மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 5 ஜனவரி, 2015

என் உயிரே...


ன்பு நிறைந்த மனைவி இருந்தால் போதும் வாழ்க்கை வசப்படும். அப்படி ஒரு அன்பான மனைவி கிடைக்கப் பெற்ற பாக்கியவான்களில் ஒருவன் நான். பத்து வருடங்களுக்கு முன்னர் என் கரம் பிடித்தவள் அன்பிலே என்னை விட உயர்ந்தவள்.

மதுரையில் பிறந்து... படித்து... வளர்ந்தவள், கிராமத்தில் பிறந்து... வளர்ந்த எனக்கு மனைவியானாள். பட்டணத்துப் பெண் இந்தப் பட்டிக்காட்டானுக்கு சரியாகுமா என்ற யோசிப்பினூடே என்னுள் புகுந்து என்னை ஆட்கொண்டவள்.

பெண் பார்க்கும் படலமெல்லாம் துவங்கவில்லை... பார்த்தது அவளை மட்டுமே... வேலையும் சரியில்லை... சொற்ப சம்பளமே என்ற நிலையில் இப்போது திருமணம் வேண்டாம் என்று இருந்தவனை, பெண் பார்க்க அழைத்துச் சென்றபோது வேண்டாம் எனச் சொல்ல நினைத்து சொல்லாமலே வந்து அவள் கரம் பற்ற, என் இதயத்துணை ஆனவள்.

ஆரம்பகால வாழ்க்கையில் புறாக்கூண்டு வீட்டுக்குள் இருவரும் வாழ்ந்த போதும் பெரிய வீட்டில் பறந்து திரிந்தவள் என்ற எண்ணம் இல்லாமல் என்னோடு கஷ்டமான சூழலிலும் சந்தோஷ வானில் பறந்தவள்.

என்னை விட்டுப் பிரியக்கூடாதென என்னோடு ஸ்ருதி ஒன்றாம் வகுப்பு படிக்கும் வரை சேர்ந்தே இருந்தவள், வாழ்க்கையில் பணம் முக்கியம்... மற்றவர் முன் நாமும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதால் பாசத்தை தேக்கி வைத்து எனக்கு பிரியாவிடை கொடுத்தவள்.

ஆறு ஆண்டுகளாய் தனித்தனியே வாழ்க்கை என்ற போதிலும் தினமும் என்னுடன் சிரித்துப் பேசினாலும் இரவுகளில் பிரிவின் சுமையை கண்ணீரில் கரைத்துக் கொண்டிருப்பவள்.

யாரிடமும் எதற்காவும் என்னை விட்டுக் கொடுக்காதவள்... தவறாக பேசுபவர்களை தட்டிக் கேட்பவள்.

என் கோபத்தை எல்லாம் பொறுத்துக் கொண்டு பத்தாண்டுகளாக என்னோடு பயணிப்பவள்.

எனக்கு எதுவும் வேண்டாம்... நீங்கள் அருகில் இருந்தால் போதும் என தினமும் சொல்லிச் சொல்லி வருந்துபவள்.

பொருளாதாரத்துக்கான பிரிவு நிரந்தரமல்ல என்ற போதிலும் இத்தனை ஆண்டு காலப் பிரிவு எங்களுக்குள் இன்னும் அதீத பாசத்தையும் நெருக்கத்தையும் கொடுத்திருப்பதற்கு காரணமானவள்.

நானே உலகம்... நானே வாழ்க்கை.... நானே உடம்பு... நானே உயிர்... என்று எனக்காக வாழும் ஒரே ஜீவனவள்.

எத்தனை கோபத்தை விஷமெனக் கக்கினாலும் அத்தனையும் துடைத்து அடுத்த நிமிடமே அன்பாய் பேசுபவள்.

எங்களுக்குள்ளும் சண்டைகள், சச்சரவுகள், கோபங்கள் எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன... இல்லாத வாழ்க்கை ஒன்று இருந்தால் அது சந்தோஷம் இழந்த வாழ்க்கைதானே..? எங்களுக்குள் இதெல்லாம் இருந்தாலும் அவளின் நேசமும் பாசம் எல்லாத்தையும் மறைத்து விடும்... அப்படிப்பட்ட பாசத்தின் பிறப்பிடமானவள்.

ஊருக்கு கூட்டி வருவதாய் சொல்லிச் சொல்லி வருடங்கள் கடந்தாலும் அதற்காக சில நேரம் கோபப்பட்டிருந்தாலும் எல்லாம் மறந்து எனக்காய் வாழ்பவள்.

தாய்க்குப் பின் தாரம் என்பார்கள்... எனக்கு தாரமே தாயாய் வாய்த்திருக்கிறாள்... எல்லாம் முற்பிறவிப் பயனோ இல்லை நான் வணங்கும் தெய்வங்கள் கொடுத்த நலனோ... நான் அடைந்த அன்பானவள்.

குழந்தைகள் மீது பாசம் வைத்திருப்பதால் அவள் மீது பாசம் இல்லை என செல்லச் சண்டை இட்டாலும் எனது இதயத் துடிப்பே அவள்தான் என்பதை அறிந்தவள்.

முகத்துக்கு முன்னே... பின்னே... என இரண்டு முகம் காட்டும் உறவுகளை மதிப்போடும்... உள்ளன்போடும்.. கவனிப்பவள்.

பெரியவர்களை மதிக்கத் தெரிந்தவள்... எங்கம்மா கூட வீட்டுக்கு வந்த மருமக்களெல்லாம் நல்லவளுங்க... பெத்ததுகதான் சரியில்லைன்னு அடிக்கடி சொல்வாங்க.... அப்படி அனைவருக்கும் அன்பானவள்.

