மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 3 செப்டம்பர், 2015

ஜிப்பா ஜிமிக்கி

முதல்லயே சொல்லிக்கிறேன்... ஒரு படத்தோட பாடலுக்காக நான் பதிவெல்லாம் இதுவரை எழுதியதில்லை. சினிமா விமர்சனமே எப்பவாவது என்னைக் கவர்ந்த படங்களுக்கு மட்டுமே எழுதுவேன். ஒரு சினிமாவை பிரிச்சி மேயும் அளவுக்கு எனக்கு அதிம் ஞானம் இல்லை... அப்படியிருக்க பாட்டுக்காக பதிவெழுதி... அந்த வரியை இப்படி மாற்றியிருக்கலாம்... இந்த இடத்தில் கிட்டாருக்குப் பதில் ட்ரம்ஸே போட்டிருக்கலாம்ன்னு எல்லாம் கருத்துச் சொல்லும் அளவுக்கு நமக்கு இசை ஞானம் இல்லை...

சேனைத்தமிழ் உலா

அப்புறம் எதுக்குய்யா இப்ப எழுதுறேன்னு நீங்க கேட்கலாம்... சேனைத்தமிழ் உலான்னு ஒர் இணையப் பக்கம் இருக்கு, அந்தப் பக்கமா நான் ஒதுங்குனது ஒரு சிறுகதை போட்டி அறிவிச்சிருந்தப்போ காயத்ரி அக்கா சொல்லித்தான்... ஒதுங்கினேன்... பரிசும் வாங்கினேன்... அதெல்லாம் மேட்டர் இல்லை... என்ன மேட்டர்ன்னா.... அங்க ஒரு நட்பு வட்டம்... மிகச் சிறந்த உறவுகளின் உன்னத இணைப்பு அந்த உலா... 

அங்க போற வரைக்கும் நிஷா(ந்தி) அக்காவைத் தெரியது. அவர் பதிவரும் இல்லை...  ஆனால் மிகச் சிறந்த எழுத்தாளர்... அவரது கருத்துக்களே ஒரு பெரிய பதிவாகத்தான் இருக்கும்... அங்கு வரும் எல்லோரையும் கருத்துக்களால் கவர்பவர் அவர். எனது பதிவுகளைப் பலர் வாசித்தாலும் வரும் பத்துப் பதினைந்து கருத்துக்களை எழுதுபவர்களை மட்டுமே அறிவேன். சேனையில் வாசிக்கும் நண்பர்களை எல்லாம் நான் அறியேன். அங்கு சென்றதும் அவர் எனது எழுத்துக்களின் ரொம்ப நாள் வாசகி என்பதை அறிந்த போது இரட்டிப்புச் சந்தோஷம் எனக்கு... இப்போ எனக்கு ஒரு அன்பான அக்கா கிடைத்திருக்கிறார் என்றால் பாருங்கள்.... அப்படி ஒரு அழகான உறவுகளைக் கொடுக்கும் இடம்தான் சேனைத்தமிழ் உலா.

இயக்குநர் ரா,ராஜசேகர்
சரி என்ன சொல்ல வாறேன்னுதானே கேக்குறீங்க... சேனையின் உறுப்பினர் ரா.ராஜசேகர்தான் நான் சொல்லப் போற ஜிப்பா ஜிமிக்கி படத்தின் இயக்குநராம்... இவருக்கு இது முதல் படம்... அந்தப் படத்தின் பாடல்கள் வெளியானதும் நிஷா அக்கா அதன் யூடிப் இணைப்பை பகிர்ந்து சேனையில் பாடல்களைக் கேட்டு கருத்திடும்படி செய்திருந்தார். நானும் சென்றேன்... அங்க கொஞ்சம்... இங்க கொஞ்சமாப் பாட்டைக் கேட்டுட்டு வாழ்த்துக்கள்ன்னு சொல்லிட்டு வந்துட்டேன். எனக்கு அப்ப அவர் அங்கு உறுப்பினர் என்றெல்லாம் தெரியாது. அக்காவுடன் முகநூல் அரட்டையில் இருந்த போது தம்பி ஜிப்பா ஜிமிக்கி படத்தோட இயக்குநர் நம்ம சேனை உறுப்பினர், அவரோட படப்பாடல்கள் குறித்து உனக்கிட்ட இருந்து ஒரு பதிவை எதிர் பார்க்கிறேன் என்றார். எல்லாம் எழுதுறோம்... நட்புக்காக... நானும் அவரும் இதுவரை ஒரு வரி கருத்துக்கூட இட்டுக் கொண்டதில்லை என்றாலும் சேனையின் உறுப்பினர் என்ற போது நமக்கும் நட்புத்தானே என்பதால் சரி அக்கா எழுதுறேன்னு சொல்லிட்டேன்.

