மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 13 ஜூலை, 2010

ஹரிணி



"க்கா.. கொஞ்ச நாளா நம்ம வூட்டுல நடக்கிற கூத்தைப் பாத்தியா..?" மெதுவாக ஆரம்பித்தாள் வனஜா.

"ஆமாண்டி... பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். சின்ன மருமகளை தாங்குறதை..." இது சரோஜா.

"ஆமாக்கா... நாம எல்லா வேலையும் பார்க்கிறோம்... ஆனா அவளை தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஆடுதுக.."

"அதுக்கு அவ வேலைக்குப் போறால்ல... அதுதான்..."

"பாழாப்போன படிப்பு நமக்கு வந்திருந்தா நாமளுந்தான் இன்னைக்கு ஆபிசரு..."

"அதுதான் பத்தாங்கிளாசை தாண்ட முடியலையே... அப்புறம் எப்படி ஆபீசராகுறது?"

"அதுக்காக அவளைவிட நாமதான் அதிகம் உழைக்கிறோம். எல்லாம் அவளைத்தானே தலையில வச்சிக்கிட்டு ஆடுதுங்க... நம்மதுக நம்மளை கண்டுக்காதுங்க... தம்பி பொண்டாட்டிய தாங்குதுங்க..."

"நமக்கு ஒரு காலம் வராமயா போயிடும்... அப்ப வச்சிக்கலாம்... “

“அவளும் வேலைக்குப் போறேன்னுட்டு ரொம்பத்தான் மினுக்கிறா"

"சரி விடுடி... இந்த வீட்ல நாம வேலை பார்த்தாத்தான் மதிப்பு... என்ன செய்ய நாம பொறந்த நேரம் அப்புடி"

"என்னங்கடி... பொறந்த நேரம்... அது... இதுன்னு பேசிக்கிட்டு இருக்கீங்க..." என்றபடி வந்தாள் அவர்களது மாமியார் மீனாட்சியம்மா.

"இல்ல அத்தை... சும்மா பேசிக்கிட்டிருந்தோம்."

"உங்க முகம் சும்மா பேசினது மாதிரி தெரியலையே... ஒரு வாரமாவே ரெண்டு பேருக்கு முகம் சரியில்லையே... என்ன பிரச்சினை... பயலுக எதுவும் சத்தம் போட்டாங்களா?"

"இல்ல அத்த... அதெல்லாம் ஒண்ணுமில்லை... நாங்க எப்பவும் போல இருக்கோம்."

"அப்ப ஹரிணிதான் உங்களுக்கு பிரச்சினையா?"

"ஐய்யோ... அப்படியெல்லாம் இல்ல" இருவரும் ஒன்றாக சொல்ல,

"எனக்கு எல்லாம் தெரியும்... அவ வேலைக்குப் போறா... அவகிட்ட எல்லாரும் அன்பா பேசுறாங்க...அப்படின்னுதானே..?"

".........."

"அடியேய்... வனஜா நீ யாரு... என் தம்பி மக... உங்க அக்கா சரோஜா மாமாவோட அக்கா மக... நல்லா படிச்சிருந்தும் எம் பசங்களுக்கு உங்களை கட்டியாரக் காரணம் பொண்ணு கிடைக்காம இல்ல நம்ம சொந்தம் விட்டுடக்கூடாதுன்னுதான். அவ அந்நியத்துல இருந்து வந்த பொண்ணு... நீங்க நான் பார்த்து வளர்த்த பொண்ணுங்க... என் மார்மேலயும் உங்க மாமா முதுகுலயும் உங்களை சுமந்திருக்கோம். அவளுக்கு நாம எல்லாரும் புதுசு. பணக்கார வீட்டுல வளர்ந்த ஒரே பொண்ணு. அப்பா செல்லம் வேற... நாளைக்கு அவ கண்ணக் கசக்கிட்டு நின்னா யாருக்கு கேவலம்... நம்ம குடும்பத்துக்குதானே.. எங்களுக்கு நீங்க மூணு பேரும் ஒண்ணுதான்.... அவ பழகிட்டா அப்புறம் எல்லார்கிட்டயும் சகஜமாயிடுவா. போங்க போய் வேலையைப் பாருங்க..."

