மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 15 ஜூலை, 2015

காற்றில் கலந்த மெல்லிசையின் ராகங்கள்

'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு அஞ்சலி

(இசை ஒலித்தது : 24-06-1928  இசை ஓய்ந்தது : 14-07-2015)
த்தனை ராஜாக்கள் வந்தாலும் தனது இசையால் பல இதயங்களைக் கட்டிப் போட்ட மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. என்னும் புல்லாங்குழல் தனது காற்றை இங்கு உலவ விட்டு இன்று சாம்பலாகிவிட்டது. காலத்தால் அழியாத கானங்களைக் கொடுத்த அந்தக் கலைஞனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரின் பாடல்கள் சிலவற்றை இங்கு பகிர்ந்துள்ளேன்.

ஆடலுடன் பாடலைக் கேட்டு 
ரசிப்பதிலேதான் சுகம்... சுகம்...



உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்....
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்...



காதலின் பொன் வீதியில் காதலன் பண்பாடினான்...
பண்ணோடு அருகில் வந்தேன் நான் கண்ணோடு....



கண்ணான பூமகனே
கண்ணுறங்கு சூரியனே...


(திரு. MSV அவர்கள் ஒரே ஒரு வாத்தியத்தை 
வைத்து இசையமைத்த பாடல்)

அடி என்னடி ராக்கம்மா
பல்லாக்கு நெளிப்பு....




ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து 
ஓடம் போலே ஆடலாம் பாடலாம்....



நினைவாலே சிலை செய்து 
உனக்காக வைத்தேன் திருக்கோயிலே...



கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை மலர்...




அல்லா அல்லா யா அல்லா அல்லா
நீ இல்லாத இடமே இல்லை....




புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே...



(கவிஞர் கண்ணதாசனின் கிருஷ்ணகானம் என்ற கேசட்டிற்காக எம்.எஸ்.வி இசையில் டி.எம்.எஸ். பாடியது. இந்தப் பாடலின் இசைக்காக கவிஞர் பாராட்டியதையும் இந்தப் பாடலை உன்னோட கச்சேரியில் முதல் பாடலாய் பாடவேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க தனது எல்லாக் கச்சேரியிலும் முதலில் பாடுவதாகவும் பாடலை முடிக்கும் போது புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே... எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களேன் என்று முடிப்பதாகவும் தனது பேட்டி ஒன்றில் திரு. எம்.எஸ்.வி. குறிப்பிட்டிருந்தார்.)

*************

சூப்பர் சிங்கரில் எம்.எஸ்.வி. பாடிய 
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே....


திரு. எம்.எஸ்.வி. அவர்களின் உடல் இன்று சாம்பலாகி காற்றோடு கலந்து இருந்தாலும் அவர் கொடுத்துச் சென்ற ஆயிரக் கணக்கான பாடல்கள் என்றும் நம் இதயங்களில் இசையாய் நிரம்பியிருக்கும். மெல்லிசை மன்னர் காலங்கள் கடந்தாலும் இசையாய் வாழ்ந்து கொண்டிருப்பார்... இசைக்கு இறப்பில்லை.

-'பரிவை' சே.குமார்.

26 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

இசைபட வாழ்ந்த பெருந்தகை. பெரும் உயரங்களை எட்டிப்பிடித்து வாழ்வின் பொருளை உணர்த்திச் சென்றுள்ளார். இவரால் எத்தனை கோடி மனிதர்கள் கவலை மறந்து மகிழ்ந்திருந்தனர்? அத்தனை புண்ணியமும் அவருக்கே.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நேற்று அவரின் பாடல் தொகுப்பை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தேன் கண்ணீருடன்...

காரிகன் சொன்னது…

எத்தனை ராஜாக்கள் வந்தாலும்....

சரியான வார்த்தை. ஆனால் அதை நீட்டிக்க விருப்பமில்லை தற்போது.

எம் எஸ் வி ஆர்க்டிக் போன்று ஒரு உறைந்த கடல். வற்றியே போகாத இசையை அளித்தவர்.

