மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 17 ஜனவரி, 2015

மனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்

ன்று எங்கள் அன்பு மகன் விஷாலுக்குப் பிறந்தநாள். அவன் நீண்ட ஆயுளோடும்... நல்ல கல்வியோடும்... நிறைவான வாழ்வும் நிறைந்த சந்தோஷமுமாய் வாழ உங்கள் ஆசிகளை வேண்டி....

நேற்றிரவு நண்பரின் திடீர் அழைப்பின் பேரில் 'ஐ' படம் பார்த்தாச்சு. இயக்குநரின் சங்கரின் முந்தைய படங்களைப் போல் அவ்வளவாக கவரவில்லை. காதலும் காதலுக்கான பழிவாங்களுமான அரதப் பழசான தமிழ் சினிமாக் கதையை பிரமாண்டம் என்னும் சர்க்கரை சேர்த்து தித்திப்பான பொங்கலாக்க முயன்று தோற்றிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். அவ்வளவாக நல்ல கதை என்று சொல்ல முடியாத ஒரு படத்தில் சண்டைக்காட்சிகளை நீளமாக்கி நகர்த்தியிருக்கிறார். ஐந்து வில்லன்களில் 'சைடு வகுப்பெடுத்து சாப்டா பேசினா சரத்குமார்ன்னு நினைச்சியோ அவருதான் மெயின் வில்லன்' அப்படின்னு ராம்குமார் இறுதிக்காட்சியில் சொல்வதற்கு முன்னரே அந்த நபர் வரும் இரண்டாவது காட்சியிலேயே நமக்கு இவர்தான் முக்கிய வில்லன் எனத் தெரிய வருவதால் சுவரஸ்யம் இல்லை. இசைப்புயலின் இசையும் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும் அருமை என்றால் மெர்சலாயிட்டேன் தவிர மற்ற பாடல்கள் ஈர்க்கவில்லை. படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை கலக்கியிருப்பவர் சீயான். மனுசனுக்கு தொழில் மீது எவ்வளவு ஈர்ப்பு... அப்பா... கலக்கிட்டார். படம் எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்யவில்லை என்றாலும் விக்ரம் நிறைவாய் நிற்கிறார். தன்னை வருத்தி கலைஞன்டான்னு சொல்ல வைத்திருக்கிறார். சந்தானம், பவர்ஸ்டார் கூட்டணி சிரிப்புக்கள் பரவாயில்லை. 


மாடலாக வரும் எமி அழகோ அழகோ... அவர் விளம்பரப் படங்களில் நடிப்பது போன்று வரும் பாடல் காட்சியில் அவர் மீது கேமரா விளையாடியிருக்கிறது. தன்னைக் காதலித்தது போல் நடித்தது தெரிந்த இடத்தில்... இன்னும் ஒரு சில இடங்களில் விக்ரம் வசனம் பேசும் போது தனுஷ் தெரிஞ்சான்ய்யா... அது எனக்கு மட்டும்தானான்னு தெரியலை... திருநங்கைகளை கேவலமாக காட்டுவதும், இரட்டை அர்த்தம் என்பதை விட நேரடி அர்த்தமே கொள்ளக்கூடிய அசிங்கமான வசனங்களை வைத்திருப்பது ஷங்கருமா என நினைக்க வைக்கிறது. பிரமாண்டத்தை நம்பி படமெடுக்கும் இயக்குநர் ஷங்கர், ரசிகர்கள் தனது படத்தை எப்படியும் பார்ப்பார்கள் என்ற தீவிர நம்பிக்கை வைத்திருக்கிறார். அதை முதலில் அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். மீண்டும் இந்தியன் போன்ற ஒரு படத்தைக் கொடுக்க வேண்டும். ஆளானப்பட்ட சூப்பர் ஸ்டாரோட லிங்காவையே ஓரங்கட்டுன ரசிகர்கள் பிரமாண்டத்தை பிச்சி உதறுவானுங்கங்கிறதுக்கு 'ஐ' உதாரணம். மொத்தத்தில் ஐ-யை விக்ரம் என்னும் மகா கலைஞனுக்காகப் பார்க்கலாம்.

