மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 4 மார்ச், 2014

மனசின் பக்கம் : ஆடாதடா ஆடாதடா மனிதா...

வெட்டி பிளாக்கர்ஸ் நடத்திய சிறுகதைப் போட்டியில் எனது சிறுகதை முதல் பரிசு பெற்றது குறித்து மிகுந்த மகிழ்ச்சி. இதுவரைக்கும் நிறைய போட்டிகளுக்கு அனுப்பியும் வெற்றி என்ற இலக்கை அடைய முடியவில்லை. இது முதல் முறை... வெற்றிக்கனியை எட்டிப் பறித்தது. நானும் வெட்டிபிளாக்கர்ஸ் போட்டியில் கலந்து கொண்ட போட்டிக் கதைகளில் பெரும்பாலானவற்றைப் படித்தேன். மிகச் சிறந்த கதைகளைப் படிக்கும் நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த வெட்டி பிளாக்கர்ஸ் நண்பர்களுக்கு நன்றி.

ங்கு இரண்டு நாட்களாக சற்றே வெக்கையாக இருக்கவும் ஆஹா வெயிலின் ஆதிக்கம் தொடங்கிருச்சோ என்று நினைத்து சற்றே கலவரம் சூழ்ந்தது. ஆனால் இன்று காலை ஒரே பனி மூட்டம்... இரவு காய்ச்சல் அதிகமிருந்ததால் அதிகாலை வேலைக்கு நடந்து செல்லும் போது சிலுசிலுப்பு என்னமோ செய்தது. இன்று முழுவதும் வெயில் இல்லை. நல்ல குளிர்... இப்படி சீதோஷ்ணநிலை மாறி மாறி வருவதால் நமக்குத்தான் உடம்புக்கு ஒத்துக்கொள்ளவில்லை.

திவர்கள் வெளியிடும் புத்தகங்களின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே போவதைப் பார்க்கும் போது எனக்குள்ளும் சிறுகதைத் தொகுப்பை கொண்டு வரும் எண்ணம் மீண்டும் எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிட்டது. எங்க மாவட்டத்தில் எங்க ஊருக்கு அருகில் பிறந்து திருப்பூரில் வசிக்கும் அன்பு அண்ணன் ஜோதிஜி அவர்களின் ஈழம் வந்தார்கள் வென்றார்கள் என்ற மின்னூல் இப்போது எனது வாசிப்பில் இருக்கிறது. இதற்கு இடையில் அண்ணன் அடுத்த மின்னூலையும் கொண்டு வந்துவிட்டார்கள். இன்று நமது வலை நட்புக்கள் நிறைய பேர் மின்னூலாக தங்களது எழுத்தைக் கொண்டு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ங்கு வந்து ஐந்து வருடங்களாகியும் இந்தக் கம்பெனியை விட்டுச் செல்லும் எண்ணம் இல்லாததால் இதுவரை எந்த ஒரு நேர்காணலுக்கும் சென்றதில்லை. தற்போது கம்பெனியில் எந்தச் சலுகையும் இல்லாததால் வேறு இடத்திற்குச் செல்லும் எண்ணம் துளிர்விட ஆரம்பித்தது. தற்போது ஒரு அழைப்பு வந்திருக்கிறது. பட்டப்படிப்புச் சான்றிதழில் சில வேலைகள் இருப்பதால் அதை முடித்துக் கொடுக்கும்பட்சத்தில் இறைவன் அருள் இருந்தால் கிடைக்கலாம். இந்த வேலை கிடைத்தால் குடும்பத்தையும் நம்முடன் கொண்டு வரலாம். பார்க்கலாம்... இறைவன் எண்ணம் என்னவென்று யாருக்குத் தெரியும்.

கொஞ்ச நாட்களாக... குறிப்பாக புதிய அறைக்கு மாற்றலாகி வந்த பிறகு எனக்குள் கொஞ்சம் கூடுதலாக சோர்வு வந்துவிட்டது. முன்பு போல் எழுத்தில் நாட்டம் இல்லை... சோர்வும் சில பிரச்சினைகளும் நண்பர்களின் தளங்களை வாசிக்க முடியாமல் செய்துவிட்டது. இன்னும் பிரச்சினைகள் சூழ்ந்த வீதியில் இலக்கில்லாமல்தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். எல்லாம் விரைவில் சரியாகும் என்ற நம்பிக்கை மனதுக்குள் துளிர்க்கிறது.

