மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 26 அக்டோபர், 2015

குடந்தையூராரின் 'அகம் புறம்' அசத்தலா?

ஆர்.வி.சரவணன் குடந்தை
குடந்தையூர் என்னும் தளத்தில் எழுதிவரும் அண்ணன் சரவணன் அவர்களை வலையுலகம் நன்கு அறியும். இவரின் எழுத்தில் 'இளமை எழுதும் கவிதை நீ' என்ற நாவல் வெளிவந்திருக்கிறது. அதில் கல்லூரிக்குள் நடக்கும் கதையை திரைக்கதை வடிவில் எழுதியிருப்பார். அதன் பின்னர் 'சில நொடி சிநேகம்' என்ற தனது முதல் குறும்படத்தை சென்ற ஆண்டு மதுரை வலைப்பதிவர் மாநாட்டில் வெளியிட்டார். அந்தப்படம் நல்லதொரு கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தாலும் நடிகர்களின் செயற்கைத்தனமான நடிப்பாலும் வசன உச்சரிப்பாலும் பெரிதாக பேசப்படவில்லை. மேலும் அந்தப் படத்தை நண்பர்களிடம் கொண்டு சென்ற அளவுக்கு மற்றவர்களிடம் கொண்டு செல்லவில்லை என்பதால் அது வெற்றி என்று சொல்லமுடியாத நிலைதான். இருப்பினும் தனது முயற்சியில் இருந்து பின்வாங்காது இரண்டாவது படத்தை மிகச் சிறப்பாக எடுத்திருக்கிறார். வாருங்கள் அகம் புறம் எப்படியிருக்குன்னு மனம் விட்டுப் பேசலாம்.

அகம் புறம் - பூட்டப்பட்ட அறைக்குள் என்ன இருக்கிறது, அதேபோல் கலர் பேப்பர் சுற்றப்பட்ட பரிசுப் பெட்டிக்குள் என்ன இருக்கு என்பதை மையமாக வைத்து அகமும் புறமுமாக கதை நகர்கிறது. பூட்டிய அறைக்குள் இருந்து கேட்கும் சப்தம், சிரிப்பொலிகள் என மிரட்டலாய் பயணிக்கிறது படம். 

துளசி சார், கார்த்திக் சரவணன், பாலகணேஷ் அண்ணா, அரவிந்த், ஆரூர் மூனா, ஜெகன் என  ஒரு பட்டாளமே பூட்டிய அறைக்குள் இருந்து சப்தம் வருவதற்கு காரணம் என்ன என்று கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். இது ஒரு பக்கம் நகர, கணிப்பொறி முன் அமர்ந்திருக்கும் அரசனிடம் ஒரு சிறுவன் பரிசுப் பெட்டியைக் கொடுத்து பிரிக்கச் சொல்ல அதை மெதுவாக பிரித்துக் கொண்டிருக்கிறார். முடிவில் அறைக்குள் நிகழ்ந்தது என்ன...? பரிசுப் பெட்டியின் கதை என்ன என்பதை நகைச்சுவையுடன் திரில்லையும் கொஞ்சம் கலந்து பரிமாறியிருக்கிறார் இயக்குநர்.

முதல் படத்தைப் போலவே இந்தப் படத்துக்கும் அவர் எடுத்துக் கொண்ட கதையும் அவரின் வசனங்களும் அருமை...  ஒரு வீட்டின் மாடிப்படியும் பூட்டிய அறையும்தான் கதையின் களம்... அங்கு நின்றே அனைவரும் நடித்து விடுகிறார்கள்... கேமரா வேறு எங்கும் நகரவில்லை. படியில் ஏறி இறங்கிக் கொண்டே இருக்கிறது. முந்தைய படத்தோடு ஒப்பிடுகையில் சரவணன் அண்ணனிடம் இந்தப் படத்தில் நல்ல முன்னேற்றம் இயக்குநாய்...

'கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வர்றவன்டா' என்றபடி வரும் மொட்டை முருகேசன், நம்ம நண்பர் ஆரூர்.மூனா நடிப்பிலும் வசனத்திலும் கலக்கியிருக்கிறார். அலட்டலில்லாமல் குறிப்பாக கேமரா பயமின்றி நடித்திருக்கிறார். அவருக்கு கைத்தடியாக சரவணன் அண்ணன் அவர்களின் தம்பி அரவிந்த், குறைவாய் பேசினாலும் நிறைவாய்...

