மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

பிக்பாஸ் : மதுவுக்கு நாக்குல சனி

Image result for bigg BOSS 3 50th day
பிக்பாஸ் 50வது நாளாம்... இது விஜய் டிவியின் கணக்கு... பார்வையாளர்களின் கணக்கில் ஒரு நாள் குறைவாகவே இருக்கிறது என்றே தோன்றுகிறது. வெள்ளை உடையில் பாரதிராஜாவின் தேவதைகள் போல் தேவையா இந்த டிரஸ் என்பதாய் வந்தார்.

அகம் டிவி வழியே அகத்துக்குள் சென்றார்... 50வது நாள் வரைக்கும் ஒரு வழியாக கரை சேர்த்துட்டீங்க... இன்னும் ஒரு அம்பது நாளிருக்கு என்னத்தை செஞ்சு எப்படிக் கரையேத்துவியளோன்னு தெரியலை... வெளியில சீசன் மூணு ஊத்திக்கும்ன்னு சொன்னாங்க... நீங்களும் அதற்கான முயற்சியில் இருந்தீர்கள் என்றாலும் எப்படியோ தத்திப் பித்தி கோடிகளில் வாக்கு, மக்கள் செல்வாக்குன்னு ஊதார் விட்டே கடந்து வந்திட்டோம்ன்னு வாழ்த்துச் சொன்னார்.

சரி 50 நாள் வரைக்கும் கொண்டாந்துட்டீங்க... அதுக்காக யாரு சிறப்புன்னு ஒவ்வொருத்தரும் மூணு பேரைக் கை காட்டுங்கன்னு சொன்னாங்க... எல்லாரும் தர்ஷனைச் சொன்னாங்க... சாண்டியைச் சொன்னாங்க... மது... லாஸ்லியான்னு சொன்னாங்க... லாஸ்லியா கவினை சொன்னார்... அபி முகனைச் சொன்னார்... ஷெரின் தர்ஷனைச் சொன்னார்... அவா அவாளுக்கு அவா அவா ஆம்படையான் ஜெயிச்சிட்டு வந்தா சந்தோசம்தானே. முடிவில் தர்ஷன், சாண்டி மற்றும் மது மூவரும்தான் இந்த பிக்பாஸ் இல்லத்தில் இறுதி வரை பயணிக்கப் போகும் போட்டியாளர்கள் எனச்சொல்லி பதக்கம் அணிவித்து இதை நீங்களே எடுத்துப் போகலாம்... உடைக்கவும் வேண்டாம் திருப்பிக் கொடுக்கவும் வேண்டாம் என்றார்.மது இருந்தாலே சாப்பாட்டுக்கு பிரச்சினை இருக்காதுன்னு நினைச்சாங்க போல.

என்ன கஸ்தூரி எல்லாரும் இப்படிச் சொல்றாங்க... நீங்க என்ன நினைக்கிறீங்க..? அப்படின்னு கமல் கேட்டார். மீரா இடத்துல நானுன்னு சொல்லாமச் சொல்லிக்கிட்டு அங்க பார்த்தேன்... இங்க பார்த்தேன்... அப்படியாச்சி... இப்படியாச்சு... சார் கேளுங்க... சரக்கில்லாத கப்பல்ல சரக்கடிச்சிட்டுப் படுத்திருந்தா... சரக்கில்லாத கப்பல் தண்ணிக்குள்ள தள்ளாடுன... கடல் தண்ணியால தள்ளாடுதா... இல்ல அடிச்ச தண்ணியால தள்ளாடுதா... அதுல பாத்தியன்னா... அவரு இவரைச் சொல்றாரு... இவரு அவரைச் சொல்றாரு... மதுவுக்கு எதுக்கு மத்தியானத்துல மாலை... சார் நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியுதா... அப்படின்னு கமல் போடுற டுவிட் மாதிரி கமலுக்கே டுவிட்டுட்டு... வெளக்கெண்ணெய் குடிச்ச வெள்ளாடாட்டம் முகத்தை வச்சிக்கிட்டு நீ உக்காரு தாயி... எனக்கு வார்த்தை வரலைன்னு சொல்லிட்டாரு.

