மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 2 அக்டோபர், 2015கவிதை : பண் பாடும் நம் பண்பாடு...

வகை-(4) புதுக்கவிதைப் போட்டி

முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த 

தலைப்பிற்கான கவிதை

------------------------------------------------

ண்பாடு... அது படும் பாடு...

பள்ளி செல்லும் வயதினிலே
மது வாங்கிக் குடிக்கின்றோம்...

படிக்க வரும் மாணவனோடு
கலவிப் படம் பயில்கின்றோம்...

தனியே காணும் பெண்களை
துகிலுரித்து மகிழ்கின்றோம்...

விளைந்த வயலைக் கூறுபோட்டு
விற்று சொத்துச் சேர்க்கின்றோம்...

சாதி மதம் போற்றிக் கொண்டு
சண்டையிட்டு மகிழ்கின்றோம்...

கவர்ச்சி உலகின் கனவோடு
கண்ட ஆடை அணிகின்றோம்...

ரத்தம் பார்க்கும் வெறியோடு
கத்தி எடுத்து அலைகின்றோம்...

நாலு சுவற்றுக்குள் செய்வதை
மேடையேற்றி மகிழ்கின்றோம்...

உறவுகளின் உன்னதமிழந்து
கணினியிலே கிடக்கின்றோம்...

நாயை விடக் கேவலமாய்
நடுத்தெருவில் நடக்கிறோம்...

நாமெல்லாம் பண்பாட்டை
பாடாய்படுத்தி மகிழ்கின்றோம்...

பண்பட்டு வாழ நினைத்தால்
பண் பாடும் நம் பண்பாடு...


**************

"இப்படைப்பு  எனது சொந்தப் படைப்பு, 'வலைப்பதிவர் திருவிழா-2015' மற்றும் 'தமிழ்இணையக் கல்விக்கழகம்' நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது,  இதற்கென எழுதப்பட்ட கவிதை இது, இதற்கு முன் வெளியான கவிதை அல்ல... முடிவு வெளிவரும் வரை வேறு எங்கும் பதியவோ இதழ்களுக்கு அனுப்பவோ மாட்டேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்..."

**************பதிவர் விழாவுக்கு இன்னும் 8 நாட்களே இருக்கிறது... புதுக்கோட்டை குலுங்கட்டும்... வலைப்பதிவர் புகழ் உலகெங்கும் பரவட்டும்... தமிழகத்தில் இருக்கும் பதிவர்களெல்லாம் தவறாது கலந்து கொள்ளுங்கள்... எழுத்தின் ஆற்றல் எட்டுத் திக்கும் தமிழைக் கொண்டு செல்லட்டும்...-'பரிவை' சே.குமார்.

22 கருத்துகள்:

 1. வணக்கம் நண்பரே! இன்றைய நிலையை விவரிக்கும் சாட்டையடி வரிகள்! வெற்றி பெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 2. அருமை நண்பரே மிகவும் சிந்தனைக்குறிய வரிகள் வெற்றி பெற எமது வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 3. நன்றி...

  நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

  இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
  http://dindiguldhanabalan.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   இணைப்பிற்கு நன்றி அண்ணா.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 4. இன்றைய சமூகத்தில் பண்பாடு படும் பாட்டினை தெளிவாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். போட்டியில் வெற்றி பெற இனிய வாழ்த்துகள் சகோதரரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோதரி...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 5. இன்றைய சமூக அவலங்களின் நேரடி ஒளிபரப்பு!..

  வெற்றி பெறுதற்கு நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 6. பண்பாட்டின் பாட்டை சொல்லும் வரிகள் தோலுரித்து காட்டியுள்ளது வெற்றிக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 7. யதார்த்தத்தின் வெளிப்பாடு அருமையாக கவிதையில். வெற்றி பெற வாழ்த்துக்கள். பௌத்த நல்லிணக்கச் சிந்தனைக்களை காண http://ponnibuddha.blogspot.com/2015/10/blog-post.html அன்போடு அழைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 8. சிறப்புங்க சகோ! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோதரி...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 9. பதில்கள்
  1. வாங்க சகோதரா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 10. நன்று. வெற்றி பெற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 11. பண்பாடு படும் பாட்டை பண் இசைத்து பாடி இருக்கின்றீர்கள் குமார். நல்ல சாட்டை அடி வரிகள்! போட்டியில் ஜெயிக்க வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 12. மிகச்சிறப்பு வெற்றி பெற வாத்துக்கசர்ஸ்வதிராசேந்திரன்

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...