மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 28 நவம்பர், 2015

மனசு பேசுகிறது : கூத்தாடிகளைக் கொண்டாடுவோம்


ன்னடா இவன் எல்லாரும் கூத்தாடிகள் நமக்காக போராட மாட்டார்களாம்... இனி அவர்கள் படங்களை நாம் யாரும் போய் பார்க்க வேண்டாம் என்று முகநூலிலும் டுவிட்டரிலும் செய்திகளைப் பகிர்ந்து வருகிறார்கள். விஷால் பட சூட்டிங்கை கல்லை எறிந்து விரட்டி நிப்பாட்டியிருக்கிறான் மறத்தமிழன். அப்படியிருக்க கூத்தாடிகளைக் கொண்டாடுவோம் அப்படின்னு தலைப்புல எழுதுறானேன்னுதானே பாக்குறீங்க. நாம காலங்காலமா அதைத்தானே பண்ணிக்கிட்டு வாறோம். இன்னைக்கு கூப்பாடு போடுவோம்... நாளைக்கே தெறியோ, வெறியோ வந்தா பால் குடம் எடுத்து, வேல் குத்தி அட்டையில செஞ்ச கூத்தாடியோ படத்துக்கு மேல ஏறி பால் அபிஷேகம் பண்ணுறோம்ன்னு நமக்கு பால் உத்த வச்சிருவோம். உடனே அந்தக் கூத்தாடி நடிகரும் நம்மளோட ஆத்தாவை கட்டிப்பிடிச்சி வராத கண்ணீரை வரவச்சி டயலாக்கெல்லாம் பேசி ஒரு அம்பது ஆயிரத்தை கொடுத்து போட்டோ எடுத்து விளம்பரமும் தேடிக்குவானுங்க... இந்த அம்பதாயிரம் அந்த ஆத்தாவுக்கு போதுமா..? நாம இருந்து 50, 100 கொடுக்கிறதை விட இது பெரிதா என்ன...? படுபாவிக பால் அபிஷேகம் பண்ணுறேன்னு இப்படி பல்லாக்குல பொயிட்டானேன்னு எவனாச்சும் உண்மையாவே வருத்தப்பட்டு இனிமே எவனும் எனக்கு கட் அவுட் வைக்க கூடாது, பால் அபிஷேகம் பண்ணக்கூடாதுன்னு சொல்றானுங்களா இல்லையே... அவனுக தொழில் நடிக்கிறது.... அதை சரியாப் பண்ணுறானுங்க... நாம இன்னமும் பால் அபிஷேகம் பண்ணிக்கிட்டு பால் காவடி எடுத்துக்கிட்டு இருப்போம்.

எனக்கும் சில நடிகர்களைப் பிடிக்கும்... அவர்களின் படங்களை பார்க்கப் பிடிக்கும்... அதற்காக சாகக்கிடக்கிறான்னு மொட்டை அடிக்கவோ, தலைவான்னு கத்திக்கிட்டு ரோட்டுல போறவங்ககிட்ட வம்பு பண்ணவோ, கட் அவுட் வச்சி நீதான் என் குலதெய்வம்ன்னு அபிஷேகம் பண்ணவோ செய்யும் கோமாளி ரசிகனாய் வாழவும் பிடிககது... அப்படி வாழ்பவர்களையும் பிடிக்காது. இவரின் படம் நல்லாயிருக்கும் என்று நினைப்பில் படம் பார்ப்பதுடன் சரி. கூத்தாடிகளைக் கொண்டாடிக் கொண்டு குடும்பத்தை திண்டாடவிடும் சாதரண தமிழ் ரசிகனைப் பார்க்கும் போது பற்றிக் கொண்டுதான் வருகிறது. என்ன செய்வது கூத்தாடிகளுக்கு அரியாசனத்தைக் கொடுத்துவிட்டு நாமெல்லாம் இன்னும் அறியாமை இருளுக்குள்தானே இருக்கிறோம்.

