மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 20 ஜூன், 2020

மனசு பேசுகிறது : 'துருவ நட்சத்திரம்'

த்தியமர் குழுமத்தில் இணைந்து நீண்ட நாட்களான போதிலும் எந்த ஒரு பதிவும் பகிர்வதில்லை... வாசிப்பதுடன் சரி... அதுவும் இங்கு எழுதுபவர்களைப் பார்க்கும் போது இதெல்லாம் பெரிய இடம் போல... நாம ஒதுங்கியே இருப்போம்ன்னு கொஞ்சம் எட்டிப் பார்த்துட்டு வெளியில் வந்துருவேன்.
அப்படி ஒருமுறை எட்டிப் பார்க்க, நடிகர் டெல்லி கணேஷ் எழுதும் 'பிள்ளையார் சுழி'யை வாசித்தேன்... என்ன எழுத்து... மனுசன் சிரிப்பு நடிகர் என்பதைவிட குணச்சித்திர நடிகர் என்பதில்தான் தன்னைநிருபித்தார்... அவரின் வாழ்க்கை வரலாறை மகிழ்வாய்... நெகிழ்வாய் மிக அழகாய் எழுதிக் கொண்டிருக்கிறார். வாசிக்க வாசிக்க நம்மை ஈர்க்கும் எழுத்து. அவருக்குள் இப்படி ஒரு எழுத்தாளன் என்பதே வியப்பாய் இருந்தது. அதன் தொடர் வாசிப்பாளன் ஆனேன்.
முதன் முதலில் நாமளும் ஒரு கதையைப் பகிரலாமே என்ற எண்ணத்துடன் இரவு பத்து மணிக்கு மேல் (ஊரில் 11.30) ஒரு சிறுகதையைப் பகிர்ந்தேன்... ஓரளவு வாசிப்பாளர்களையும் கருத்தையும் பெற, அடுத்த சில நாளில் மற்றொன்று... அதுவும் ஓரளவே வாசிக்கப்பட்டது. மூன்றாவது கதையை பகலில் பகிர்ந்தபோது கொஞ்சம் கூடுதலாய் கவனம் பெற்றது. இனி பகலில்தான் பகிர வேண்டும் என்று நினைத்திருந்தாலும் (ஒரு ஆசைதான்) வேலை காரணமாக நான்காம் கதையையும் இரவில்தான் பகிர்ந்தேன். ரொம்ப பேரை அதுவும் சென்றடையவில்லை.
இதற்கிடையே குலவைப்பாட்டு குறித்த ஒரு பகிர்வு... எனது தளத்தில் சில வருடங்கள் முன் எழுதியது. பகிர்ந்த போது அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை... காரணம் காப்பி என்று சொன்னார்கள்... நான் எழுதியவற்றை பலர் காப்பி பண்ணி ஆங்காங்கே அவர்கள் பெயரில் பகிர்ந்ததால்தான் என் வலைப்பூவில் கதைகள் பகிர்வதில்லை. இப்ப என்னடான்னா நம்ம எழுதுனதையே காப்பின்னு ஏத்துக்க மாட்டேனுட்டாங்களேன்னு குழுமத்துக்கு விளக்கமாய் ஒரு குறுஞ்செய்தி போட்டேன். பதிலில்லை... சரி இனி பிள்ளையார் சுழி வாசிப்போட நிறுத்திக்கலாம் என நினைத்திருந்தேன்.
வியாழன் இரவு முகநூல் வந்தபோது மத்தியமர் பக்கத்திலிருந்து வாழ்த்துகள் வந்த வண்ணம் இருப்பதை அறிவுப்புகளில் உயரும் எண்ணிக்கை காட்டிக் கொண்டிருந்தது. எதற்கு நமக்கு வாழ்த்து..? என்று அங்கு போனால் இந்த வார மத்தியமர் 'துருவ நட்சத்திரமாய்' தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் நானும் ஒருவன்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

உண்மையைச் சொன்னால் அதிகம் எழுதவில்லை... அதிகமாய் வாசிப்பதும் கூட இல்லை... எப்போதேனும் வாசிப்பதுண்டு... பின் எப்படி நம்மை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள் என்ற எண்ணம் மேலிட அந்தப் பதிவை வாசித்தால் அவர்கள் சல்லடை போட்டுத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது... அந்தச் சல்லடையில் நானும் சிக்கியிருக்கிறேன் என்பது மகிழ்ச்சிதான்.
அதுவும் நாம் எதில் நிலைத்து நிற்க ஆசைப்படுகிறோமோ அதையே காரணமாய் சொல்லி, அதாவது 'சுவராஸ்யமான நடையில் சிறுகதைகள் எழுதும்' எனச் சொல்லி இந்த மின் சான்றிதழைக் கொடுத்திருக்கிறார்கள்.
உண்மையில் அங்கு குவிந்த வாழ்த்துகளைப் பார்த்துப் பெருமகிழ்ச்சி... பெரும்பாலும் வாழ்க்கைக் கதைகளையே களமாக்கும் எனக்கு, என் சிறுகதைகளுக்காகவே கொடுக்கப்பட்டிருக்கும் இந்த 'துருவ நட்சத்திரம்' மிகவும் சிறப்பானது என்பதைச் சொல்லவும் வேண்டுமா..?.
இதை வழங்கிய மத்யமர் குழுமத் தலைமை, துணை நிற்கும் தலைமைகள் மற்றும் வாழ்த்திய நட்புக்கள் அனைவருக்கும் நன்றி.
என் கதைகளை வாசித்து தங்கள் கருத்துக்களைச் சொல்லி என்னைத் தொடர்ந்து எழுத வைக்கும் வலைப்பூ நட்புக்களுக்கும் நன்றி. என் தொடர் ஓட்டம் என்பது உங்களாலும் இணைய, மின் இதழ் நண்பர்களாலும் மட்டுமே சாத்தியமாயிற்று என்பதுதானே உண்மை.
நன்றி.
-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மகிழ்ச்சி... வாழ்த்துகள் குமார்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஆஹா.... மகிழ்ச்சி குமார். மேலும் சிறப்புகளை பெற வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மகிழ்வுடன் வாழ்த்துகள் குமார்.

துளசிதரன்

குமார் துருவநட்சத்திரம் என்ற தலைப்பைப் பார்த்து ஓ குமார் இங்கு கதை பகிரத் தொடங்கிவிட்டாரான்னு டக்குனு சந்தேகம். அப்புறம் படமோ ந்னு தோன்றியது.

மத்தியமரில் துருவநட்சத்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது குமார். மேலும் மேலும் சிறப்புகள் பெற வாழ்த்துகள்.

கீதா

Anuprem சொன்னது…

மிக மகிழ்ச்சி ....வாழ்த்துக்களும்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

துருவ நட்சத்திரமாக ஜொலிக்கும் குமார் அவர்களுக்கு, வாழ்த்துகள்!