நண்பர் அரசனை ஒரு இடத்தில் அமர்ந்து பரிசுப்பெட்டியை பிரிக்க வைத்திருக்கிறார்கள். அவரும் அதைச் செவ்வனே செய்கிறார். இடையிடையே நக்கலான வசனங்கள். ஆரூர்.மூனாவைப் பற்றிச் சொல்லும் போது 'கட்சியோட போர்வாள்' என்று அரவிந்த் சொல்ல, 'ரொம்பத் துருப்பிடிச்சிருக்கே' என்று தன் கையில் இருக்கும் கத்தியைப் பார்த்துச் சொல்வார். இப்படிப் பேசிக்கொண்டே இருக்கிறார். வார்த்தைகளைக் கடிப்பது போல் பேசுவதை இதிலும் தொடர்கிறார். அதுதான் ஸ்டைலா அரசன்?

துளசிதரன் சார்... வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டுப் புலம்பும் சராசரி சென்னைவாசியாய்... மௌனவிரதம் இருக்கும் மனைவி சைகையால் நாளைக்கு இருக்கு உங்களுக்கு என்று சொன்னதும் இன்னைக்கி நீ இருந்த மாதிரி நாளைக்கு நான் இருந்துட்டுப் போறேன் என்று சொல்லி ரசிக்க வைக்கிறார்.

கார்த்திக் சரவணன்... சாவி தேடி மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என படிகளில் ஓடுகிறார்... பேப்பர் போடும் பையனாக வருவது ஆவியின் சகோதரர் என்று நினைக்கிறேன்... துறுதுறுவென பேசுகிறார். 

பாலகணேஷ் அண்ணன் போலீஸ் என்பதால் முறுக்கிய மீசையுடன் வருகிறார்... நம்ம மீசை முருகேசன் ஐயாவை நினைவூட்டுகிறார்... ஆரம்பத்தில் துளசி சாரிடம் வாங்க போங்க போட்டு, வா என்றழைத்து என்னய்யாவுக்கு வருகிறார்... ஒருவேளை போலீஸ் என்றால் இப்படித்தான் என்பதால் வசனத்தில் சரவண அண்ணன் இப்படி எழுதியிருப்பாரோ?

சரவண அண்ணனின் மகன் ஹர்ஷா, பல்ராம் நாயுடு கமல் போல் பேசுவது ரசிக்க வைத்தது.... நடிப்பில் பெரியவர்களைவிட சிறியவர்கள் அதிகம் ஸ்கோர் பண்ணி விடுகிறார்கள். அதிலும் நான் கொக்கிதான் போட்டேன்... எல்லாத்தையும் எம்மேல சொல்லாதீங்க என்று சொல்லும் சிறுவனின் கேமரா பயமில்லாத நடிப்புக்கு சபாஷ்.

ஒரு வார்த்தை கூட பேசாமல் கை. முக பாவனையால் பேசும் துளசி சாரின் மனைவியாக வரும் திருமதி.உஷா அவர்கள் இன்னும் முகபாவனை நன்றாக காட்டியிருக்கலாமே என்று தோன்றினாலும் தனக்கான கதாபாத்திரத்தில் நிறைவாய் செய்திருக்கிறார்.

இன்னும் இதில் நடித்த மற்றவர்களும் அவரவர் பங்கை சரியாய் செய்திருக்கிறார்கள்.

ஆங்... பாருங்க முக்கியமான ஆளை விட்டாச்சு... நம்ம கோவை ஆவி... பாதித் தூக்கத்தில் எழுப்பப்பட்டவன் எப்படி பேசுவனோ அப்படிப் பேசி அருமையாய் நடித்திருக்கிறார். ஆரூர் மூனா, துளசி சார் போல ஆவியும் கலக்கலாய் நடித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் வரும் 'மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி' பாடல் நல்ல தேர்வு... அதேபோல் செல்போன் ரிங்டோனாக வரும் ரஜினிப் பட இசை இயக்குநர் தீவிர ரஜினி ரசிகர் என்பதை அறியாதவர்களுக்கு அறிவிக்கிறது.

என்ன நிறையாய் போறீங்க... உங்ககிட்ட நான் கேட்டது நிறைகளை மட்டுமல்ல... குறைகளையும்தான் என்று சரவணன் அண்ணன் கோபமாகப் பார்க்கலாம்... ஒரு மனிதனின் முயற்சியை நல்லாயிருக்கு என்று பாராட்டுவதே அழகு... அதில் குறை சொல்வது அழகல்ல என்று எங்கள் இருவருக்குமான அரட்டையில் பேசினோம். அப்போதே எனக்கு உங்கள் பார்வையில் குறைகளும் வேண்டும்... எதிர்பார்ப்பேன் என்று  கண்டிப்புடன் சொல்லிவிட்டார். அதனால் இனி குறைகள்... இந்தக் குறைகள் அவரின் அடுத்த ஆக்கத்தில் நிறைகளாகும் என்ற நம்பிக்கையில்...

