எல்லாருக்கும் வணக்கம்...
பதிவு எழுதி நீண்ட நாட்களாகிவிட்டது. பதிவுலகம் பக்கம் வரமுடியாமல் பல பிரச்சினைகள். கடந்த ஐந்து மாதத்தில் எத்தனை பிரச்சினைகள்... அப்பப்பா... எல்லாம் தாண்டியாச்சு.
முதலில் பிரச்சினைகள்...
வேலை ஆரம்பிக்க ஒரு மாதம் ஆகும் என்று ஊருக்குப் போய் மூன்று மாதங்களுக்கு மேலாக சம்பளம் இல்லாமல் வீட்டில் இருந்தது...
வீடு கட்ட பூமிபூஜை போட்டு இன்னும் வேலை ஆரம்பிக்காமல் இழுத்துக் கொண்டே போவது...
அபுதாபி வந்த அன்றே அலைனில் வேலை என இங்கு ஓடி வந்து... அறை கிடைக்காமல் பதினைந்து தினங்கள் எங்கள் பெங்களூர் சார் அறையில் தங்கியது.
அறை கிடைத்து இண்டர்நெட்டுக்கு விண்ணப்பித்து ஒரு மாதமாக இழுத்தடித்து கடந்த வாரம்தான் வந்தது. அது வரை ஊருக்கு கூட பேசமுடியாமல் தவித்தது...
ஒரு மாதம் வேலை பார்த்து 20 நாட்கள் சம்பளம் மட்டுமே வாங்கியது என எராளமான பிரச்சினைகளுக்கு மத்தியில்...
நாங்கள் வேலை பார்க்கும் AADC – யில் எகிப்து அரபியின் கீழ் பணி, அவன் படுத்தும் பாடு இன்னும் தொடரத்தான் செய்கிறது....
இப்ப சில சந்தோஷங்கள்...
எனது கருத்தப்பசு சிறுகதை வம்சி சிறுகதைப் போட்டியில் தொகுப்புக்காக தேர்தெடுக்கப்பட்டது...
கோயம்பத்தூர் கின்னஸ் கவியரங்கில் எனது கவிதையும் கலந்து கொண்டு அதற்கான சான்றிதழ் பெற்றது...
நண்பர் எல்.கே, ரமா அக்கா மற்றும் சாகம்பரி அக்கா ஆகியோர் வழங்கிய விருதுகள்....
ரமா அக்கா உள்ளிட்ட நிறைய நண்பர்கள் எனது பதிவுகளை வலைச்சரத்தில் அறிமுகப்டுத்தியது....
எனது சிறுகதைகளை எனது கல்வித்தந்தை பேராசான் பழனி இராகுலதாசன் அவர்கள் தொகுப்பாக கொண்டு வரவேண்டும் என்று வாங்கி படித்து தரம் பிரித்துக் கொண்டிருப்பது...
எனது குடும்பத்துடன் மூன்று மாதங்களுக்கு மேல் சந்தோஷமாக கழித்தது...
என இன்னும் சில சந்தோசங்கள் என்னுள்ளே...
மீண்டும் சில சோகங்கள்....
எனது மாமா (அம்மாவின் தம்பி) திடீரென மாரடைப்பால் மரணமடைந்தது.
சில தினங்களுக்கு முன்னர் எனது அக்கா, தன் மகளுடன் TVS-XL-ல் போன போது விழுந்து தலையின் பின்பக்கம் அடிபட்டு மிகவும் கவலைக்கிடமான நிலையில் மதுரை மீனாட்சி மிஷனில் சிகிச்சை பெற்று, இன்று பரவாயில்லை ICU-வில் இருந்து வெளியில் கொண்டாந்தாச்சுப்பா என்று அப்பா போனில் சொன்னது என சந்தோஷங்களை எல்லாம் அழுக்கி சோகம் சூழ்ந்த மனசோடு இருக்கிறேன்.
இதனிடையில்...
நேற்று முதல் நம்ம மைந்தர் LKG போறாருங்க... எல்லாரும் அவரு நல்லா படிக்கணுமுன்னு வாழ்த்துங்க...
இனி இடைவெளி அதிகமில்லாமல் எழுத வருகிறேன்...
அதுவரை....
பிரியங்களுடன்
சே.குமார்.
15 எண்ணங்கள்:
இனி உங்கள் வாழ்கை இன்பகரமாக அமைய இறைவனை வேண்டுகிறேன். உங்கள் மகனுக்கு எனது வாழ்த்துகள்.
வணக்கமுங்க!அடடே,L.K.G-போக ஆரம்பிச்சுட்டாரா?கங்கிராட்ஸ்!இனிமேதான் நீங்க கொஞ்சம் பொறுமையா,அவதானமா இருக்கணும்.கேள்வி மேல கேள்வி கேட்டு உண்டு இல்லைன்னு பண்ணிடுவாரு!பொறுமை ரொம்ப அவசியம்!
தங்கள் மைந்தன் கல்வியில் சிறந்து விளங்க மன்மார்ந்த வாழ்த்துக்கள் தோழரே...
சொல்லிச் சுமைகள் ஏறுவதில்லை
சோகம் கடந்து கார்மேகம் பொழியும்
மழைத் துளியில் சிரிக்கும் பூமித்தாய்
எத்தனை இன்னல்களில் இன்றும் ....
இதுவும் கடந்துப் போகும் ...
வணக்கம்
வாருங்கள் ! தொடருங்கள் ! உங்கள் மைந்தனுக்கு வாழ்த்துக்கள் !
வாருங்கள் ! தொடருங்கள் ! உங்கள் மைந்தனுக்கு வாழ்த்துக்கள் !
உங்கள் மகனுக்கு எனது வாழ்த்துக்கள்.kumar
மீண்டும் வருக. சின்னவர் பெரிய படிப்பு படிக்க போறாரா? வாழ்த்துக்கள்.
இறைவன் அருளால் எல்லாமும் பெற்று மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்... உங்க மகன் நல்லா படிச்சி பெரிய ஆளா வரணும். என் வாழ்த்துகள்
காலை வணக்கம்!இனிய நந்தன வருட வாழ்த்துக்கள்!
தங்கள் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரத்திற்கு என் வாழ்த்துக்கள் சகோ...
தங்கள் குடும்ப அசம்பாவிதங்களுக்கு மனம் வருந்துகிறேன்... தங்கள் புதல்வருக்கு என் வாழ்த்துக்களும்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவரின் முதல் குறும்பட வெளியீடும் தமிழ் இணைய உலகில் வித்தியாசமான வெளியீடும்
மகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
வம்சி போட்டி முடிவு.. பாராட்டுகள்.
சந்தோஷ செய்திகள் வருத்தங்களை ஆற்றட்டும். விரைவில் சிக்கல்கள் சரியாகும் என நம்பிக்கையுடன் இருங்கள். மாமாவுக்கு என் அஞ்சலிகள்.
வாழ்க்கையோடு போராட்டம்தான்.ஏன்தான் இப்படியோவென்று வெறுக்கவைக்கிறது.ஆனால் நம்பிக்கையோடு இருங்கள் குமார்.சாதிக்கலாம் நிறையவே !
சோதனைக்காலங்கள் முடிஞ்சு இனிமே எல்லாமே நல்லதா நடக்கட்டும்,..
எலிக்கேஜி படிக்கப்போகும் பையருக்கு வாழ்த்துகள் ;-))
உங்க மகனுக்கு வாழ்த்துகள்.
வாழ்வு இனிதாய் அமைய வாழ்த்துகள்
கருத்துரையிடுக