மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 3 அக்டோபர், 2015

வெள்ளந்தி மனிதர்கள் : 11. நிஷா(ந்தி) அக்கா


துவரைக்கும் வெள்ளந்தி மனிதர்களில் என்னைச் செதுக்கிய, மகனாகப் பாவித்த, நண்பனாக நினைத்த மனிதர்களைப் பற்றி எழுதி வந்தேன். உறவுகளை விட உறவாய் வந்தவர்கள்தான் என் வாழ்வில் என்னோட சுக துக்கங்களில் எல்லாம் தோளோடு தோள் நின்றிருக்கிறார்கள்... நிற்கிறார்கள். அப்படி வந்த உறவுகளில் இதுவரை முகம் பார்க்காது எழுத்தால் மனதால் உறவாகிப் போன பலர்தான் இன்று என் வாழ்வில் மறக்க முடியாதவர்களாய் மாறிப் போய் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட உறவுகளில் ஒருவர்தான் நிஷா அக்கா.

ஆம் பாசத்துக்கு ஒரு நிஷா அக்கா... நிஷாந்தி பிரபாகரன்.  இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ்ஸில் வாழ்ந்து வருகிறார். ஹேட்டரிங் மட்டுமில்லாமல் இரண்டு மண்டபம், ஹோட்டல் என வைத்து ஹேஹாஸ் கேட்டரிங்க் சர்வீஸஸ் என்ற ஆல் ஈவண்ட்ஸ் மூலமாக திருமணம், பிறந்தநாட்கள் உள்ளிட்ட பெரும்பாலான நிகழ்ச்சிகளை தாங்களே எடுத்து அருமையாக அதை நடத்தி மிகச் சிரத்தையுடன் செய்து வருகிறார். இவரின் மனசு சாதி, மதம் என எந்தச் சாக்கடையையும் தன்னுள்ளே புதைக்காத மனசு. எல்லோரையும் அண்ணன் தம்பியாய், அக்கா தங்கையாய், நல்ல தோழர்களாய் பார்க்கும் உன்னதமானது. இது எல்லாருக்கும் வருவதில்லை.... வாய்ப்பதும் இல்லை.

நான் வலையுலகில் எழுத ஆரம்பித்து ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. தமிழ் மணம், உலவு, தமிழ் 10, இண்ட்லி போன்ற திரட்டிகளில் பதிவுகளை இணைப்பதை தொடர்ந்து செய்து வந்தேன். அப்போதெல்லாம் எனக்கு சேனைத்தமிழ் உலா என்றதொரு குழுமம் இருப்பது தெரியாது. என்னிடம் 'தம்பி என்ன பண்றே...?' என்று உரிமையோடு கேட்கும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் காயத்ரி அக்கா ஒரு முறை தம்பி ஒரு சிறுகதைப் போட்டியிருக்கு கலந்துக்க என்று சொல்லி சேனையை அறிமுகம் செய்தார்கள். அதற்காகத்தான் அங்கு உறுப்பினரானேன். சிறுகதை எழுத வேண்டும் என்றால் ஐம்பது பகிர்வுகள் பதிய வேண்டும் என்ற நிபந்தனை விதித்திருந்தார்கள். அதில் எழுதும் பதிவுகள், நாம் மற்றவர்களுக்குப் போடும் கருத்துக்கள் எல்லாம் உள்ளடக்கம்  என்பதால் ஒரு வாரத்துக்கு தீவிரமாக இயங்கினேன் என்பது வேறு விஷயம் இப்ப நம்ம வெள்ளந்தி மனுஷிக்கு வருவோம்.

என்னோட முதல் பதிவில் 'குமார் நீங்க இங்க இணைந்தாச்சா...? உங்க பதிவுகளை தொடர்ந்து வாசிப்பேனப்பா...' என்று ஒரு கருத்து நிஷா அக்காவிடம் இருந்து வந்திருந்தது. அதுதான் சேனையில் எனக்கு கிடைத்த முதல் கருத்து. ஆஹா நம்ம எழுத்தை நமக்குத் தெரியாம படிக்கிற ஆளுங்க இருக்காங்கன்னு ஒரு பக்கம் சந்தோஷம். அப்புறம் அடுத்தடுத்த கருத்துக்களில்தான் தெரியும் என்னோட கலையாத கனவுகளின் தொடர் வாசகி அக்கா என்பது. எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொரு பகிர்வுக்கும் அக்காவின் கருத்துக்கள் மிக அழகாக இருக்கும். நானெல்லாம் நல்லாயிருக்கு, அருமை என்று போடுவதோடு சரி. ஆனால் இவரோ படித்து ஒவ்வொரு இடத்திற்கும் கருத்துச் சொல்லி நம்மை ஊக்குவிப்பதில் இவருக்கு நிகர் இவரே.