ஆரூர்.மூனா, ஆவி, துளசி சார், சிறுவர்கள் தவிர மற்றவர்களின் நடிப்பில் ஒரு செயற்கைத்தனம் இருக்கிறது. இந்தக் கருத்தை அவரின் சில நொடி சிநேகம் பார்த்த போதும் அவரிடம் சொல்லியிருந்தேன். இந்தப் படம் பண்ணும் முன்னும் நாங்கள் இருவரும் பேசினோம். இருந்தும் அந்த செயற்கைத்தனம் இதிலும் ஒட்டிக் கொண்டுவிட்டது.

வசன உச்சரிப்பு எழுதிக் கொடுத்ததை வாசிப்பது போல இருக்கிறது.... எழுதும் எழுத்துக்கும் பேச்சுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நாம் யாரும் எழுதியது போல் பேசுவதில்லை... பேச்சு வழக்குத்தான் ஜெயிக்கும். 'என்ன இருக்கு..?' என்று கேட்பதை 'இதுல என்னடா இருக்கு' என்று இழுத்தாற்போல் சாதாரணமாகக் கேட்டால் இன்னும் நல்லாயிருக்கும் இல்லையா..?.அந்த பேப்பர் போடுற பையன், ஆருர் மூனா என சிலர் பேச்சு வழக்கில் பேசுவது போல் எல்லோரும் பேசியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

ஆரம்பத்தில் அறையைக் காட்டும் போது ஆடாத பூட்டு, அடுத்த முறை காட்டும் போது ஆடுவது கொஞ்சம் இடிக்கிறது. டீசரில் அறையைப் பார்க்கும் போது இருந்த 'பக்' இதில் 'பக்', 'பக்' என்று இருந்திருக்க வேண்டாமா..?

ஒரு பார்சலை படம் ஆரம்பிக்கும் போது பெற்று முடியும்வரை பிரிப்பது என்பது ஏற்புடையாதாக இல்லை. அதற்குப் பதிலாக வேறு ஏதாவது முயற்சித் திருக்கலாம்...

இறுதிக் காட்சியில் கோவை ஆவி சொல்லும் காரணம் சப்பென்று இருக்கிறது. 

நிறைய கதாபாத்திரங்கள்... கொஞ்சம் கொஞ்சம் நடித்துச் செல்வது அவ்வளவு சிறப்பாக இல்லை என்றே தோன்றுகிறது. குறைவான கதாபாத்திரங்களை வைத்து இன்னும் சிறப்பாக சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது.

சரி... அண்ணன் கேட்டதற்காக மனசில்பட்டதைச் சொல்லியாச்சு....

இனி நாம பேசலாம்... சில நொடி சிநேகம் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்பதைவிட சரியான முறையில் அதை பார்வையாளர்களிடம் கொண்டு செல்லவில்லை என்பதை சரவணன் அண்ணனும் நானும் பலமுறை பேசியிருக்கிறோம். அதனால் இந்தப் படத்தை எல்லோரிடமும் பரவலாய்க் கொண்டு செல்லவேண்டும் என்பதே அண்ணனிடம் நான் கேட்டுக் கொண்டது. சில விஷயங்களைத் தவிர்த்து விட்டு பார்த்தோமேயானால் இயக்குநராய் சரவணன் அண்ணன் சிறப்பாய் செய்திருப்பதோடு வசனங்களில் ஆட்சி செய்கிறார். அதில் என்னைக் கவர்ந்த சில வசனங்கள்...

"தெரியலைன்னு சொல்லக்கூடாது திங்க் பண்ணனும்..."

"எதுக்கு திங்க் பண்ணனும்... ? பிரிச்சிப் பாத்தா தெரியப்போகுது..."

***

"என்ன கிண்டலா கட்சியோட போர்வாள் தெரியும்ல..."

"ரொம்பத் துருப் பிடிச்ச மாதிரி இருக்கே..."

***

"உன் வணக்கத்தைப் போயி குப்பையில போடு"

"இதுக்கு நீ குப்பைத் தொட்டிக்கே வணக்கம் வச்சிருக்கலாம்.."

***

"கதவை நீதானே பூட்டினே..."

"உண்மையைச் சொல்லவா... பொய் சொல்லவா...?"

"நடந்ததைச் சொல்லு..."

