதிரி... எந்த வேலையையும் இருந்த இடத்துல இருந்து முடிச்சிருவாருல்ல... உடனே பாஸ்போர்ட் வாங்கி கூட்டிக்கிட்டு பொயிட்டாருன்னு வச்சிப்போம்.... நம்ம ஊர்ல கார்த்திக் கார் ஓட்டுறார்... சரி லைசென்ஸ் வச்சிருந்திருப்பார்... ஆனா பாரிஸ்ல போயி கார் ஓட்டுறாரு... அதுவும் பத்து நிமிசத்துக்கு மேல கார் சேசிங் காட்சிகள்... இங்க எல்லாம் லைசென்ஸ் இல்லாதவன் டிரைவர் சீட்டில் அமர்ந்தாலே அபராதம் போடுறானுங்க... இண்டர்நேஷனல் லைசென்ஸ் வேணும்... அது இல்லாம கார் ஓட்டி சேசிங் வேற... அங்க போயி உடனே லைசென்ஸ் வாங்கியிருப்பாரோ...? அதே மாதிரி அனுஷ்காவுக்கு போன் போடுறது... சரி விடுங்க... இதைச் சொன்னா நீ படத்தை மட்டும் பாருய்யா... எதுக்கு டீப்பா நோக்குறேன்னு சொல்லுவாங்க.... ஆமாங்க தோழா வித்தியாசமான முயற்சிங்க... நாகார்ஜூனா இன்னும் காதல் ராசாதானுங்க... அதனாலதான் நம்ம கார்த்திக்கு வத்தக் காமாட்சிய விட்டுட்டு ஸ்ரேயா, அனுஷ்கா அப்புறம் இன்னொரு பொண்ணு இப்படி மூணு.... கார்த்திக் வரைந்த ஓவியத்தை ரெண்டு லட்சம் கொடுத்து வாங்கும் பிரகாஷ்ராஜ் அவர்தான் வரைந்தார் எனத் தெரிந்ததும் காட்டும் முகபாவனை... கலக்கல். பார்க்கலாங்க...

விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம்தான் என்பதை நாம் ஏன் புரிந்து கொள்வதில்லை. தோல்விக்குப் பின் வீரர்களைத் தூற்றுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறோம். எந்தத் துறையாக இருந்தாலும் ஏற்றம் இறக்கம் வரத்தான் செய்யும்... அதற்காக நீ ஏற்றத்தில் மட்டுமே இரு... இறக்கம் வரவே கூடாதுன்னு சொல்றது என்ன நியாயம்..? இது போகட்டும்... தற்கொலைகள் என்பது கேலிக்கூத்து அல்லவா? இந்த கேலிக்கூத்து இன்றும் தொடர்வதுதான் வேதனை. பி.டெக். படிக்கும் மாணவி இந்தியாவின் தோல்வியால் மனம் உடைந்து கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  இது என்ன கொடுமை பாருங்கள்... தன் படிப்பு, குடும்பம், உறவுகள், நட்புக்கள், நாளைய எதிர்காலம் எல்லாம் விடுத்து ஒரு விளையாட்டின் பொருட்டு வாழ்வை முடித்துக் கொள்ளுதல் என்பது எவ்வளவு அபத்தமானது. முதலில் விளையாட்டை விளையாட்டாக பார்க்க கத்துக் கொள்வோம்.


புகழ் படம் பார்த்தேன்... நறுக்குத் தெரித்தாற்போல் நச் வசனம்... அரசியல்வாதிகள் எப்படி எப்படியெல்லாம் ஆட்டையைப் போடப் பார்க்கிறார்கள் என்பதை மிகச் சிறப்பான வசனங்களுடன் சொல்லியிருக்கிறார்கள். கம்யூனிச கருத்துக்களும் இடைஇடையே... ஆஹா... ஓஹோ என்றெல்லாம் இல்லை என்றாலும் பார்க்கலாம்தான்.