"ம்க்க்கும்... புது மருமகளுக்கு சப்போர்ட்... நீ வாடி நம்ம முடியாமக் கெடந்தாலும் ஏன்னு கேக்க நாதியில்லை..."

மாதங்கள் கடந்தன...

இருவர் கூட்டணி வலுவானது. ஹரிணியிடம் அதிகம் பேசுவதுமில்லை... அவளைக் கண்டு கொள்வதும் இல்லை.

தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்க,

அலுவலகத்தில் இருந்து வந்த ஹரிணியின் கையில் ஏகப்பட்ட பிளாஸ்டிக் பைகள்.

ஹாலில் வந்து அமர்ந்தவள் மாமா, அத்தை, கொழுந்தன்கள், குழந்தைகள் என எல்லாருக்கும் ஒவ்வொரு பை கொடுத்தாச்சு.

சமயலறையில் இருந்து இதை கவனித்த சரோஜாவும், வனஜாவும் குசுகுசுவென்று பேசிக்கொண்டார்கள்.

"அக்கா... பாத்தியா சம்பாதிக்கிற திமிரு எல்லாருக்கும் டிரஸ் வாங்கியாந்து கொடுத்து ஐஸ் வைக்கிறா..."

"ஆமா... திமிர் பிடிச்சவ... நமக்கு எதுவும் கொடுத்தா வாங்கக் கூடாது. அவ கொடுத்துதான் நாம புதுத்துணி போடணுமா...? நம்ம ஆத்தா அப்பன் என்ன ஒண்ணுமில்லாமயா இருக்காங்க... இல்ல நம்ம புருஷங்கதான் ஒண்ணுமில்லாதவங்களா...?"

"ஆமா... கொடுத்தா மூஞ்சியில அடிச்ச மாதிரி வேண்டாண்ணு சொல்லிறனும்... அப்பதான் அவளுக்கு உறைக்கும்,"

"அக்காள்லாம் எங்க அத்தை" ஹரிணி இவள்களை கேட்கவும் பேச்சை நிறுத்தி நடப்பதை கவனித்தனர்.

"அவளுக எங்க இருக்கப் போறாளுங்க... ராத்திரிக்கு சாப்பாடு தயார் பண்ணுவாளுங்க..."

"பாவம்... அவங்களுக்குத்தான் வேலை அதிகம்.."

"அக்கா... நம்ம மேல ரொம்ப கரிசனம் பாரு... அடுப்படிக்குள்ள வந்து நமக்கு உதவப்போறா... அக்கரையா கேக்கிறா..?"

"கூப்பிடவாம்மா..."

"இல்ல அத்தை... சும்மா கேட்டேன்.. அவங்களுக்கு எதுவும் வாங்கலை"

"அதானே பார்த்தேன்... வனஜா... பாத்தியா நாம வாங்க மாட்டோம்ன்னு தெரியும். அதான்"

"எல்லாருக்கும் வாங்கியிருக்கே... அவளுகளை மட்டும் விட்டுட்டியே..?" மீனாட்சியம்மா வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டாள்.

"இல்ல அத்தை... எல்லாருக்கும் டிரஸ் வாங்குறதா அவருகிட்ட கேட்டேன். அவருக்கும் சந்தோஷம். நல்லா வாங்கு... அண்ணிகளுக்கு நல்லதா வாங்கு... அவங்க ரெண்டு பேரும் எங்க அம்மா மாதிரின்னு சொன்னாரு... எல்லாருக்கும் வாங்கிட்டேன்... ஆனா அவங்களுக்கு நான் வாங்கி கொடுத்து கட்டச் சொல்றதைவிட அவங்களையே கூட்டிக்கிட்டுப் போயி அவங்களுக்குப் பிடிச்சதா எடுத்துக்கிட்டா எல்லாருக்கும் சந்தோஷம்தானே... அதான் வாங்கலை... தப்பா அத்தே..."

"இல்லம்மா... நீ செஞ்சதுதான் சரி..."

"அக்கா...." வனஜா

"என்னடி இது... நல்லவளா தெரியுறா?"