நாட்டுல ஒரு புயல், மழை வந்தால் போதும் நடிகர்கள் எவனும் ஒண்ணும் கொடுக்கலைன்னு நாமெல்லாம் கூப்பாடு போட ஆரம்பிச்சிடுறோம்... நாம் வாக்களித்து வெற்றி பெறச் செய்த எம்.எல்.ஏ., எம்.பி. ஏன் பஞ்சாயத்துப் போர்டு பிரசிடெண்ட், வார்டு கவுன்சிலர்ன்னு எவனையாச்சும் இதைச் செய்யலை... அதைச் செய்யலைன்னு நாம கேட்டிருக்கோமா...? அஞ்சு வருசத்துல அவன் சொத்து சேர்த்துக்கிட்டு பிச்சைக்காசு 1000, 2000த்தைக் கொடுத்ததும் மறுபடியும் நாம அவனுக்கு ஓட்டுப்போட்டு நீ மறுபடியும் சம்பாரிச்சுக்கடான்னு ஏத்தி உக்கார வச்சிடுறோம். ஆனா நடிகர்கள் எதுவும் செய்யலைன்னா குய்யோ முறையோன்னு குதிக்கிறோம். கேட்டால் கோடிகளில் புரள்கிறார்கள் என்று சொல்வோம். கோடிக்கணக்கில் சம்பாரிக்கும் எத்தனையோ பிஸினஸ்மேன்கள் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஏதாவது செய்கிறார்களா...? இங்கிருக்கும் தெய்வங்களுக்கு கூட கொடுக்காமல் திருப்பதி உண்டியலிலும், சபரிமலையிலும் கொண்டு போய் போடுவார்கள்.  அப்படியிருக்க நாம் நடிகர்களை மட்டுமே தொங்குவது ஏனென்று தெரியவில்லை.


ஒரு நடிகனுக்கு அது தொழில்... அவன் தொழிலில் அவனை வைத்து கோடிக்கோடியாக சம்பாரிக்க முடியும் என்ற தைரியத்தில் தயாரிப்பாளர் பணத்தைக் கொட்டுகிறார்.  நடிகனுக்கும் கோடிகளில் சம்பளம் கொடுக்கிறார். அளவுக்கு மீறிய வருமானம் என்றாலும் அது அவன் உழைப்புக்கான உதியம்தானே... ஒரு படத்துக்காக தன்னை வருத்தி... சாப்பாட்டில் தியாகம் செய்து... அதற்காக உழைத்து... நடித்துக் கொடுக்கிறான். அப்படியிருக்க அவனிடம் நீ அதற்கு உதவவேண்டும்... இதற்கு உதவவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கு..? ஒருவன் உதவி செய்வது என்பது அவனது தனிப்பட்ட விஷயம்... நான் உதவினேன் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு செய்வது உதவியல்ல... ஒரு லட்சம் கொடுத்தேன்... ஐந்து லட்சம் கொடுத்தேன்... என்று சொல்லி போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொடுப்பது எந்த வகை உதவி.... நாமெல்லாம் அடுத்தவனுக்கு கொடுப்பதென்றால் யோசிப்போம் ஆனால் நடிகன் மட்டும் நமக்கு கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுப்போம்.

கோடிக்கோடியாக சம்பாரிக்கும் எல்லாரும் ஒழுங்காக வரிக் கட்டட்டும். வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு  கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயி ஒருபுறம் இருக்க, அரசாங்கமே பண முதலைகளுக்கு கடனை தள்ளுபடி செய்கிறது.  இது எந்த வகையில் நியாயம் என்று நாமெல்லாம் யோசிப்பது இல்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடவில்லை என்றால் சீனிவாசனுக்குத்தான் வருத்தம் இருக்கணுமே தவிர, அவரை விட நாம்தான் வருந்துகிறோம்... சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் நமக்கு என்ன லாபம்...? சென்னையில் போட்டி நடந்தால் நம்மிடம் டிக்கெட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டுதான் பார்க்க விடுவார்கள். இதுபோல் சினிமாவும்... குடும்பத்தைக் கவனிக்காது நடிகனுக்காக பாலபிஷேகம், பீர் அபிஷேகம் எல்லாம் நம் காசில் பண்ணினாலும் தியேட்டருக்குள் டிக்கெட் எடுத்துத்தான் படம் பார்க்கப் போகமுடியும். அப்படி இருக்க எதற்காக அவனுக்கு கொடி பிடிக்கிறோம். நமக்கு வேறு வேலை இல்லையா..? குடும்பம் இல்லையா..? குழந்தை குட்டி இல்லையா..?

