மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 27 நவம்பர், 2015

மனசின் பக்கம் : பாகிஸ்தானி சூடானி சேம்... சேம்...

சந்தோஷம்

ர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் நடத்திய கட்டுரைப்போட்டியில் நான் எழுதிய 'அரசியல்வாதியாய் காமராஜர்' என்ற கட்டுரைக்கு மூன்றாம் பரிசு கிடைத்திருக்கிறது. கட்டுரைப் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழ்க்குடில் நிர்வாகத்தினருக்கும்,  கட்டுரைகளை வாசித்து பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்த மறைமலை அடிகளாரின் பேரன் திருமிகு. மறை. திரு. தாயுமானவன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. மேலும் முதல் இரண்டாம் இடம் பெற்ற சேலம் கி.மகாலட்சுமி, சென்னை ச.பொன்முத்து இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.


இந்த 2015-ஆம் வருடம் எனது எழுத்துக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்திருக்கிறது. இந்த வருடம் கலந்து கொண்ட பெரும்பாலான போட்டிகளில் ஏதாவது ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. பரிசு கிடைக்கிறது என்று பெருமைப்படுவதைவிட எனது எழுத்துக்களும் நடுவர்களைக் கவர்கிறது என்பதுதான் உண்மையான சந்தோஷம்.  இன்னும் எழுத்தில் சாதிக்க வேண்டும் என்பதே ஆசை... இறையருள் இருந்தால் எல்லாம் நடக்கும்.

குட்டிக் கதை

ரு வீட்டில் அப்பா,அம்மா, மகன்,மகள் என நால்வர்... நால்வருமே வேலைக்குப் போகிறார்கள். அதனால் வீட்டில் வேலைக்கு ஒரு பெண்ணை வைத்திருந்தார்கள். மாதாமாதம் போன் பில் கூடிக் கொண்டே போகவும் குடும்பத் தலைவருக்கு கோபம் தலைக்கேறியது. எல்லாரிடமும் மொபைல் இருக்கு... அப்புறம் எப்படி லேண்ட் லைன் போனுக்கு இவ்வளவு பில் வருதுன்னு குடும்பத்தில் உள்ளவர்களை உட்கார வைத்துப் பேசியிருக்கிறார். 

அப்போது நான் யார் யாருக்கு போன் செய்யணுமோ அதையெல்லாம் என் அலுவலக போனில் செய்து விட்டுத்தான் வீட்டுக்கு வருவேன் . நீங்கள் மூவரும்தான் போன் பில் கூடக் காரணம் என்றார். உடனே மனைவி நான் எங்க பள்ளியில் இருந்து சொந்தங்களுக்கு மட்டுமின்றி, மளிகை, பால் என எல்லாருக்கும் பேசிவிடுவேன் என்று சொல்லியிருக்கிறார். மகனோ நான் வீட்டில் போன் பண்ணுவதே இல்லை... நானும் அலுவலகப் போனில் பண்ணி விடுவேன் என்றானாம். 


எல்லாருக்கும் மகள் மீது சந்தேகம்... அவள்தான் வாய் ஓயாமல் பேசக்கூடியவள்... ஆனால் அவளோ நானும் ஆபீசில் இருந்துதான் பேசுவோம்... என் மொபைலுக்குக்கூட என் பிரண்ட் காசு போட்டு விட்டுருவான் என்று சொல்லிவிட்டாளாம். உடனே நாம் நால்வரும் செய்யாமல் எப்படி இவ்வளவு பில் வரும் என யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவர்களாய் வேலைக்காரியை கூப்பிட்டு விசாரிக்க, 'ஐயா நீங்கள்லாம் வேலை பாக்கிற இடங்களில் இருந்து போன் பண்ணிட்டு வந்துடுறீங்க...  அது மாதிரி நானும் வேலை பார்க்கிற இடத்தில் போன் செய்தேன்...' என்றாளாம்.

இந்தக் கதையை என் அலுவலக மலையாளி நண்பன் சொன்னான்... கொஞ்சம் பட்டி பார்த்து பகிர்ந்திருக்கிறேன்.