ஜிப்பா ஜிமிக்கின்னு டைட்டில் வச்சிட்டு கீழே 'ஜிகுஜிகுன்னு' அப்படின்னு போட்டிருக்காரு... ஜிப்பாங்கிறது ஆண்கள் போடுறது... கிராமங்களில் ஜிப்பா போட்டுக்கிட்டு போனா ஏய் ஜிப்பா போட்ட மைனருன்னு கேலி கூட பண்ணுவாங்க... ஜிமிக்கி பொண்ணுங்க போடுவாங்க... ரெண்டுமே ஜிகுஜிகுன்னுதான் இருக்கும்... அதுவும் திருவிழா நேரங்களில் பாவாடை தாவணியில் பெண்கள் ஜிமிக்கி போட்டு வரும் அழகே தனிதான்...  அதைப் பார்த்தால் ஐய்யோ.. ஐய்யோன்னு மனசு பரவசப்படும்... ம் அதெல்லாம் ஒரு கனாக்காலம்.  இப்ப பாவாடை தாவணியே இல்லை... கொஞ்ச நாள் கழித்து பாவாடை தாவணியில் பார்த்த உருவமான்னு பாட்டு பாடுனா பாவாடை தாவணின்னா என்னன்னு கேப்பாங்க... பிளாஸ்டிக் கம்மல் வந்து ஜிமிக்கியும் போயே போச்சு...


ஜிப்பா ஜிமிக்கி ஒரு வித்தியாசமான காதல் கதை என்பதை இதன் பாடல்கள் சொல்லாமல் சொல்கின்றன. படத்தின் பாடல் வெளியீட்டில் படத்தின் கதை குறித்து இயக்குநர் ராஜசேகர் சொல்லும் போது 'மிக நெருங்கிய இரண்டு நண்பர்கள் தங்கள் பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் இது அவர்களின் பிள்ளைகளுக்கு பிடிக்கவில்லை. எனவே இருவரும் ஒரு பயணம் மேற்கொண்டு திருமணம் செய்யாமல் தப்பிக்க ஒரு காரணத்தை கண்டு பிடிக்க முடிவு செய்கிறார்கள். அதன்படி மேற்கொண்ட பயணத்தில் பிரிந்தார்களா... அல்லது சேர்ந்தார்களா...' என்பதை  படத்தின் கிளைமாக்ஸில் சொல்லியிருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்.

