மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 20 மார்ச், 2014

மனசு பேசுகிறது : சிட்டுக்குருவி


ன்றைக்கு சிட்டுக்குருவிகள் தினமாம். நம்ம ஊரில் சிட்டுக்குருவிகள் என்பது அரிதாகிவிட்டது. அதற்கு செல்போன் டவர்களே காரணம் என்று சொல்கிறார்கள். ஆனால் இங்கு சிட்டுக்குருவிகள் அதிகம் இருக்கின்றன. எங்கள் அறைச் சன்னல் பக்கமாக புறாக்களும் சிட்டுக்குருவிகளும் தினமும் வந்தமர்கின்றன.

எங்க ஊரில் சிட்டுக்குருவிகள் அதிகம் இருக்கும். ஆனால் இப்போது அரிதாகிவிட்டது. எங்கள் வீட்டுக்கு முன்னர் இருந்த நாச்சியம்மத்தா கோவிலின் இடிந்த சுவரில் இருக்கும் ஓட்டைக்குள் கூடு கட்டி குடி இருந்தது. எப்போதும் தலையை வெளியே நீட்டி நீட்டிப் பார்க்கும். திடீரென விருட்டென்று பறக்கும். எப்போதும் அந்த இடத்தில் பத்து இருபது சிட்டுக்குருவிகள் இருந்து கொண்டே இருக்கும்.



எங்கள் வீட்டிற்குள்ளும் விருட்... விருட்டென்று பறந்து வரும். நாங்கள் சாப்பிடும் போது எங்கள் அருகில் வந்து அமர்ந்து மெதுவாக குதித்துக் குதித்து அருகாமையில் வந்து சப்தம் இடும். சாப்பிடும் சோற்றை கொஞ்சம் அள்ளி வீசினால் குதித்துப் பறந்து மீண்டும் அருகே அமர்ந்து சோற்றைக் கொறிக்க ஆரம்பித்துவிடும். ஒரு கூட்டமாக அமர்ந்து சாப்பிடுவது பார்க்க அழகாக இருக்கும்.



தேன் சிட்டு, பூஞ்சிட்டு என்ற வகைகளும் இதில் உண்டு. சின்னச் சின்னதாய் அழகாய் இருக்கும் சிட்டுக் குருவிகள் மழைக்காலங்களில் ஈசல் பிடித்துச் சாப்பிடுவதற்காக எங்கெல்லாம் ஈசப்புற்று தோன்றுகிறதோ அங்கெல்லாம் பறந்து பறந்து அமரும். நடந்து இலக்கை அடைவது கிடையாது. சாய்வாக அமர்ந்தபடி குதித்துக் குதித்துத்தான் இலக்கை அடையும். அப்படி குதிப்பதும் அது கொடுக்கும் சப்தமும் மிக அழகாக இருக்கும்.



சிட்டுக்குருவிகள் அரிதாகிவிட்டாலும் இன்னும் ஒரு சில இடங்களில் பார்க்கும் போது எங்கள் வீட்டில் எங்களுடன் சிட்டுக்குருவிகளும் சாப்பிட நினைவுகள் மன்சுக்குள் சந்தோஷத்தை மீட்டிப் பார்க்கச் செய்கின்றன.


வீடியோ தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

11 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

சிட்டுக் குருவியைப் பற்றிய இனிய நினைவுகள் அருமை!..

Unknown சொன்னது…

மனிதனின் பேராசையால் அருகிவிட்ட சிட்டுக் குருவியை சிறியவயதில் தொட்டு ரசித்ததை மறக்க முடியவில்லை !
த ம +1

Unknown சொன்னது…

உண்மை தான்!சிட்டுக் குருவிகள் அருகி வருகின்றன.கிராமங்களில்/ஊரில் தான் மரங்கள் குறைந்து குருவிகள் அருகி விட்டது.இப்போ,காட்டைக் கூட விட்டு வைக்கிறார்கள் இல்லை இந்த மானுடப் பதர்கள்!

ஸ்ரீராம். சொன்னது…

சென்னையில் கூட சிட்டுக் குருவிகள் மறுபடி ஆங்காங்கே கண்ணில் படுவதாக ஒரு ஆர்டிக்கில் சமீபத்தில் செய்தித் தாளில் படித்த நினைவு.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அட... அனைத்தும் இனிமையான பாடல்கள்...

இனிமேல் கேட்க மட்டும் தான் முடியும் போல...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

சிட்டுக்குருவி அருமை
நினைவுகள் அருமை

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்ல பகிர்வு.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இன்றைய தினத்திற்கேற்ற பதிவு.

பாடல்களை இனிமேல் தான் கேட்கவேண்டும்....

த.ம. +1

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்...சென்று பார்வையிடஇதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/04/blog-post_15.html?showComment=1397524988384&m=1#c6269993936082955026
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

வலைச்சரம் மூலமாக தங்களது பதிவினைக் கண்டேன். வாழ்த்துக்கள்.

கே. பி. ஜனா... சொன்னது…

வலைச் சரத்’தில் தங்கள் பதிவு பற்றிப் படித்தேன். மனசு பேசுகிறது - சிட்டுக் குருவி பதிவு அருமை!
kbjana.blogspot.com