மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 24 மார்ச், 2021

மனசு பேசுகிறது : எழுத்தால் இணைந்த உறவு

ழுத்தாளர் கரன்கார்க்கி....
வடசென்னையின் முந்தைய தலைமுறை மனிதர்களின் வாழ்க்கையை எழுதும் ஒரு சிறந்த எழுத்தாளர்.

செவ்வாய், 23 மார்ச், 2021

மனசின் பக்கம் : கல்கோனா இணைய இதழ் ஒரு பார்வை

'கல்கோனா' இதழை கருணாகரன் அண்ணன் மின்னஞ்சலில் அனுப்பிக் கொடுப்பார். வாசித்து விட்டு எதுவும்  எழுதுவதில்லை... இந்த இதழ் வாசித்தபின் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருப்பவரின் இதழைப் படித்தது குறித்துப் பகிர்ந்து கொள்ளுவதுதான் எந்தப் பிரதிபலனும் பார்க்காமல் அவர் அனுப்புவதற்கு நாம் செய்யும் மரியாதை எனத் தோன்றியது.

ஞாயிறு, 21 மார்ச், 2021

மனசு பேசுகிறது : அகவை 77-ல் ஐயா

 ன்று ஐயாவுக்கு அகவை 77...

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாய் அவரின் பிள்ளைகளில் ஒருவனாய் வாழும் வாய்ப்பு... தமிழ்த்துறையில் பயின்ற நண்பனின் மூலமாகவே ஐயாவுடன் நெருக்கம் ஏற்பட்டது. 

வெள்ளி, 19 மார்ச், 2021

வேரும் விழுதுகளும் : 'வாழ்ந்தேன்' - நந்தா

வேரும் விழுதுகளுக்குமான அடுத்த விமர்சனம் என் எழுத்தை நேசிக்கும் நந்தா அண்ணனிடம் இருந்து வந்திருக்கிறது. எதிர்சேவையைக் கொண்டாடியவருபவர்களில் இவரும் ஒருவர். எதிர்சேவைக்குத் தேனித் தமிழ்நாடு முற்போக்கு கலையிலக்கிய மேடையில் கிடைத்த விருதை, நேரில் சென்று பெற்றுக் கொண்டவரும் இவர்தான். எப்போதும் என் எழுத்தின் வளர்ச்சியில் மகிழ்பவர் என்பதால் அவரின் உள்ளார்ந்த விமர்சனப் பார்வை எனக்கு மிகவும் முக்கியமானது.

வியாழன், 18 மார்ச், 2021

வேரும் விழுதுகளும் : 'நல்லாயிருக்கு' - சுபஸ்ரீ

புத்தகம் வெளிவருவது மகிழ்வென்றால் அது குறித்த நிறை குறைகளை மறைக்காமல் சொல்லும் விமர்சனம் அதைவிட மகிழ்வைக் கொடுக்கும். எதிர்சேவை நல்லதொரு வரவேற்பைப் பெற்ற நிலையில்,  மீண்டும் கலக்கல் ட்ரீம்ஸ் தசரதன் முயற்சியில் 'வேரும் விழுதுகளும்' நாவல் வெளிவந்த பின், கிராமத்துக் கதை, வாழ்க்கையைப் பேசும் கதை, இப்போதெல்லாம் எழுத்தாளர்கள் வித்தியாசமான கதைக்களத்தில் பயணிக்கும் போது நாம் சாமானியர்களின் பின்னால் பயணிக்கிறோம். இதையும் ஒருவர் நம்பிக்கையுடன் புத்தகமாக்குகிறாரே என நினைத்துப் பயம் எனக்குள் இருக்கத்தான் செய்தது.

சனி, 13 மார்ச், 2021

மனசு பேசுகிறது : தேர்தல் தொல்லைகளும் கதைகளும்

ந்தத் தேர்தல் வந்தாலும் வந்துச்சு முகநூல்ல அடிச்சி ஆடுற நண்பர்கள் போடுற பதிவுகளையே பார்க்க... இல்லையில்லை சகிச்சிக்க முடியலை... தமிழகத்தை இத்தனை வருட கால ஆட்சியில் தூக்கி நிறுத்தாத கழகங்கள் இந்தத் தேர்தலுக்குப் பின் தான் தூக்கி நிறுத்தப் போற மாதிரி இரு சாராரும் மாத்தி மாத்திப் பதிவுகளைப் போடுறதைப் பார்க்கும் போது தேர்தல் வரை முகநூல் பக்கமிருந்து விடுதலை வாங்கிக்கலாம்ன்னு தோணுது.

ஞாயிறு, 7 மார்ச், 2021

மனசு பேசுகிறது : பிறந்தநாளும் விழுதுகளும்

 மார்ச் - 7.