சேனையில் எல்லோருக்கும் கருத்துச் சொல்லும் நண்பர்கள் நிறைய இருந்தாலும் பல ஆயிரக்கணக்குகளில் கமெண்ட் இட்டு எல்லோரையும் ஊக்கப்படுத்துவதில் இவர் பெருமைக்குரியவர். என்னிடம் கருத்துக்கள் மூலமாக பேசிய அக்கா முகநூலில் இணைந்து தனிப்பட்ட முறையில் என்னுடன் தம்பி என்று பேசியபோதுதான் அவர் என் மீது கொண்ட பாசம் எவ்வளவு பெரியது என்பதை அறிய முடிந்தது. இலங்கைத் தமிழில் அவர்கள் சாட் பண்ணும் போது அந்தப் பாசத்தின் வேர் எவ்வளவு ஆழமானது என்பதை அக்காவுடன் இணையம் மூலமாக தொடர்பு கொள்ளும் எல்லாரும் அறிவார்கள்.

சேனைக்குள் போட்டிக்காகச் சென்றவன் அதில் வென்றதும் அங்கிருந்த உறவுகளின் அன்பினால் அங்கு தங்கி அவர்களுடன் உறவாய் ஆனதில் இருக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வருத்தமோ சந்தோஷமோ எதுவாக இருந்தாலும் நமக்கு ஆறுதலாய் அன்பாய் இருக்கும் முகம் பார்க்காத நட்புக்களில் நிஷா அக்காவும் ஒருவர். காயத்ரி அக்காதான் உங்க மாமா, உன்னோட மருமகள் என்று என்னை உறவாய்க் கொண்டு அடிக்கடி என்னுடனும் என் மனைவியுடனும் பேசுவார். இந்த உறவு எவ்வளவு உன்னதமானது என்பதை சில நாட்கள் பேசவில்லை என்றாலும் 'தம்பி என்னாச்சு... எங்க் போனே... உடம்புக்கு முடியலையா? ஊரில் நித்யா குழந்தைகள் எப்படியிருக்காங்க' என்று கேட்கும் போது அறிய முடியும். அதே போல்தான் நிஷா அக்காவும் 'மருமக்கள் எப்படியிருக்காங்க...?' 'உன்னோட மருமகளுக்கு பசிக்கிறதாம்... சாப்பாடு கொடுத்துட்டு வாறேன்ப்பா...' என்றெல்லாம் பேசும் போது இந்த எழுத்து, இந்தத் தமிழ் நமக்கு எப்படியான உறவுகளைக் கொடுத்திருக்கிறது என்று சந்தோஷப்பட வைக்கிறது.

எழுத்துக்களை வைத்து ஒருத்தனின் மனதை அறிந்து உறவாய் ஆக்கிப் பார்க்கும் இதயம் எல்லாருக்கும் வருவதும் இல்லை... வாய்ப்பதும் இல்லை... அப்படி வந்தவர்களும் வாய்த்தர்களும் எனக்கு நிறைய இருக்கிறார்கள். அதற்கு இறைவனுக்கு நன்றி. சமீபத்தில் நான் மிகப்பெரிய புயலில் சிக்கித் தவித்து வருந்தி எழுதாமல் இருந்தபோதெல்லாம் 'என்னாச்சு... எல்லாம் சரியாகும்..? ஏதாவது எழுது... அப்பத்தான் மனசுக்குள்ள இருக்க வலி போகும்' என்று தனது கையில் வெட்டுப்பட்டு தையல் போட்டிருந்த நிலையில் மாலைவேளைகளில் கொஞ்ச நேரம் அரட்டையில் வந்து என்னை அதற்குள் இருந்து வெளிவர வைப்பதற்கு எவ்வளவு முயற்சிகள் எடுத்தார் என்பது எனக்கு மட்டுமே தெரியும். வலைப்பதிவர் சந்திப்பு போட்டிகளுக்கும் கல்கி மற்றும் சில சிறுகதைப் போட்டிகளுக்கும் எழுதும் எண்ணம் இல்லாத நிலையில் எழுது எழுது என்று என்னை எழுத வைத்தவர் நிஷா அக்கா. அவரின் தூண்டுதலே வலைப்பதிவர் போட்டிக்கு மூன்று பதிவுகளை எழுத வைத்தது. இப்படி ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி எழுத வைப்பதில் அவருக்கு நிகர் அவரே.