நடிகர் சங்க தேர்தலை ஊடகங்கள் மிகப் பெரிய அளவில் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தன... இதனால் ஊடங்கங்களுக்கு லாபம்... நமக்கு...? நமக்கு அதனால் எள்ளளவும் லாபம் இல்லை... அவனுக கூத்தாடிங்க... அடிச்சிப்பானுங்க...  கூடிப்பானுங்க... அவனுகளுக்கு கொடிப்பிடிச்சு... கொடிப்பிடிச்சே நாம ரோட்டுல கிடக்க வேண்டியதுதான்... அவன் பாரின் கார்ல பறந்துக்கிட்டு.... பஞ்சு மெத்தையில புரண்டுக்கிட்டும் இருப்பான்... முதல்ல நடிகர்கள் அதைத் தரலை... இதைத் தரலைன்னு கேட்டுக்கிட்டு நிக்கிறதை விட்டுட்டு நம்ம வாழ்க்கையைப் பார்ப்போம். அவனுக்கு கொடுக்கும் அந்த மரியாதையை நாம் விலக்கிக் கொண்டாலே அவனும் சாதாரண மனிதன் ஆகிவிடுவான். ஆனால் நாம் செய்வோமா..?

(நயன்தாராவைப் பார்க்க சேலத்தில் கூடிய நம் தமிழர்கள்)
இங்கே அஜீத் வரிசையில் நின்னு ஓட்டுப் போட்டால் அது நியூஸ்... விஜய் இலவச திருமணம் செய்து வைத்தால் அது நியூஸ்... தனுஷ் வேஷ்டி கட்டினால் அது நியூஸ்.... சிம்பு காதலியை மாற்றினால் அது நியூஸ்... கமல் ஊரைவிட்டுப் போறேன்னு சொன்னா நியூஸ்... ரஜினி தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்யணுமின்னு கதைவிட்டா அது நியூஸ்... இதையெல்லாம் ஒவ்வொரு நாளும் நாமெல்லாம் செய்து கொண்டுதானே இருக்கிறோம். அதெல்லாம் நியூஸ் ஆவதில்லையே... நம் செயல்கள்... நம் வாழ்வின் முன்னேற்றம் இதில் மட்டுமே நாம் கவனம் செலுத்தினால் நாமும் நாளை நியூஸாவோம்... திரு. சகாயம் போல் நெஞ்சை நிமிர்த்தி, கூத்தாடிக்கு கூப்பாடு போடுவதை விடுத்து நம் பாதையில் நாம் பயணித்தாலே போதும்  கூத்தாடிகளும் சாதரண மனிதர்கள் ஆவார்கள்.

கரகாட்டம், ஒயிலாட்டம், நாடகம் என நமது தமிழக கலாச்சாரத்தை பிரதிபலித்துக் கொண்டிருந்த கலைஞர்கள் வாழ்க்கையை ஓட்ட ஆபாசத்தின் பிடிக்குள் போய்விட்டார்கள். அவர்களில் எத்தனையோ பேர் வாழ வசதியின்றி... நலிந்து போய் இருக்கிறார்கள். அவர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யலாம்... நமது கலைகளை அழியாமல் பாதுகாக்கலாம். அதை விடுத்து நயன்தாரா வந்தால் நாளெல்லாம் வெயிலில் கிடந்து அவரைப் பார்த்ததை சாதனையாகச் சொல்லிக் கொண்டு திரிகிறோம். இந்த நிலை எப்போது மாறும்..? மாற்றம் வரும். எப்போது என்றால் இதெல்லாம் விடுத்து... நடிகனின் பின்னால் போவதை நிறுத்தி... அவன் செய்ய வேண்டும் என்று பிச்சை கேட்பதை விடுத்து நம் பாதையில் நாம் பயணிக்க கற்றுக் கொள்வோம்.

இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்... தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்யணும் செய்யணுமின்னு சொல்லியே தன்னோட படங்களை ஓட வைக்க நினைக்கும் நடிகர்கள் மத்தியில் எதுவுமே செய்யாமல் நான் சம்பாதிக்கிறேன்... எனக்கும் குடும்பம் இருக்குன்னு சொல்லுற நடிகர்கள் மேல் என்பதே என் எண்ணம். இனிமேலாவது 'தலைவா...','நாளைய தமிழகமே...','வாழ்வின் விடிவெள்ளியே...' என்றெல்லாம் கூச்சல் போடாமல் ஒதுங்கி வாழப்பழகுவோம். நாம் ஒதுங்கினால் அவர்களும் அடங்குவார்கள்.  நம் தமிழினத்தை ஆள இந்தக் கூத்தாடிகளுக்கு கொம்பு சீவுவதை நிறுத்துவோம்... நல்லதொரு தமிழனை விரைவில் நம்மால் அரியாசனத்தில் அமர வைக்க முடியும்... அதைச் செய்து நடிகனின் அரியாசன ஆசைக்கு முற்றுப்புள்லி வைப்போம்... இதையெல்லாம் நாம் செய்வோமா...? செய்வோமா...?

நண்பர்களே இது எனது கருத்துத்தான்... இதில் தங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம்... எதுவாக இருந்தாலும் கருத்துக்களாய் சொல்லுங்கள்... நாம் கலந்துரையாடலாம்.
-'பரிவை' சே.குமார். 

45 எண்ணங்கள்:

Menaga Sathia சொன்னது…

செய்யனும்,செய்தால் தான் நமக்கும்,வருங்கால சந்நதிக்கும் நல்லது...நல்லதொரு பதிவு !!

ஸ்ரீராம். சொன்னது…

உங்கள் கருத்தில் எனக்கும் முழுதும் உடன்பாடே.

துரை செல்வராஜூ சொன்னது…

விசிலடிச்சான் குஞ்சுகள் - என்று முன்பு ஒரு கூட்டம் இருந்தது நினைவில் இருக்கின்றதா!..

நடிகர்கள் ஏதாவது தமக்கு செய்ய வேண்டும் என்ற நினைப்பு இன்னும் ஒழியாதது அவலமானது.. கேவலமானது...

அன்பே சிவம் சொன்னது…

செம குத்து ...
'நமக்கு...? நமக்கு ஒரு (...ம்) லாபம் இல்லை'... தயவு செய்து அடைப்புக்குள் உள்ள திருத்தத்தை மட்டும் செய்தால் மிக மகிழ்வேன்... இது கூட தங்கள் அன்பை அறிந்ததாலும்.. தளத்தின் தரத்தை உணர்ந்ததாலும் மட்டுமே...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

// நம் செயல்கள்... நம் வாழ்வின் முன்னேற்றம் இதில் மட்டுமே நாம் கவனம் செலுத்தினால் நாமும் நாளை நியூஸாவோம்... //

அப்படிச் சொல்லுங்க...

