மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 25 ஜனவரி, 2021

மனசு பேசுகிறது : எதிர்சேவைக்கு விருது

திர்சேவைக்கு தேனி தமிழ்நாடு முற்போக்கு கலையிலக்கிய மேடையின் 'தஞ்சை பிரகாஷ் நினைவு வளரும் படைப்பாளர் விருது' கிடைத்திருக்கிறது. நேற்று நடந்த விழாவிற்கு மனைவியும் செல்ல முடியாத நிலையில் சகோதரர் நந்தகுமார் அவர்கள் பெற்றுக் கொண்டார். அவரின் மகளுக்கு அங்கு விருது வழங்கப்பட்டதால் அவர் சென்றதால் அதை அவரே வாங்கிக் கொண்டார். என் புத்தகத்தை தேனி திரு.விசாகனிடம் அறிமுகம் செய்தவரும்... புத்தகத்துக்கான அறிமுக கூட்டத்தை நடத்தியவரும் இவரே என்பதால் விருதையும் அவரே பெற்றுக் கொண்டதில் பெருமையும் மகிழ்ச்சியும்.

வெள்ளி, 22 ஜனவரி, 2021

மனசின் பக்கம் : பிக்பாஸ் டூ பிரகாஷ்

மிழ்டாக்ஸ்.காம் இணையத் தளத்தில் பிக்பாஸ் பதிவுகள் எழுதும் வாய்ப்புக் கிடைத்த போது இப்போது இருக்கும் வேலை பளுவில், விடுமுறை தினத்தில் கூட வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது தொடர்ந்து எழுதும் வாய்ப்புக் கிடைக்குமா..? அதுபோக தினமும் இதற்கென ஒரு மணி நேரம் ஒதுக்கிப் பார்க்க முடியுமா என்ற யோசனையே முன் நின்றது.  

வெள்ளி, 15 ஜனவரி, 2021

மனசு பேசுகிறது : மாட்டுப் பொங்கலும் மனசும்

ன்று மாட்டுப் பொங்கல்... மனம் முழுவதும் ஊரில்தான் இருந்தது... சென்ற ஆண்டு சிரமங்களுடன் பயணித்தபோதும் பொங்கலுக்கு ஊரில் இருந்தேன்... மாட்டுப் பொங்கல் என்பது ஊரே கூடிக் கொண்டாடும் ஒரு நிகழ்வு என்பதால் மகிழ்வுக்குக் குறைவிருக்காது. அதை அனுபவித்து வாழ்ந்திருந்தால் மட்டுமே அதன் மகிழ்வுக்கு எல்லையே இல்லை என்பது புரியும்.

வெள்ளி, 8 ஜனவரி, 2021

மனசின் பக்கம் : மன நிறைவான செய்திகள்

பிக்பாஸ் தொன்னூறு நாட்களைத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது. இதுவரை கிட்டத்தட்ட 50 பதிவுகள் எழுதியிருக்கிறோம் தமிழ்டாக்ஸ் தளத்தில்... உண்மையிலேயே தொடர்ந்து எழுத வைத்துக் கொண்டிருப்பவர் தமிழ்டாக்ஸ் தளத்தின் இணையாசிரியர் சிவமணிதான்... இப்ப இருக்கும் ஏழு பேரில் ஆரிக்கே வெளியில் வாக்குகள் அதிகம் கிடைப்பதைப் பார்க்கலாம்... ஆனால் வீட்டுக்குள் எல்லாருக்குமே பிடிக்காத ஒரு மனிதர் என்றால் அது ஆரிதான்.

வெள்ளி, 1 ஜனவரி, 2021

மனசு பேசுகிறது : 2020 - இழந்ததும் பெற்றதும்

கொரோனாவின் வருடமான 2020-ன் ஆரம்பத்தில் ஊருக்கு வரும்போது இங்கு மிகப்பெரிய பிரச்சினை... அதிலிருந்து வெளிவந்து அதன் பின் ஊருக்கு வந்தபின் உடல் நிலையின் காரணமாக தேவகோட்டைக்கும் மதுரைக்கும் அலைந்ததுதான் மிச்சமாய் இருந்தது.