மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 14 ஆகஸ்ட், 2019

பிக்பாஸ் : பத்திக்கிச்சு வனிதா வச்ச நெருப்பு

Image result for biggboss 51 day images
லையில்லாது கிடக்கும் கண்மாய்த் தண்ணிக்குள் கல்லெடுத்து வீசும் போது அதன் காரணமாக எழும் அலையானது எல்லாப் பக்கமும் பரந்து விரியும். அப்படித்தான் வனிதாக்காவின் வருகையால் பிக்பாஸ் இல்லத்துக்குள் பிரச்சினை அலை எல்லாப் பக்கமும் பரந்து விரிந்து பத்திக் கொண்டு நிற்கிறது.

என்ன சேரன் அண்ணா.. நீங்க எவ்வளவு கோபக்காரருன்னு கேள்விப்பட்டிருக்கிறேன்... இங்க பொட்டிப் பாம்பா அடங்கிப் போயிக் கிடக்குறீங்க... உங்க கோபத்தை எப்பக் காட்டுவீங்க... கோபமே வராத மாதிரி நீங்க நடிக்கிறீங்கன்னு மக்கள் பேசுறாங்கன்னு சொல்ல, ஆத்தா... அந்தக் கோபத்தையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு புதுச் சேரனா வருவேன்னு குலதெய்வத்து மேல சத்தியம் பண்ணிட்டு வந்திருக்கேன்... அதான் அடக்கி வச்சிக்கிட்டு உக்காந்திருக்கேன்.. நீ என்னடான்னா சூடம் ஏத்தி, சூடாக்குறியேன்னு நினைச்சிக்கிட்டு பாட்ஷாவா இருக்கக் கூடாது குணாவா இருப்போம்ன்னு இருந்தேன். நீ குணாவா இருக்கதைவிட பாட்ஷாவா இருந்து பாரு... அதுக்கு வர்ற அப்ளாஷைப் பாருன்னு சொல்றே... இனித்தான் நீ இந்தக் கபாலியோட ஆட்டத்தைப் பார்க்கப் போறேன்னு சொல்லிட்டார்.

அடுத்து ஷெரின், அபியைப் பக்கத்துல படுக்க வச்சி, ஆம்பளைங்க நம்மளை யூஸ் பண்ணுறானுங்கடி... நீ ஏன் அவன் மேல போயி விழுறே... தேவையே இல்லை... போடா பொறம்போக்குன்னு சொல்லிட்டு போடி... முகன் ஒண்ணும் கவின் இல்லை... கமுக்கமா கிஸ் அடிச்சிட்டு கவிழ்ந்து படுத்துக்கிட்டு மச்சான்னு சொல்ல, இவன் கிஸ் அடிக்க மாட்டான்... ஆனா கன்னத்தைப் பிச்சாலும் பிச்சிருவான் ஜாக்கிரதையின்னு மெல்ல ஏத்திவிட்டுச்சு. அபிக்குள்ள பத்திக்குச்சுன்னு தெரிஞ்சதும் அக்காவுக்கு சிரிப்புத் தாங்கலை... இந்நேரம் பிக்பாஸ் போனாஸா ரெண்டு லட்சத்தைப் போட்டிருப்பாருல்ல.

அபிக்குப் பத்திக்கிட்டதும் முகனை இழுத்து வச்சிப் பஞ்சாயத்தை ஆரம்பிச்சாச்சு... கவின் மரமண்டை லாஸோட லவ்வ முடியாம அடிச்சிக்கிட்டே கிடக்கானுங்களேன்னு இஞ்சி தின்ன குரங்காட்டம் உக்காந்திருந்தான். தர்ஷன் மட்டும்தான் ஆரம்பத்தில் முகன் பக்கம் நின்றான். சேரனுக்குச் சேர்மானம் சரியில்லை... வனிதா வந்ததும் சின்னதாய் மதுவுக்கும் சேரனுக்கும் கொம்பு முளைத்திருக்கிறது. சம்பந்தமில்லாமல் பேச ஆரம்பிக்கிறார். குணா கமலாகவே குந்தியிருத்தல் சேரனைச் சேதாராமில்லாமல் பார்த்துக்கும்.