S.P.SENTHIL KUMAR சொன்னது…

உறைக்கச் சொன்னீர்கள். உறைக்க வேண்டியவர்களுக்கு உறைத்தால் நல்லது. ஆனால், இளைஞர்கள் மது மயக்கத்தில் இருப்பது போலல்லவா நடிகர்கள் மீதும் மயக்கத்தில் இருக்கிறார்கள்.
த ம 4

balaamagi சொன்னது…

வணக்கம் சகோ,
அருமையான பகிர்வு, அதிலும் கடைசியில் சொன்னீர்கள் பாருங்கள், செய்கிறேன் என்று சொல்லி ஒன்றும் செய்யாமல் இருப்பவர்களை விட, எனக்கும் குடும்பம் இருக்கு, நான் சம்பாதிக்க நடிக்கிறேன் என்று சொல்பவர்கள் மேல்,,,,,,,,
நல்ல பகிர்வு, தொடருங்கள், நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி....
நாம் செய்வோமா என்பதுதானே கேள்வியே...
மது மயக்கத்தைவிட மோசமான மயக்கம் இதுவல்லவா?
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா....
கருத்தில் உடன் பட்டமைக்கு நன்றி.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
இப்பவும் அது இருக்கத்தான் செய்யுது...
அவன் செய்யணுமின்னு நினைக்கிற நம்ம மனநிலையை என்னவென்று சொல்வது...?
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
பதிவைப் பகிரும் வரை தாங்கள் சொன்ன வரியில் ம.... என்றுதான் எழுதியிருந்தேன்... பின்னர் பகிரும் போது நம் மேல் உள்ள கோவத்தில் முழு வார்த்தையும் போட்டுவிட்டேன்...

இப்போது அந்த வரியில் வார்த்தையையே மாற்றிவிட்டேன்...

தவறைச் சரி செய்யச் சொன்ன தங்களுக்கு நன்றி ஐயா...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா....
நாம் கவனம் செலுத்த வேண்டுமே அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கார்த்திக் சரவணன் சொன்னது…

நமக்கென்று தொழில் இருப்பது போல் நடிகர்களுக்கும் நடிப்பது ஒரு தொழில். அவ்வளவே. அவர்களுடைய தொழிலில் சிறப்பம்சம் என்னவென்றால் மக்களிடம் அவர்களுக்குக் கிடைக்கும் புகழ்.... இதை உணராத ரசிகக்கண்மணிகள் நாசமாகத்தான் போவார்கள்...

Unknown சொன்னது…

ஒரு மாதத்திற்கு முன்பு, ஒரு நடிகரின் படப்பாடல் ரிலீஸ் ஆகிறதென்று அதிகாலை முதலே நம் "குடி" மக்கள் நடு ரோட்டில் ஆட்டம் போட்டார்கள்.

ஆமா அந்த சேலம் போட்டோவில் "நயன்ஐ" காணோம் (ஹீ...ஹீ...தமிழ் ரசிகன்)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான பகிர்வு. என்றைக்கு இந்த மோக வலையிலிருந்து மீளப் போகிறோமோ......

மீரா செல்வக்குமார் சொன்னது…

சாட்டையடி பதிவு,...
இன்னும் திருந்தாத இவர்களால் தான் இன்னும் விடியவே இல்லை...

Pandiaraj Jebarathinam சொன்னது…

அவர்களை கண்டுகொள்ளாமல் ஒதுங்கியிருந்தாலே போதும்.

நல்ல கட்டுரை

KILLERGEE Devakottai சொன்னது…

வணக்கம் நண்பரே...
தவறை நமக்குள் வைத்துக்கொண்டு நாம் கூத்தாடிகளை குறை சொல்வது தவறான செயல்.. மேலே 9தாராவைக் காண உள்ள கூட்டத்தை காண்பித்தீர்கள் இந்தவகை புகைப்படத்தை பார்க்கும் பொழுது எனது மனதில் தோன்றுவது என்ன தெரியுமா ? நாட்டில் மக்கள் கூடுமிடங்களில் வெடிகுண்டு வைக்கின்றார்கள் இந்த வகை கூட்டங்களில் ஏன் ? வைப்பதில்லை என்பதுதான்