இந்த வருடத்தில் ஒரு இரண்டும் மாதமாவது இங்கு கூட்டி வந்து என்னுடன் வைத்துக் கொள்ளும் முயற்சியில் நான்... இறையருளால் விரைவில் நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


என்னவள்...

என் இதயம் அவள்...

என் இயக்கம் அவள்...

எனக்காக வாழ்பவள்...

எனக்கு தாயானவள்...

என் செல்ல நித்திக்குட்டிக்கு இன்று பிறந்தநாள்...

எல்லோரும் வாழ்த்துங்க சொந்தங்களே... உங்கள் ஆசி எங்களுக்கு நிறைவான வாழ்வைத்தரும்...
-'பரிவை' சே.குமார்.

41 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

துரை செல்வராஜூ சொன்னது…

அன்னை அபிராமவல்லி துணை இருப்பாளாக!..
பல்லாண்டு பல்லாண்டு இனிதே வாழ்க!..

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா.

தங்களின் மனைவியானவள் எப்படிப்பட்அன்புள்ளம் கொண்டவள் என்பதை மிக உருக்கமாக சொல்லியுள்ளீர்கள்.... தாங்கள் சொல்வது போல எல்லோருக்கும் இப்படி அமைவதில்லை..உண்மைதான்

சீரும் சிறப்பும் பெற்று பால்லாண்டு காலம் மன மகிழ்ச்சியுடன் வாழட்டும்... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் த.ம 3

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ADMIN சொன்னது…

பதிவினூடே தங்களது உள்ளத்து உணர்வுகளை புரிந்துகொள்ள முடிந்தது.

தங்கள் துணைவியாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...!!

ADMIN சொன்னது…

ஒரு யூஸ்புல் டெக் பதிவு: கொஞ்சம் வித்தியாசமாகவும் எழுதயிருக்கேன். படிச்சிப் பாருங்களேன்...!

சுட்டி: உங்களுக்குத் தேவையான புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து கொடுக்கும் பயனுள்ள இணையதளம்

ஸ்ரீராம். சொன்னது…

உங்கள் துணைவியாருக்கு எங்கள் சார்பிலும் வாழ்த்துகளைச் சொல்லி விடுங்கள் குமார்.

KILLERGEE Devakottai சொன்னது…

படிக்கப் படிக்கப் மனம் மணம் கொண்டது நண்பரே.... தாங்களிருவரும் நீடூழி வாழ இன்றைய நாளில் இறைவனை வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடனும், எல்லா நலமுடனும்.
அன்பன்
கில்லர்ஜி.
தமிழ் மணம் 5

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே
மனைவியையும் குழந்தைகளையும்,
சில மாதங்கள் அழைத்துக் கொள்ளுங்கள்
வாழ் நாள் எல்லாம் நீங்கா நினைவுகளாய்.
மனைவி மற்றும் குழந்தைகளின் மனதில்
நிலைத்திருக்கும்
தங்களின் முயற்சி வெல்லட்டும் நண்பரே
வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தம 6

”தளிர் சுரேஷ்” சொன்னது…

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பிரிவின் வலி புரிகிறது! உங்கள் எண்ணம் இந்த ஆண்டு கைகூட வாழ்த்துக்கள்!

Geetha சொன்னது…

இத்தனை அன்பும் பாசமும் கொண்ட உள்ளங்கள் நீடூழி வாழட்டும் பல்லாண்டு....மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

Geetha சொன்னது…

த.ம.7

Unknown சொன்னது…

பரிவை ,பிரிவை சொன்ன விதம் அருமை :)
த ம 8

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ரூபன்...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் நண்பா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் நண்பா...
பார்த்தேன்... நல்ல பகிர்வு.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
கண்டிப்பாக விரைவில் அழைத்து வருவேன்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா..
தங்கள் வருகைக்கும் வாக்குக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரி...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரி...
தங்கள் வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஜி...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
கமெண்ட் ரைமிங்காக... ரசித்தேன்...

Kasthuri Rengan சொன்னது…

த ம +

Unknown சொன்னது…

வாழ்க வளமுடன்! பல்லாண்டு!

சென்னை பித்தன் சொன்னது…

என் மனம் நிறைந்த வாழ்த்துகள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

உங்களின் அன்பின் ஆழத்தை எழுத்துக்களின் மூலமாக உணரமுடிகிறது. அனைத்தும் நல்லபடி நடக்க எனது வாழ்த்துக்கள்.

Angel சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரிக்கு ..

அருணா செல்வம் சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு இருவரும் சேர்ந்து வாழ்க!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மது சார்...
தங்கள் வருகைக்கும் வாக்கிற்க்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நண்பரே! தமதமான வாழ்த்துக்கள்! சகோதரிக்கு! தங்கள் இருவரின் அன்பும் நிலை கொண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம். தாங்கள் தங்கள் குடுமப்த்துடன் சேர்ந்து வாழவும் இறைவன் அருள பிரார்த்தித்து வாழ்த்துகின்றோம் நண்பரே! அருமையாகச் சொல்லியிருக்கின்றீர்கள்! அதனுள் தங்களின் பிரிவின் வேதனை பளிச்! மகிழ்வும் அன்பும் பெருக வாழ்த்துகின்றோம்! நண்பரே!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே!

அன்பான குடும்பம் என்றும் மகிழ்ச்சியே.! அருமையாக மனதிலுள்ளதை சொல்லியிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்...! அன்பான துணைவியைப் பெற்ற நீங்கள் கொடுத்து வைத்தவர். நீங்கள் இருவரும் இதுபோல் பல நூறாண்டுகள் இணைப் பிரியாமல் வாழ மனதாற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...! உங்கள் துணைவியாருக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்....(தாமதமான வாழ்த்திற்கு வருந்துகிறேன்.) நன்றி..

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.