ரு எழுத்தாளன் இனிமேல் எழுதமாட்டேன்... எனக்குள் இருந்த எழுத்தாளன் செத்துவிட்டான் என்று சொல்லும் அளவுக்கு கொண்டு சென்ற சமூகத்தை என்ன சொல்வது. தனது நாவலில் ஒரு ஊர்ப்பெயரைக் குறிப்பிட்டு எழுதும் போது அதனால் பிரச்சினைகள் எழும் என்று நினைத்தால் அதை அப்போதே கற்பனைப் பெயராக மாற்றியிருக்கலாம். நம்ம ஊர் பெயரைப் பயன்படுத்த நமக்கு உரிமை இருக்கு என்று நினைத்திருக்கலாம். அதேபோல் நம்ம ஊர் பெயரை களங்கப்படுத்தியிருக்கிறார் என்பதை நாலாண்டுக்குப் பிறகு இவ்வளவு பெரிய பிரச்சினை ஆக்கும் நபர்கள், புத்தகத்தின் முதல் பிரதி வந்த போதே அவரிடம் பேசி அடுத்த பிரதியில் பெயர் வராமல் செய்திருக்கலாம். நாலாண்டுக்குப் பிறகு ஒரு அரசியல்... அது ஒரு எழுத்தாளனின் சிந்தனையை சிறையிலிடும் அளவுக்குப் போய்... ஊரை விட்டே போ என்று மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறையால் சொல்ல வைத்து... எழுத்தாளன் செத்துட்டான்யா என அறிக்கைவிட வைத்து... சை... என்ன மாதிரியான சூழலில் நாம் இப்போது வாழ்கிறோம். ஒரு எழுத்தாளனின் பேனாவைப் பறித்து வைத்து அவன் சிந்தனைகளுக்கு தீயிட்டு விட்டோம் என மார்தட்டிக் கொள்வதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கு. இதில் இருந்து ஐயா பெருமாள் முருகன் அவர்கள் மீண்டு வர வேண்டும்... மீண்டும் வரவேண்டும்... 


வெண்ணிலா வீடு படத்தை இரண்டு நாட்களுக்கு பொழுது போகவில்லை எனப் பார்த்தேன். இரவல் நகை வாங்கி அதனை களவு கொடுக்கும் கதைகள் பல புத்தகங்களில் வெளி வந்திருக்கின்றன. அதே கதைக்களம்... அன்பான வாழ்க்கை. அழகான குழந்தை என வாழும் குடும்பத்துக்குள் பக்கத்து வீட்டுக்கு குடிவரும் பணக்காரியின் நட்பும்... அதன் பின்னான நிகழ்வுகளில் அவளின் நகையை வாங்கி அணிந்து திருமணத்திற்குச் சென்று அதை களவு கொடுத்து விட்டு படும் இன்னல்களும் என வெண்ணிலா வீடாக இருந்த குடும்பம் எப்படி அமாவாசை இருளுக்குள் செல்கிறது என்பதைச் சொல்லியிருக்கிறார்கள். நல்ல படம்.... பார்க்கலாம்...

தினைந்து நாட்கள் அலைனில் ஓட்டியாச்சு.. இன்னும் ஒரு வாரம்... இரண்டு வாரம்... என்று சொல்கிறார்களே தவிர முடிவாய் சொல்ல மாட்டேங்கிறானுங்க... எதாயிருந்தாலும் சொல்லுங்கடா நான் இரண்டு இடத்திலும் வாடகை கொடுக்க முடியாது என்று மின்னஞ்சல் அனுப்பினால் இன்னும் பதிலில்லை. அபுதாபி குளிரை விட அலைனில் குளிர் கொன்று எடுக்கிறது. இங்கு ஹீட்டர் தண்ணீரில் 5.30க்கு குளிக்கும் போது கிடைத்த சுகம் 5 மணிக்கு எழுந்து குளிரக்குளிர தண்ணியை ஊத்தும் போது கிடைக்கவில்லை. பின்னர் குளிரில் பேருந்து நிறுத்தம் வந்து பஸ் பிடித்து அலுவலகம் சென்று வேலை பார்த்து திரும்ப அறைக்கு 3.30 மணிக்கு வந்தாலும் குளிர் மட்டும் குறைவேனா என்கிறது. அலுவலகத்திலோ பெண்கள் அதிகம்... பெரும்பாலும் அரபிப் பெண்களுக்கு வெளியில் எவ்வளவு குளிர் இருந்தாலும் ஏசியை மட்டும் குறைக்கும் மனசு வரவே வராது. அங்கயும் பிரீசர்தான்... என்ன செய்ய... எப்படா அபுதாபிக்கு வருவோம்ன்னு இருக்கு... ஆனா அறையை விட்டு எங்கும் செல்லாததால் ஊருக்குப் பேச, படிக்க, எழுத என நிறைய நேரம் கிடைக்கிறது. இங்கு 11.30 மணி வரை விளக்கு எரியும் அலைனில் 9.40க்கெல்லாம் விளக்கை அணைத்து விடுவதால் இரவில் எழுதும் எழுத்துக்களுக்கு தடாவாகிவிட்டது. 