இதைக்காணும் சில நண்பர்கள் என்னை இவ்வளவு கொடூரமானவனா ? என்று நினைக்க கூடும் இவர்களெல்லாம் இந்த நாட்டுக்கு தேவையில்லை என்பதே எமது ஆணித்தரமான கருத்து இப்படிச்செய்தால் அடுத்த முறை இவ்வகை கூட்டங்கள் குறைய வாய்ப்பு உண்டு

நான் கொடூரமானவன் இல்லையென்பதை நிரூபிக்கவா ? இந்தக் கூட்டத்தில் நான் எனது உயிராய் நினைக்கும் எனது மகன் இருந்தாலும் இதே கருத்தே....

ஏமாந்து விட்டு ஏமாற்றுகிறான் என்று சொல்வதில் எனக்கு என்றுமே உடன் பாடில்லை
வெகுநாட்களாக ட்ராப்டில் கிடக்கும் ஒருபதிவை எடுத்து விடுகிறேன் விரைவில்....
கில்லர்ஜி
தமிழ் மணம் 8

Unknown சொன்னது…

இங்கே சினிமாவும் வாழ்வும் ஒன்றாகி சமுதாயத்தை சீரழுத்தி விட்டது! திருந்த வாய்ப்பில்லை

ஊமைக்கனவுகள் சொன்னது…

நிழலை நிஜமென்று நம்பித் திரியும் கூட்டத்தால் நம் நாடு வீணானது உண்மை.

தங்களின் பதிவு சரியான சவுக்கடி.

தொடர்கிறேன்.

நன்றி

கலையன்பன் சொன்னது…

தங்கள் கருத்து சரியானதே!

ஜஸ்டின் சொன்னது…

இவர்களிடம் உதவி எதிர்பார்ப்பது தவறான செயல்தான்.வெள்ளப்பெருக்கினானால் மக்கள் சீரழிந்து நிற்கும்போது சும்மாயிருந்தாலும் பரவாயில்லை.நாங்கள் உதவி செய்ய மாட்டோம் என்று ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது என்ன மனிதத் தன்மை!

சென்னை பித்தன் சொன்னது…

// இந்தக் கூத்தாடிகளுக்கு கொம்பு சீவுவதை நிறுத்துவோம்... //
நன்று சொன்னீர்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்று சொன்னீர் நண்பரே
தம +1

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செந்தில் சார்...
ஆம் நமக்கு சினிமா போதை...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே..
அவனுகளுக்கு தொழில்ன்னு நாம் ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்குறோம்ன்னு தெரியலை....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
கிறுக்கனுங்க... நாம திருந்தாதவரை தமிழகம் திரையுலகத்தானுக்கே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
உங்கள் கருத்து முற்றிலும் உண்மையே...
நாம் அவர்கள் பின்னால் அலைவதாலேயே கெட்டு விட்டோம்...
அவர்கள் நம்மை வைத்து வாழ்கிறார்கள்...
விரைவில் தங்கள் பதிவை எடுத்து விடுங்கள்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
நாம திருந்துறதா... இந்தா தெறிக்க விடுவோம்ன்னு போஸ்டர் அடிக்க ஆரம்பிச்சிட்டோம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
நாடு குட்டிச் சுவராப் போச்சு...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
அவனுங்களே நடிகனுங்க...
படம் வரும்போது மட்டும் பாசமாய் பேசுவானுங்க...
மனிதாபிமானமெல்லாம் எங்கயும் எதிர்பார்க்க முடியாது.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமை குமார்! நாங்களும் உங்களைப் போலத்தான் சினிமாவை விரும்பிப் பார்ப்பவர்கள்தான். ஆனால் நம் மக்கள் அதனுடன் ஒன்றிப் பிணைந்து நடிகர்களைத் தூக்கிக் கொண்டாடுவதால்தான் இப்படி....நல்ல பதிவு..குமார்..நல்ல வார்த்தைச் சீறல்கள்! உரைக்கச் சொன்னாலும் அவர்களுக்கு எங்கு உறைக்கப் போகின்றது..ஹும்



நிஷா சொன்னது…

கில்ல்லர் ஜீ சாரின் கருத்து சூப்பர். நான் பல நேரம் இதையே தான் நினைப்பேன். நம்மிடம் குறைகளை வைத்துக்கொண்டு அவர்கல ஏன் குறை சொல்ல வேண்டும்.