அவர்கள் மேற்கொள்ளும் பயணம் ஒரு கட்டத்தில் காதலாகி... பின்னர் பிரிவாகி... மீண்டும் இணையும் போல்தான் பாடல்கள் இருக்கின்றன. இப்ப படத்தின் கதை குறித்து பேச, படம் இன்னும் வெளியாகவில்லை என்பதால் பாடல்கள் குறித்துப் பார்க்கலாம். படத்தின் பாடல்களுக்கு இசை ரனிப் என்ற புதிய இசை அமைப்பாளர். நமக்கெல்லாம் அறிமுகமான இசையமைப்பாளர் தீனாவின் சகோதரர் இவர் என்பது கூடுதல் செய்தி. படத்தின் இயக்குநரும் சேனையின் உறுப்பினருமான ரா.ராஜசேகர் அவர்கள் மாலை முரசு பத்திரிக்கையில் பணியாற்றியவர் என்பதும் கூடுதல் செய்திதான். நானும் தினமணியில் இருந்தவன்தான்... அப்ப சினிமாவுக்கு வருவியான்னு கேக்ககூடாது... வருசத்துக்கு ஒரு தடவை ஊருக்கு வர்றதுக்கே அரபிக்கிட்ட கெஞ்ச வேண்டியிருக்கு... இதுல சினிமாவுக்கா... சரித்தான் போங்க...

படத்தில் பாடல்கள் எல்லாமே கேட்கும்படி இருப்பது மிகச் சிறப்பு... பாடல் வரிகளை எழுதியிருப்பவர் மோகன்ராஜன், இவர் சினிமாவுக்கு புதியவர் போல தெரிகிறது. என்னோட நண்பன் தமிழ்க்காதல்ன்னு ஒருத்தன் இருக்கான். நல்ல கவிஞன்... ரெண்டு மூணு பேருக்கிட்ட பாட்டெழுதிக் காட்டி அவங்க ரசனைக்கு எழுத மறுத்து வாய்ப்புக்கள் இழந்தவன்... அவனுக்கும் இதுபோல் வாய்ப்பு வந்தால் நல்ல பாடல்களைக் கேட்கலாம்... வருமா?. 


அடித்து நொறுக்கி காதுகளைக் கிழிக்காத இசையும், வரிகளில் வரும் வார்த்தைகளை எல்லாம் கேட்கும்படி எழுதப்பட்ட பாடல்களும், நல்ல உச்சரிப்போடு பிசிறில்லாமல் பாடிய பாடகர்களும்  என முக்கனிச் சுவையும் ஒன்றாக கிடைப்பதென்பது இன்றைய தமிழ்ச்சினிமாவில் அரிதாகிவிட்டது. இசை இருந்தால் வரிகள் சொதப்பல்... வரிகள் நல்லா இருந்தால் பாடியவர் பாதி எழுத்தை மென்று முணுங்கி துப்பும் பரிதாபம்... இல்லையென்றால் வரியும் பாடியவரும் கலக்கலாய் செய்ய இசை ரணகளமாகிவிடும். ஆனால் இந்தப் படத்தை பொறுத்தவரை முக்கனிச் சுவையையும் சரி சமமாகக் கொடுத்து கேட்கும் காதுகளுக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறாரகள்.

'வண்டாள மரத்துக்காடு...' என்று ஆரம்பிக்கும் முதல் பாடல்  ஆட்டம் போட வைக்கும் வரிகளை அள்ளிக் கொண்டு வருகிறது. 

'ஏ சிப்பா போட்ட மைனரு... 
சிமிக்கி போட்ட பெண்டிரு...
சேர்ந்து நின்னா கலக்குது... 
ஜிகுஜிகுன்னு ஜொலிக்குது...' 
என்று சும்மா கலக்கலாக இருக்கிறது. 

அடுத்து வரும் பாடலின் வரிகளை வைத்தே இது காதல் பாடல்தான் என்று அடித்துச் சொல்ல முடியும். பாடலின் வரிகள் அழகிய கவிதையைக் கொடுத்து நம்மையும் பரவசப்பட வைக்கிறதே தவிர, இசையும் பாடகர்களும் நம்மை படுகொலை செய்யவில்லை... அழகான வரிகள்... பாடலே ஒரு கவிதையாய்.... இது ஆண் பெண் இருவரும் பாடும் பாடல்... 'கண்கள் நுனியில் காதல் வந்து மோதிச் சாய்க்கிறதே...' என்ற வரிதான் எத்தனை கவித்துவமாய் இருக்கிறது... இதே போல் எல்லா வரிகளும்....