அபி அடித்துப் பேச, முகன் எப்பவும் போல் மென்மையாகவே விளக்கம் கொடுத்தான்... வனிதா வந்த காரியத்தைச் சரியாக முடிக்க, அழகாய் பிரச்சினையை டென்சன் மோடுக்கு நகர்த்திக் கொண்டிருந்தார். மது அபியை ஒரு வாங்கி வாங்கியது... சரியான கேள்வி. ஷெரின் 'ஹே பேபி' அப்படின்னு அபிக்கு ஆதரவாய் நின்றது. லாஸ்லியா ரொம்ப ஆதரவு கொடுத்தார்... லாஸ்லியாவின் ஆதரவுக்கரம் அபிக்கு இருந்ததால் கவின் முகனுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கிறேன் பேர்வழி என நின்று கொண்டிருந்தான். கஸ்தூரியெல்லாம் காசைப் பிடித்த கேடு... ஆ... ஊன்னா நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆயிடுது. இந்தப் பிரச்சினையிலும் கவின் அருகில் நின்று கொண்டு ம் நீ பேசு... சரி இப்ப நீ பேசுன்னு கோபிநாத்தாவே மாறிடுச்சு.

அபியின் குரல் உயர... உயர... முகன் உச்சாணிக் கொம்பில் ஏறினார். இருவரும் உட்கார்ந்திருந்த சேரை எடுத்து அடித்துக் கொள்ள ஆயத்தமாக எல்லாருமாய்த் தடுத்து அபியை கஸ்தூரி வெளியே கொண்டு செல்ல, முகனை வனிதா கையிலெடுத்துக் கொண்டார். தர்ஷன் வனிதாவிடம் அவன் பேசுவதைக் கேளுங்கள்... எல்லாம் சொல்லுடா மச்சான் என்றான்... ஏதோ ஒரு மறைக்கப்பட்ட செய்தியோ / காட்சியோ இருக்கு. அதைச் சொல்ல விடாமல் தடுக்கப் பார்க்கிறார்கள். சேரன் நட்பென்னும் போது உப்புமூட்டை எதற்காகச் சுமந்தாய் எனக் கேட்டது நல்லதொரு கேள்வி. சாண்டி வனிதாவை எதிர்த்துப் பின் அடங்கிப் போனார். கவின்... நானெல்லாம் மானஸ்தனே இல்லை மானங்கெட்டவன் என வனி அக்கா பேசுறது சரியின்னு சாமரம் வீசினான்.

முகனுக்குள் எரிந்த தீயை தண்ணீர் கொடுத்து அடக்கினார்கள்... ஆண்கள்தான் பெண்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லிவிட்டு, பெண்கள்தான் ஆண்களை அழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். முகன் அழுதான்... சிறுவனாய் மாறிப் போனான்.

வெளியே அபியிடம் தன் கத்தியைச் சொருகிக் கொண்டிருந்தார் கஸ்தூரி... எப்பவும் சரியாகவே எதையும் கணித்துப் பேசும் ஷெரின் இப்போதும் அப்படியே சரியாகப் பேசிக் கொண்டிருந்தார். லாஸ்லியாவெல்லாம் வெள்ளைத் தோலையும் சிரிப்பையும் மட்டுமே வைத்து அம்பது நாளைக் கடந்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. நிறம் பார்த்து ஏமாறும் தமிழன் எப்போது திருந்துவான்..? கஸ்தூரியின் கணக்கு வேறமாதிரி என்பதை அந்த அழுகையிலும் அபி புரிந்து கொண்டு நீ இங்கேயிருந்து போயிடுன்னு விரட்டிருச்சு.