நகைச்சுவை

ங்க எகிப்து இஞ்சினியர் (இவனைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன்) சில தினங்களுக்கு முன்னர் ஒரு பாகிஸ்தானியின் டாக்ஸியில் ஏறியிருக்கிறான். இங்கு டாக்ஸி டிரைவர்கள் பயணிகளுடன் நன்றாக பேசிக்கொண்டு வருவார்கள் என்பதால் எங்க ஆளுடன் டிரைவர் பேசியபடி வர, இவனும் சந்தோஷமாகப் பேச ஆரம்பித்திருக்கிறான்.

பேச்சின் இடையே 'இப்ப பிலிப்பைனி நிறைய வந்துட்டானுங்க... இவனுகதான் இந்த நாட்டைக் கெடுக்கிறானுங்க... அதிலும் குறிப்பா பிலிப்பைனி பொண்ணுங்க ரொம்ப மோசம்'ன்னு சொல்லியிருக்கிறான். உடனே எங்காளும் 'ஆமா... ஆமா... நீங்க சொல்றது சரிதான்... கச்சடா பீப்பிள்ஸ்' அப்படின்னு சொல்லவும் டிரைவருக்கு நம்ம சொல்றதுக்கு ஆமா போட ஒரு ஆடு சிக்கிருச்சுன்னு சந்தோஷமாயிருச்சாம். 

அடுத்த தாக்குதலாய் 'எனக்கு இந்த எகிப்துக்காரனுங்களைக் கண்டாலே பிடிக்காது' என்று சொல்லியிருக்கிறான். நம்மாளுக்கு டர்ர்ர்ரு.... ஆனாலும் தானும் எகிப்துக்காரந்தான் என்பதைக் காட்டிக்காமல் 'ஏன் பிடிக்காது..?' என்று கேட்டிருக்கிறான். 'அவனுக வேலையே பாக்கமாட்டானுங்க... ஆனா நம்மளை அதைச் செய்யி இதைச் செய்யின்னு கத்திக்கிட்டே இருப்பானுங்க... எனக்கு மேனேஜர் எகிப்துக்காரந்தான்... ஒரு வேலையும் தெரியாது... ஆனா தெரிஞ்சமாதிரி கத்திக்கிட்டே இருப்பான்... எனக்கு சுத்தமாவே பிடிக்காது' என்றானாம். நம்மாளு ஒண்ணுமே பேசலையாம். அவன் சொன்னது உண்மைதான்... அவனுக கத்துவானுங்களே தவிர வேலை பாக்க மாட்டானுங்க... இவன் எங்கிட்டுப் பேசுறது. 

இவன் ஒண்ணும் பேசாமல் இருக்கவும் பாகிஸ்தானி 'சார் நீங்க எந்த நாடு..?' அப்படின்னு கேட்டிருக்கான். நம்மாளு சுதாரிச்சிக்கிட்டு 'நான் சூடானி' என்றதும் 'பாகிஸ்தானியும் சூடானியும் உழைப்பாளிங்க... ரெண்டு பேரும் சேம்... சேம்...' என்றானாம். இவனும் 'ஆமா... ஆமா'ன்னு ஆமோதிச்சிட்டு வந்துட்டான். ஆபிசுக்கு வந்ததும் வராததுமாய் சொல்லிச் சொல்லிச் சிரித்தான். 'உன்னையப் பாக்கும் போது சூடானி மாதிரித்தான் இருக்கே' என்று நான் சொல்ல, எல்லோரும் ரொம்ப நேரம் சிரித்தோம். அதன்பின் அடிக்கடி 'குமார்... பாகிஸ்தானி சூடானி சேம்.. சேம்...' என்று அடிக்கடி சொல்லிச் சிரித்தான்.

குடிகாரன்

ங்கு மலையாள நண்பர் ஒருவரின் அறைக்கு முஸ்ஸாபாவில் (அபுதாபியில் இருந்து சற்றே தள்ளியிருக்கு ஒரு தொழில்துறைகள் நிறைந்த இடம்) இருந்து ஒருவர் வாராவாரம் தொடர்ந்து வருவார்.  இங்கு விடுமுறை தினங்களில் குடி... குடி... என குடித்துக் கொண்டே இருப்பார்கள்.  அதுவும் மலையாளிகள் சொல்லவே வேண்டாம்.. குடிக்கும் வரை மச்சான்... மச்சான்... போதை ஏறிட்டா இடுப்பு வேட்டியை அவிழ்த்துப் போட்டுட்டு கட்டிப் புரளுவானுங்க... மறுநாள் காலையில மீண்டும் மச்சான்... மச்சான்னு பாட்டிலை எடுத்திருவானுங்க... 