'ஹையோ... ஹையோ...
பரவசப் படுகொலையே...
இது பரவசப் படுகொலையே...
கண்கள் திறக்கலை
தேகம் அசையலை
பேசத் தெரியலை அன்பே...'

அடுத்த பாடல் குத்துப் பாடல் வகை... தியேட்டரில் ஆட வைக்கும் பாடல்... தமிழ் சினிமாவில் புதிதாக வரும் இயக்குநர்கள் கூட குத்துப்பாடல்  என்னும் வலைக்குள் விழத்தான் செய்கிறார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லும் பாடல் இது. புதியவர்கள் இன்னும் சிறப்பாய் சிந்திக்க வேண்டும்... குத்துப்பாடல் என்னும் வட்டத்தை உடைத்து வர வேண்டும். மலையாளத்தில் நல்ல கதைகளுடன் இளையவர்கள் வர ஆரம்பித்திருக்கும் வேலையில் வித்தியாசமாய்ப் பண்ணினாலும் அடுத்தவனைப் போல் அதே குத்துப்பாடல் நாலு சண்டை என்ற வட்டத்துக்குள் தமிழக இளம் இயக்குநர்கள் விழுவது வருத்தமான விஷயம்..குத்துப் பாடல்தான் ஆனாலும் வரிகள் நல்லாத்தான் இருக்கு. உங்களுக்கும் பிடிக்கும்.

'அல்லாடும் வாழ்க்கையிலே
பொல்லாத சோகமில்லை...
........
டோலாரே டோலாரே
டோலாக்கு டோலுடா...
.......
ஏய்... ஐலே... ஐலே... ஐலலலே...லே...'


அடுத்த பாடலும் நல்லா இருக்கு... இது கொஞ்சம் அடிகலந்த பாடல்...  இது ஒரு விழாவில் பாடுவது போல் இருக்கிறது. ஒருவேளை திருமண நிச்சயமாகக்கூட இருக்கலாம்.. இதிலும் வரிகள் நல்லா இருக்கு. என்னடா இப்படி எல்லாத்தையும் ஆஹா ஓஹோன்னு சொல்றானேன்னு நினைக்காதீங்க... இது சும்மா சொல்வது இல்லை... வெறும் வாய் வார்த்தை இல்லை... இந்தப் பதிவை எழுதி முடிக்கும் வரை இந்தப் பாடல்களைக் கேட்டுக் கொண்டேதான் இருந்தேன்... உண்மையிலேயே வரிகள் அருமை... கவிஞருக்கு மனசின் வாழ்த்துக்கள்.

'தணனனான... தணனனான
தண்னனான... தாணானன்னா...
.................
வெண்ணிலா போல் ஒரு
தேவதைக் கண்கள்...
ஆஆஆஆயிரம் பேசியதே...'

இது நம்ம ஏ.ஆர்.ரகுமான் வகைப்பாடல் மெதுவான வரிகளும் பரபரப்பான வரிகளும் கலந்த பாடல் வித்தியாசமான ராப் வகை... ஆரம்பத்தில் சொல்லும் வார்த்தைகளை என்னால் புரிஞ்சிக்க முடியலை வாய், கழுத்து, கண்ணு, காதுன்னு எல்லாம் சொல்றாங்க... ரொம்ப வேகமா பாடுறாங்க... 

'ரசவாச்சியே... ரசவாச்சியே...
ரசவாச்சியே... ரசவாச்சியே வாச்சியே...
இருவாச்சியே... இருவாச்சியே
இருவாச்சியே... இருவாச்சியே... வாச்சியே...'


அடுத்தது பிரிவின் வலி சொல்லும் பாடல், நாயகன் நாயகி பிரிவைப் பற்றி ஒருவர் வருத்தமுற்று பாடுவதுபோல் தெரிகிறது பாடலின் வரிகளைக் கேட்கும் போது... நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

'ஐய்யோ... ஐய்யோ... ஐய்ய்ய்யோஓஓஓஓஓ....
நெஞ்சு கொதிக்குதே...
விம்மி வெதும்புதே
செஞ்ச பாவம் என்னதானோ...'

