'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் பந்தயத்துக்காக ஐம்பது பரோட்டாக்களைச் சாப்பிட்டு, சூரி செய்த அலப்பறையால் இன்று "பரோட்டா' சூரி என்று தமிழ் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். கதாநாயகனுக்கு நண்பனாகவே சில படங்களில் நடித்து வந்த சூரியின் மார்க்கெட் சமீபகாலமாக சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. "பாகன்', "மனம் கொத்திப்பறவை', "ஹரிதாஸ்', "சுந்தர பாண்டியன்' போன்ற படங்கள் அவரை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றன.
உங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டீர்கள் போல் இருக்கிறதே?
ஆமாங்க....அப்படியே நடிச்சிக்கிட்டிருந்தா முடியுமா.. நகைச்சுவை பாத்திரத்தில் நமக்குன்னு ஒரு இடத்தைப் பிடிக்கவேண்டாமா? வந்த வரைக்கும் நடிக்கிற ஆள் நான் இல்லை. நாம நடிக்கிற கேரக்டர் பேசப்படணுமா இல்லையா? அதனால் கமர்சியல் படங்களாகவும் பார்த்து நடிக்க ஆரம்பித்திருக்கிறேன். நாலு படம் டக்கு டக்கு ஜெயித்தாத்தானே காமெடியில் முன்னேற முடியும்.
மார்க்கெட் டல்லா இருக்கிற நாயகன்களுடன் அவர்களுக்கு இணையான வேடத்தில் நடிக்கிறீர்களாமே?
வளர்ந்து வரும் புதுமுக நடிகர்களை வைத்து படம் எடுக்கும் சில தயாரிப்பாளர்கள் சூரி கூட சேர்ந்து நடித்தா நல்ல இருக்கும் என்று நினைப்பார்கள். அப்படி வர்ற படத்தை நானும் மறுக்காமல் நடித்துக்கொடுக்கிறேன். நமக்கு அப்படித்தானே சில புண்ணியவான்கள் வாய்ப்பு கொடுத்தார்கள். சமீபகாலமாக நான் நடிக்கும் எல்லா படங்களிலும் நாயகனுக்கு நண்பனாக படம் முழுவதும் வந்து காமெடி செய்கின்ற வாய்ப்புகள் அமைகின்றன. இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.
"பட்டய கிளப்பு பாண்டியா' படத்தில் ஹீரோ விதார்த்துக்கு இணையான பாத்திரமாமே?
இணையான பாத்திரம் எல்லாம் கிடையாது. எனக்கும் முக்கியத்துவம் உள்ள பாத்திரம் என்று சொல்லலாம். நான் படம் முழுக்க அவர்கூட வர்ர மாதிரி நடிச்சிருக்கேன். ஏற்கெனவே "பாகன்', சுந்தர பாண்டியன்' போன்ற படங்களிலும் இதுபோல் நடித்திருக்கிறேன்.
விஜய்சேதுபதி, இனிகோ நடிக்கும் "ரம்மி' படத்தில் நடிப்பது பற்றிச் சொல்லுங்கள்?
அது நல்ல யூத் காமெடி சப்ஜெக்ட்ங்க. படம் பார்த்தீங்கன்னா நீங்க அரண்டு போயிடுவீங்க. அந்த அளவுக்கு விஜய்சேதுபதியும் இனிகோவும் என்னை வறுத்தெடுப்பாங்க.
ஹீரோவாக எப்ப நடிக்கப்போறீங்க?
நகைச்சுவை நடிகனாக நல்ல பேர் எடுக்கணும். எனக்குன்னு ஒரு ரூட்ட கண்டுபிடிக்கணும். அதுக்குத்தான் நான் ஓடிக்கிட்டிருக்கேன். அதுக்கான வாய்ப்புகள் இப்ப நிறைய வந்துக்கிட்டிருக்கு. இப்ப போய் ஹீரோ அது இதுன்னு ஏங்க எனக்கு கிச்சுக்கிச்சு மூட்றீங்க.
தமிழ் சினிமாவில் இப்போ காமெடி படங்கள் அதிகம் வெற்றி பெறுதே?
ஒரு திரைப்படத்தின் வெற்றிக்குக் காமெடி ரொம்ப முக்கியம். அதுமட்டுமல்ல இப்ப மக்கள் நிறைய சிரிக்க விரும்பறாங்க. ஒரு படத்துக்குப் போனா நல்ல என்ஜாய்மெண்டாக இருக்கணும். காட்சிக்குக் காட்சி சிரிக்கணும்னு நினைக்கிறாங்க. அதனாலதான் காமெடி படங்கள் வெற்றியடையுதுன்னு நினைக்கிறேன்.
"போராளி' படத்தில் நடித்ததற்காக நார்வேயில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த காமெடியனுக்கான விருது உங்களுக்கு கிடைத்தது பற்றி?
ஆமாங்க..கொடுத்தாங்க.. ஆனா என்னைப் பொறுத்தவரை ஒரு கலைஞனுக்கு ரசிகர்கள் தரும் ஆதரவுதான் பெரிய விருது. நார்வேயில் எனக்கு வழங்கப்பட்ட விருதும் ரசிகர்களால் தேர்ந்தேடுக்கப்பட்டு வழங்கப்பட்டதுதான். என் காமெடியை ரசிகர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி. இந்த இடத்தை நான் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
செய்தி மற்றும் போட்டோக்களுக்கு நன்றி : இணையம்
***************************
சும்மா... ஒரு ரிலாக்ஸ்க்காக...
மரியான் படத்தில் பார்வதி
செய்தி மற்றும் போட்டோக்களுக்கு நன்றி : இணையம்
-'பரிவை' சே.குமார்.
7 எண்ணங்கள்:
யதார்த்தமான நடிப்பில் முன்னுக்கு வந்தவர்... இனியும் வர வாழ்த்துவோம்...
நன்றி...
சந்தானத்துக்குக் கொட்டி அழ முடியாத தயாரிப்பாளர்களும்,டைரக்டர்களும் சூரி யைப் பயன்படுத்துகிறார்கள்.விவேக் கின் இடத்தைப் பிடிக்கக் கூடிய வாய்ப்பு உண்டு.இதுவரை நடித்த படங்களில் சிறந்த வித்தியாசமான நகைச்சுவையைக் கொடுத்திருக்கிறார்,'சூரி'!வளரட்டும்!!!////இது என்னங்க,ரிலாக்ஸ்?அதுக்கு 'ஈரோடுக்காரர்' தான் சரி,ஹ!ஹ!!ஹா!!!
பகிர்தலுக்கு நன்றிங்க..
சூரி, பக்கத்து வீட்டு மனிதர் போன்ற ஒரு தோற்றம். வெற்றி பெற வாழ்த்துக்கள்
காமெடியில் முன்னேறும் நடிகர், வாழ்த்துக்கள்....!
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/tamil-poets-in-blogs.html) சென்று பார்க்கவும்... நன்றி...
வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக