மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 7 நவம்பர், 2016

கமல் என்னும் கலைஞன்

இன்று  ஒளிச் சிதறல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற நம் தமிழக் இயற்பியல் விஞ்ஞானி  சந்திர சேகர வெங்கட் ராமன்... அதாங்க நம்ம சர்.சி.வி ராமன் அவர்களின் பிறந்த நாள்... இந்நாளில் அவரை நாம் மனதில் நிறுத்துவோம்.

*****


Image result for கமல்

கமல்...

இன்று தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி இந்தியத் திரையுலகமே உலகளவில் உயர்ந்து நிற்கக் காரணமானவர்களில் முக்கியமானவர். படத்துக்குப் படம் தன்னை வித்தியாசமான கதாபாத்திரத்தில் முன்னிறுத்தும் நடிப்பை நேசிக்கும் நடிகர்களில் முதன்மையானவர். களத்தூர் கண்ணம்மாவில் 'அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...' என்று பாடி... சினிமாவை அம்மா... அப்பாவாகப் பாவித்து படத்துக்குப் படம் விஸ்வரூபம் எடுத்தவர். 

கமல்... என்னை மிகவும் கவர்ந்த சொல்... படிக்கும் காலத்தில் கமலின் மீது தீராக் காதல்.... கமலின் ரசிகனாய்... விசிலடிச்சான் குஞ்சாய்... பாலாபிஷேகம் பண்ணும் அளவுக்கு எல்லாம் இருக்கவில்லை என்றாலும் கமலின் படங்களை கட் பண்ணி வைத்து, கமல் படம் போட்ட பொங்கல் வாழ்த்துக்களை வாங்கி யாருக்கும் அனுப்பாமல் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளும் அளவுக்கு அவர் மீது... அவரின் நடிப்பு மீது காதல்... கமலை மட்டும் காதலிக்கவில்லை.... இளையராஜா... பாலசந்தர்... பாலு மகேந்திரா... பாரதிராஜா... என நிறையப் பேரைக் காதலித்திருக்கிறேன்.

கமலை விரும்பியது போல் அதீத விருப்பம் இயக்குநர் பாக்யராஜ் மீது... அவரின் கதைகளுக்காகவும் இறுதிக் காட்சியில் வைக்கும் டுவிஸ்ட்டுகளுக்காகவுமே எல்லாப் படங்களையும் விரும்பிப் பார்ப்பதுண்டு.... சுந்தர காண்டம் இன்று வரை அடிக்கடி பார்க்கும் படம்... தூறல் நின்னு போச்சு படம் பார்த்த அடுத்த நாள் பள்ளியில் கை ஓடிய, கட்டுக் கட்ட குன்றக்குடி செல்ல,  8.30 மணிக்கு கண்டதேவிக்கு வரும் கே.எஸ்.எஸ். பஸ்ஸிற்கு கிளம்பும் சமயத்தில் 'ஏரிக்கரை பூங்காற்றே...' என ரேடியோவில் பாட்டுப் போட. அம்மா நீ போ பின்னால வாறேன் என்று சொல்லி பாடல் கேட்டு திட்டு வாங்கியதெல்லாம் இன்னும் பசுமையாய்...

இவர்கள் மீது எவ்வளவு காதலோ அந்தளவு டவுசர் என்று செல்லமாக அழைக்கப்பட்ட ராமராஜன் மீதும்... எனக்கென்னவோ கிராமத்துக் கதைக்களத்தில் மாமன் மச்சான் உறவை மிக அழகாக கொடுத்தவர் இராமராஜன் என்ற எண்ணம் அப்போதும் இப்போதும் உண்டு. அவரின் படங்களில் சிகரெட், தண்ணி இருக்காது... அது போக அவர் படங்கள் கவர் முக்கிய காரணம் ராஜாவின் பாடல்கள்... ஆஹா... என்ன ஒரு பாடல்கள் அவை. இன்றும் என்னிடம் ராஜாக்களின் காம்பினேசன் பாடல்கள் ஒரு தொகுப்பே இருக்கு. இதே போல் கார்த்திக், மோகன் படங்கள் பாடல்களுக்காகவே பிடிக்கும் 'என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி' பாடலை அல்பாயுசுல மறைந்து போன மோனிஷாவின் துள்ளல் நடனத்துடன் இன்றும் ரசித்துக் கொண்டிருக்கிறேன்... சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் நானொரு சினிமாப் பைத்தியம்... 90-களின் பாடல்கள் மீது அலாதி பிரியம்... நிறையப் பாடல்கள் வைத்திருக்கிறேன்.

மூன்றாம் பிறை படத்தில் பிரதாப் போத்தனைத்தான் நடிக்க வைக்க மணிரத்தினம் முயற்சி செய்தார் என முகநூலில் வாசித்தேன். யோசித்துப் பாருங்கள் அப்படி பிரதாப் போத்தான் சுப்பிரமணி ஆகியிருந்தால் 'கண்ணே கலைமானே...' என்ற கண்ணதாசனின் கடைசிப் பாடல் இருந்திருக்குமா...? அது இருந்திருந்தாலும் சில்க் ஸ்மிதாவுடனா ' பொன்மேனி உருகுதே...' பாடல் கண்டிப்பாக இருந்திருக்காது... என்ன ஒரு நடனம் அது... கதைக்காகவோ... ஸ்ரீதேவிக்காகவோ படம் வெற்றி பெற்றிருக்கும் என்றெல்லாம் யாருக்காவது தோணுமா...? அதில் கமல் என்னும் பிம்பம் இணைந்ததே வெற்றிக்கான காரணி.... இறுதிக் காட்சியில் இரயில் நிலையத்தில் அவர் நடித்திருப்பதை நாம் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிடுவோமா?

ஒன்றா இரண்டா... எல்லாப் படங்களும் ஏதோ ஒரு விதத்தில் வித்தியாசமான படங்கள்தான்... படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டி நடிக்க அடித்தளம் இட்டது பதினாறு வயதினிலே சப்பாணியின் கோவணம்தானே... அவருக்கு பாலசந்தர் வாய்ப்புக்களை அள்ளி வழங்கினார் என்றாலும் திறமை இருந்த ஒரு காரணத்தால்தானே, படத்துக்கு படம் நடிப்பில் வித்தியாசம் காட்டி... உருவத்தில் வித்தியாசம் காட்டி... நடிக்கத் தெரிந்த நடிகன் என்பதால்தானே வாய்ப்புக் கொடுத்தார். ரஜினியும் கமலும் என் குழந்தைகள் என்று அவர் சொல்லக் காரணம் அவர்கள் மீது கொண்ட அன்பினால் மட்டுமல்ல... அவர்கள் நடிக்கத் தெரிந்தவர்கள் என்று நம்பிக்கை கொண்டு படங்களை இயக்கி வெற்றி பெற்றதால்தானே. ரஜினி என்னும் நல்ல நடிகனை நாம் முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை, புவனா ஒரு கேள்விக்குறி என நிறையப் படங்களில் பார்த்திருப்போம். அவரை ஸ்டைல் என்ற வட்டத்துக்குள் கொண்டு வந்து கல்லாக் கட்டிய இயக்குநர்களால்தான் அவரின் நடிப்பு காணாமல் போனது என்பது உண்மைதானே... கபாலியில் பழைய ரஜினியைப் பார்த்தோம்... ஆனால் அதில் மற்ற விஷயங்களைச் சேர்த்து வேறு மாதிரி ஆக்கிவிட்டார்கள். ரஜினி கூட கமலின் இடத்தை என்னால் தொட முடியாது என்று சொல்லியிருக்கிறார். இது நட்பின் தன்னடக்கம்.

குருதிப் புனலில் கதை சொன்ன விதம்... ஹேராமில் கதை சொன்ன விதம்... மகாநதி... குணா... புன்னகை மன்னன்... சிற்பிக்குள் முத்து... சலங்கை ஒலி... வாழ்வேமாயம்... என வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம் அவரின் நடிப்புக்கு தீனி போட்ட படங்களை... இதற்கெல்லாம் மகுடமாய் (சண்டியர் என்ற) விருமாண்டி... இரு விதமான பார்வையில் கதையை எவ்வளவு அழகாகச் சொல்லியிருப்பார். ஒரு கலைஞனாய்... நல்ல நடிகனாய் இன்று வரை நான் ரசிப்பது கமலை என்பதால்தானோ என்னவோ தனுஷ் மீதும் ஒரு பற்றுதல்... எல்லோரும் சிவகார்த்திகேயனைக் கொண்டாட எனக்குப் பிடித்தவராய் விஜய் சேதுபதி... நடிப்பால் கவர்பவர்கள் மட்டுமே என்னையும் கவர்கிறார்கள்... ஆனால் அஜீத் இதில் விதிவிலக்கு... நல்ல மனிதனாய் கவர்ந்துவிட்டார்.

வாணி..  சரிகா... கவுதமி... இன்னும் வெளியில் தெரியாமல் எத்தனையோ என்று சிலர் கருத்துக்களோடு வரலாம்... கமல் என்னும் நடிகனைத்தான் ரசித்தேனே ஒழிய கமல் என்னும் மனிதனின் வாழ்க்கை முறை எனக்குத் தேவையில்லை... அது குறித்து கருத்துக்கள் வேண்டாம்... வாழ்க்கையில் அவர் தவறு செய்திருக்கலாம்... இனியும் செய்யலாம்... என்னைப் போல் நீயும் வாழ் என்று யாருக்கும் சொல்லவில்லை... எனக்குத் தெரிஞ்ச ஒருத்தருக்கு மூணு குடும்பம் இருக்கு... இதெல்லாம் வெளியில் தெரிவதில்லைதானே... மீடியா வெளிச்சம் படுபவர்களின் வாழ்க்கை மட்டுமே வெளிச்சத்திற்கு வருகிறது. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை நமக்குத் தேவையில்லை... நல்ல நடிகனாய் எனக்குப் பிடிக்கும்... ஆனாலும் இனிமேலாவது கமல் யோசிக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. மூன்று பேரும் பிரிந்து செல்லக் காரணம் கமலின் பக்கம்தான் இருக்கிறது என்பதும் தெரிகிறது. என்ன இருந்தாலும் தன் மகளுக்காக என கவுதமி சொல்லியிருக்கத் தேவையில்லை... பதிமூணு வருசத்துக்கு முன்னர் மகள் இருப்பது தெரியவில்லையா..? வேறு காரணம் சொல்லியிருக்கலாம்... ம்ம்ம்ம்.... சரி விடுங்க... நடிகனாய் எனக்கு கமல் பிடிக்கும் அவ்வளவே.

எந்த நடிகருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் நாம் பார்ப்பது கிடையாது. நம்மை எல்லாம் சிரிக்க வைத்த ஆயிரம் படங்களில் நடித்த மனோரமா அவர்களை கடவுள் வாழ்க்கையில் சிரிக்கவே விடவில்லை... எத்தனை துன்பத்தைக் கொடுத்தான் தெரியுமா என சிவக்குமார் அவர்கள் அடுக்கிக் கொண்டே போகும் காணொளியைப் பார்க்க நேர்ந்தது. என்னை அறியாமல் கண்ணீர் வந்தது... அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை நாம் யாரேனும் அறிந்திருப்போமா...? நம்மைச் சிரிக்க வைக்கும் கோவை சரளா திருமணமே செய்து கொள்ளவில்லை என்பது தெரிந்து அதை நாம் ஆராய்ந்தோமா..? அதேபோல் கமலின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நாம் ஆராய வேண்டாம்... நம் தமிழ் சினிமாவை உயரத்தில் ஏற்றி வைத்து 'செவாலியே'வாக உயர்ந்து நிற்கும் கமலை ஒரு கலைஞனாய் வாழ்த்துவோம்...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமல் ஜி.

*****
வாரியார் சுவாமிகளையும் நினைவில் நிறுத்துவோம்...


-'பரிவை' சே.குமார்.

17 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

பிறந்தநாள் கண்டா அனைவர் பற்றியும் சிறப்பான அலசல்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

சர் சிவி இராமனின் நினைவினைப் போற்றுவோம்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மையான ரசிகன் நீங்கள்...

KILLERGEE Devakottai சொன்னது…

கமல் ஒரு நல்ல கலைஞன் அதில் யாருக்குமே மாற்றுக்கருத்து இருக்க முடியாது, கூடாது மற்றபடி இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லத் தோன்றவில்லை காரணம் எனக்கு கமல் ஒருமுறைகூட சொன்னதில்லையே...
மேலும் வாழ்ந்து அனுபவித்த மனிதன் ஹூம் அவ்வளவுதான்.
வாணி, சரிகா, கௌதமி அடுத்தூ ?
இனிமேலா பிறக்கப்போறாள் எவளாவது பிறந்திருப்பாள் மகராசி அவளாவது நல்லா இருந்து நாடு செழிக்க வைக்கட்டும்.

Unknown சொன்னது…

an interesting thing about dr chandrasekar venkatraman.
the noble prize winner in physics was an ATHEIST.....never believed in god ... related to dr SIR C.V RAMAN.. our great scientist

Yarlpavanan சொன்னது…

கமல் பற்றிய தங்கள் கருத்தை வரவேற்கிறேன்

”தளிர் சுரேஷ்” சொன்னது…

கமல் பற்றிய சுவாரஸ்யமான அலசல் சிறப்பு! தொட்டுக்க ஊறுகாயாக வாரியார், சர்.சி.வி ராமன் அவர்களை நினைவு கூர்ந்தது சிறப்பு! நன்றி!

வருண் சொன்னது…

***பதிமூணு வருசத்துக்கு முன்னர் மகள் இருப்பது தெரியவில்லையா..?***

எல்லா உண்மையையும் உலகுக்குச் சொல்லணுமா என்ன? நீங்க எப்படினு தெரியலை. நான் சொல்வதில்லை. இதுபோல் உறவுகளில் ஏற்படும் மனக்கசப்பு ஊருக்கு சொல்ல முடியாது என்பதை அவர்கள் இருவருமே ஒத்துக் கொள்வார்கள்.

கமல் செய்த உதவிகளுக்கு கெளதமி உலகறிய பல முறை நன்றி சொல்லியிருக்கிறார். கமலால் ஏற்பட்ட வலியை அவர் ஊரறிய சொல்லாமல் இருப்பதே "நன்றிக் கடன்"!

13 வருடத்தில் மகளின் தேவைகள் மாறிக்கொண்டே வரும்னு தெரியாதா உங்களுக்கு? குழந்தையின் தேவைக்கேற்ப பெற்றோர்கள் வாழ்க்கைமுறை மாறும். தேவைகள் மாறும்.

13 வருடத்திற்கு முன்னால ஒருவர் தன் பெண்ணை சமாதானப் படுத்த சாலக்லேட் அல்லது ஒரு பொம்மை வாங்கிக் கொடுக்கலாம். அவளே 18 வயது பெண்ணானால் விளையாட்டுப் பொருள் அல்லது இனிப்பு மட்டும் போதாது என்பது உங்களுக்குத் தெரியாதா? நீங்களும் பெண்ணைப் பெற்றவர்தானே??

உண்மைக் காரணத்தை சொல்லாமல்ப் போவதுதான் நாகரிகம். உண்மை என்னைக்குமே கசக்கத்தான் செய்யும். அதை அப்படியே சொன்னாலும் நீங்கள் இல்லைனாலும் பலர் அதையும் "பொய்" என்றே உங்களைப்போலவே விமர்சிக்கத்தான் போறாங்க. அது அவரோடயே போகட்டுமே? அதை எதுக்கு அப்படியே சொல்லணும்னு எதிர்பார்ர்க்குறீங்கனு விளங்கவில்லை!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்தும் அண்ணா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் வருண்...
தங்களின் நீண்ட கருத்துக்கு நன்றி.
நான் கருத்துப் போருக்காக எழுதுவதில்லை...

தாங்கள் வாசித்ததை நன்றாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். பிரிவதற்கு இருவருக்கும் பல காரணம் இருக்கலாம்... அதை வெளியில் சொல்ல வேண்டும் என்று இல்லை... அடுத்தவன் வீட்டுக்குள் எட்டிப்பார்ப்பது எனக்குப் பிடிக்காத ஒன்று...

எனக்குப் பெண் குழந்தை இருப்பதால்தான் அந்த வரியைச் சேர்ந்தேன். கமலுடன் சேரும் போது கவுதமியின் மகளுக்கு 8 வயதுதானே... அப்போதே அவர் யோசித்திருக்கலாமே... பெண் குழந்தையை எதற்காகச் சொல்லி பிரிய வேண்டும் என்ற ஆதங்கமே அந்த வரிக்கான காரணம்... ஏளனம் அல்ல... பொய் என்று சொல்லி விமர்ச்சிக்க என்ன இருக்கிறது...

அவர் பிரிவை விமர்ச்சிக்க என்ன இருக்கு... அவர் சொல்லணும்ன்னு எதிர்பார்த்து என்ன லாபம் சொல்லுங்கள்...? குழந்தையைச் சொல்ல வேண்டாமே என்பதுதான் என் கருத்து...

எனக்குத் தெரிந்த ஒரு அம்மா கைம்பெண்ணாய் இரண்டு பெண் குழந்தைகளை கூலி வேலை பார்த்து வளர்த்து கல்லூரியில் படிக்க வைத்து நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தார்... அப்படி ஏழைகள் இருக்கும் போது கையில் பணமிருந்த கவுதமி ஏன் குழந்தைக்காக அப்படி இருக்கவில்லை...


இதை விவாதத்துக்காக சொல்லவில்லை... தங்கள் கருத்து உண்மைதான்... ஆனால் பெண் குழந்தை இருக்கு... பொய் என்று என்னைப் போல் விமர்சிக்கத்தான் செய்வாங்க என்பதெல்லாம் எதற்காக... இதில் விமர்சனம் எங்கே இருக்கு... பெண் குழந்தையின் வாழ்க்கை இவர்களின் வாழ்வால் பாதிக்கப்படிருக்குமா இல்லையா...?

தங்கள் கருத்துக்கு நன்றி.

Kasthuri Rengan சொன்னது…

வணக்கம்
நல்ல பதிவு
தம +