முகம் பார்க்காமல் அக்கா தம்பி உறவாகிவிட்ட எங்களுக்குள் இருக்கும் அன்பின் பொருட்டு என்றாவது ஒருநாள் அக்காவை நேரில் சந்திப்பேன் என்று நம்புகிறேன். அது கண்டிப்பாக நடக்கும். சரி வெள்ளந்தி மனுஷியாக என்னுள்ளே புதைந்திருக்கும் எங்க அக்காவுக்கு அக்டோபர் - 4 (நாளை) பிறந்தநாள். இனி வரும் காலங்கள் அக்காவுக்கு உடல் நலத்துடன் சிறப்பான வாழ்க்கையை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என என் உறவுகள் எல்லாரும் வாழ்த்துங்கள்.

அன்பின் அக்காவுக்கு என் சார்பாகவும் நித்யா சார்பாகவும் உங்கள் மருமக்கள் ஸ்ருதி, விஷால் சார்பாகவும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நிறைந்த அன்பும் வளமான செல்வமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா...

-'பரிவை' சே.குமார். 

29 எண்ணங்கள்:

test சொன்னது…

விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........

பணம்அறம்

நன்றி

நிஷா சொன்னது…

அம்மாடியோவ்! குமார்! இதை படித்து விட்டு அழுதுட்டேன்பா! இத்தனைக்கும் நான் தகுதியாய் இதுவரை இருந்தேனோ எனக்கு தெரியவில்லையே!. உங்க அன்புக்கும் பாசத்துக்கும் அக்கறைக்கும் முன்னால் நான் காட்டும் அன்பு ஒன்றுமே இல்லையேப்பா!

என் வாழ்க்கையில் எத்தனையோ பிறந்த நாள் வந்து போயிருக்கின்றது. இந்த வருடமோ நான் மறக்க முடியாத நினைவுகளை என்னுள் விதைத்து கொண்டிருக்கின்றது. இன்று காலை தொடக்கம் அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ஆரம்பித்த உடன் பிறவமல் உடன் பிறந்தவனைவிடவும் அன்பும் அக்கறையும் பொழிந்து உணர்வால் எனை நிரப்பும் தும்பி முஸம்மில், தொடக்கம் என் உயிர்ப்புக்குரிய சுரேஷ் அண்ணா வுடன் இதோ தம்பி என்றால் எப்படி இருக்கணும் என பாசத்தினை பொழியும் உங்கள் அன்பு எனக்குள் விருட்சமாய் தெரிகின்றது.

கையில் வெட்டுபட்டு தையல் இட்டிருந்த நேரம் தினம் வந்து அக்கா கை எப்படி இருக்கு என கேட்ட உங்கள் அன்பும், குறுகிய பொழுதில் சடுதியாய் மனசை தொட்ட உங்கள் அக்கறையும் நான் காட்டும் அன்பை விட மேலானதுப்பா! உடன் பிறவாமலே என் உடன் பிறப்பாய் ஆன உங்கள் அனைவரின் அன்புக்கும் என் வணக்கங்கள். நிதயா, மருமக்கள் அனைவருக்கும் என் நன்றியை சொல்லுங்க.ள்! .

நாம் நிச்சயம் சந்திப்போம் குமார். காலமும் நேரமும் கடவுளின் துணையும் சீக்கிரம் கிட்டிட வேண்டுவோம்.

அதற்கு முன் நாம் பேசணும். இத்தனைக்கும் நாம் இது வரை பேசியதில்லை குமார்.. பேசிடாமலே எழுத்து பரிமாற்றம் வைத்து இத்தனை அளப்பரியை வாழ்த்தும் பரிசும் தந்த உங்களுக்கு கோடி கோடி நன்றிகள்

ஸ்ரீராம். சொன்னது…

அவர்கள் பிறந்த நாளுக்கு எங்கள் வாழ்த்துகளும்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நிஷா அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

அசுரன் சொன்னது…

மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது இதை படிப்பதற்கு. சகோதரர் குமார், நிஷா அக்கா பற்றின மனசின் எழுத்துக்கள் மிகவும் அருமை.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்லதொரு சகோதரியைப் பற்றிய அழகிய பதிவு....அவருக்கு எங்களது வாழ்த்துகளும் !!

KILLERGEE Devakottai சொன்னது…

சிறந்த பதிவு எமது பிறந்தநாள் வாழ்த்துகளும் சேரட்டும் நண்பரே....

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பார்க்கிறேன் நண்பரே....

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...

அம்மாடியோவ்... ரொம்பப் பெரிய கருத்துப் பகிர்வு.

