மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 25 நவம்பர், 2010

மாறாத நினைவுகள்



நிகழ்காலத்தின்
நிஜத்தில் வாழ்ந்தாலும்
கடந்த காலத்தின்
நினைவுகளாய் நீ..!

பாடப் புத்தகத்தில்
பக்கமெல்லாம் கிறுக்கிய
உன் பெயர் இதய
நோட்டிலிருந்து
இறங்க மறுக்கிறது..!

பேருந்துப் பயணத்தில்
கார்குழல் பறக்க
பயணிக்கும் பெண்
உன் ஞாபகச் சாரலை
விதைத்துச் செல்கிறாள்..!

தோள் சாய்ந்த காதலர்கள்
கண்டால் கைகள் தானாக
நீ சாய்ந்த தோளை
தடவிக் கொள்கின்றன..!

மழை நாளில் தலை
துவட்டும் மனைவி
துவட்டாமல் விட்டுச்
செல்கிறாள் நீ
துவட்டிய நாட்களை..!

பள்ளிக் குழந்தைகள்
பறக்கும் அவசரத்தில்
கொடுக்கும் முத்தங்கள்
நீ அவ்வப்போது
கொடுத்த முத்தங்களை
முத்தெடுக்க வைக்கின்றன..!

ஹோட்டலில் எதிரே
கொறித்துச் சாப்பிடும்
கொஞ்சும் குமரிகள்
நீ சாப்பிட்ட நினைவுகளை
ஊட்டிச் செல்கிறார்கள்..!

பூத்திருக்கும் பூக்களெல்லாம்
உன் புன்னகையையும்
பூச்சூடிய கூந்தலையும்
மனசுக்குள் மணக்க வைத்து
இதழ்களில் பூக்க வைக்கின்றன..!

பிரிவின் வலியை
பிரசவித்த அந்த நாளும்
அதன் பின்னான வாழ்வும்
எல்லாவற்றையும் மாற்றின...
நினைவுகளைத் தவிர..!

-'பரிவை' சே.குமார்.

27 எண்ணங்கள்:

எல் கே சொன்னது…

//மழை நாளில் தலை
துவட்டும் மனைவி
துவட்டாமல் விட்டுச்
செல்கிறாள் நீ
துவட்டிய நாட்களை..!
//

arumai

ம.தி.சுதா சொன்னது…

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா
http://mathisutha.blogspot.com/

ம.தி.சுதா சொன்னது…

////தோள் சாய்ந்த காதலர்கள்
கண்டால் கைகள் தானாக
நீ சாய்ந்த தோளை
தடவிக் கொள்கின்றன..!////

அருமையான வரிகள் வாழ்த்துக்கள் சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

ஐயோ என் சோறு போச்சே...

அன்புடன் மலிக்கா சொன்னது…

வார்த்தைகளின் கோர்வைகள் மிக அருமை..குமார்..

என்ன மதி சோறுபோச்சேன்னு கவலையா?

shaani சொன்னது…

//பிரிவின் வலியை
பிரசவித்த அந்த நாளும்
அதன் பின்னான வாழ்வும்
எல்லாவற்றையும் மாற்றின...
நினைவுகளைத் தவிர..!//

arumayana varigal anna :)

அம்பிகா சொன்னது…

\\பிரிவின் வலியை
பிரசவித்த அந்த நாளும்
அதன் பின்னான வாழ்வும்
எல்லாவற்றையும் மாற்றின...
நினைவுகளைத் தவிர..!\\
அருமை!!

எஸ்.கே சொன்னது…

மிக அருமை!

Sriakila சொன்னது…

//பள்ளிக் குழந்தைகள்
பறக்கும் அவசரத்தில்
கொடுக்கும் முத்தங்கள்
நீ அவ்வப்போது
கொடுத்த முத்தங்களை
முத்தெடுக்க வைக்கின்றன..!//

மிகவும் ரசித்தேன்.

ஆமா...//எனக்குத் தன் சுடு சோறு //

அப்படின்னா என்ன?

சுசி சொன்னது…

அழகா இருக்குங்க.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அன்றாட வாழ்க்கையோடு கோர்த்த வார்த்தைகள் அதிகமாகவே சொல்கின்றன பிரிவின் வலியை...

