மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 25 ஜூன், 2023

மனசின் பக்கம் : எழுத்து தந்த 'பாண்டியன் பொற்கிழி'

துவரை எனது எழுத்து பரிசுகளையும், பரிசுக் கேடயங்களையும் பெற்றுத் தந்து கொண்டிருந்தாலும், எழுத்து தொடர்பான ஒரு சில நிகழ்வுகள் மறக்க முடியாத நினைவுகளாய் அமைந்து விடும். அப்படியான நிகழ்வு ஒன்று சென்ற ஞாயிறு (ஜூன் - 18) அன்று நிகழ்ந்தது.

வியாழன், 22 ஜூன், 2023

கேலக்ஸி பதிப்பக முதலாம் ஆண்டு வெற்றி விழா - நிறைவுப் பகுதி

ஞாயிறு (ஜூன்-18) மாலையைச் சிறப்பானதொரு மாலையாக்கியது கேலக்ஸியின் முதலாம் ஆண்டு வெற்றி - நிறைவு - விழா. விழா நிகழ்வின் தொடர்ச்சியாய்...

கேலக்ஸி பதிப்பக முதலாம் ஆண்டு வெற்றி விழா - பகுதி : 2

ஞாயிறு (ஜூன்-18) மாலையைச் சிறப்பானதொரு மாலையாக்கியது கேலக்ஸியின் முதலாம் ஆண்டு வெற்றி - நிறைவு - விழா. நிகழ்வின் தொடர்ச்சியாய்...

செவ்வாய், 20 ஜூன், 2023

கேலக்ஸி பதிப்பக முதலாம் ஆண்டு வெற்றி விழா - பகுதி : 1

ஞாயிறு (ஜூன்-18) மாலையைச் சிறப்பானதொரு மாலையாக்கியது கேலக்ஸியின் முதலாம் ஆண்டு வெற்றி - நிறைவு - விழா.

சனி, 17 ஜூன், 2023

விமர்சனம் : 2018 (மலையாளம் - 2023)

முரண்பட்ட மனிதர்கள் பலர் மழைநாளில் உதவிக்கரம் நீட்டி எப்படித் தாங்கள் எல்லாரும் கதாநாயகர்களே என்பதை நிரூபித்தார்கள் என்று சொல்லும் படம்தான் 2018.

புதன், 14 ஜூன், 2023

மனசின் பக்கம் : வருகிறார் 'வாத்தியார்'

சில சமயங்களில் நாம் வேண்டாமென நினைத்து ஒதுங்கிச் செல்லும் பாதைதான் நமக்கானதாக அமையும். அப்படித்தான் கணிப்பொறியோடு மல்லுக்கட்டிக் கொண்டு கிடந்த போது இனிமேல் இந்த வேலையே பார்க்கக் கூடாது என விலகி விலகிப் போனாலும் என்னை விடாமல் தொடர்ந்தது அந்த வேலை மட்டுமே. இப்போது எல்லாவற்றிற்கும் கணிப்பொறி என்றான போதும் நானெல்லாம் அலுவலகத்தில் கணிப்பொறியோட மல்லுக்கட்டுற வேலைதான் பார்த்துக்கிட்டு இருக்கேன்.

வெள்ளி, 9 ஜூன், 2023

மனசு பேசுகிறது : மாமன்னனும் நம் மன்னர்களும்

 'குச்சிக்குள்ள கெடந்த சனம்

கோணிச் சாக்குல சுருண்ட சனம்'

மீபத்தில் மாமன்னன் படத்தில் வடிவேலு பாடிய பாடல் எல்லோராலும் பாராட்டப்பட்டது என்பதை நாம் அறிவோம். அரசியலில் எல்லாரையும் கோடிகளில் புரள வைக்கும்... அந்தக் கோடிக்கான கதையைக் கேட்டால் நண்பன் கொடுத்ததுன்னு பதில் வரும்.  நான் தெருக்கோடியில இருக்கேனேன்னு அவங்ககிட்ட கேட்டா, நீ எனக்கு ஓட்டுப் போட்டியாங்கிற கேள்வியும் வரும். அதை விடுங்க ஆனால்  அதே அரசியல் கோடிகளில் புரண்ட ஒருவரை வீட்டில் முடக்கிப் போட்டது என்றால் அது வடிவேலுவைத்தான் என்பதை நாம் எல்லாரும் அறிவோம். வாயால் சம்பாதித்த கலைஞனின் வாய்தான் எதிரியாகவும் மாறியது.

திங்கள், 5 ஜூன், 2023

சினிமா விமர்சனம் : காக்கிப்படா (மலையாளம்)

காக்கிப்படா

சின்னக் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்வதும், கொலை செய்வதும் சில வருடங்களாக அதிகமாகியிருக்கிறது. இப்படியான கொடுமை செய்யும் பாவிகளுக்குச் சரியான தண்டனை கிடைக்கிறதா என்றால் அப்படியொன்றும் பெரிதாக நிகழ்ந்து விடுவதில்லை. அதுவும் பணம் படைத்தவன் என்றால் காவல்துறையும் நீதித்துறையும் அவனுக்குகச் சாமரம் வீசும் கேவலம்தான் நிகழ்வதை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அப்படியான பாவிக்காகச் சட்டம் வளைந்து கொடுக்க நினைக்கும் போது காக்கிச்சட்டைக்குள் கறை படியாமல் இருக்கும் சில இளவயது போலீசார் மனச்சாட்சிப்படிக் கொடுக்கும் தண்டனையைக் காட்டும் படமே 'காக்கிப்படா'.

ஞாயிறு, 4 ஜூன், 2023

சினிமா விமர்சனம் : பாச்சுவும் அத்புத விளக்கும் (மலையாளம் - 2023)

 பாச்சுவும் அத்புத விளக்கும்-

ஒரு சாதாரணக் கதை, அதை நகைச்சுவை கலந்து கொடுத்த விதத்தில் ஜெயித்திருக்கிறார்கள்.