"நடக்கப் போறதைப் பாரு...."

***

"நீதான் கதவைப் பூட்டுனியாடா..."

"இல்லை இல்லை... எல்லாப் பழியையும் என் மேல போடாதீங்க... நான் ஒன்லி தாப்பாள் மட்டுந்தான் போட்டேன்... தப்பிச்சேன்டா..."

***

இப்படி இன்னும் சொல்லலாம்... வசனகர்த்தாவாக இயக்குநராக சரவணன் அண்ணனிடம் நல்ல முன்னேற்றம்... படத்துக்கு இசை நல்லாயிருக்கு... பெரும்பாலும் முகநூலில் வரும் கருத்துக்களில் கூட நடிப்பைப் பற்றித்தான் அதிகம் இருக்கிறது. பரவாயில்லை... நண்பர்கள் அனைவரும் கேமராவுக்கு புதியவர்கள்... பயம் இருக்கத்தான் செய்யும்... பாலகணேஷ் அண்ணா முறுக்கு மீசைக்கு ஏற்றவாறு புகுந்து விளையாடியிருக்கலாமே..? ஆரூர் மூனா அதிரடியாய்... ஆவி அடக்கி வாசித்தாலும் அமர்க்களமாய்... துளசி சார் கவலைப்பட்டாலும் கலக்கலாய்... சிக்ஸரடித்திருக்கும் போது முறுக்கு மீசை போலீஸ் அந்த சிக்ஸரை ஹெலிகாப்டர் ஷாட்டாக மாற்றி கிரவுண்டுக்கு வெளியே அனுப்பி நம்ம தலயின்னு கைதட்ட வச்சிருக்க வேண்டாமா? 

முகத்தில் நடிப்பை கொண்டு வருவது என்பது மிகப்பெரிய நடிகர்களுக்கே சவால்... அப்படியிருக்க நம் நண்பர்கள் வளர்ந்து வருபவர்கள்தானே... விரைவில் மெருகேறுவார்கள்... வசனங்களை வாசிப்பதாய் இல்லாமல் சாதாரணமாக பேசியிருந்தால் முகபாவனைகளை யாரும் அதிகம் பார்க்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். 

தலைப்பில் அகம் புறம் அசத்தலான்னு வச்சிட்டு ஒண்ணுமே சொல்லலைன்னு பாக்குறீங்களா...? இருங்க... இது சில நொடி சிநேகம் கதையைவிட சாதாரண நகைச்சுவைக் கதைதான் என்றாலும் திரில்லர் மிக்ஸ்... ரசிக்க வைக்கும் வசனங்கள்... முடிவை அறியும் வரை எழும் ஆவல்... என எல்லாமே அருமையாய்.... படத்தின் குறைகளை மனதில் கொள்ளாது பாருங்கள்... கண்டிப்பாக உங்களுக்குப் படம் பிடிக்கும்... அசத்தலான ஒரு எழுத்தாளரின் ஆளுமையைக் காண்பீர்கள்... ரசிப்பீர்கள்...



சரிங்க... மறக்காம உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்... அவரின் பாதையை இன்னும் சிறப்பாக அமைத்துக்கொள்ள ஒவ்வொருவரின் பார்வையும் முக்கியம்...

அடுத்தடுத்த குறும்படங்களின் மூலம் குறும்பட இயக்குநராய் ஜொலிக்கும் குடந்தையூர் ஆர்.வி. சரவணன் அண்ணன் தனது கனவான வெள்ளித் திரையிலும் விரைவில் இயக்குநாய் ஜொலிக்க வாழ்த்துவோம்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

30 எண்ணங்கள்:

r.v.saravanan சொன்னது…

நன்றி குமார் நல்லதொரு விமர்சனம் குறைகளை நிறைகளாக்க முயற்சிக்கிறேன்

ஸ்ரீராம். சொன்னது…

நான் இன்னும் பார்க்கவில்லை. பயணத்தில் இருப்பதால் வந்துதான் பார்க்க வேண்டும். கதையின் முக்கிய கட்டங்களைச் சொல்லாமல் இருந்திருக்கலாம் நீங்கள் என்று பார்க்காத ரசிகனாய் என் கருத்து!

அன்பே சிவம் சொன்னது…

தங்கள் விமர்சனம் நன்று

நமக்கு தெரிந்தவர்கள் !

மனசு வருந்துவார்களே என்று நீங்களோ அல்லது மற்றவர்களோ நினைத்து சொல்லத் தயங்கினால்தான் அவர்களுக்கு நட்டம். இன்னும் 20 ஆண்டு கழித்துக் கூட தவறுகளை தொடர்வார்கள். மாறாக தாங்கள் சுட்டிய தவறுகளை சரி செய்து அடுத்த படைப்பில் சிறப்பான முயற்சி எடுத்து வெற்றி பெறுவார்கள்..