"அப்புறம் அத்தை... நான் அக்கா தங்கச்சி கூட பொறக்கலை. அவங்களை என்னோட சொந்த அக்காக்களாத்தான் நினைக்கிறேன். முதல் வருஷத்தீபாவளிக்கு அப்பா ஊருக்கு வரணுமின்னு சொன்னார். மாமா, அத்தை, அத்தான்கள், அக்காக்கள், குட்டிஸ்ன்னு பெரிய குடும்பத்துல எல்லார்கூடவும் சந்தோஷமாக தீபாவளி கொண்டாடணும்பா... அதனால நீங்களும் அம்மாவும் இங்க வந்துடுங்கன்னு சொல்லி நான் மறுத்துட்டேன்..."

"வனஜா... அவ நல்லவதாண்டி... நாமதான் தப்பா நினைச்சிட்டோம்... படிச்சிருந்தாத்தானே அறிவுக்கு எட்டும்... சே... அவ நம்ம மேல எவ்வளவு பாசமா இருக்கா..."

"ஆமா... அக்கா... " என்றவள் "அத்தே... ஹரிணியை முகம் அலம்பிட்டு வரச்சொல்லுங்க... சூடா காபி இருக்கு" என்று சொல்ல,

சரோஜா காபி கலக்க ரெடியானாள்.

-'பரிவை' சே.குமார்

(மறக்காம வாக்களியுங்கள்... மற்றவர்களும் தொடர வாய்ப்பாய் இருக்கும் அல்லவா..?)

26 எண்ணங்கள்:

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

வாவ்.. ரொம்ப ரசித்து படிச்சேன் குமார்.

என்ன ஒரு ட்விஸ்ட் கதை முடிவுல..

ரொம்ப இயல்பா நீங்க எழுதி இருந்த விதத்துல, எனக்கு அப்படியே எல்லாம் கண் முன்னே நடக்கற மாதிரி இருந்ததுங்க.. ரொம்ப நன்றி :-))))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

எனக்கு நேரமின்மை, காரணமா சரியாய், டைம்-கு வந்து கமெண்ட் பண்ண முடியல..
மன்னிக்கவும்..

Unknown சொன்னது…

Ungal Kathaikal anaithum ungal eliya manathaiyum ulaga sinthanayaiyum kaatukirathu.
Ungal Anbu Thambi.
Dr.R.S.K

'பரிவை' சே.குமார் சொன்னது…

//வாவ்.. ரொம்ப ரசித்து படிச்சேன் குமார்.

என்ன ஒரு ட்விஸ்ட் கதை முடிவுல..

ரொம்ப இயல்பா நீங்க எழுதி இருந்த விதத்துல, எனக்கு அப்படியே எல்லாம் கண் முன்னே நடக்கற மாதிரி இருந்ததுங்க.. ரொம்ப நன்றி :-))))///

வாங்க ஆனந்தி...
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க.

'பரிவை' சே.குமார் சொன்னது…

@Ananthi said...
//எனக்கு நேரமின்மை, காரணமா சரியாய், டைம்-கு வந்து கமெண்ட் பண்ண முடியல..
மன்னிக்கவும்..//

வாங்க ஆனந்தி நானும் நினைச்சேன்... என்ன ஆளையே காணோம் என்று பரவாயில்லைங்க அதுக்காக மன்னிப்பெல்லாம் எதுக்குங்க...

'பரிவை' சே.குமார் சொன்னது…

@Senthil said...
//Ungal Kathaikal anaithum ungal eliya manathaiyum ulaga sinthanayaiyum kaatukirathu.
Ungal Anbu Thambi.
Dr.R.S.K//

வாங்க செந்தில்...
எப்படியிருக்கீங்க? எல்லாரும் நல்லா இருக்காங்களா?
உங்கள் பின்னூட்டம் பார்த்து மகிழ்ந்தேன்..!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..!

அம்பிகா சொன்னது…

எல்லா குடும்பத்திலேயும் இப்படி நடந்தா நல்லா இருக்கும்.

பா.ராஜாராம் சொன்னது…

ரொம்ப நல்லாருக்கு குமார்!