லையாளத்தில் வந்த சார்லி பார்த்து ஓரு வாரம் ஆச்சு. அதன் பாதிப்பு இன்னும் இருக்கு. நல்ல படம்... இது குறித்து தனிப் பகிர்வில் பேசலாமே... கொஞ்சம் விரிவாக... எனக்கும் ஒரு பகிர்வு கிடைக்கும்ல்ல.

ப்புறம் தஞ்சையம்பதி துரை. செல்வராஜூ ஐயா அவர்கள் நேசம் சுமந்த வானம்பாடி கதையை மையமாகக் கொண்டு 'பாடும் வானம்பாடி' என்ற ஒரு அழகிய கதை மாதிரியான கலக்கலான ஒரு பகிர்வு போட்டிருக்கிறார். முடிந்தால் வாசியுங்கள்... அந்த கடிகாரத்தின் மீதான பற்றுதலை ரசிப்பீர்கள். நேசத்திற்காக ஐயா எழுதியிருக்கும் மூன்றாம் பகிர்வு... ஐயா போன்ற பல நல்ல மனம் கொண்ட பிரபலங்களின் மனசுக்குள் அமர்ந்தாச்சு... அப்புறம் என்னங்க... இன்னும் நூறு கதை படைக்கலாம். அய்யாவுக்கு நன்றின்னு சொல்லி எல்லாம் கடந்து போய்விட முடியாது... இது தந்தை மகனின் பாசம்... கடந்து செல்லாது... கட்டிக் கொண்டு நிற்கும்.

கே.எஸ்.ஆர். கலைக் கல்லூரி  மாணவி சகோதரி வைசாலி அவர்கள் 'யான் வாசித்து வரும் வலைப்பக்கங்கள்' என்று சொல்லியிருக்கும் பகிர்வில் அடியேனுக்கும் இடம் அளித்திருக்கிறார். அவர் ஒரு பதிவு எழுதச் சொல்லி அழைத்திருக்கிறார். கில்லர்ஜி அண்ணா உள்ளிட்ட பலர் எழுதிட்டாங்க... நான் இன்னும் எழுதலை... விரைவில் எழுதுகிறேன்... என்னை தொடர்பதிவு எழுத அழைத்தமைக்கும்... பிரபலங்களுடன் வாசிக்கும் பதிவராக என்னையும் சொன்னதற்கும் நன்றி.

பிரபலமான பதிவர் திரு. கோபி சரபோஜி அவர்கள் 'முகவரிகளின் முகவரிகள்-1' என்னும் பகிர்வில் இந்த முகவரியையும் சொல்லியிருக்கிறார். அவரை நான் அதிகம் வாசித்ததில்லை... அவர் பதிவுகளுக்கும் சென்றதில்லை... என்னையும் சொல்லியிருப்பதை அவர் சொல்லித்தான் அறிந்தேன்... என்னை தொடர்ந்து வாசிப்பதாகச் சொன்னார். நானும் இப்போது அவரை வாசிக்கிறேன்... நிறைய புத்தகங்கள் வெளியிட்டிருக்கும் பிரபலம் என் எழுத்தும் நல்லாயிருக்குன்னு சொல்லியிருக்கிறார்... அவருக்கும் நன்றி. 
-'பரிவை' சே.குமார்.

26 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

தோழாவில் தமன்னா தவிர அனுஷ்காவும் உண்டா? அட! அட, கார் ஓட்டிட்டு அப்புறம் ஃபைனைக் கட்டிப்பாரா இருக்கும்! ஹீரோவோட வேலை எல்லோரையும் காப்பாத்தறதுதானே!