வாழ்த்துகள்

தங்களுக்கும் (அகம்)

(புறம்) படைப்பாளிகளிகளுக்கும்

அன்பே சிவம் சொன்னது…

தங்கள் விமர்சனம் நன்று

நமக்கு தெரிந்தவர்கள் !

மனசு வருந்துவார்களே என்று நீங்களோ அல்லது மற்றவர்களோ நினைத்து சொல்லத் தயங்கினால்தான் அவர்களுக்கு நட்டம். இன்னும் 20 ஆண்டு கழித்துக் கூட தவறுகளை தொடர்வார்கள். மாறாக தாங்கள் சுட்டிய தவறுகளை சரி செய்து அடுத்த படைப்பில் சிறப்பான முயற்சி எடுத்து வெற்றி பெறுவார்கள்..

வாழ்த்துகள்

தங்களுக்கும் (அகம்)

(புறம்) படைப்பாளிகளுக்கும்....

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துவோம் நண்பரே
தம+1

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

ரசித்த வசனங்களுடன் குறும்பட விமர்சனம் ரொம்பவே அருமை...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிக்க நன்றி குமார் தங்களின் விரிவான, நுணுக்கமான, வெளிப்படையான, அழகான விமரிசனத்திற்கு! நிச்சயமாக எங்கள் குழு மெருகேற்றிக் கொள்ளும் அடுத்த படத்தில் அதற்கு உதவும் தங்கள் கருத்துகள். மிக்க மிக்க நன்றி குமார்.

இயக்குநர் சரவணன் சாருக்கும், குழுவிற்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்!

மீண்டும் நன்றியுடன்....

aavee சொன்னது…

Thanks kumar

அபயாஅருணா சொன்னது…

அனைவருக்கும் வாழ்த்துகள்... முதல் முயற்சி . நன்றாகவே உள்ளது . தொடரவும்

arasan சொன்னது…

மிகுந்த நன்றிகள் அண்ணே /// அடுத்தடுத்த முயற்சிகளில் கவனத்தில் கொள்கிறோம் ....

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அருமையான விமர்சனம். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்தி எழுதியிருந்த பாணி பாராட்டத்தக்க வகையில் உள்ளது. அகம் புறம் குழுவினருக்கும் நுணுக்கமாக அணுகிய உங்களுக்கும் பாராட்டுக்கள்.

சாரதா சமையல் சொன்னது…

நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

KILLERGEE Devakottai சொன்னது…

நண்பருக்கு படத்தை நாங்கள் பார்க்க வேண்டாமா ? இப்படி அணுஅணுவாக எல்லாவற்றையும் சொல்லி விட்டால் என்ன அர்த்தம் இருப்பினும் விரிவான விமர்சனம் நன்று படம் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்
தமிழ் மணம் 7

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

குறும்படத்தின் அலசல் அருமை.

திகிலாக ஆரம்பம்.
காமெடியான முடிவு!
படம் அருமை!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
இறுதிக் காட்சிகள் குறித்த கருத்தை நேற்று காலையே எடுத்துவிட்டேன் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
ஆம் சரவணன் அண்ணன் கூட குறைகளைத்தான் சொல்லச் சொன்னார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
தவறுகள் அடுத்த படைப்புக்களில் சரியாகும்....

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஆவி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
முதல் வருகைக்கு முதலில் நன்றி.
அண்ணனின் இரண்டாவது முயற்சி இது... ரொம்ப நல்லாவே இருக்கு ஸ்கிரிப்ட்... இன்னும் நன்றாகச் செய்வார்கள் அடுத்தடுத்த பதிப்புக்களில்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அரசன்...
நக்கலாகப் பேசினாலும்இன்னும் நன்றாகச் செய்திருக்கலாமோ என்று தோன்றிதால் கேட்டதுதான் அப்படிப் பேசுவதுதான் ஸ்டலா? என்பது... மற்றபடி நடிப்புக்கு வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
இது அண்ணாவின் ஆணையால் எழுதியது...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
இது நகைச்சுவை திரில்லர்தான்... வசனங்கள் கூடுதல் பலம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நானும் பார்த்து ரசித்தேன்! சிறப்பான விமர்சனம்! நன்றி!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு விமர்சனம். பாராட்டுகள்.

குழுவினருக்கும் பாராட்டுகள்.