நமக்குள் சண்டை
ஆரம்பித்தது
உனக்கு நினைவில்
இருக்கிறதா சகோதரனே...
சிறுவயதில் உன்
ரப்பரை எடுத்த
என்னை மூர்க்கமாய்
அடித்தாயே
அதுதான் முதல்விதை...
தொடர்ந்த நாட்களில்
தொட்டதெற்கெல்லாம்
நமக்குள் மல்லுக்கட்டு...
நமக்குள் சந்தோஷ
தருணங்களை விட
நாம் சண்டையிட்ட
தருணங்களே அதிகம்...
ஏனோ தெரியவில்லை
ஒரே வயிற்றில்
ஜனித்த போதும்
நமக்குள் குரோதம்...
பல நாட்கள்
பாரா முகமாகவும்
பேசா ஊமையாகவும்
கழிந்து விட்டன...
அன்று விழுந்த விதை
இன்று விருட்சமாய்...
அன்றைய சண்டையின் போது
அதட்டவும் அடக்கவும்
அருகில் அம்மா அப்பா...
இன்று நமக்குள்ளான
பூமிச் சண்டை
தீர்க்க பூமியில்
இல்லை அவர்கள்...!
-'பரிவை' சே.குமார்.
Thanks : Photo from Google.
16 எண்ணங்கள்:
கண் கலங்க வச்சிடீங்க சகோ
அண்ணன் தம்பி பங்காளி ன்னு யார் சொன்ன சாபச் சொல்லோ
எத்தனையோ உறவுகளில் இது கொடிய சாபமாய் நீளுகிறது சகோ
வளராது வரைக்கும் தான் அண்ணன் தம்பி பாசம்
வளர்ந்த பின் பங்காளி
இப்பம் உடல் நலம் எப்படி இருக்கு சகோ
நினைவுகள் பலவற்றை யோசிக்க வைக்கின்றன... விட்டுக் கொடுத்திட வேண்டியது தான்...
வரக் கூடாத சண்டை. பூமிக்காக பூமியில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நல்ல கவிதை குமார்.
அஞ்சு வயசில் அண்ணன் தம்பி, பத்து வயசில் பங்காளின்னு சொல்லுவாங்க.. அதை நினைவுபடுத்துது உங்க கவிதை.
அருமை.
சின்ன சோகத்துடன் பழைய கதையையும் அதன் தொடர் வலியையும் அழகாய்ச் சொல்லிப்போகிறது கவிதை!
நயமான கவிதை பங்காளி!
நயமான கவிதை பங்காளி!
கண்டிப்பா சண்ட போடணும்,பூமிக்காக!ஏன்னா "போறப்போ"அதையும் கையோட எடுத்துக்கிட்டுப் போகலாமில்லியா????
கவிதையில் கதையை சொல்லிட்டீங்களே!
பல குடும்பங்களில் இது ஒரு தீராத பிரச்னையாக
இருக்கிறது
அதை வார்த்தைகளில் அடுக்கிய விதம் நன்று குமார்
ஆனால் சகோதர சண்டை கண்டிப்பாக கூடாது
தாய் வழி வந்த செல்வங்களெல்லாம் ஓர் வழி நின்று
நேர் வழி சென்றால் நாளை நமதே
இந்த நாளும் நமதே
வாங்க சகோ. செய்தாலி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இப்ப பரவாயில்லை. அலுவலகம் சென்று வருகிறேன். உங்கள் அன்புக்கு மீண்டும் நன்றி.
வாங்க சகோ. தனபாலன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ராமலக்ஷ்மி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சாரல் அக்கா....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மனோ அம்மா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மோகன்ஜி அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சகோ. யோகா...\
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஆசியாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நல்லாருக்கு தம்பி..இதையெல்லாம் கதையில்தான் கண்டதுண்டு..அதற்கே மனம் வலிக்கும்..உயிரற்ற நிரந்தரமில்லாத ஒரு விசயத்திற்கு அற்புதமான மனிதப்பிறவியில் இப்படியும் நிகழ்வா என சிந்திப்பதுண்டு.. இப்பிறவியின் உன்னதம் புரிய இதுபோன்ற விசயங்களில் பற்று இருக்காது. நல்லா இருக்குப்பா. விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை..
பெற்றவர்களோடு வளரும்போது சண்டை வேறாய் விளையாட்டாய்.வளர்ந்ததும் வேற்று மனிதர்களாய் வேறுபடும் சகோதர பாசம்....வேதனை !
மனம் வலித்தது. சகோதரர்கள் அடித்துக்கொள்வதை என் வாழ்விலும் அனுபவித்ததால்
கருத்துரையிடுக