ஏத்தி ஏத்தி விடுவதும் அப்புறம் ஆத்தி ஆத்தி கரைவதும் தவிர்க்கப்பட வேண்டும்.

நிஜம் சொன்னால் ஆத்திக்கரைய வேண்டிய நிலையில் நடிகர்கள் இருக்கணும். அவர்களை வாழவைக்கும் அப்பாவி ஜீவன்கள் தானே அவர்கள் ரசிகர்கள். எஜமானர்கள் ரசிகர்களே தவிர நடிக நடிகையர் அல்ல.

புத்தியை கழட்டி மூலையில் வைத்து விட்டு நடிக நடிகர் பின்னால் போகும் ஆட்களை சொல்லணும்.

நிஷா சொன்னது…

சரியான கருத்து குமார்!
நடிகர்களை ஏதோ தெய்வம் ரேஞ்சுக்கு ஏத்தி வைத்து
தங்களை இரட்சிக்க வந்த ஆபாத்பாண்டவர்கள் போல எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் வைப்பதும் திட்டி தீர்ப்பதும் ரெம்ப தப்பு.

நயன் தாராவைப்பார்க்க உங்க ஊரில் மட்டுமல்ல ஊரில் ஒரு பிள்ளை படிக்க பென்சில், புத்தகம் வாங்க தர்மம் செய்யுங்கப்பா என்று கேட்டால் ஆயிரம் சாக்கு சொல்லி தட்டி கழித்து விட்டு நடிகை நடிகர் வந்தாலும் பல நூறு கீலோ மீற்றர் பயணம் செய்து அவர்களிருக்குமிடம் போய் தங்கமும் வைரமுமாய் பரிசளிக்கும் தர்மப்பிரபுக்கள் எங்களூரிலும் உண்டு.

அவர்களை திருத்த முடியாது. ஆனால் நாம் திருந்தலாம் குமார். நடிகர்களை நம்மைபோல் சக மனிதராய் பார்த்தால் எல்லாமே சரியாகிரும்.

J.Jeyaseelan சொன்னது…

செம சார்... அவர்கள் செய்யவேண்டும் என எதிர்பார்ப்பது தவறு. நச்சென சொல்லியிருக்கிறீர்கள். அப்புறம் நடிகர்கள் பின்னாடி ஓவராய் அலைவது அதுவும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள். இன்றைய தலைமுறை என்பது நேற்றைய தலைமுறையின் தொடர்ச்சி தானே சார்... அவர்கள் தங்கள் ஆதர்ச நாயகனை எப்படி கொண்டாடினார்களோ அதே போல இன்று நாம். அன்றே அதை விட்டிருந்தால் இன்று கண்டிப்பாக இந்த அளவு இருக்காது என்பது என் எண்ணம்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
சினிமா ஒரு பொழுது போக்கு அம்சம்...
நம்மைப் போல் நடிகர்களுக்கு அது ஒரு வேலை... அங்கு பணம் கோடிகளில் குவிவதால் வருமானும் கோடிகளில்...
அப்படியிருக்க அவர்களிடம் நாம் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்...
தங்கள் கருத்து அருமை..
வாழ்த்துக்கள் சார்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நடிகர்களை சக மனிதர்களாய்ப் பார்க்கும் காலம் போய் தெய்வமாக அல்லவா பார்க்கிறோம்... இனி எப்போது நாம் மீண்டும் சக மனிதனாய் பார்ப்பது...
இதோ சென்னையில் எத்தனையோ பேர் உதவி செய்ய.... ரஜினியும் விஜய்யும் திருமண மண்டபங்களை திறந்து விட்டதை எல்லாரும் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறோம்...