எல் கே சொன்னது…

nalla irukku boss

மங்குனி அமைச்சர் சொன்னது…

உள்ளேன் ஐய்யா

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

உங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..
பெற்றுக்கொள்ளுங்கள்.. :-))

http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.htm

'பரிவை' சே.குமார் சொன்னது…

@அம்பிகா said...
//எல்லா குடும்பத்திலேயும் இப்படி நடந்தா நல்லா இருக்கும்.//

நல்லாத்தான் இருக்கும். நடக்கணுமே...?

கருத்துக்கும் தொடர்வருகைக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

@ பா.ராஜாராம் said...
//ரொம்ப நல்லாருக்கு குமார்!//

கருத்துக்கும் தொடர்வருகைக்கும் நன்றி பா.ரா. அண்ணா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

@LK said...
//nalla irukku boss//

முதல் வருகை என்று நினைக்கிறேன். அடிக்கடி வாங்க... நிறை, குறைகளை சொல்ல.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

@மங்குனி அமைசர் said...
//உள்ளேன் ஐய்யா//


நல்லாத்தான் இருக்கும். நடக்கணுமே...?

வாங்க அமைச்சரே...

என்ன ஆளையே காணோம் என்று நினைத்தேன்... அவையில் பணி அதிகமோ, மங்குனி தொலைக்காட்சியின் பேட்டி ஒரு நாளோட நின்னு போச்சே..?

வருகைப் பதிவு தந்ததற்கு நன்றி... இனிமேயாச்சும் சொல்லாமக் கொள்ளாம லீவு போடாதீங்க.

'பரிவை' சே.குமார் சொன்னது…

@Ananthi said...
//உங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..
பெற்றுக்கொள்ளுங்கள்.. :-))

http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.htm//

விருதுக்கு நன்றி தோழி.

கண்ணகி சொன்னது…

நல்லதொரு குடும்பம்...பல்கலைக்கழகம்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

@கண்ணகி said...
//நல்லதொரு குடும்பம்...பல்கலைக்கழகம்...
வாங்க கண்ணகி.//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அடிக்கடி வாங்க.

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

நம்ம ஊரு கதை மாதிரி இருக்கு.

'பரிவை' சே.குமார் சொன்னது…

//நம்ம ஊரு கதை மாதிரி இருக்கு.//

உண்மைதான் தோழி... சில நிகழ்வுகளே இங்கு கதைகளாய்...
வருகைக்கு நன்றி.

Menaga Sathia சொன்னது…

very nice story!!

'பரிவை' சே.குமார் சொன்னது…

Thanks Menakakka.

நிலாமதி சொன்னது…

கதை இயல்பாய் அமைந்திருக்கிறது, பாராடுக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நிலா...

உங்கள் கருத்துக்கு நன்றி.

vanathy சொன்னது…

குமார் அண்ணாச்சி, கதை சூப்பர். இந்த 2 அக்கா காரக்டரும் பேசும் விதம் நல்லா இருக்கு.
எனக்கு உங்கள் "மனசு" வலைப்பூ மறந்தே போச்சு. நீங்கள் என் பக்கம் வந்து பதிவு போட்ட பின்னர் தான் விளங்கிச்சு உங்கள் "மனசு" பக்கம் நான் மெம்பர் இல்லை என்பது. இனிமேல் வந்திடுவோம்ல.

( உங்கள் பிள்ளைகளா? அழகா இருக்கின்றார்கள். in google slide show )

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானதி...

மனசு வலைக்கு வந்ததற்கு நன்றி...
என்ன நம்ம உடன் பிறப்புக்களை காணோம் என்றுதான் நானும் இருக்கிறேன் என்று தட்டிவிட்டேன்... உடனே வந்துட்டீங்க... ரொம்ப நன்றிங்க...

ஆமாம்.... எங்கள் செட்டிநாட்டு பேச்சு வழக்கு அது. உங்களுக்குப் பிடித்தது சந்தோஷமே.

ஆமா... நம்மவங்கதான்.... மூத்தவங்க ஸ்ருதி - 2ஆம் வகுப்பு, சின்னவங்க விஷால்.