அடுத்ததும் ஒரு குத்துப் பாடல் ரகம்தான்... மியூசிக்கும் அடித்து ஆடுகிறது... கேட்கும் நமக்கும் பரபரன்னு இருக்கு என்பதே உண்மை. இதுவும் ஆட வைக்கும்.

'பரபரன்னு இழுக்குதய்யா...
பளபளன்னு சிரிக்கிதய்யா...
சிலுசிலுன்னு சிலுக்குதய்யா...
ஏங் கிளையில் வந்து இலை பறிக்கிறியே...
தேன் தேன் துளியா நீ மழை அடிக்கிறியே...'

அப்புறம் இன்னொரு பாட்டு, அதுவும் கேட்க நல்லாத்தான் இருக்கு. இது காதல் டூயட்டா அல்லது வேறு மாதிரியான்னு தெரியலை. ஆனா உறுத்தாத இசையால நல்லாயிருக்கு.

என்னானதோ எல்லாம் இங்கே...
கொண்டாடுதோ நெஞ்சம் இங்கே... 


ஜி.வி. திவாகர் தயாரித்திருக்கிறார். அவரோட மகன் கிரிஷ் திவாகரே கதாநாயகனாக நடித்திருக்கிறார்.  நாயகியாக குஷ்பு பிரசாத் என்பவரை அறிமுகம் செய்கிறார்கள்.  ஆடுகளம் நரேன், மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் வேல் நடராஜனிடம் உதவியாளராக இருந்த சரவணன் நடராஜன் இதில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். கலக்கலாகச் செய்திருக்கிறார் என பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. எந்தளவுக்கு உண்மை என்பது படம் வந்தால்தான் தெரியும்.

பாடல்கள் அருமையா வந்திருக்கு... இவனுக்கு இவள் அல்லது இவளுக்கு இவன்னு சொந்தங்களில் பேசி வைத்து கட்டுவது இன்னும் எங்கள் பக்கமெல்லாம் வழக்கத்தில்தான் இருக்கு, அது போல ஒரு கதைதான்... அதில் இருந்து விடுபட ஒரு பயணம்... காதல்.... மோதல்... மீண்டும் சேரல் என்பது போல்தான் கதை இருக்கும் என்று தெரிகிறது. இது தமிழ் சினிமாவின் டிரேட் மார்க் ரகம்தான்.  புதிய முயற்சிகளோடு இறங்கலாம். எத்தனை நாளைக்குத்தான் அரைத்த மாவையே அரைப்பது.

பெரும்பாலும் பாடல்கள் கேட்கும் போது அருமையாக இருந்தால் காட்சிப் படுத்துதலில் சொதப்பி விடுவார்கள். இங்கே புதிய இயக்குநர் எப்படிச் செய்திருக்கிறார் என்று தெரியவில்லை. சேரனைப் போல் படத்தின் கதையோடு பாடல்களையும், பாடல் காட்சிகள் கூட கதை சொல்லும் வித்தையையும் புதியவர்கள் யாருமே பயன்படுத்துவதில்லை. எல்லோருமே அந்தப் பக்கம் போக பயப்படுகிறார்கள். சேனையின் உறவு, நண்பர் புதிய இயக்குநர் அதிலிருந்து மாறுபட்டு தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே எங்களது ஆசை... பிடிப்பாரா பார்க்கலாம். ஜிப்பா ஜிமிக்கி ஜெயித்தால் ரா.ராஜசேகர் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தைப் பிடிக்கலாம். பார்ப்போம்.



பாடல்களை நீங்களும் கேளுங்கள்... உங்களுக்குப் பிடித்திருந்தால் நண்பரை வாழ்த்துங்கள்.... அவரும் வளரட்டும்...
-'பரிவை' சே.குமார்.