இனி உலகம் திருந்த நாம் மாறணும் என்றால் அது நடக்காது என்பதே என் எண்ணம்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜெயசீலன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//இன்றைய தலைமுறை என்பது நேற்றைய தலைமுறையின் தொடர்ச்சி தானே சார்... அவர்கள் தங்கள் ஆதர்ச நாயகனை எப்படி கொண்டாடினார்களோ அதே போல இன்று நாம். அன்றே அதை விட்டிருந்தால் இன்று கண்டிப்பாக இந்த அளவு இருக்காது என்பது என் எண்ணம்//

இதில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு நண்பரே... அன்று எந்தவித டெக்னாலஜியும் இல்லாமல் இருந்த போது கூட நம் மக்கள் இப்படியெல்லாம் பால் குடம் எடுத்து வேல் போட்டு மொட்டை அடிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்... கொண்டாடியிருப்பார்கள்... பிடித்த நடிகரின் படத்துக்கு கொடி ஒட்டி போஸ்டர் அடித்திருப்பார்கள்... பாலாபிஷேகம் செய்தார்களா,..?

நம்மிடம் படிப்பு இருக்கு... பகுத்தாயும் திறன் இருக்கு... பின்னர் ஏன் அவர்களுக்காக அலையணும் என்பதே என் கேள்வி... மேலும் அவர்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்பதைவிட கேவலம் வேறில்லை.. நாம் சம்பாரித்த பணத்தில் செய்து கொண்டா இருக்கிறோம் பின்னர் ஏன் அவனின் சம்பளத்தில் நாம் எதிர்பார்க்கிறோம்...

மேலும் தாங்கள் பிப்ரவரி மாதம் எழுதிய ஒரு பகிர்வில் ...

//தலைவா பொறுத்ததெல்லாம் போதும், பொங்கியெழு..... உன்னைப் பற்றி தப்புக்கணக்கு போடும் போலிகளுக்கு உன் ஆறாவது முகத்தைக் காட்டு.

தலைமையே இல்லாத தமிழகத்துக்கு தலைமை ஏற்க வா !! இனி நீ அமைதி காக்கும் ஒவ்வொரு நாளும் உனக்கெதிரான சதிவலை பெரிதாகி பெரிதாகி உன்னையும் எங்களையும் வரலாற்றிலிருந்தே மறைத்துவிடும். //

இப்படிச் சொல்லியிருக்கிறீர்கள்... படிக்கும் படித்த நாமே இப்படி ஏன் இவர்கள் பின்னால் ஓட வேண்டும்... உங்களுக்கு அவரைப் பிடிக்கும்... எனக்கும் கூட ஒரு நடிகரை ரொம்பப் பிடிக்கும்... இங்கு வந்தது முதல் நான் திரையரங்கு சென்று படம் பார்த்தது அவரின் படங்கள் மட்டுமே... அதற்காக அவரின் காலடியில் தலைவா என்று விழவில்லை...

ஹா...ஹா... தலைமை இல்லாத தமிழகத்துக்கு தலைமை ஏற்கவா... வரலாறு காணமல் போயிடும்... அதுசரி என்னங்க வரலாறு இருக்கு... இப்படி நாம் அவர்கள் பின்னே அலைவதால்தான் அவர்கள் நம்மை பயன்படுத்தி பணம் சம்பாரிக்கிறார்கள்...

இங்கு சொல்லியிருப்பவை கருத்துக்கள் மட்டுமே ஜெயசீலன்...
தங்களது சமீபத்திய பகிர்வு கூட மிகவும் அருமையானது... நடிகர்களிடம் பணம் ஏன் கேட்கிறீர்கள் என்பது .... நல்ல பகிர்வு...

தங்களைக் காயப்படுத்த இந்த கருத்து இல்லை... அப்படியிருந்தால் மன்னிக்கவும்.