//பி.டெக். படிக்கும் மாணவி இந்தியாவின் தோல்வியால் மனம் உடைந்து கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். //

அபத்தம்தான். கொடுமை. மிகவும் கோபம் வருகிறது.
தம +1

மு. கோபி சரபோஜி சொன்னது…

சகோ...நானெல்லாம் வலைப்பதிவுக்குக் கத்துக்குட்டி. இன்னும் நானூறு பதிவுகளைக் கூட எட்டவில்லை. எப்பொழுது கடையை அடைத்து விட்டு போவேன் என எனக்கே தெரியாமல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.உங்களைப் போன்ற பதிவர்களைப் பார்க்கும் போது எனக்குள் எப்பொழுதும் ஒரு ஆச்சர்யம் இருக்கும்.
பிரபலம் - அப்படின்னு சொல்றதெல்லாம் ஓவரா இருக்கு. இதுவே எட்டு வருசத்துக்கு முன்னாடின்னா நேரா வந்து வாங்க....ஒரு குப்பூசும், சுட்ட கோழியுமா உட்காருவோம் எனக் கேட்டிருப்பேன். காலம் வாய்த்தால் அப்படியான ஒரு சூழலில் உங்களை சந்திக்க விரும்புகிறேன்.

கோமதி அரசு சொன்னது…

பி.டெக். படிக்கும் மாணவி இந்தியாவின் தோல்வியால் மனம் உடைந்து கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.//

படிக்கவே கஷ்டமாய் இருக்கிறது.

திரு. துரைசெல்வராஜூ அவர்கள் எழுதிய பாடும் வானம்பாடி படித்தேன். மிக நன்றாக இருக்கிறது.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பல நிகழ்வுகளுடன் நண்பர்களின் பகிர்வுகளையும் அறிமுகப்படுத்திய விதம் அருமை. நன்றி.

KILLERGEE Devakottai சொன்னது…

கதம்பம் மணத்தது வழக்கம் போலவே..

ஹிஷாலி சொன்னது…

super

துரை செல்வராஜூ சொன்னது…

தஞ்சாவூர் கதம்பம் போல அருமை!..

தந்தை மகன் என்று சொல்லி விட்டீர்கள்..
இதுவல்லவோ தமிழ் தந்த பேறு!..
எத்தனை பேருக்கு இப்படி வாய்க்கும்!..

நெகிழ்ந்த நெஞ்சத்துடன்..
என்றென்றும் அன்பு வாழ்க!..

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

எல்லா விமர்சனங்களும் கலக்கல்...தோழா எல்லாருமே நன்றாக இருக்கிறது என்று சொல்கின்றார்கள். பார்க்க வேண்டும். ஓட்டைகள் எல்லா படத்துலையும் ஏதாவது ஒரு ரூபத்தில் இருக்கும். நாங்கள் எடுக்கும் குறும்படம் உட்பட...

//பி.டெக். படிக்கும் மாணவி இந்தியாவின் தோல்வியால் மனம் உடைந்து கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். // எதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை..

கீதா: இது காரணமாக இருக்காது குமார். அது உறுதி. அந்தப் பெண் அப்படி எழுதி வைத்திருக்கலாம்...உண்மையான காரணத்தை மறைத்து. இதற்குப் பல காரணங்கள் இருக்கும்...மனப்பிரச்சனையும் ஒன்று அதில்...சரி அதை ஆராய்ந்தால் பதிவாகிவிடும்.

----------------------------------------------

ஐயா அவர்களின் கதையை இனிதான் பார்க்க வேண்டும். இன்னும் அவரது தளத்திற்குச் செல்லவில்லை பல தளங்கள் இன்னும் இருக்கின்றன...10 நாளாச்சே வராமல்...

சரபோஜி அவர்களின் வலைத்தளம் சென்றதில்லை அறிந்திருந்தாலும். இனி செல்ல வேண்டும்.

நல்ல சுவையான கலக்கல் பதிவு

வைசாலி செல்வம் சொன்னது…

தற்கொலை செய்ய வந்த தைரீயம் அதற்கான தீர்வை பற்றி நினைத்து பார்க்க தைரீயம் வருவதில்லை இன்றைய தலைமுறையினருக்கு ஐயா.

தோழா படத்தை நான் பார்க்கவில்லை தற்பொழுது பார்த்துவிட்டேன் தங்களின் பதிவில் ஐயா.