அடுத்து போனில் மதுவுக்குக் கேள்வி, வந்தப்போ அடிச்சி ஆடுனே இப்பல்லாம் நடிச்சி ஆடுறே... ஏன்னு கேட்டாங்க... அப்ப வனிதாங்கிற கொடுமைக்கார மாமியா இருந்தா அதனால அடிச்சி ஆட வேண்டியிருந்துச்சு... இப்ப அப்படி யாருமில்லை... அதனால நடிச்சி ஆட வேண்டியதா இருக்கு... சின்ன மாமியா கஸ்தூரி இப்பத்தான் வந்திருக்கா... இனிமேல்தான் அடிச்சி ஆடுறதா இல்ல அணைச்சி ஆடுறதான்னு பார்க்கணும்ன்னு சொன்னுச்சு.காலருக்கு சந்தோஷம்... கமலுக்குக் கொண்டாட்டம்... பிக்பாஸ் டண்டணக்கா... டணக்குனக்கான்னு ஆடுறது நமக்குக் கேட்டுச்சு...

ஆமா... மதுவுக்கு நாக்குல சனி... ஏன்...? கடைசிப் பாராவில் பதில்.

மூணுல யாரு... அப்படின்னு கமல் கேட்கவும் கவின் அழுதான்... சை அழுகிற மாதிரி இருந்தான். லாஸ் போகாதுன்னு அவனுக்குத் தெரியும் இருந்தாலும் சாக்சிக்காக எப்பவும் நடப்பது போல் லாஸை லாஸ் ஆக்கிட்டா என்ன பண்றதுன்னு பரிதவிப்போட இருந்தான். கமல் சுற்றி வளைக்காம கவின் நீ காப்பாற்றப்பட்டாய்ன்னு... அடச்சை... லாஸ் நீ காப்பாற்றப்பட்டாய்ன்னு சொல்லிட்டாரு... கவினுக்கு பேரானந்தம். 

சரி மூணு பேருக்கும் பாட்டுப் போடச் சொன்னேனே என்னாச்சு தயாராயிருக்கான்னு கேட்டதும் இருக்கு சார்... எங்க முதல்ல லாஸ்லியாவுக்குப் பாடுங்கன்னு சொன்னதும் இல்லசார் எங்க வரிசைப்படி பாடுறோம்ன்னு முதல்ல சாக்சிக்கு... அப்புறம் அபிக்கு... இவங்க இரண்டு பேருக்கும் மீராவை இழுத்துப் பாட்டுப் போட்டிருந்தாங்க... அபிக்கு முகனையும் உள் வைத்திருந்தார்கள்... ஆனால் சாக்சிக்கு கவினை வைக்கவில்லை. லாஸ்க்கான பாடலை கவின் ரசித்துப் பாடினான்... ஒருவேளை லாஸ் பாதுகாக்கப்பட்டார் என்று சொல்லாமல் பாடச் சொல்லியிருந்தால் அழுதிருப்பான்... செமக் குஷி... ஆடிக்கிட்டே பாடி, உனக்கிருக்கார் சேரப்பா... அவர் பேசினா போரப்பான்னு தேவையில்லாத ஆணியை சேரனுக்காக புடிங்கினார்கள்.

அதென்ன பாட்டுப் போடச் சொன்னா நீங்க என்னோட வரிசை மாதிரியே எழுதியிருக்கீங்கன்னு சொல்லிட்டு சாக்சியை அழைத்தார் கமல். ஷெரின் உடைந்தார்... உண்மையில் இருவருக்குள்ளும் சின்னச் சின்ன பிரச்சினை இருந்தாலும் கவின் பிரச்சினை முதற்கொண்டு எல்லா விஷயத்தில் ஷெரின் சாக்சிக்கு ஆதரவாகவே இருந்தார்.  நல்ல நட்பு இருந்தது அது கண்ணீராய் வந்தது. அபியும் அழுதார்... இது உண்மையா... இல்லை நீலிக்கண்ணீரான்னு கவினும் சாண்டியும் கூடவே தர்ஷனும் ஆராய்ச்சி பண்ணுனதெல்லாம் சாக்சி வெளியான பின்னர்தான்... இருக்கும் போது சோகமாய்த்தான் இருந்தார்கள்.

சாக்சி அழவில்லை... எவ்வளவோ அழுத பெண்... வெளியேறும் போது துளிக் கண்ணீர் சிந்தவில்லை... உண்மையிலேயே அதீத மன உறுதி. வாழ்த்துக்கள் சாக்சி.

