தமிழ் சினிமாவை எந்திரனில் கட்டிப் போட்டு விட்டு சிறிய இயக்குநர்களெல்லாம் சிந்தை கலங்கியிருந்த வேளையில் தீபாவளி கோதாவில் மன தைரியத்துடன் குதித்தது என்னவோ ஐந்தே ஐந்து படங்கள்தான். இதில் எந்திரன் சுரத்திலும் விஞ்சி நின்றவை இரண்டு மட்டுமே... ஒன்று எந்திரனின் மாப்பிள்ளை நடித்த உத்தமபுத்திரன், மற்றொன்று பிரபு சாலமனின் மைனா.
கதை, எதார்த்த நடிப்பு, படமாக்கப்பட்ட ஏரியா என எல்லாமாய் சேர்ந்து தீபாவளி ரேசில் முதலிடத்தில் உயரப் பறந்து கொண்டிருக்கிறது மைனா என்றால் மிகையாகாது.கதை என்று பார்த்தால் தீபாவளிக்கு முதல் நாளும் தீபாவளி அன்றும் நடக்கும் நிகழ்வுகள்தான். அதை சொன்ன விதமும் நடித்திருப்பவர்களின் எதார்த்த நடிப்பும் கதைக்கு வலுச் சேர்த்திருக்கின்றன.
கதையின் நாயகன் விதார்த் கூத்துப் பட்டறையில் இருந்து வந்திருக்கிறார். கலைந்த கேசமும் கசங்கிய சட்டையுமாய் தனது நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். நாயகி அமலா இந்தப் படத்தில்தான் அறிமுகம் என்றாலும் சிந்து சமவெளி முதலில் வந்துவிட்டது. அந்த படத்தில் நடித்த பெண்ணா இது என்று யோசிக்க வைக்கும் நடிப்பு. தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்துள்ளார்.
நாயகன் சுருளி சிறு வயதிலேயே ரவுடி போல் வளர்கிறார். வீட்டில் அப்பாவுக்கு அடங்குவதில்லை... அப்பாவும் அப்படித்தான்... சீட்டு விளையாட எப்படியாவது காசு பிடுங்கும் ரகம். பையன் பள்ளிக்கு வருவதில்லை என்று சொல்ல வரும் ஆசிரியரின் காதைப் பிடித்து திருகி மூணு மாசமா பையன் வராததை சொல்லாதது யார் குற்றம்... என்று கேட்டு அவரிடம் பணம் பறிப்பதில் தெரிகிறது அவர் குடும்பத்தைவிட சீட்டைக் கட்டிக்கொண்டுதான் வாழ்க்கிறார் என்பது.
கல்லுக்குள் ஈரம் என்பது போல் வீட்டை விட்டு அடித்து தள்ளப்படும் சிறுவயது மைனாவையும் அவரது அம்மாவையும் கொண்டு வந்து தனது ஊரில் உள்ள ஒரு பாட்டியின் அரவணைப்பில் விடுகிறார். அவர்களும் பனியாரம் சுட்டு விக்கிறார்கள். சுருளியை மாப்பிள்ளை... மாப்பிள்ளை என்று அவர் விளிக்க அவன் மனதில் சிறுவயது முதலே மைனாவின் பால் காதல் வருகிறது.
அவர்கள் வளரும் போது அவர்களின் காதலும் வளர்கிறது. இந்த சமயத்தில் மைனாவின் அம்மா வில்லியாகிறார். வெறும்பயலான உனக்கு கட்டமாட்டேன் என்று சொல்ல அவரை தாக்கும் சுருளி பதினைந்து நாள் ரிமாண்டில் வைக்கபடுகிறார். தீபாவளிக்கு முதல் நாள் மைனாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாக கேள்விப்பட்டு சிறையில் இருந்து தப்பித்துச் செல்கிறான்.
தனது முதல் வருட தீபாவளிக்கு பிறந்த வீடு செல்ல காத்திருக்கும் இளம் மனைவியின் எரிச்சலூட்டம் போன் கால் டார்ச்சருக்கு மத்தியில் தப்பியோடிய சுருளியை தீபாவளி விடுமுறைக்குள் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஏட்டு தம்பி ராமையாவையும் கூட்டிக் கொண்டு அவனின் மலைக்கிராமத்துக்கு வரும் இன்ஸ்பெக்டராக அறிமுக நடிகர் சேது. அவருக்கு துணையாக வரும் தம்பி ராமையா சிரிக்க வைத்தாலும் அந்த பேருந்து விபத்துக்குப் பின் மனைவியுடன் பேசும் இடத்தில் நம் கண்களை நனைக்க வைத்துவிடுகிறார். அவரின் அலைபேசியின் ரிங்டோனாக 'மாமா... நீங்க எங்க இருக்கீங்க...' இயக்குநரின் வித்தியாசமான சிந்தனை.
மூணாறு ஹோட்டலில் வைத்து சுருளியிடம் இன்ஸ்பக்டர் சேது, என்னைய தீபாவாளி அன்னைக்கு இப்படி அலைய வச்சிட்டியல்ல... உன்னைய கஞ்சா கேசுல உள்ள போட்டு என் கவுண்டர்ல போடலைன்னா பாரு...' சொல்றப்போ சாப்பிடாமல் கண் கலங்கும் அந்த இளங்காதலர்களின் மனசு நம்மை எதோ செய்கிறது.
மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவரின் தயவால் விலங்கு கழட்டப்பட அங்கிருந்து தப்பிக்கும் போது ஆணி குத்திவிட மைனாவை தூக்கிக் கொண்டு ஓடும் இடத்தில் சபாஷ் போட வைக்கிறார் சருளியான விதார்த்.
பேருந்து விபத்தில் சேது, தம்பி ராமையா இருவரும் மாட்டிக் கொள்ள, காப்பாத்த மறுக்கும் சுருளியிடம் 'அப்ப அவனுகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்' என்று கேட்கும் மைனா... அவரது கேள்வியால் உயிரைப் பணயம் வைத்து அவர்களை காப்பாற்றும் சுருளி... அதன் பின் அவர்கள் மீது பாசத்தை காட்டுகிறார்கள் காக்கிகள் என அந்த ஒரு காட்சியில் கதை நமக்குள் இறங்குகிறது.
ஸ்டேசனில் சுருளியை விட்டு விட்டு மைனாவை தனது வீட்டிற்கு கூட்டிச் செல்கிறார் இன்ஸ்பெக்டர் சேது. அங்கு ஆரம்பிக்கிறது பிரச்சினை.... அதனால் ஏற்பட்ட இழப்புக்களே கிளைமாக்ஸ்...
சுகுமாரின் ஒளிப்பதில் அந்த மலைக்கிராமமும் மலையும் அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. விதார்த், அமலா, சேது., தம்பி ராமையா என நால்வரும் மலையில் நடந்து செல்லும் போது கலை இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரின் உழைப்பு தெரிகிறது.
அருமையான காதல் கதையை பசுமையான மலைப்பகுதியில் படம்பிடித்து இருக்கிறார்கள். நாயகனுக்கு உதவும் சிறுவன், படத்தின் கிளைமாக்ஸ், நாயகனின் பேச்சு வழக்கு, நடை பாவனை எல்லாம் பருத்தி வீரனை ஞாபகப்படுத்தினாலும் இடவேளைக்கு பிறகு வேகமெடுக்கும் கதை ஓட்டத்தில் பெரிதாக தெரியவில்லை.
'மைனா... மைனா...' , 'கையை கொடு...' பாடல்கள் மனதை வருடிச் செல்கின்றன. 'சிங்கி புங்கி...' பாடல் கிராமத்து இசையில் பாடல் வைக்க வேண்டும் என்ற தற்போதைய தமிழ் சினிமாவின் பார்முலாப்படி வந்திருந்தாலும் கேட்க நல்லாத்தான் இருக்கு.
குருவியை பறக்க விட முடியாமல் தவித்த ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் மைனா மூலம் உயரப் பறந்திருக்கிறார். இயக்குநர் பிரபு சாலமன் இதுவரை நல்ல படங்களைக் கொடுத்திருந்தாலும் கதை சொன்ன விதத்தில் தவறியிருப்பார். இந்த படத்தில் மூலம் சிறந்த கதையை சிறப்பான முறையில் சொல்லியிருக்கிறார். இதன் மூலம் அவரையும் சிறப்பான இடத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது மைனா.
மைனா - உயரப் பறக்கும் ஊர்க்குருவி அல்ல... உற்சாகமாய் பறக்கும் பருந்து.
-'பரிவை' சே.குமார்.
21 எண்ணங்கள்:
மைனா விமர்சனம் அருமை. வாழ்த்துக்கள்
நல்ல பார்வை நண்பரே...
அப்போ படத்தையும் உற்சாகமாகப் பார்க்கலாம் என்கிறீர்கள்.நன்றி !
அழகான் விமர்சனம் படம் பார்க்க தோன்றுகிறது. பதிவுக்கு நன்றி
விமர்சனம் அருமை.
நல்லா இருக்கு விமர்சனம். படம் இப்போதைக்கு பார்க்க முடியுமா தெரியவில்லை.
ஒரு கினிமாவை இவ்வளவு அழகாய் விமர்கிக்க குமாரால் தான் முடியும். நல்ல முயற்சி.
வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தமிழ்ப்பறவை...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஹேமா...
கண்டிப்பாக பார்க்கலாம்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க நிலாமதி...
கண்டிப்பாக பாருங்கள்... நல்ல படம் பார்த்த திருப்தி கிட்டும்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பிரபாகரன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வானதி...
எதாவது ஒரு டோரண்ட்ல போயி டவுன்லோட் பண்ணி பார்க்க வேண்டியதுதானே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தமிழ்...
அப்படியெல்லாம் இல்லைங்க... எதோ எழுதினேன்... கேபிள் அண்ணா, ஜாக்கி அண்ணா போலெல்லாம் நம்மால் எழுத முடியாது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மிக நன்றாக விமர்சனம் செய்துள்ளீர்கள்!
விமர்சனம் அருமை குமார்..
படத்திற்கு அருமையான வார்த்தைகளால் விமர்சனம் கொடுத்துள்ளீர்கள்.
அழகான விமர்சனம் அருமை நண்பரே
நல்லதொரு பார்வை மற்றவர்களிலிரந்த தங்கள் பார்வை வித்தியாசப்படுகிறது...
வாங்க எஸ்.கே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தேனம்மை அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஸ்ரீஅகிலா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க படைப்பாளி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ம.தி.சுதா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Arumai
Arumai
கருத்துரையிடுக