மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 24 ஜூலை, 2012

சிறு பூக்கள்..!




சாமிக்குப் படையலாய்
கறியும் சாராயமும்...
கும்பிட்ட மனங்களுக்கு
படையலே சாமியாய்..!

*************************

தவளைகள் தாலாட்டும்
மழை இரவு...
உறங்காமல் தவிக்கும்
உன் நினைவுகள்..!

*************************

சாம்பலாய் உதிர்ந்தது
இதயப் பந்து...
உதட்டில் உக்கிரமாய்
சிரித்தது சிகரெட் நெருப்பு..!

*************************

சப்பரத்தில் சாமி
அனாதையாய்...
மல்லுக்கு நிற்கிறது
சாதி ஆரவாரமாய்..!

*************************

தழுவிய காற்று
சங்கடப்பட்டது...
மொட்டையாய் மரம்..!

-'பரிவை' சே.குமார்

9 எண்ணங்கள்:

sathishsangkavi.blogspot.com சொன்னது…

//சாம்பலாய் உதிர்ந்தது
இதயப் பந்து...
உதட்டில் உக்கிரமாய்
சிரித்தது சிகரெட் நெருப்பு..!//

சூப்பர்... உண்மையான வரிகள்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிந்திக்க வைக்குது வரிகள்...

பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

செய்தாலி சொன்னது…

ம்ம்ம்
ஒவ்வொன்றும் அழகு

ஹேமா சொன்னது…

குட்டிப்பூக்கள் எல்லாமே அருமை குமார்.அதுவும் மொட்டை மரம் மனதில் பதிகிறது !

vanathy சொன்னது…

super.

r.v.saravanan சொன்னது…

குட்டி பூக்கள் அனைத்தும் நன்று

சப்பரத்தில் சாமி
அனாதையாய்...
மல்லுக்கு நிற்கிறது
சாதி ஆரவாரமாய்..!


தழுவிய காற்று
சங்கடப்பட்டது...
மொட்டையாய் மரம்..!

அதிலும் இது சும்மா நச்சுனு இருக்கு குமார் வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி சொன்னது…

சிறு பூக்கள் எல்லாமே அருமை.

1,4,5 மிக அழகு.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

ஒவ்வொண்ணும் 'நச்'ன்னு அசத்தலா இருக்குது.

unknown சொன்னது…

வணக்கம்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....