நீ உன்னோட தரப்புல நியாயமா இரு... என்ன நடந்துச்சுன்னு தெளிவாப் பேசு... நான் உனக்கு எப்பவும் தோள்கொடுப்பேன்னு தர்ஷன் சொன்னான்... உண்மையிலேயே தர்ஷனுடன் மற்ற ஆண்களை நிறுத்திக் கூடப் பார்க்க முடியாது. எல்லாருமே நடிக்க மட்டுமே செய்கிறார்கள்... பிரச்சினைகளில் நியாயத்தின் பக்கம் நிற்காமல் பின்னால் போய் பேசுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

அடுத்து ஹோட்டல் டாஸ்க் ஆரம்பம்.... வனிதா அபி-முகன் காதலை ஒழிச்சிட்டு காலாட்டிக்கிட்டு உக்காந்திருந்தாங்க... இது ஒரு சொர்ணாக்காயில்லை ஆயிரம் சொர்ணாக்கா... அப்புறம் நாட்டாமை இந்த ஆமையை எப்படி வீட்டுல சேர்ப்பாரு... இதெல்லாம் குடும்பத்துத் தீபமில்லை... எரிக்க வந்த தீப்பந்தம். மேனேஜரான சேரன்கிட்ட ஈ அதிகமா இருக்கு... ஒழிக்க எதாவது நடவடிக்கை எடுத்தீர்களான்னு கேட்டுட்டு... ஈயை ஒழிக்கிறதைவிட ஒரு பேயை விரட்டிட்டா நாங்க பாட்டுக்கு பேசிக்கிட்டு.... தின்னுக்கிட்டு.... இன்னும் அம்பது நாளை ஓட்டிருவோம்ன்னு நினைச்சிக்கிட்டே சாண்டிக்கிட்ட ஈயை ஒழிக்கச் சொல்கிறார் நம் விருந்தினர் என்று சொல்கிறார்.

சாண்டியும் கவினும் முழுக் களவாணிப்பயலுக... அதுவும் சேரன் என்றால் அவர்களுக்கு தெருவில் கிடக்கும் பந்து போல அடிச்சி விளையாடத்தான் நினைப்பானுங்க... ஈ மேட்டரை வைத்து இந்த இரண்டு ஈத்தரையும் சேரனை ஓட்டிக் கொண்டிருக்க, லாஸ்லியாவும் 'ஈ'ன்னு பல்லக் காட்டிக்கிட்டு உக்காந்திருந்துச்சு. தர்ஷன் மட்டும் ஒரு ஈயைக் கொல்லலாம்... ரெண்டு ஈயைக் கொல்லலாமான்னு சேரனிடம் கேட்டு வைத்தான்.

அபி முகன்கிட்ட வந்து உன்னை நான் ரொம்ப நல்லாப் பாத்துக்கிட்டேன்... கட்டிப் புடிச்சிக்கிட்டேன்... உப்பு மூட்டை ஏறி விளையாண்டேன்... லவ் பண்றேன்னு சொன்னேன்.... ஆனா எங்கயும் நான் உங்கிட்ட அத்து மீறலை... உன்னோட அவளை அத்துவிடச் சொல்லலை.... ஆனா எல்லாரும் நாந்தான் கட்டிப் புடிச்சேன்... உப்பு மூட்டை ஏறினேன்னு சொல்றாங்க... ஆமா எல்லாம் நாந்தான்... உன்னைப் பாதிச்சிருந்தா மன்னிச்சிக்க.... இன்னைக்கு நம்மளை வச்சி விளையாண்டிருக்காங்க... கவினெல்லாம் பெரிய அப்பாடக்கர் மாதிரிப் பேசுறான்... என்ன செய்ய என்னோட தலையெழுத்து... என்னைய வீட்டுக்கு அனுப்புடான்னா இந்தப் பிக்பாஸ் இதுக்குத்தான் இருக்கச் சொன்னான் போல... வனிதாவுக்கு வண்டி வண்டியா அள்ளிக் கொடுத்து நம்மளை வாண்டையாத் திட்டச் சொல்லி, அடிச்சிக்க வச்சிருக்கான். இன்னைக்கு இப்படியே போகட்டும். நாளைக்கு நான் உப்புமூட்டை ஏறிக்கிறேன்... நீ தூக்கிட்டு சுத்தலாம்ன்னு சொல்லிட்டுப் போக, இதை கவின், சாண்டிக்கிட்ட சொல்லிச் சிரிக்கிறான் முகன்.

