மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 30 ஜூலை, 2010

வறுமை


கானல் நீராய் கனவுகள்
வானவில்லாய் எண்ணங்கள்
மழை மேகமாய் கற்பனைகள்
அமாவாசையாய் ஆசைகள்
இருந்தும் பயன்...?

தூரத்து நட்சத்திரமாய்
பொருளாதாரம்...
வானத்து நிலவாய்
வளர்ந்து தேயும் வாழ்க்கை..!

-----------

ஊரெங்கும் கொண்டாட்டம்...
அம்மனுக்கு ஆராட்டு...
அதே நாளில் கிறிஸ்தவர்
பகுதியிலும் விழா...
அது மட்டுமா?
முஸ்ஸீம்களின் சந்தனக்கூடு...
எங்கு பார்த்தாலும்
விழாக்காலம்...
நாங்கள் மட்டும்
எச்சில் இலைக்காக
ஏங்கியபடி...!

(இந்தக் கவிதை நான் தேவகோட்டை கல்லூரியில் வேலை பார்த்தபோது இதயா மகளிர் கல்லூரியில் வெளிவந்து கொண்டிருக்கும் இதய வீணை முத்திங்கள் இதழில் வெளியானது)

-'பரிவை' சே.குமார்.

33 எண்ணங்கள்:

Chitra சொன்னது…

அதே நாளில்
ஏசுவுக்கு புனித வெள்ளளி...

...For your kind information, அன்று கொண்டாட்டம் இல்லை - விருந்தும் இல்லை. பெரும்பாலும் விரதம் இருப்பர். உங்கள் கான்செப்ட் சொல்ல, "புனித வெள்ளி" அர்த்தத்தை மாற்றி விடுகிறது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சித்ரா...
தகவலுக்கு நன்றி...

உங்கள் கருத்துப்படி மாற்றியாச்சு. ஆனால் இதை நான் எழுதி வெளியிட்ட கல்லூரி இதயா மகளிர் கல்லூரி என்பது கிறிஸ்டியன் கல்லூரி.

அவர்கள் இதை தங்களது புத்தகத்தில் பிரசுரம் செய்யாமலோ அல்லது என்னிடம் சொல்லியிருந்தாலோ அப்போதே மாற்றியிருப்பேன்.

உடனே சுட்டியமைக்கு நன்றி.

க.பாலாசி சொன்னது…

யதார்த்த கவிதைகள்...

elamthenral சொன்னது…

sir really really touching lines, excellent poem... hats of you.... keep it up sir..

சுசி சொன்னது…

உருக்கமான வரிகள்..

வாழ்த்துக்கள் குமார்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பாலாசி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க புஷ்பா மேடம்...
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. அடிக்கடி வாங்க.

ponraj சொன்னது…

அருமையான கவிதை!!!

Menaga Sathia சொன்னது…

nice poem!!

ஹேமா சொன்னது…

சாப்பாடு மிஞ்சிக்கிடக்கு இங்க.
சாப்பிட ஆளில்லை.மனசுக்குக் கஸ்டமாயிருக்கு குமார்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

அருமை குமார்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பொன்ராஜ்...
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மேனகாம்மா...
கருத்துக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஹேமா மேடம்...
உண்மைதான் இங்கு சாப்பிட ஆள் இல்லாமல் எல்லாம் மிஞ்சியிருக்கு. ஆனால் நம் நாட்டில் வறுமை என்பது இன்னும் பல இடங்களில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கத்தானே செய்கிறது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்பர்...
மிக்க நன்றி.

vasu balaji சொன்னது…

rendu extreme. ithan kodumai

ஜோதிஜி சொன்னது…

நாலு வார்த்தை என்ன நாற்பது வார்த்தை எழுதலாமே?

படம் ஒன்றே போதும்.

உலக மக்களின் வளர்ச்சியைப் பற்றி புரிந்து கொள்ள.

மிகவும் ரசித்தேன்.

க ரா சொன்னது…

நல்லா இருக்குங்க.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானம்பாடிகள் சார்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜோதிஜி...
உங்கள் ரசனைக்கு மிக்க நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கண்ணன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

vanathy சொன்னது…

குமார், சூப்பர் கவிதை. அருமையான வரிகள்.

Chitra சொன்னது…

இதை நான் எழுதி வெளியிட்ட கல்லூரி இதயா மகளிர் கல்லூரி என்பது கிறிஸ்டியன் கல்லூரி.

....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... என்ன கொடுமை சார், இது!

Thenammai Lakshmanan சொன்னது…

ரெண்டுமே அருமையான கவிதை குமார்..

Karthick Chidambaram சொன்னது…

உங்கள் கவிதையை ரசித்தேன். அதிலும் கடைசி கவிதையை மிகவும்.
அது என்ன பரிவை - இது எந்த ஊர் என்று தெரிந்து கொள்ளலாமா ?

தூயவனின் அடிமை சொன்னது…

முக்கியமான விஷயம் என்ன வென்றல் எந்த ஒரு மதமும் இது போன்ற அனாசாரத்தை ஆதரிக்க வில்லை. இவர்கள் செலவு செய்யும் பணத்தை ஏழைகளின் வயிற்றை நிரப்ப முயற்சி செய்தால், அந்த ஏழையின் சிரிப்பில் இறைவனை
காணலாமே.

செ.சரவணக்குமார் சொன்னது…

நல்லாயிருக்கு குமார்.

நண்பர்கள் தின வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானதி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சித்ரா மேடம்...
உண்மை இதுதான்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தேனம்மை அக்கா...
கருத்துக்கு நன்றி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கார்த்திக்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
காரைக்குடி - காரை மாநகர்.
தேவகோட்டை - தேவி மாநகர்.
அதுபோல் எனது மச்சான் ஒருவர் (இப்போது உயிருடன் இல்லை) எங்கள் ஊர் பரியன்வயல் (தேவகோட்டை தாலுகாவில் ஒரு சிறுகிராமம்) என்பதை பரிவை என்றுதான் எழுதுவார். அதையே நாமும் பின் பற்றியாச்சு.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க இளம்தூயவன்...
உங்கள் கருத்து உண்மைதான். நடக்குமா?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சரவணக்குமார்...
ரொம்ப நாளாச்சு. கருத்துக்கு ரொம்ப நன்றி