சரி கதைக்கு வருவோம்... வாராவாரம் வருபவரை தண்ணியிலயே குளிப்பாட்டியிருப்பானுங்க போல... ஆளுக்கு அந்த் அறையும் குடியும் ரொம்ப பிடிச்சிப் போச்சாம். எனக்கும் இங்கயே ஒரு இடம் பாருங்கள்... நானும் உங்க கூட இருக்கேன் என்று சொல்ல, எங்க அறையில் இடமில்லை... பக்கத்தில் பார்க்கலாம்... என்று சொல்லிவிட்டாராம். பின்னர் அடிக்கடி போனில் கேட்க, சொல்லி வைத்திருக்கிறேன் வரட்டும் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார். உங்க ரூம்லயே தங்கிக்கிறேன்... கீழ படுத்தாலும் பரவாயில்லை என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார். முஸ்ஸாபாவில் வேலை பார்க்கும் இடத்துக்கு அருகே தங்கியிருக்கிறாராம். அபுதாபியில் இருந்து போனால்  காலை, மாலை டிராபிக்கில் ஒரு மணி நேரத்துக்கு மேல் பயணம் செய்யணும் அப்படியிருந்தும் நாவில் குடியின் ருசி... கீழே படுக்கிறேன் என்று சொல்ல வைத்திருக்கிறது. 

அவர் தினமும் போன் பண்ண நண்பருக்கு எரிச்சலாகிவிட்டதாம். அதுவும் இரவு பத்து மணிக்கு மேல் கொஞ்சம் பெக்கை உள்ளே விட்டதும் ஞாபகம் வந்து போனில் அழைத்து விடுவார் போல. நண்பர் செம கடுப்பில் இருந்திருக்கிறார். ஒருநாள் இரவு பதினோரு மணிக்கு மேல் நல்ல போதையில் 'எனக்கு உங்க அறையில் இடம் கிடைக்குமா?' என்று கேட்டதும்தான் தாமதம், 'டேய்... இனிமே ராத்திரியில போன் பண்ணி ரூம் கேட்டு தொந்தரவு பண்ணினே மவனே இங்கயிருந்து டாக்ஸி பிடிச்சு வந்து தூக்கிப் போட்டு மிதிச்சே கொன்னுருவேன்' என்று கத்தியிருக்கிறார். அறை நண்பர்கள் எல்லாரும் பயங்கர சிரிப்பு, அந்தாளு அப்புறம் போனே பண்ணலை என்று என்னிடம் சொன்னபோது நான் என்ன செய்திருப்பேன்... அதுதான் ... அதேதான்... நானும் சிரித்தேன். தண்ணி ஊத்தி வளர்த்துட்டு மிதிச்சிக் கொன்னுருவேன்னு சொல்லியிருக்கியே என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்... 

மழை
ரில் உலுக்கி எடுக்கிறது மழை... வெள்ளக்காடாய் நிறைந்து நிற்கிறது மழை நீர்... இங்கும் பருவநிலை மாற்றம் ஆரம்பமாகிவிட்டது. கடந்த சில தினங்களாக மழை மேகம் சூழ்ந்திருக்கிறது. புதன் கிழமை லேசான தூறல் இருந்தது. துபாயில் கொஞ்சம் அழுத்தமான மழை பெய்திருக்கிறது. சென்ற முறை எல்லா இடத்திலும் நல்ல மழை பெய்தபோதும் அபுதாபியில் மட்டும் மழை இல்லை... இந்த முறை கொஞ்சமாவது மழை பெய்யலாம் என்றே தோன்றுகிறது இருந்தும் முதல் மழை சுற்றுவட்டாரத்தில் அழுத்தமாக விழ, இங்கு தூறலாய் சென்றிருப்பதால் இந்த முறையும் அபுதாபியில் மழை இருக்காதோ என்றுதான் தோன்றுகிறது.