பனித்துளி சங்கர் சொன்னது…

///தோள் சாய்ந்த காதலர்கள்
கண்டால் கைகள் தானாக
நீ சாய்ந்த தோளை
தடவிக் கொள்கின்றன..!
/////////////

இந்த வரிகளின் உண்மைகளில் நானும் பல நாட்கள் தொலைந்து ஒபோய் இருக்கிறேன் . கவிதை அருமை கவிஞரே

வேலன். சொன்னது…

பிரிவின் வலியை
பிரசவித்த அந்த நாளும்
அதன் பின்னான வாழ்வும்
எல்லாவற்றையும் மாற்றின...
நினைவுகளைத் தவிர..!

பிரசவித்தபின் மரணம் பிரிவிற்குதான்...நினைவுகளுக்கு அல்ல...//
இந்த வரிகள் சரியாக வருமா குமார் சார்...?
வாழ்க வளமுடன்.
வேலன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

காதலியின் நினைவுகளைச் சேர்த்து,
கோர்த்து, கவிதையாக்கிவிட்டீர்கள்.
பலே!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க எல்.கே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க ம.தி.சுதா...
இன்னைக்கு சுடு சோற எல்.கே. சாப்பிட்டுட்டாரு போல...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மலிக்கா அக்கா...
சகோதரர் மதிக்கு சுடுசோறு சாப்பிடுறதுல அவ்வளவு பிரியம்... எனக்கு எப்பவுமே பழைய சோறும் ஊறுகாயும் தான் பிடிக்கும்... அபுதாபி வந்துட்டு அந்த சாப்பாடு போச்சுக்கா.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க இந்து...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க அம்பிகாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க எஸ்.கே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஸ்ரீஅகிலா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
முன்னெல்லாம் எல்லாரும் வட எனக்குன்னு சொன்னாங்க... இப்ப சுடுசோறுக்கு வந்திருக்காங்க... இது என்னன்னா... பதிவ போட்டவுடனே சூடா படிச்சிட்டு முத பின்னூட்டம் போட போறவங்க சொல்றதுதான்.... விடுங்க... நாமெல்லாம் சுடு சோறுக்கு அடிச்சுக்க வேண்டாம்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சுசிக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வெறும்பய அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பனித்துளி...
நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை... அதற்கே உங்களுக்கு நன்றி.
எல்லாருக்கும் இருக்குமில்ல.... எனக்கு இல்ல... எனக்கு இல்ல....

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வேலன்...
வரிகளைப் பாருங்கள்...
அவர்கள் பிரிந்த நாளும் அதற்குப் பிறகான வாழ்க்கை பயணத்துல மாற்றங்கள் வந்தன என்றுதான் சொல்லியிருக்கிறேனே தவிர மரணம் என்று சொல்லவில்லை... சரிதானே வேலன்...

உங்கள் வரிகளும் நல்லாத்தான் இருக்கு.
வாழ்த்துக்கள்.

Chitra சொன்னது…

பிரிவின் வலியை
பிரசவித்த அந்த நாளும்
அதன் பின்னான வாழ்வும்
எல்லாவற்றையும் மாற்றின...
நினைவுகளைத் தவிர..!

....அருமையாக எழுதி இருக்கீங்க.

பெயரில்லா சொன்னது…

உணர்வுகளின் வரிகள் அருமை குமார் :)

தமிழ்க்காதலன் சொன்னது…

அருமை தோழா.... நல்லா வந்திருக்கு.
# கொஞ்சும் குமரிகள்
நீ சாப்பிட்ட நினைவுகளை
ஊட்டிச் செல்கிறார்கள்..!
# துவட்டும் மனைவி
துவட்டாமல் விட்டுச்
செல்கிறாள் நீ
துவட்டிய நாட்களை..!

இவைகள் அருமை.

ஜோதிஜி சொன்னது…

நீ சாப்பிட்ட நினைவுகளை
ஊட்டிச் செல்கிறார்கள்..!

அற்புதம்

மே. இசக்கிமுத்து சொன்னது…

நினைவுகள், நினைவுகள , நினைவுகள ..நினைக்க வைத்துவிட்டீர்கள்! அருமை!!

vanathy சொன்னது…

அருமையா இருக்கு, குமார்.