தாவணியில் சிரித்தாய் நீ...
தனியே சிரித்தேன் நான்...
பைத்தியம் என்கிறார்கள்..!
-----------------------
தூரத்துப் பச்சை
நீயாக வேண்டும்...
துடிக்கும் இதயம்...
காதலர் தினம்..!
-----------------------
ரீங்காரமிடும் வண்டுகளைத்
தேடின கண்கள்...
துண்டாகிக் கிடந்தது
வெட்டுப்பட்ட மரம்..!
-----------------------
கரு மேகத்திற்கு
போட்டியாய்
மழை நேர தார்ச்சாலை..!
-----------------------
நீந்த மனமின்றி
கரையில் வாத்து...
நீருக்குள் மிதக்கும்
மடிந்த மீன்கள்.
-'பரிவை' சே.குமார்.
10 எண்ணங்கள்:
சிறு பூக்கள் அனைத்தும் நச்சென்று உள்ளது... அதுவும் வெட்டுப்பட்ட மரம்....
வெட்டுப்பட்ட மரம் :((
தார்ச்சாலை சூப்பர்..
சூப்பரான கவிதைகள்!
ஹைக்கூக்கள் அனைத்தும் அழகா இருக்கு.
தாவணியில் சிரித்தாய் நீ...
தனியே சிரித்தேன் நான்...
பைத்தியம் என்கிறார்கள்..!
... :-)
இனிய தோழமையே, சின்ன சின்னப் பூக்கள்..! ம்ம்ம். நல்ல முயற்சி.
///தாவணியில் சிரித்தாய் நீ...
தனியே சிரித்தேன் நான்...
பைத்தியம் என்கிறார்கள்..!///
அடடா... திரும்பவும் ஆரம்பிச்சாச்சா...??
ஓகே ஓகே.. நடக்கட்டும்... :-)))
நல்லா இருக்குங்க..
முதல் கவிதை பிடிச்சு இருக்கு.. வெட்டுப்பட்ட மரம் வலி குமார்..
வாங்க பாலாசி...
வாங்க சுசிக்கா...
வாங்க எஸ்.கே...
வாங்க பிரியா மேடம்...
வாங்க சித்ராக்கா...
வாங்க தமிழ்க்காதலன்...
உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சகோதரி ஆனந்தி...
என்ன செய்ய... அப்பப்ப ஞாபகம் வந்திருதுங்க... எங்க வீட்டம்மாக்கிட்ட சொல்லிடாதீங்க...
வாங்க தேனம்மை அக்கா...
நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை...
கருத்துக்கும் வருகைக்குகும் நன்றி.
கருத்துரையிடுக