உங்களைப் போல் சொந்தங்கள்தான் கடைசி வரைக்கும் வேண்டும் அக்கா...

உங்களின் பிறந்தநாள் சந்தோஷங்களை எல்லாம் தவிடுபொடியாக்கிய நிகழ்வு ரொம்ப மன வேதனையை அளித்தது அக்கா...

உங்கள் குணம்.... எல்லோரும் நல்லா இருக்கணும் என்ற எண்ணம் இதெல்லாம் எல்லோருக்கும் அமைவதில்லை... உங்கள் நட்புக் கிடைக்க நாங்கள்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

கண்டிப்பாக சந்திப்போம்... அதற்கு முன் பேசுவோம் அக்கா....

தாங்கள் தற்போதைய மனநிலையில் இருந்து மீண்டு வாருங்கள்...

என்றும் உங்கள் தம்பியாய்.... எப்போதும் உங்கள் அன்பில் வாழ வேண்டும் ... வாழ்வின் இறுதிவரை...

நன்றி அக்கா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வாழ்த்துக்களையும் சொல்லியாச்சு அண்ணா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரா...
தங்கள் வாழ்த்துக்களையும் சொல்லியாச்சு...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
நிஷா அக்கா நமக்கெல்லம் கிடைத்த பொக்கிஷம்... ஒவ்வொருவரின் எழுத்தின் தன்மை அறிந்து நீங்க இதை எழுதலாமே... இப்படி எழுதலாமே என்று சொல்லும் திறன் கொண்டவர்கள்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார் / கீதா மேடம்...
தங்கள் வாழ்த்துக்களையும் சொல்லியாச்சு...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வாழ்த்துக்களையும் சொல்லியாச்சு...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

Unknown சொன்னது…

உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்!

Thenammai Lakshmanan சொன்னது…

அருமையான பகிர்வு தம்பி. வாழ்க வளமுடன் நிஷா :)

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வாழ்த்தையும் அக்காவிடம் சொல்லிவிடுகிறேன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வாழ்த்தையும் சொல்லிவிடுகிறேன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

மனித உறவுகளும் நட்பும் எவ்வளவு முக்கியம் என்பதை உங்கள் வெள்ளந்தி மனிதர்கள் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.நட்பும் பாசமும் கலந்த வார்த்தைகள் எங்களையும் நெகிழ வைக்கின்றன. நிஷா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

நிஷா சொன்னது…

வாழ்த்திமைக்கு நன்றி ஸ்ரீராம். சார்! தங்கள் வாழ்த்தில் மகிழ்ந்தேன்!

நிஷா சொன்னது…

மிகவும் மகிழ்ச்சி தளிர் சுரேஷ் அவர்களே! தங்கள் வாழ்த்தில் மனம்மகிழ்ந்தேன்!

நிஷா சொன்னது…

வாழ்த்தியமைக்கு நன்றி அசுரன் சார்!

நிஷா சொன்னது…

அன்புக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிங்க!

நிஷா சொன்னது…

குமாரின் ஊரிலிருந்து வந்து பதிவு போடும் தேவகோட்டை கில்லர்ஜீ சாருக்கு நன்றி! உங்களை பற்றி குமார் பதிவுகளில் படித்திருக்கின்றேன். உங்கள் வாழ்த்துக்கும் நன்றி!

நிஷா சொன்னது…

தேனம்மை லக்ஸ்மணன் எனும் அழகான பெயரில் வாழ்த்திடும் நல் உள்ளத்துக்கு நன்றி! வாழ்க வழமுடன்!

நிஷா சொன்னது…

மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் முரளிதரன் சார்! உங்களை போன்றவர்கள் வாழ்த்தில் மனம் நெகிழ்ந்தேன்! வாழ்த்தினை பெற காரணமாயிருந்த அன்பு குமாருக்கும் நன்றி!

நிஷா சொன்னது…

ஒரு பிறப்பில் பல இறப்பும் நிச்சயிக்கபடும் அல்லவா/ கவலைதான் குமார். இனி இல்லை எனும் போது மனம் கனக்கின்றது. உங்கள் அனைவரின் அன்பும், ஆறுதலும் பக்கபலமும் துணையாய் இருந்து அனைத்தினையும் தாங்கிடும் திடத்தினையும் தருகின்றதுப்பா1 அன்புக்கும் பதிவுக்கும் கருத்துக்கும் நன்றிப்பா1

நிஷா சொன்னது…

புலவர் இராமானுஜம் ஐயா அவர்களின் வாழ்த்துக்கும் நன்றி.

நிஷா சொன்னது…

வலைப்பூ தொடங்காத காலத்தைய பதிவல்லவா இது.