வனியக்கா நல்லவன்னு கண்டுபிடிச்ச கவினுக்கு கஸ்தூரி காக்காயாம்... அடேய் பொம்பளப்புள்ளங்க பின்னால திரிஞ்சி முட்டாப்பீசாவே ஆயிட்டியேடா... சொர்ணாக்காவை காக்க வந்த கடவுள்ன்னு சொல்றியேடா... உன்னோட பேச்சுக்கும் ஆமாசாமி போடுற சாண்டியை என்ன சொல்றது...? நீ புரிஞ்சிதான் பேசுறியா... இல்லை புரியாமத்தான் திரியிறியான்னே தெரியலை... சந்தானம் நகைச்சுவையைப் பார்த்ததும் எழுந்து போற மாதிரி இப்பல்லாம் உன்னைப் பார்த்ததும் எழுந்து போகத்தான் சொல்லுது.

டாஸ்க் இன்று இத்துடன் முடிந்தது... நாளை தொடரும் என்றதும் கவினும் சாண்டியும் சேரன் முன்பு சூவைக் கழட்டி வீசி மகிழ்கிறார்கள். என்ன ஜென்மங்கள் இவர்கள்..? ஒரு மனிதனைப் பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கியிருத்தல் நலம் அதை விடுத்து அவன் முன்னே வேண்டுமென்றே செய்வதெல்லாம் வக்கிர மனம்... சேரன் எழுந்து சென்றார். பிக்பாஸ் இந்த நிகழ்வுக்காகவே மதிப்பெண்ணைக் குறைக்க வேண்டும்.. கமல் பேச வேண்டும்... ஆனால் கவின், சாண்டி விஜய் டிவி ஆட்கள் என்பதால் இரண்டுமே நடக்காது.

வனிதாவைப் புகழ்ந்து பேசி, அடுத்தவங்க பேசுறதைக் கேட்காத உன் குணம்தான் உனக்குப் பெரிய மைனஸ் எனச் சொன்ன கஸ்தூரி, நல்லவள்ன்னு தெரியிற நீ பஜாரியா இருக்க இந்தக் குணமே காரணம்ன்னு தேங்காய் உடைத்து இந்த விஷயத்தில் நான் உன்னை எதிர்ப்பேன்னு சொல்லி வைக்க, சொர்ணாக்கா அடுத்த ஆட்டத்துக்குத் தயாராயிருச்சு.

சொர்ணாக்காவை அனுப்பிட்டு பிக்பாஸ் வந்தாள் மகாலெட்சுமியின்னு பள்ளியெழுச்சிப் பாடல் போடுறார்... அக்காவுக்கு முன்னால அபி பரதம் புடிக்கிறார். டெரர் லெட்சுமியான அக்காவுக்கு மகாலெட்சுமியின்னு சொன்னதும் மயிரெல்லாம் புல்லரிச்சித் தூக்கிக்கிட்டு நிக்கிது... அப்புறம்தான் அக்கா மேலே சொன்ன ஆட்டமெல்லாம் நடத்துச்சு... 

பிக்பாஸ் தொடரும்
-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பஜாரி ஒருவாரம் இருந்தாலே போதுமடா சாமி...!

துரை செல்வராஜூ சொன்னது…

மட்டரகமான இந்த நிகழ்ச்சியை இந்த அளவுக்கு விவரித்து எழுதியிருக்கின்றீர்கள்..

எனக்குப் பிடிக்கவில்லை...

பொன்னான நேரத்தை இதன் மூலமாக புண்ணாக்கிக் கொள்கிறார்கள் தமிழகத்து மக்கள்...