மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 22 மார்ச், 2013

'காலேஜுல படிக்குற என் மகனை போடா போய் போராடுன்னு அனுப்பிட்டேன்' - ஆட்டோ டிரைவர்

 auto driver attracts agitating students in madurai


மதுரையில் நடந்த மாணவர் போராட்டத்தின்போது ஒரு ஆட்டோ டிரைவர் அனைவரையும் கவர்ந்திழுத்தார். மிகத்தீவிரமாக தமிழ் ஈழத்தை ஆதரித்தும், இலங்கையைக் கண்டித்தும் கோஷம் எழுப்பிய அவர் பேசிய பேச்சுதான் அட்டகாசமானது. 

அவரது பெயர் நாகராஜ். பெரியார் பேருந்து நிலையத்திற்கு சவாரி வந்தவர். வந்த இடத்தில் நடந்த தமிழ் ஈழ ஆதரவு போராட்டத்தைப் பார்த்து அதில் இணைந்து கொண்டார். சுமார் 5 மணி நேரம் போராட்டத்தில் அவர் பங்கேற்றார். 

அப்போது அவர் திரண்டிருந்த மாணவர்களிடம் தனது ஆட்டோ மீது ஏறியபடி பேசுகையில், தம்பிகளா இத்தனை வருஷமா மனசுக்குள்ள வச்சிக்கிட்டு குமுறிகிட்டு இருந்தேன்பா..... நீங்கல்லாம் போராட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தாம்ப்பா நிம்மதியா இருக்கு.

இனிமேல் மதுரைல உங்க போராட்டம் நடக்கும் போது போன் போடுங்க .. நேரம் கிடைக்கும் போது கலந்துக்குறேன். எப்பாடு பட்டாவது ஈழ மக்களுக்கு நல்லது ஏதாவது நடக்க வைக்கணும்யா"என்றாரே பார்க்கலாம். 

நாகராஜ் தனது ஆட்டோவின் பின் புறத்தில் பிரபாகரன் துப்பாக்கியால் சுடுவது போல் படம் வைத்து மதுரை வீதிகளை பல ஆண்டு காலமக வலம் வருவது குறிப்பிடத்தக்கது. நெல்லை மாவட்டத்தில் தென்காசி ,செங்கோட்டை வட்டாரப் பகுதிகளில் இன்று இவரைப்போல் மனம் படைத்த சுமார் 750 ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 

தொடரும் போராட்டங்கள் ஈழ விடுதலைக்கான மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள சின்னங்குடி மீனவர்கள் 300 பேர் 60 படகுகளில் கடலுக்குள் உண்ணாவிரதம் இருந்தனர். மீனவர்கள் கரையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலையில் படகுகளை நிறுத்தி அங்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.மீனவ பெண்கள் 500 பேர் சின்னங்குடி கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தனர். 

நன்றி : தமிழ் இணைய பத்திரிக்கைகள்

-'பரிவை' சே.குமார்

4 எண்ணங்கள்:

பெயரில்லா சொன்னது…

ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், நடுத்தர மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றமைக்கு இத்தகைய தந்தைமாரும் காரணமோ !

Unknown சொன்னது…

நேற்று இவரிடம் பேசினேன். மனம் நிறைவாக இருப்பதாக கூறினார்.
சத்தியமா சொல்லுறேன். எங்க வீட்டுல இப்ப்டியெல்லாம் என்னை அனுப்ப மாட்டங்க. :(

Unknown சொன்னது…

வெளிநாடுவாழ்
இலங்கை தமிழர்கள்
இலங்கையில்
அமைதி ஏற்பட்டால்
தங்களின் அகதிபாஸ்
ரத்தாகி தங்களின்
சொகுசு வாழ்க்கை
பறிபோய்விடும் என
அஞ்சுகின்றனர். அதனால்
தான் ஈழம் என்ற
வார்த்தை நெருப்பை
அணையவிடாமல்
ஊதி ஊதி எறிக்கின்றனர்.
ஒருவேளைக்
கஞ்சி இப்போதைக்கு
கிடைத்தால் பசியாற
போதுமென நாங்கள் இருக்கும்
போது பிரியாணியும் பீடாவும்
கொடு என
அவர்களை வெறியேற்றி
கஞ்சிக்கும் வேட்டு வைத்து
அதைக்காட்டி தங்கள்
அகதி பாஸை ரினிவல்
செய்து கொள்ள குரல்
கொடுப்பவர்களை விட
சிங்களவன் தரும்
ஒரு குவளை தண்ணீரே
இப்போதைக்கு எம்மக்களுக்கு
சிறந்தது. அண்ணா,
ஒன்னு யோசிங்கள்.
இப்போது நடக்கும்
போராட்டங்கள் இங்கிருக்கும்
மக்களுக்கு நன்மை தருமா
தீமை தருமா என
நீங்களே சொல்லுங்கள்.
ஏற்கனவே எரியும் தீயில்
இவர்கள் சுய நல
எண்ணையை ஊற்றுகிரார்கள்
. முள்ளிவாய்காலில் நாங்கள்
உயிருக்கு போராடிய
போது இன்றைக்கு போராட்டம்
நடத்தும் மாணவர்கள்
எங்கே போனார்கள்? ஆக
இன்னும் கொஞ்சம்
ஊன்றி ஆராய்ந்தால் இந்த
மாணவர்களில் உள்ள
விலைபோனவர்களையும்,
இதை தூண்டிவிட்டு
அதன்மூலம் ஒரு பெரிய
ஆதாயத்தை நோக்கி
காத்திருப்பவர்களையும்
பிடித்து விடலாம். அய்யா,
ஈழம் வேண்டும் என
இங்கிருப்பவர்கள் யாரும்
கேட்கவில்லை. தூதன்
வருவன் மாரி பெய்யும்
என்ற கற்பனையில்
நாங்களினி வாழ இயலாது.
எங்களுக்கினி தேவை மீள்
வாழ்க்கையும் நிம்மதியுமே.

நட்சத்திரா சொன்னது…

Good time