மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 14 ஜூலை, 2013

'மறுபடியும் காதலா?': நயன்தாரா - 'மீண்டும் திருமணமா?' - பிரபு தேவா


யன்தாரா இனி காதலிக்கவே போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நயன்தாரா ஏற்கனவே திருமணமான பிரபுதேவாவை காதலித்து திருமணம் செய்துகொள்ளவும் திட்டமிட்டார். ஆனால் அவர்கள் காதல் உறவு பாதியிலேயே முறிந்தது. திருமணத்தையொட்டி சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நயன் காதல் முறிவுக்கு பிறகு நடிக்க வந்துவிட்டார்.

பிரபுதேவாவோ மும்பை சென்று பாலிவுட்டில் பிசியாகிவிட்டார். மீண்டும் நடிக்க வந்த நயனுக்கும், ஆர்யாவுக்கும் காதல் என்று பேசப்பட்டு வருகிறது.

பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நயன், ஆர்யா ஜோடியாக நடித்ததில் இருந்தே அவர்களுக்குள் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

ராஜா ராணி படத்தின் விளம்பரத்திற்காக நயன், ஆர்யாவுக்கு திருமணம் என்று அழைப்பிதழ் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்கள். அழைப்பிதழ் விவகாரத்தை ஆர்யா கண்டுகொள்ளவில்லை. ஆனால் நயன் தான் செம கடுப்பாகிவிட்டாராம்.


ஆர்யா தனக்கு நண்பர் தான் என்றும், காதல் என்ற பெயரில் தனது வாழ்வில் பல சூறாவளிகள் வீசி ஓய்ந்துவிட்டதாகவும் நயன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

காதல் கசந்துவிட்டதால் தான் இனிமேல் காதலிக்கவே போவதில்லை என்றும், தனியாக வாழவே ஆசைப்படுவதாகவும் நயன்தாரா தெரிவித்துள்ளார்.

****

நான் நயன்தாராவைப் பிரிந்தது கடவுள் எடுத்த முடிவு.. நடந்த எல்லாமே நல்லதுக்குதான், என்றார் நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா. காதலித்து மணந்த மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்துவிட்டு, நயன்தாராவை திருமணம் செய்யவிருந்தார் பிரபுதேவா. ஆனால் எதிர்ப்பாராத விதமாக, இருவரும் நிரந்தரமாகப் பிரிவதாக அறிவித்துவிட்டனர். பிரபு தேவா கிட்டத்தட்ட மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். நயன்தாரா மீண்டும் தமிழில் பிஸியாகி, அடுத்த காதலிலும் தீவிரமாகிவிட்டார். இந்தப் பிரிவுக்கு காரணம், பிரபுதேவா தன்னிடம் உண்மையாக இல்லை என நயன்தாரா முன்பு பேட்டியளித்திருந்தார். நீண்ட நாட்கள் கழித்து பிரபு தேவா இதுபற்றிப் பேசியுள்ளார்.நயன்தாராவைப் பிரிந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நாங்கள் பிரிந்தது கடவுள் எடுத்த முடிவு. நாம் நினைத்த காரியம் நடந்து விட்டால் சந்தோஷப்படுவோம். நடக்காமல் போனால் கடவுள் முடிவு என்று அவரிடம் விட்டு விடுவோம். என்னைப் பொறுத்தவரை இது கடவுள் எடுத்த முடிவு. காரணம் கடவுளை நான் நம்புகிறேன். நடந்தவை எல்லாம் சரிதான். அதைப் பற்றி மீண்டும் நினைப்பதில் அர்த்தம் இல்லை," என்று கூறியுள்ளார்.

ரம்லத்தைப் பிரிந்தது குறித்த கேள்விக்கு, 'அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. முதல் மனைவி ரம்லத்துடனான தொடர்பு குறித்த கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காத பிரபுதேவா, "என் இரு மகன்களையும் அடிக்கடி சந்திக்கிறேன். சூட்டிங் இல்லாதபோது மும்பைக்கு அழைத்து வந்து என்னுடன் வைத்துக் கொள்கிறேன். வெளிநாடுகளுக்கும் அழைத்து போனேன்," என்று கூறியுள்ளார்.

ரம்லத்தை விவாகரத்து செய்ததற்கு மகன் மரணம் காரணமா என்று கேட்டதற்கு, "என் மகன் மரணம் அடைந்தது கோரமான இழப்பு. வேறு விஷயங்கள் பற்றி சொல்ல விருப்பம் இல்லை. பொதுவாக என் தனிப்பட்ட விஷயங்களை பொதுவில் பகிர்ந்து கொள்வதில்லை," என்று கூறியுள்ளார்.


"என்னை சந்திப்பவர்களெல்லாம் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். என் மீதுள்ள அக்கறையில் கேட்பதாகவே உணர்கிறேன். இப்போது என் சிந்தனை தொழிலில்தான் உள்ளது. தினமும் மணிக்கணக்கில் வேலை பார்க்க வேண்டியுள்ளது. காதல், திருமணம் மீது மரியாதை வைத்திருக்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திக்கு நன்றி      : தட்ஸ் தமிழ் இணையம்
படங்களுக்கு நன்றி : கூகிள் இணையம்
-'பரிவை' சே.குமார்

2 கருத்துகள்:

  1. என்ன சொல்லி,என்ன செய்ய?எல்லாம் 'அவன்' வகுத்த வழியே!ஒவ்வொருவருக்கும் வாழ்வில் ஒரு 'கண்டம்' இருக்கும் என்பது இந்துக்கள் நம்பிக்கை!இவர்களுக்கு எப்படியோ?

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை!

    பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

உங்கள் கருத்தே எழுத்தை மேம்படுத்தும்... மனதில் தோன்றுவதை மறக்காமல் சொல்லுங்கள்...