காற்றில் கரைந்த மெல்லிசை என்றார்கள் இல்லை காற்றில் கலந்த மெல்லிசை என்பதே உண்மை.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

ஒரு சகாப்தம் மறைந்துவிட்டது . அனால் அவர் விட்டு சென்ற பாடல் என்றும் நம்முடன்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இசை ஜாம்பவான் என்று சொன்னால் மிகையல்ல. எத்தனை எத்தனை பாடல்கள்...எந்தவித வசதியும் இல்லாத காலத்தில் ...

நீங்கள் சொல்லி இருக்கும் எத்தநை எத்தனை ராஜாக்கள் வந்தாலும் தனது இசையால் பல இதயங்களைக் கட்டிப்போட்டவர்தான்...மிகையல்ல

அன்னாரது இசை நாம் சுவாசிக்கும் காற்றில் கலந்து காற்றினில் வரும் கீதமாய் என்றும் நிலைத்திருக்கும்...நம்மை மகிழ்விக்கும்....

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மட்டுமல்ல குணத்தினாலும் மாமனிதர். நண்பர் விசு அவர்களின் தளத்திலும் அவர் பகிர்ந்திருக்கும் பதிவு கண்ணதாசனும் மன்னரும் உரையாடிய மிகவும் சுவாரஸ்யமான பதிவு...

Kasthuri Rengan சொன்னது…

இப்படி ஒரு பதிவைப் போட முடியுமா என்பதே வியப்பு..
மிகச் சரியான அஞ்சலி
காதலின் பொன்வீதியில் ... பின்னணியில் இந்த பின்னூட்டத்தை அடிப்பதே தனி சுகமா கீது நைனா..
ரொம்ப நன்றி ...
கலைஞர்கள் மரணத்தை வென்றவர்கள்...
எத்துனையோ தனவான்கள் வாழ்ந்து மறைந்த ஊர் புதுகை..
பி.யூ.சின்னப்பா என்கிற நடிகர் தந்த அடையாளம் இன்னும் மறக்கவில்லை... மறையவில்லை...
எம்.எஸ்.வி யின் இசையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன்தானே எந்த விழாவுமே துவங்க வேண்டும்.
தம +
செமையான அஞ்சலி பாஸ்
இன்னும் ஒலிக்கிறது அந்தப் பாடல்..
பை பார் நவ்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

மெல்லிசை மன்னருக்கு நல்ல புகழஞ்சலி. இசை உள்ளவரை, காற்று உள்ளவரை அவர் இருப்பார். அவருக்கு மரணமில்லை.

சாரதா சமையல் சொன்னது…

பாடல் தொகுப்பு மிக அருமை குமார். ஒரு பெரிய சகாப்தத்தை இழந்ததாலும் அவர் விட்டுச் சென்ற பாடல்கள் நம்முடைய மனதில் நிலைத்து நிற்கும்.

துரை செல்வராஜூ சொன்னது…

என்றென்றும் மெல்லிசையாய் அவருடைய ஆன்மா நம்முடன் கலந்தே இருக்கும்!..

கோமதி அரசு சொன்னது…

அவர் அளித்த பாடல்கள் மூலம் என்றும் வாழ்வார் மெல்லிசை மன்னர்.
நல்ல இசை தொகுப்புக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
உண்மைதான் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
என்னமோ இன்று அவரின் பாடல்களைக் கேட்கும் போது தனிச்சுகம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார் / கீதா மேடம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார் / கீதா மேடம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மது சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

மெல்லிசை மன்னருக்கு சிறந்த அஞ்சலி! நன்றி!

சென்னை பித்தன் சொன்னது…

காலத்தை வென்று நிற்கும் கானங்கள் படைத்தவர்

மகிழ்நிறை சொன்னது…

இப்படி பாடல்களை தேர்ந்தெடுத்துத் தொகுத்த நேர்த்திக்கே எம்.எஸ்.வி.அய்யாவின் ரசிகர்கள் அறுதல் கொண்டிருப்பார்கள். அருமையான அஞ்சலி அண்ணா!

Unknown சொன்னது…

அனைத்தும் அருமை!