மலர்களில் ஆடும் இளமையும் அடிப்பெண்ணேயும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள்... எனது அலுவலக வேலை நேரத்தில் பெரும்பாலும் என்னை ஆக்கிரமித்திருப்பவை இது போன்ற பாடல்களே.... எனது அலுவலக கணிப்பொறியில் 500க்கும் மேற்பட்ட காலத்தை வென்ற கானங்களை சேமித்து வைத்திருக்கிறேன்...
சோலைக் குயிலேயும் ஒரு கிளி உருகுதேயும் நம்மையும் பாடல் வரிகளுடன் கட்டிப் போட்டு ராகம் இசைக்க வைக்கும் பாடல்கள் என்பதை மறுக்க முடியுமா?
இந்த வரிசையில் குயிலே கவிக்குயிலே, வெட்டி வேரு வாசம், வசந்த கால கோலங்கள், ஒரே நாள் உனை நான் என எல்லாமே என்னைக் கவர்ந்த பாடல்கள்...
வைகை நதி யோரம் பாடலை எத்தனை முறை கேட்டாலும் எனக்கு அலுப்பதே இல்லை. அந்தளவுக்கு மிகவும் பிடித்த பாடல் அது. தினமும் ஆடியோவில் கேட்கும் பாடல்களை உங்களுடன் வீடியோவில் பார்க்கும் விதமாக பகிர்ந்திருக்கிறேன்.
பாடல்களைக் கேளுங்கள்... உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்....
பாடல் : மலர்களில் ஆடும் இளமை...
படம் : கல்யாணராமன்
பாடல் : அடிப் பெண்ணே...
படம் : முள்ளும் மலரும்
பாடல் : சோலைக் குயிலே...
படம் : பொண்ணு ஊருக்குப் புதுசு
பாடல் : ஒரு கிளி உருகுது...
படம் : ஆனந்த கும்மி
பாடல் : குயிலே கவிக்குயிலே...
படம் : கவிக்குயில்
பாடல் : வசந்த காலக் கோலங்கள்
படம் : தியாகம்
பாடல் : வெட்டி வேரு வாசம்...
படம் : முதல் மரியாதை
பாடல் : ஒரே நாள் உனை நான்...
படம் : இளாமை ஊஞ்சலாடுகிறது
பாடல் : வைகை நதியோரம்...
படம் : ரிக் ஷா மாமா
-மீண்டும் ரசனையான பாடல்களுடன் சந்திப்போம்...
-'பரிவை' சே.குமார்.
5 எண்ணங்கள்:
அருமையான பாடல்களின் தொகுப்பு குமார்.
எனது கணினியில் Disk Full....!
மனதை தாலாட்டும் பாடல்கள்...
அனைத்துமே அருமையான பாடல்கள்..... நானும் ரசிக்கும் பாடல்கள்.
ஒவ்வொன்றாய் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நன்றி குமார்.
பாடல் தொகுப்பு/தெரிவு அருமை.இளையராஜா பாடல்கள் எப்போதும் இனிமை தான்.பகிர்வுக்கு நன்றி!
அட்டகாசமான எவர்க்ரீன் பாடல்களின் தொகுப்பு!! அருமை சகோ!!
கருத்துரையிடுக