27 எண்ணங்கள்:

நிஷா சொன்னது…


அருமை, அட்டகாசம் குமார்! ஒரு படத்தில் பாட்டுக்கு இத்தனை விரிவான விமர்சனம் ! சும்ம்ம்ம்ம்ம்ம்மா ஜிகு ஜிகுன்னு மின்னுதுப்பா! நிஜம்ம்ம்மாக நான் எதிர்பார்க்கவே இல்லை! இத்தனை அருமையான பாடல் விமர்சனம். பாடல் காட்சிகளும் அதற்கேற்ப இருந்திட்டால் பாட்டின் வெற்றியே படத்தின் வெற்றிக்கு முன்னறிவிப்புத்தான். ரெம்ப நன்றி குமார்.

சேனை தமிழ் உலா பற்றி வெளியில் நின்று விமர்சிப்போர் மத்தியில் உள் நுழைந்து எங்கள் அன்பை நட்பை புரிந்து கொண்ட உங்கள் அன்புக்கும் நன்றி.

என்னை குறித்த உங்கள் கருத்தும் புரிதலும் நன்றி என சொல்லிட செய்தாலும் அத்தனைக்கும் நான் தகுதியில்லைப்பா. பெரிய எழுத்தெல்லாம் நான் எழுதல்ல. ஏதோ இருக்கும் வேலைபழுவுக்கு மத்தியில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இங்கே வந்து எழுதி போவேன். நான் இவர்களுக்கு செய்வதை விட இவர்கள் அனைவரும் என்னை அன்பால் மூழ்க வைத்து திணற அடிப்பது தான் நிஜம். நிரம்ப படிப்பேன் என்பதை தவிர என்னை சொல்ல ஏதுமில்லை. இருப்பினும் உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றிப்பா.

நிஷா சொன்னது…

அடித்து நொறுக்கி காதுகளைக் கிழிக்காத இசையும், வரிகளில் வரும் வார்த்தைகளை எல்லாம் கேட்கும்படி எழுதப்பட்ட பாடல்களும், நல்ல உச்சரிப்போடு பிசிறில்லாமல் பாடிய பாடகர்களும் என முக்கனிச் சுவையும் ஒன்றாக கிடைப்பதென்பது இன்றைய தமிழ்ச்சினிமாவில் அரிதாகிவிட்டது. இசை இருந்தால் வரிகள் சொதப்பல்... வரிகள் நல்லா இருந்தால் பாடியவர் பாதி எழுத்தை மென்று முணுங்கி துப்பும் பரிதாபம்... இல்லையென்றால் வரியும் பாடியவரும் கலக்கலாய் செய்ய இசை ரணகளமாகிவிடும். ஆனால் இந்தப் படத்தை பொறுத்தவரை முக்கனிச் சுவையையும் சரி சமமாகக் கொடுத்து கேட்கும் காதுகளுக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறாரகள்.//////

மிகதெளிவான பர்வை. என்னுடைய கருத்தும் இதுவாய் தான் இருக்கின்றது. குத்துப்பாட்டும் இருந்தால் தான் கலகலப்பாய் இருக்கும். குத்துபாட்டானாலும் டான்ஸ் மூவ் மென்ட் நன்றாக இருக்கணும்.

மகிழ்நிறை சொன்னது…

படமும், பாடல்களும் வெற்றியடைய வாழ்த்துக்கள் அண்ணா!

ஸ்ரீராம். சொன்னது…

நண்பர்கள் ஜெயிப்பதில் சந்தோஷம்தான். ஜெயிக்க வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ராஜசேகர் தமிழ் சினிமா உலகில் நிலையான இடத்தினைப் பிடிக்க வாழ்த்துவோம்
தம +1

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பாடல்களை இனி மேல் தான் ரசிக்க வேண்டும்...