என்னை மீண்டும் தங்களின் வலைப்பக்கத்தில் அடையாளப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள் ஐயா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
அனுஷ்கா கொஞ்சமே கொஞ்ச நேரம்... முன்னாள் காதலியாக...
வம்சி படம்ல்ல அதான் அனுஷ்கா, ஸ்ரேயா எல்லாம் கொஞ்சம் தலைகாட்டியிருக்காங்க...

அந்த மாணவி இறந்ததற்கு வேறு காரணங்கள் இருக்கலாம்... ஆனாலும் அவள் எழுதி வைத்தது இப்படியாம்... என்ன கொடுமை...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரா...
வலைப்பதிவுக்கு கத்துக்குட்டியாக இருக்கலாம்...
எழுத்தில்.. எத்தனை புத்தகங்கள்...
நானும் தங்களை சந்திக்க விரும்புகிறேன்.. இங்கு வரும் வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
ஐயா சிறப்பாக எழுதியிருந்தார்.
எதற்கெல்லாம் தற்கொலை பாருங்கள்... இது இதற்குத்தானா தெரியலை... எப்படியிருந்தாலும் படித்த முட்டாள்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
கருத்துக்கு நன்றி ஐயா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கில்லர்ஜி அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரெ...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
தோழா நல்ல படம். ஆனாலும் விமர்சகர்கள் யாருமே பாரிஸ் விஷயத்தைப் பேசலையேன்னுதான் சொன்னேன்.

அந்தப் பெண்ணின் இறப்பில் வேறு எதாவது மர்மம் இருக்கலாம் என்று நீங்கள் சொல்வது சரிதான் கீதா மேடம். எப்படியோ அந்தப் பெண் படித்த முட்டாள்.

தங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
படித்த முட்டாள் அந்தப் பெண்... அவ்வளவுதான்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
தோழா நல்ல படம். ஆனாலும் விமர்சகர்கள் யாருமே பாரிஸ் விஷயத்தைப் பேசலையேன்னுதான் சொன்னேன்.

அந்தப் பெண்ணின் இறப்பில் வேறு எதாவது மர்மம் இருக்கலாம் என்று நீங்கள் சொல்வது சரிதான் கீதா மேடம். எப்படியோ அந்தப் பெண் படித்த முட்டாள்.

தங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரெ...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Kasthuri Rengan சொன்னது…

தோழா குறித்த கேள்விகள் ... செமை பாஸ் ..
படம் ரொம்பவே செயற்கையாக துருதிக் கொண்டு தெரிந்தது, நாகார்ஜுன் பேசும் தமிழ் நம்மைக் கொல்லுதே பாஸ், கார்த்திக்கு இது ரொம்ப அவசியமான ரோல் இல்லையா ...

Kasthuri Rengan சொன்னது…

தம பிளஸ்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மது சார்...
எந்த பிரபல சினிமா விமர்சகர்களும் இதையெல்லாம் சொல்லவே இல்லை...
தெலுங்கு இயக்குநர் என்பதால் தெலுங்கு வாடை...
கார்த்திக்குக்கு நடிகர் சங்கத்தில் இறங்கிய பிறகு படமில்லை... தன்னை நிறுத்திக்கொள்ள ஏதோ ஒண்ணுன்னு நடிச்சிருக்கார்... பருத்தி வீரனில் பார்த்த கார்த்திக் போயே போயாச்சு...

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி சார்.

நிஷா சொன்னது…

அட நீங்களும் பிரபல பதிவர் தானுங்க சார்! அதென்ன உங்களை நீங்களே தாழ்த்திப்பது. நாங்க சொல்கின்றோம்ல... நமபணும்.

தற்கொலைக்கு காரணங்கள் பலவாயிருக்கலாம்.வெளிவராமலுமிருக்கலாம்.

மொத்தத்தில் அனைத்தும் அருமை,