கமலிடம் போய் பேசினார்... குறும்படம் போடப்பட்டது. மீண்டும் நட்புக்களைப் பார்த்து ஒரிரு வார்த்தைகள் பேசினார்... கவினிடம் பேசும் போது கைதட்டல்... உடனே கவின் எப்பவும் போல் முகத்தை வைத்துக் கொண்டு சாரி மச்சான் அப்படின்னு சொன்னான். அதன் பிறகு சிறு உரையாடல்.

கவின் : மச்சி சாரி மச்சி... அப்பா இருக்காருன்னு சொன்னே அவர்கிட்டயும் சாரி சொல்லிடு.

சாக்சி : எனக்குத்தான் அப்பா... உனக்கு மாமான்னு சொன்னா நீ எங்கே ஆமான்னு கேக்கிறே... 

கவின் : ஏய் மச்சான் அதெல்லாம் இல்லடா... சேரனை நான் மாமான்னா சொல்றேன்...

சாக்சி : மூதேவி சேரன் அவள் சேர்த்துக்கிட்ட அப்பா... அவ அப்பாவை மாமான்னுதான் சொல்லுவே... அன்னைக்குத் தூக்கத்துல கூட மாமான்னுதான் தும்முனே...

கவின் : விடு மச்சி... வழிவிடு விநாயகரா எனக்கு வழி விட்டிருக்கே...

சாக்சியின் அப்பா : இப்ப எதுக்கு இவரு எங்கிட்ட சாரி கேக்குறாரு...

கவின் : உங்களை மனசு கஷ்டப்பட வச்சிட்டேன்.

சா. அப்பா : அதெல்லாம் இல்லை... எம்மகளை கரெக்ட் பண்ணி வெளாண்டே... இப்ப லாஸ்லியாவோட விளையாடுறே... எல்லாத்துக்கும் முன்னால அபியோட விளையாண்டே... ஸோ இதுல மனசை ஒடைக்கிற எதுவும் இல்லையே நீ மஜாவாத்தானே விளையாண்டே.

கவின் : கொய்யால அடிச்சே பாரு சிக்ஸ்... சூப்பரு... நான் இத்தோட சூ... மூடிக்கிறேன்.

சாக்சி போன கையோட கமலும் அப்பீட்டு... சரவணன் விவகாரம் குறித்து சனிக்கிழமை தெரிந்து கொள்வீர்கள் என்றார்கள் சரவணன்னு ஒருத்தர் இருந்த மாதிரிக் காட்டிக்கலை... ஒருவேளை உள்ளிருப்பவர்களுக்கு மட்டும் சொல்லப்பட்டிருக்கலாம்.

சேரனுக்கு மன வருத்தம்... சாண்டியும் கவினும் ஏன் சேரனை இழுக்கிறார்கள் என்பதுதான் தெரியலை... அவர் ஒதுங்கியே இருந்தாலும் இவனுங்க ஒரண்டையை விடவில்லை. சாண்டியிடம் நீ எழுதிய பாட்டில் பிழை இருக்கிறது. லாஸ்லியாவைப் பற்றி எழுதும் போது கவினையும் இணைத்திருக்கலாம்... அதைவிடுத்து நான் எங்கே உன்னுடன் பேசினேன்... என்னை ஏன் தெருவுக்கு இழுக்கிறீர்கள்... எனத் தன் ஆதங்கத்தைச் சொன்னார். உடனே மழுப்பிப் பார்த்து இறுதியில் சாரி கேட்ட சாண்டி, கவினிடம் பற்ற வைக்க, அவனோ எகிறினான்... முத்தப் பிரச்சினை இந்தாளுக்கு மட்டும்தான் தெரியும்... வெளிய சொல்லிட்டான்னா.. எனத் திருகி, சாண்டி சாரி கேட்டுட்டு விட்டுடு எனச் சொன்னதும் சேரனிடம் சாரி சொன்னான்.