சாரதா சமையல் சொன்னது…

பாடலுக்கான விமரிசனம் அற்புதம் குமார்.

KILLERGEE Devakottai சொன்னது…

விமர்சனம் அருமை நண்பரே தங்களின் நண்பருக்கும் வாழ்த்துகள் பாடல்கள் பிறகு முழுமையாக கேட்பேன்

காயத்ரி வைத்தியநாதன் சொன்னது…

ஆஹா தம்பி பாட்டுக்கு விமர்சமே அசத்தல். சகோதரர் ரா.ரா. படமும் பாடலும் வெற்றியடைய மனமார்ந்த நல்வாழ்த்துகள். :) :) பாட்டு இரசிக்கும் வண்ணம் இருக்கிறது.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நண்பர்கள் வெற்றி நம் வெற்றி. வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

குமார் உங்க பாடல் விமர்சனம் அருமை ... வரிக்கு வரி அருமையா பாராட்டி இருக்கிங்க...

உங்க எழுத்து ரொம்ப அற்புதம் .
நல்ல நகைசசுவையாகவும் எழுதுறிங்க. சிலரின் எழுத்து படிக்கும்போதே பிடிக்கும் அந்த மாதிரி உங்க எழுத்து நடை பிரமாதம்...

அவரிடம் பழகாமலே இவ்வளவு தூரம் பாராட்டி இருக்கிங்க ...ரொம்ப பெருமையா இருக்கு. காலைல வந்ததும் இது தான் கண்ணில்பட்டது. படித்தேன் ஆனால் பின்னூட்டம் அடித்து விட்டு பதிவிடும்போது கரண்ட் போய்ருச்சு. மீண்டும் டைப் செய்தேன். அதிலும் காப்பி செய்து கொண்டே அடிக்கிறேன்.

அய்யோ அய்யோ பாடல் என் பொன்ணுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நேத்து தான் பாடலை மொபைலில் டவுன்லோட் செய்து என் பொண்ணுகிட்ட குடுத்தேன் நான் இன்னும் முழுதாக நான் கேக்கல. பொண்ணு 20 தடவையாச்சும் கேட்டிருப்பா...


டைரக்டர் ரொம்ப போராடி இருக்கார் அவரின் படம் வெற்றி பெற வாழ்த்துகள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பாடல்கள் கேட்கவில்லை இனிதான் கேட்கணும் உங்கள் விமர்சனம் பல சொல்லுது..படமும், பாடல்களும் வெற்றி பெற வாழ்த்துகள்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
ஆகா... நீண்ட தொரு கருத்து...
உங்கள் அன்பினால்தான் நாங்கள் எல்லாரும் சேனையில் எழுதுகிறோம்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
உண்மைதான்...
இந்த எதிர்பார்ப்பை படம் நிவர்த்தி செய்ய வேண்டும்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தங்கை...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
முதலில் சேனையில் இருந்து இங்கு தாங்கள் கருத்திட முதல் முதலாய் வருகை புரிந்தமைக்கும் இங்கு நட்பில் இணைந்தமைக்கு நன்றி அக்கா...

எனது எழுத்துக்கள் தங்களைக் கவர்ந்ததாய் சொல்லியிருப்பதற்கும் நன்றி.

இயக்குநர் ஜெயிக்கட்டும்... ஜெயிக்கணும்...

கருத்துக்கு நன்றி அக்கா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பாடல்களைக் கேளுங்கள்... கண்டிப்பாக ரசிப்பீர்கள்...

Unknown சொன்னது…

ரொம்ப நன்றி குமார்

துபாய் ராஜா சொன்னது…

படமும், பாடல்களும் வெற்றியடைய வாழ்த்துக்கள் நண்பரே...

Paramasivam சொன்னது…

நண்பரின் வெற்றியும் எனது வெற்றி தான்-உங்கள் எண்ணம் நிறைவேறும். இப்போதெல்லாம் புதியவர்கள் தான் கலக்குகிறார்கள்