டூ நூரா வித் லவ் அப்படின்னு ஒரு மலையாளப்படம் பார்த்தேன். சமூக சேவை செய்யும் இஸ்லாமியப் பெண்ணுக்கு எல்லா மதங்களிலும் நண்பர்கள். குழந்தை பிறப்பதில் பிரச்சினை என்பதாக ஆரம்பிக்கும் படம்.... மெல்ல பின்னோக்கி பயணிக்க... அவளின் சமூகசேவை, ஆராய்ச்சி, நட்பு, காதல் என நகர்ந்து கர்ப்பிணி ஆகும் போது இந்தக் குழந்தை வயிற்றில் வளர வளர அவளுக்கு மூச்சு விடுவதில் சிக்கல் வரும்.. உயிருக்கே ஆபத்து வரும் என்ற இடத்தில் நிற்க, கருவைக் கலைக்கலாம் என கணவன் மன்றாட அவளோ எனக்கு என்னோட குழந்தை வேணும் என பிடிவாதமாய் மறுக்க, பிரசவ சமயத்தில் மருத்துவமனையில் அவள் உயிருக்குப் போராட, பைக்கில் இந்த நினைவுகளைச் சுமந்து செல்லும் கணவன் விபத்தில் தலையில் அடிபட்டு அதே ஆஸ்பத்திரி ஐசியூவில் இருக்க, குழந்தை பிறந்து கணவனைப் பார்த்தவளுக்கு மீண்டும் பிரச்சினை வர, இதயத்தை மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். இதயம் மாற்றி மீண்டு வந்தாளா? அவளுக்கு யார் இதயத்தைக் கொடுத்தார்கள் என்பதை இறுதிக்காட்சியாக்கி முடித்திருக்கிறார்கள். ரொம்ப நல்ல படம்ன்னு சொல்ல முடியாது என்றாலும் பார்க்கலாம் ரகம்தான்.

விஷால் பள்ளியில் நடனத்தில் இரண்டாம் பரிசாக ஒரு கோப்பையும் சர்ட்டிபிகேட்டும் வாங்கி வந்திருந்தான். நேற்று எங்கள் ஊர் விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாம் பரிசாக டம்ளம் பெற்றிருக்கிறான். அவனை அவன் போக்கில் வளர விட வேண்டும் என்பதே எங்கள் ஆசை.

சில நிகழ்வுகள் அடிக்கடி நிகழும் போது என்ன மனிதர்கள் இவர்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அடுத்தவனைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி பொழைப்பை நடத்த நினைக்கும் பிறவிகளைப் பற்றி என்ன சொல்வது? நம்மிடம் உருகி உருகிப் பேசி, நம்ம சொந்தங்களிடம் நல்ல பெயர் வாங்க உன்னை அப்படிப் பேசினான், இப்படிப் பேசினான்... அவரை வாடான்னான் போடான்னான்... சொத்துக்கு ஆசைப்பட்டு கொல்லப் பாக்கிறான்னு வாய்க்கு வந்ததைப் பேசி வாழ நினைக்கும் ஈனர்களுக்கு என்ன பதில் சொல்வது? சொத்துக்கள் மட்டுமே ஒருவனுக்கு சுகத்தைக் கொடுக்குமெனில் அந்தச் சொத்துக்களை போட்டுக் கொடுத்து வாழ நினைக்கும் புண்ணியவான்களே துதி பாடி பெற்றுக் கொள்ளட்டும். எங்களுக்கு வேண்டாம்... கடனை வாங்கிக் கட்டினாலும் எங்களுக்கு என்று ஒரு வீடும் இரண்டு செல்வங்களும் சொத்தாய்... நிறைவான வாழ்க்கையை எங்களுக்கு கொடுக்க அதுவே போதும்... தயவு செய்து சொத்து சொத்து என்றோ... சொல்லாததை சொன்னேன் என்றோ சொல்லி வாழ நினைக்காதீர்கள்... அந்த வாழ்க்கை நரகலைத் தின்று வாழ்வதற்குச் சமம். இனி இது போல் என்னிடம் செய்யாதீர்கள். பிறர் போற்ற வாழப் பழகிக் கொள்ளுங்கள்... பிறரைத் தூற்றி வாழ நினைக்காதீர்கள். 

மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

20 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

தங்களது மகன் எல்லா நலனும் பெற்று நீடுழி வாழா இறைவனை வேண்டுகிறேன் நண்பரே...
ஆம்,
ஐயா பெருமாள் முருகன் அவர்கள் மீண்டு வர வேண்டும்... மீண்டும் வரவேண்டும்...
அதுவே எமது திண்ணம்.
தமிழ் மணம் - 1

துரை செல்வராஜூ சொன்னது…

பல்லாண்டு பல்லாண்டு நல்வாழ்வு வாழ்க!..

என - தங்கள் அன்பு மகனுக்கு நல்வாழ்த்துக்கள்..

படங்கள் பார்க்கும் சூழ்நிலையில் இல்லை..
எனினும் தங்களது தெளிந்த நீரோடை போன்ற எழுத்து நடையினால் - படங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிகின்றது.

வாழ்க நலம்..

எம்.ஞானசேகரன் சொன்னது…

சினிமா விமர்சனத்தையும் வெளிநாட்டுச் சூழலையும் அழகாக பதிவிட்டிருக்கிறீர்கள். அந்த மலையாள படத்தைப் பார்க்க வேண்டும். ஐ சப்பென்று ஆகிவிட்டது..

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
தங்களின் மகன் நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
விமர்சனம் தங்களின் பார்வையில் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி.த.ம4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” சொன்னது…

தங்கள் மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! மாதொரு பாகன் விஷயத்தில் தேவையற்ற போராட்டங்கள் நடப்பதாகவே தோன்றுகிறது. சினிமாக்கள் பார்ப்பதை தவிர்த்து வருவதால் அதைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை! நன்றி!

ஸ்ரீராம். சொன்னது…

விஷாலுக்கு அன்பு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சினிமா தியேட்டரில் சென்று பார்ப்பதில்லை. 'ஐ' படத்துக்கு இரண்டு விதமான விமர்சனங்களும் படித்தேன்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

விஷாலுக்கு எங்கள் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்! குழந்தையின் எல்லா கனவுகளும் நனவாக எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்!

ஐ! செம காப்பி போல....ஃப்ளை, ப்யூட்டி அண்ட் த பீஸ்ட், ஹல்க் படங்களை நன்றாகவே ஜீஸ் அடித்து இருக்கின்றார்கள் என்றும்....தோன்றுகின்றது.....

மாதொரு பாகன் ...பெருமாள் மீண்டு வர வேண்டும்....ஏன் சமூகம் இப்படி ஒரு எழுத்தாளரைச் சாகடிக்கின்றது என்று தெரியவில்லை....கருத்து, எழுத்துச் சுதந்திரம் இல்லையா? சென்னைப் புத்தகக் கண்காட்சியில் போராட்டம் நடத்தினார்கள்...எழுத்தாளருக்கு ஆதரவாக.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தங்களின் அன்பு மகனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
தம +1

ராமலக்ஷ்மி சொன்னது…

மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். பரிசுகள் பெற்றதற்கு என் பாராட்டுகளைத் தெரிவித்திடுங்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அன்பு மகன் விஷாலுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

சிவசம்போ வேண்டாமே...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் துளசி சார் மற்றும் கீதா மேடம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சிவசம்போ எடுத்தாச்சு அண்ணா... நன்றி.