ஹை ஹீல்ஸ்

துவும் எங்க எகிப்துக்காரன் சொன்னதுதான்... நேற்று புதிய ஷூ அணிந்து வந்தான். அது குறித்து 'இட்ஸ் வெரிகுட்' என்று சிலாகித்தான். மேலும் ஷூவின் அடிப்பாகம்  சற்று பெரிதாக வைக்கப்பட்டிருந்தால் அது 'நாட் குட்' என்றும் சொன்னான். அப்போது 'நம்ம போடுற ஷூவுல ஒரு இஞ்ச் பெரிசா இருந்தா சரியில்லைன்னு சொல்றே... பொண்ணுங்க போடுற ஹை ஹீல்ஸ் எத்தனை இஞ்ச் பெரியது' என்று மலையாளி அவனிடம் கேட்க, அவன் பொண்ணுங்க எல்லாம் ஸ்டூல் உயரம் தூக்கிப் போடுதுங்க, அது தவறு... முதுகுவலி வந்திரும் என்றான். பின்னர் என்னிடம் 'குமார்... நான் இங்க முதன் முதலில் வரும்போது எங்க கூட ஒரு பொண்ணும் வந்துச்சுல்ல நீ பாத்திருக்கிறாய்தானே...' என்றான். 'ஆமா அதுக்கு என்ன..?' என்றேன். 'அந்தப் பொண்ணு 12 இஞ்ச்ல ஹை ஹீல்ஸ் வச்ச செருப்புதான் போட்டிருக்கும்.' என்றான். 'என்னது 12 இஞ்சா..? எதுக்கு இத்தனை உயரம்'ன்னு கேட்டதும் அவன் சிரிக்காமல் 'நானும் அதுக்கிட்ட கேட்டேன்... அதுக்கு என்னோட கணவன் ரொம்ப உயரம்ன்னு சொல்லும்' என்றானே பார்க்கலாம். எங்களிடம் சிரிப்பொலி அடங்க நேரம் ஆனது.

சினிமா

ம்முட்டி நடித்த ஒரு மலையாளப்படம் பார்த்தேன்... படம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை... ரொம்ப மோசம். அதே மாதிரி நேற்றிரவு தூக்கம் வராமல் பரஞ்சோதியின்னு ஒரு தமிழ்ப்படம் பார்த்தேன். இசைத்தட்டு வைத்து கிராமபோன் பெட்டியில் பாட்டுக் கேட்கும் அப்பா, சாதி சாதியின்னு சொல்லிக்கிட்டு அருவாளை எடுத்துக்கிட்டு அலையும் கூட்டம். செல்போனே பயன்படுத்தாத மக்கள் எனப் படம் பார்த்தபோது எதுவுமே ஒட்டவில்லை. இருபது வருசத்து முன்னாடி எடுத்திருக்க வேண்டிய படம் போலும்... முடியலை. மோகன்லால் - மஞ்சு வாரியர் நடித்த என்னும் எப்போழும் ஒரு பத்திரிக்கையாளன் வக்கீலை பேட்டி எடுக்க அலைவதும்... வக்கீலுக்கான வாழ்க்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதுமான கதை... பரவாயில்லை... பார்க்கலாம்.

கொண்டாட்டம்

டிசம்பர்-02 ஆம் தேதி அமீரகத்தின் தேசிய தினம்... அதற்கான கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டன. நேற்று நாங்கள் வேலை செய்யும் அபுதாபி தண்ணீர் மற்றும் மின்சாரத் துறை (ADWEA) அலுவலகத்தில் சிறப்பான விழா நடைபெற்றது. மதியம் ஆடு, மாடு, ஓட்டகம், மீன் என கலக்கலான விருந்து.... நமக்கு மீன் மட்டுமே நாட்டம் என்பதால் அதனோடு பலவகை சாலட்டுக்களை நிறைவாய் சாப்பிட்டேன். பின்னர் இனிப்பு வகைகள் அடங்கிய ஒரு பெரிய பெட்டியும் எங்களது கேபினுக்கு வந்தது. மதிய சாப்பாடு தூக்கல் என்பதால் இதற்கு மேல் தாங்காது  என்று வயிறும் மனதும் சொல்லிவிட அப்படியே அறைக்கு எடுத்து வந்து கொடுத்தாச்சு.

****
ன்று காலை கொலையாளி யார்? தொடரைப் பதிந்தாச்சு... பின்னர் மனசின் பக்கம் வெள்ளியன்று தொடர்ந்து பதிந்து வருகிறோமே... இப்படி கதையை போட்டுட்டோமே என்று யோசித்து யோசனையின் முடிவில் அவசரமாய் தொகுத்தது இந்த வார மனசின் பக்கம்... ரசித்தீர்கள்தானே நட்புக்களே....