ங்கள் அறைக்கு அருகில் இருக்கும் தமிழர்கள் பிரச்சினை பண்ணுவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதை முன்பே சொல்லியிருந்தேன்... மூன்று நாட்களுக்கு முன்னர் என்னுடன் சமையலறையில் மோதினான்... நம்ம சிவகங்கைகாரன்ல சும்மா... எகிறு எகிறுன்னு எகிறுவிட்டுவிட்டேன். இன்று மற்றொரு அறையில் இருக்கும் மலையாளி நண்பன் குப்பையை கொண்டு போய் வெளியில் போடப் போகும்போது மறதியாக ஷூ மாட்டியபடி எங்கள் அறைக்கு முன்னர் வைத்து விட்டுச் சென்றுவிட நம்ம தமிழர்கள் அதை அவன் வாசலின் முன்னர் வைத்துக் கொட்டிவிட்டிருக்கிறார்கள். அவன் வந்து எங்களிடம் கேட்டான். எங்களுக்குத் தெரியவில்லை என்று சொல்லிவிட, அவனுகளிடம் கேட்க, நாங்கதான் ஹீரோ... எங்களுக்குத்தான் முதலிடம் என்று குதிக்க...  நேரம் ஆக ஆக சூடு பிடித்து தமிழர்களை உண்டு இல்லைன்னு ஆக்கிட்டானுங்க... இப்போ வீட்டு ஓனரைக் கூப்பிட்டுப் பேசுறோமுன்னு குதிச்சானுங்க... பாவம் அவனுகளுக்குத் தெரியலை மற்ற ஐந்து அறை ஆட்களும் சேர்ந்து அவனுகளுக்கு ஆப்பு வைக்க ரெடியா இருக்கானுங்கன்னு... ம்ம்ம்... ரொம்ப ஆட்டம் போடுறானுங்க... விரைவில் ஆப்புக் காத்திருக்கு... ஆடாதடா ஆடாதடா மனிதா... ஆட்டம் போட்டா அடங்கிடுவே மனிதான்னு சும்மாவா எழுதுனானுங்க...

மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

11 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

சிறு கதைத் தொகுப்பை 'மின்னூலாக' வாவது வெளியிட முயற்சியுங்கள் குமார்!

தனிமரம் சொன்னது…

வெற்றியீட்டியதுக்கு வாழ்த்துக்கள் குமார் சார்!

தனிமரம் சொன்னது…

வேலை மாற்றம் தொழிசார் கிரயச்செலவு சிக்க்ன்ம் என்ற் கம்பனி நிலை எல்லாம் எல்லா நாட்டிலும் சிந்திக்க வைக்கின்றது !ம்ம்

ஸ்ரீராம். சொன்னது…

வசிக்குமிடத்திலும் அலுவலகத்திலும் நிம்மதி இல்லை என்றால் கஷ்டம்தான். அலுவலக மாற்றம் குடும்பம் அங்கு வர வழி செய்யும் என்றால் வரவேற்கக் கூடியதுதானே.... நல்ல முடிவு எடுக்க வாழ்த்துகள் குமார்.

ezhil சொன்னது…

உங்கள் மனதின் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள் குமார்.

ராமலக்ஷ்மி சொன்னது…

உங்கள் சிறுகதைகளைத் தொகுப்பாக வாசிக்க ஆவலாக இருக்கிறோம். விரும்பும் வேலை கிடைத்திட வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அட..! மின் நூல் - மிக்க மகிழ்ச்சி... பாராட்டுக்கள்...

விரைவில் உங்களது எண்ணங்கள் நிறைவேற வேண்டுகிறேன்... வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இன்றைய பகிர்வில் சில பகுதிகள் உங்கள் தளத்திற்கும் உதவக் கூடும்... முக்கியமாக கீழ் உள்ள தலைப்பு :

4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!

இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html

நன்றி...

J.Jeyaseelan சொன்னது…

all the best sir, your eBook plan will definitely success sir...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உங்கள் படைப்புகளை புத்தகமாக கொண்டு வருவது பற்றி எண்ண ஆரம்பித்ததில் மகிழ்ச்சி.....
விரைவில் புத்தகம் வெளியிட வாழ்த்துகள்.....

Unknown சொன்னது…

விரைவில் நூலாக வெளிவர வாழ்த்து!