அருவெருப்பின்றி
அருகருகே விரியும்
குடைகள்...
விரித்த குடைக்குள்
நடப்பது என்ன..?
வீதியில் போகும்
கண்களின் தேடல்...
முழுக்க நனைந்தால்
முக்காடு தேவையில்லை
நனையப் போவதற்காகவே
இங்கே குடையால் முக்காடு...
சந்தோஷத்திற்கோ...
சங்கடத்திற்கோ
தேவையில்லாத முகமூடி
சில சந்தர்ப்பங்களுக்கு
தேவைப்படுகிறது...
குடைக்குள் நீங்கள்
குடும்பக் கதை பேசலாம்...
குட்டிச் சண்டை போடலாம்...
உதடோடு உதடு ஒற்றி
முத்த யுத்தம் நடத்தலாம்...
சில்மிஷ தீண்டல்களுக்கு
தேக கதவுகளை
திறந்து வைக்கலாம்...
தீவிரத் தேடலை
சிரத்தையாய் நடத்தலாம்...
என்ன நடக்கிறதென்பதை
காவல் குடை அறியும்...
கடந்து செல்லும் மனித
மனங்கள் அறியாது...
உங்கள் காமத்தின் எச்சம்
பார்க்கும் மனசுக்குள்ளும்
உச்சம் பெறலாம்...
நாலு சுவற்றுக்குள்
நடக்க வேண்டியதை
நடைபாதையில்
கடை விரிக்காதீர்கள்...
நாகரீகம் கருதி
கால்கள் நகர்ந்தாலும்
கண்கள் உங்களைக்
கற்பழிக்கத்தான் செய்யும்
என்பதை மறக்காதீர்கள்..!
* முகநூலில் பார்த்த போட்டோவிற்காக எழுதிய கவிதை... (கவிதை மாதிரி இருக்கா?)
-'பரிவை' சே.குமார்.
12 எண்ணங்கள்:
இது கவிதைதான். நல்லா இருக்கு வாழ்த்துக்கள் சகோ!
முக நூலில்&ப்ளாக்கில் போட்டோ மட்டுமில்ல,பதிவர்,'ஹேமா' எங்கிறவங்க ஒரு கவிதை கூட எழுதியிருந்தாங்க.(இது இலங்கையில் சமீபத்தில் விமர்சிக்கப்பட்ட /தடை விதிக்கப்பட்ட ஒரு விடயம்.)பார்க்க:http://kuzhanthainila.blogspot.fr/
// நாகரீகம் கருதி
கால்கள் நகர்ந்தாலும்
கண்கள் உங்களைக்
கற்பழிக்கத்தான் செய்யும்
என்பதை மறக்காதீர்கள்..! //
அருமையான வரிகள்..
பாழாய் போன (போகும்) உள்ளங்கள்...
முகநூல் கவிதை மட்டுமல்ல! வானம் வெளித்தபின்னும் என்னும் வலைப்பூவில் சகோதரி ஹேமா எழுதிய ஆழமான கவி வரிகள் இவை! பகிர்வுக்கு நன்றி!
நல்லாருக்க ண்ணே சமுதாயம் மெத்தப்படித்த மேதாவிகளின் பார்வைக்கு இதெல்லாம் காதல் தெய்வீக காதல் குடும்பம் எரிந்தாலும் குளிர்காய நேரம் பார்த்து கொண்டிருக்கும் கூட்டத்தை என்னவென்று சொல்வது அண்ணே சமுதாயம் வளர்க்க சாணக்கியர்களாக வேடம்...
வாங்க யோகராஜா...
எனது எல்லாப் பதிவிற்கும் தவறாது கருத்திடுவதற்கு நன்றி.
சகோதரி ஹேமா மற்றும் சிலர் இதே படத்திற்கு கவிதை எழுதியிருக்கிறார்கள். நானும் கவிதை என முயற்சித்திருக்கிறேன். அவ்வளவுதான்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சங்கவி...
தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தனபாலன் சார்...
தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஒவ்வொரு தளத்துக்கும் சென்று எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் தங்களின் பணி சிறப்பானதாகும்... வாழ்த்துக்கள்.
வாங்க சுரேஷ்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சகோதரி ஹேமா தனது வலைப்பூவில் இதே படத்திற்கு கவிதை எழுதியிருக்கிறார். மேலும் சிலரும் எழுதி முகனூலில் பகிர்ந்திருக்கிறார்கள். இதில் எந்த வரியும் சகோதரியின் பதிவில் இருந்து எடுக்கப்படவில்லை... அது வேறு கவிதை வடிவம்... இது வேறு... அதே வரிகள் அல்ல...
வாங்க தினேஷ்...
இந்தப் படம் கொஞ்சம் நாகரீகம்... சென்னையில் கொளுத்தும் வெயிலில் மெரீனாவில் நடக்கும் நாய்க்காதலை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அதற்கு இது மேலல்லவா???
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நனையப் போவதற்காகவே
இங்கே குடையால் முக்காடு...// :) தம்பியின் கோபம் நியாயமானதே..மிகவும் அருமை..(கவிதை மாதிரி இருக்கா...?? அது சரி கதாசிரியருக்கு கவிதையும் எழுதத்தெரியும் என்பது அனைவரும் அறிந்தவிசயம்தானே..:)
கருத்துரையிடுக