மீண்டும் அடுத்த வெள்ளியன்று...
-'பரிவை' சே.குமார்.

16 எண்ணங்கள்:

துபாய் ராஜா சொன்னது…

பரிசுகளும், பாராட்டுக்களும் தொடர வாழ்த்துக்கள் நண்பரே...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பல்துறையில் பல நிலைகளில் அமைந்துவரும் தங்களின் எழுத்துப்பணி பாராட்டத்தக்கது. மென்மேலும் பல சாதனைகளைப் படைக்க மனம்நிறைந்த வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே
வெற்றிகள் தொடரட்டும்
தம+1

ஸ்ரீராம். சொன்னது…

தமிழ்க்குடில் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றமைக்கு எங்கள் வாழ்த்துகள்.

குட்டிக்கதை முனரே படித்திருக்கிறேன்!

ரசித்தேன். தம +1

துரை செல்வராஜூ சொன்னது…

சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றமைக்கு நல்வாழ்த்துகள்..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கதைகளை ரசித்தேன்... சிரித்தேன்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

உங்கள் எழுத்துக்களில் நட்பு பாசம்,சமூகபார்வை அனைத்தும் அமைந்துள்ளது உணர்வுபூர்வமான உண்மை மன நிலையை பிரதிபலிப்பது அனைவரையும் கவர்கிறது . வாழ்த்துக்கள்.

J.Jeyaseelan சொன்னது…

பரிசுகள் பாராட்டுகளுக்கு வாழ்த்துகள் சார்... கதைகள் அனுபவங்கள் எல்லாமே சூப்பர்.. சூடானி பாகிஸ்தானி செம.. நம்ம இந்தியர்கள எப்டி நினைக்குறாங்கன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் நடத்திய கட்டுரைப்போட்டியில் நான் எழுதிய 'அரசியல்வாதியாய் காமராஜர்' என்ற கட்டுரைக்கு மூன்றாம் பரிசு கிடைத்திருக்கிறது. //

மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். வெற்றிகள் மேலும் மேலும் தொடரட்டும்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//'ஐயா நீங்கள்லாம் வேலை பாக்கிற இடங்களில் இருந்து போன் பண்ணிட்டு வந்துடுறீங்க... அது மாதிரி நானும் வேலை பார்க்கிற இடத்தில் போன் செய்தேன்...' என்றாளாம்.//

ஏற்கனவே படித்த கதைதான் என்றாலும், மீண்டும் ரசித்து சிரிக்க முடிந்தது. மற்ற அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

கும்மாச்சி சொன்னது…

குட்டிக் கதைகள் சிறக்க வைத்தன. நல்ல பதிவு.

KILLERGEE Devakottai சொன்னது…

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் நண்பரே கதம்பம் நன்று

Unknown சொன்னது…

மேன்மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

இந்த வாரம்
கதைகள்,
அனுபவங்கள்
என
கலக்கலாய்
இருந்தது...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வாழ்த்துகள் குமார்! கதையும், அனுபவ துணுக்குகளும் வெகு ஜோர்!!!

நிஷா சொன்னது…

குட்டிக்கதை சூப்பர்.
வேலை பார்க்கும் இடத்திலிருந்து போன் செய்யும் உரிமை உங்களுக்கு மட்டும் தானோ? சரியான நெத்தியடி!

தமிழ்க்குடில் போட்டியில் தொடர்ந்து வெற்றி பெறும் குமாருக்கு பெரிய ஓஓஒ!

குதிகால் உயர சூ .. முதுகு வலி வரும் என்பது சரியே! ஆனால் யார் கேட்பதாம். அடுத்த பிறவியல் உங்க நிஷா அக்கா கொஞ்சூண்டு உசரமாய் பிறக்கணும்னு வேண்டிக்கோங்க.!

தேசிய தினக்கொண்டாட்டத்தினை போட்டோ பிடித்தால் அதையும் ஒரு பதிவாக்கலாம்.. பந்திக்கு முந்துவது போல் கில்லர்ஜி சாருக்கு முன்னாடியே போட்டோ பிடிச்சு பதிவு போட்டிரணும்.

கிரைம் தொடர்!! கொலையாளி யார்னு சொன்னால் கதையை திருப்பி போட்டிருவிங்கன்னு தான் நான் சொல்லல்லையாக்கும். ஹாஹா1

மொத்தத்தில் அனைத்தும் சூப்பர்.