சேரனுக்கு எதிராக ஒரு சேனையை உருவாக்குகிறார்கள் சாண்டியும் கவினும்... மதுவெல்லாம் ஆ... அப்படியான்னு கேட்டிருக்கு... தர்ஷனுக்குச் சேரன் தன்னை வெற்றி வேட்பாளன் என்று சொல்லாமல் பேசி கமலால் இவரு டைரக்டரா இல்லையாங்கன்னு வேற கேட்க வச்சிக்கிட்டாருன்னு கொஞ்சம் வருத்தம். அபிக்கு முகன் விஷயத்தில் வருத்தம்... சொல்ல முடியாது கவின் மச்சான் நா வேணுமா அந்த ஒண்ணுக்கும் உதவாத அப்பன் வேணுமான்னு கேட்டால் இன்று லாஸ்லியா கூட சேரனை நாமினேட் செய்யலாம். இன்றைய நாமினேசனில் சேரனுக்கு இடமுண்டு. எல்லாருமே சாண்டியின் நிழலைப் பின்தொடர்ந்தே வாழ்கிறார்கள்.

ஷெரினிடம் அழுது புலம்புகிறா அபி... இப்பத்தான்டி ஒருத்தியை இறக்கி வச்சேன்... அடுத்து நீ ஏறி உக்காந்துட்டே... என்னைய விளையாடவே விட மாட்டீங்களா... என்னை நானே ஷெல்ப் நாமினேசன் பண்ணிக்கிட்டுப் போறேன்... விட்டுடுங்கன்னு ஷெரின் முடியலை பிக்பாஸ் ரேஞ்சுக்குப் போயிருச்சு.

முகனையும் அபியையும் பிரிக்க கவினும் சாண்டியும் செயற்குழு கூட்டத்தைக் கூட்டியாச்சு... இந்த வாரம் அடிதடி அழுகைகள்தான்.

சாக்சி வெளிய போகும் போது நான் ஷெரினை பயன்படுத்திக் குளிர் காயுறேன்னு சொன்னேதானே... நான் அப்படியெல்லாம் இல்லை... என்னிடம் கவின்தான் குளிர் காஞ்சான்... வீட்டுல தொடர்ந்து இருக்க விட்டிருந்தா மவனே இந்தவாரம் நீதான் எனக்குத் தயிர்வடை... ஆனா உன் நல்ல நேரம் தப்பிச்சிட்டே... இனி யாரையும் இப்படிச் சொல்லாதேன்னு பத்த வச்சிட்டுப் போனதை ஷெரினும் தர்ஷனும் பேசுறாங்க...

கஸ்தூரி வந்தும் கலை கட்டலை... ஆனா கஸ்தூரி என்னய சிங்கப்பூர் பார்ட்டியில கூப்பிட்டாக... தாய்லாந்து பார்ட்டியில கூப்பிட்டாக... துபாய்ல கூட கூப்பிட்டாக... நான் போகலைன்னு சொல்லிட்டேன்.... ரசிக குஞ்சுமணிகள் ஒரு நாளைக்கு ஆயிரம் லெட்டர் பிக்பாஸ்ல போயி கமலைப் பாருங்கன்னு... போஸ்ட்மேன் வேற தினமும் மூட்டை தூக்க முடியலைன்னு கத்திட்டார்... அதான் எங்கெரகம் இந்தப் பார்ட்டிக்குள்ள வந்துட்டேன்... ஆனாலும் மய்யமா நிக்கமாட்டேன் அப்படின்னு உதார் விட்டுக்கிட்டு இருந்துச்சு... ஆனா பொங்கல்ல கடலைப் பருப்பு போட்ட மாதிரித்தான் நீயின்னு எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சு.

ஆமா மதுவுக்கு ஏன் நாக்குல சனி...?

இந்தா வனிதாவை மறுபடியும் கொண்டாந்துட்டானுங்கள்ல... கஸ்தூரியா வனிதாவான்னு ஆடப்போற ஆட்டத்துல மதுவை பகடை ஆக்கி பல்லாங்குழி ஆடிடாது நம்ம தாயம்மா.

பிக்பாஸ் தொடரும்
-'பரிவை' சே.குமார்.

1 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// அவா அவாளுக்கு அவா அவா அம்படையான் ஜெயிச்சிட்டு வந்தா சந்தோசம்தானே ///

ஹா... ஹா...

கஸ்தூரி மேல் கரிசனம்... காரணம் இந்தியன் சில வரிகள் மறக்கவில்லை போலும்...

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு...
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு...? - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு...?