மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 12 அக்டோபர், 2015

முகநூலிலாவது முகம் காட்டுவாயா..?

பதிவர் விழாவை மிகச் சிறப்பாக நடாத்திக் காட்டிய எங்கள் ஐயா. திரு. முத்துநிலவன், அன்பு அண்ணன் திரு. தனபாலன்,  நம் புதுகை சகோதர, சகோதரிகள் மற்றும் வலையுலக நட்புக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்...

-------------------------------------


ங்கே இருக்கிறாய்...?
எப்படி இருக்கிறாய்..?
எதுவும் தெரியவில்லை...

காதலித்தோம்
கனவு கண்டோம்...
வாழ்க்கை நிர்ப்பந்தம்
நினைவுகளைச் சுமந்து
பிரிந்து சென்றோம்...

வாழ்க்கை உன்னை
மறக்கச் செய்தது
என்றால் அது பொய்...
உணர்வுகளை மட்டும்
மரிக்கச் செய்தது...

மரித்த உணர்வுக்குள்
எப்போதாவது சிலிர்த்து
மல்லுக்கட்டுவாய்...
ஏனோ சில தினங்களாய்
அடிக்கடி உணர்வில்
பூத்து இம்சிக்கிறாய்...

நீ... நான்...
நாமாக
நடந்த...
சிரித்த...
வாழ்ந்த...
கதை பேசிய...
கட்டி அணைத்த...
நினைவுகள் எல்லாம்
எழுந்து எழுந்து
இம்சிக்கிறது...

முகநூலில் அலசினேன்...
முகம் தெரியாதவர்கள்
எல்லாம் கிடைக்கிறார்கள்
உன்னைத் தவிர...

உன் பெயர்...
என் பெயர்...
நம் பெயர்...
பெயருக்குப்
பின்னே முன்னே
உன் தந்தை...
என எல்லாம்
கொடுத்துப் பார்த்தும்
கிடைக்கவில்லை
நீ எனக்கு...

ட்விட்டர்...
முகநூல்...
இன்னும் சில
நட்பு இணையத்திலும்
அலசிவிட்டேன்...
எதிலும் நீயில்லை...

உன்னைக் காண
வேண்டுமென...
உணர்வுகள் மீண்டும்
துளிர்க்குது..
உள்ளமோ ஏங்கித்
தவிக்குது...

எங்கு இருக்கிறாய்....?
எப்படி இருக்கிறாய்...?
எதுவும் தெரியாமல்
தினமும் தேடுகிறேன்
இணைய வெளியில்...

என் வாழ்வின்
முடிவுரை எழுதும் முன்
முகநூலிலாவது
முகம் காட்டுவாயா?
-'பரிவை' சே.குமார்.

26 எண்ணங்கள்:

நிஷா சொன்னது…

அடட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா! இதென்ன தனி ட்ரக் ஓடுது. யாருப்பா அவங்க.! எனக்கு மட்டும் ரகசியமா சொல்லிருங்களேன் குமார்! நான்யாரிடமும் சொல்லவே மாட்டேன்.

உன் பெயர்...
என் பெயர்...
நம் பெயர்...
பெயருக்குப்
பின்னே முன்னே
உன் தந்தை...
என எல்லாம்
கொடுத்துப் பார்த்தும்
கிடைக்கவில்லை
நீ எனக்கு...

அதெதுக்கு உங்க பெயர் போட்டு தேடினீர்களாம்? இருந்தாலும் இந்த பேஸ்புக் தேடல் எல்லோரையும் தான் ஆட்டிப்படைக்கின்றதுப்பா1 கவிதையும் கருவும் நல்லா இருக்குப்பா! இன்னும் எழுதுங்கள்!

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா
பதிவர் திருவிழா கதா நாயகர்களுக்கு நன்றி சொல்லிய விதம் சிறப்பு.
கவிதை மிக அருமையாக உள்ளது நிச்சயம் விரைவில் முகம் காட்டும்... த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்...

நன்றி...

Geetha சொன்னது…

நன்றி...விரைவில் முகம் காண வாழ்த்துகள்..

சாரதா சமையல் சொன்னது…

கவிதை மிக அருமை குமார்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமையா இருக்கு! வாழ்த்துக்கள்!

KILLERGEE Devakottai சொன்னது…

அருமை நண்பரே புதிய பாணி ரசித்தேன்
தமிழ் மணம் 4

ஸ்ரீராம். சொன்னது…

அருமை. ஆனால் எழுதுபவரின் மாநிவியும், தேடப் படுபவரின் கணவனும் ஆட்சேபிக்காமல் இருந்தால் சந்திக்கலாம்! ஹிஹிஹி...

சென்னை பித்தன் சொன்னது…

உள்ளத்திலிருந்து வந்த கவிதை

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நல்ல ரசனை.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

அனுபவமா?
கற்பனையா?
தெரியவில்லையே?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கவிதை. முகப்புத்தகத்தில் இப்படி பலரும் தேடிக்கொண்டிருப்பதாக ஒரு தகவல்! :)

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆஹா!!! என்ன அருமையான கவிதை....மிக மிக ரசித்தோம்..நண்பா!!

கீதா: சில காலங்களுக்கு முன் கிட்டத்தட்ட இதே போன்று, இதே பொருளில் கவிதை எழுதினேன். தேடலும், கிடைத்தலின் முடிவுடன்.....இருக்கின்றது..ஆனால் பதிவிடவில்லை...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அதெல்லாம் ரகசியம்... தனியாச் சொல்றேன்...
ஒருவேளை என்னைப் போல் அங்கும் நினைப்பு இருக்கலாம் அல்லவா? அந்த நப்பாசையில்தான் என் பெயரும் போட்டுத் தேடியிருக்கு...
நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கீதா மேடம்...
தங்கள் கவிதையையும் வாசிக்க ஆவல்... பதிவிடுங்கள்.