மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 25 ஜனவரி, 2015மனசின் பக்கம்: ஐய்யய்யோ ஆம்பள... ஆஹா மீகாமன்

தினைந்து நாள் மட்டுமே அலைனில் வேலை என்று சொன்னவர்கள் ஒரு மாதம் ஆக்கிவிட்டார்கள். இதில் என்ன கொடுமை என்றால் பதினைந்து நாள்தானே என்று நண்பர் ஒருவர் மூலம் ஒரு அறையில் தங்கியாச்சு. அறையில் இருக்கும் மனிதர்கள் அனைவரும் நல்லவர்களே. அறையின் கதவை சாத்த முடியாது. எனவே கணிப்பொறி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எல்லாம் ஸ்கூல் பையன் போல் தூக்கிச் சுமக்கிறேன். அபுதாபி வந்ததில் இருந்து சொந்தச் சமையல்தான். ஹோட்டல் சாப்பாடு என்பது நமக்கு பிடிக்காத விஷயம். இந்த ஒரு மாசமாக ஹோட்டல் சாப்பாடு என்பது விருப்பமின்றியே எனக்குள் இறங்குகிறது. 

இந்நிலையில் இன்று காலை போன் செய்து அவன் இன்னும் வரவில்லை. நீ அவன் வரும்வரை அங்கயே இருன்னு சொன்னான். சும்மாவே கோவம் மூக்கு மேல நிக்கும். கட்டி ஏறியாச்சு... இப்ப அவனுக்கிட்ட இனி எவனுக்காகவும் நான் மாறி வரமாட்டேன். அவன் வந்தா அங்கயே நிறுத்து... நான் இந்த புராஜெக்ட் முடியிற வரைக்கும் இங்கயே இருக்கேன்னு சொல்லியாச்சு. இப்ப நீ என்னோட பிரதராக்கும்.... அவனாக்கும் இவனாக்கும்ன்னு சொன்னான்... ஒண்ணும் வேண்டாம் ராசா... நான் இங்கயே இருக்கேன்... அங்க வேலை இருக்கு இங்க வேலை இருக்கு நீ வேணுமின்னு இந்த அலைன் புராஜெக்ட் முடியிற வரைக்கும் சொல்லாதேன்னு சொல்லிட்டேன். எப்பவும் கோபம் வரும்... இன்னைக்கு கொஞ்சம் அதிகமாயிருச்சு... அடுத்த மாசத்துக்கு மெஸ் இருக்கும் அறையாகப் பார்த்து தங்கப் போகணும்... ஹோட்டல் சாப்பாடு இனி தொடர வேண்டாம்...

----------------


ந்த வார விடுமுறையில் அபுதாபி போனபோது 'மீகாமன்' படம் பார்த்தேன். என்ன விறுவிறுப்பான கதை... படத்தின் கதையை கொன்று சென்ற விதத்தில் இயக்குநர் கலக்கி இருக்கிறார். ஆர்யாவை ரொம்ப ரசிப்பதில்லை என்றாலும் இதில் அவரின் நடிப்பு சொல்லும் படி இருந்தது. சில இடங்களில் நம்பமுடியாத வகையில் காட்சிகள் இருந்தாலும் கதையின் போக்கிலும் படத்தின் விறுவிறுப்பிலும் அதெல்லாம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. ஹன்சிகா கூட அழகுப் பொம்மையாக வந்து போகாமல் கொஞ்ச நேரமே வருவதற்கு கிடைத்த கதாபாத்திரத்தில் நல்லாவே நடித்திருந்தார். மீகாமன் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத படம்.

----------------

சென்ற வாரம் பெய்த மழைக்குப் பிறகு இங்கு குளிர் ரொம்ப அதிகமாக இருக்கிறது. மாலை வேளைகளில் வெளியில் சென்றால் பல்லெல்லாம் தந்தி அடிக்கிறது. இதிலிருந்து தப்பவே வெள்ளி, சனி அபுதாபிக்குச் சென்று வந்தேன். அங்கும் குளிர் இருக்கத்தான் செய்தது என்றாலும் இந்தளவுக்கு இல்லை. குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் நிறைய நேரம் குளிக்க முடிந்தது. இங்கு காலையில் குளிரக் குளிர தண்ணீர் ஊற்றுவது என்பதே படிக்கும் காலத்தில் ஞாயிற்றுக்கிழமை அம்மா வலுக்கட்டாயமாக குடிக்க வைத்த வேப்பெண்ணைய்யை விட கசக்கிறது. 

----------------


புதாபியில் இருந்து திரும்பும் போது இரண்டு மணி நேரம் என்ன செய்யலாம் என ஆம்பள படத்தை மொபைலில் ஏற்றிக் கொண்டு வந்தேன். அன்பே சிவம் கொடுத்த சுந்தர்.சிக்கு என்னாச்சுன்னு தெரியலை. ஹரி படம் போல சுமோவெல்லாம் பறக்குது. பறந்தாலும் பரவாயில்லை பறக்கும் சுமோவின் பேனட்டில் அநாயாசமாக நம்ம விஷால் (எங்க வீட்டு விஷால் இல்லை... நடிகர் விஷால்) உக்காந்து வாறாரு. பறந்து தரைக்கு வர்ற வண்டி சும்மா கிர்ரு....கிர்ருன்னு சுத்துது ஆனா தலைவர் அப்படியே அட்னக்கால் போட்டுக்கிட்டு உக்காந்திருக்காரு... ஸ்... அபா... முடியலை.... ஆம்பள... விட்டா நம்ம சாம்பாலைத்தான் கொடுப்பாங்க போல... 

ஹன்சிகா அழகுப் பொம்மையாக வந்து நாலு பாட்டுக்கு ஆடுது... ஐய்யோ மிடில... மிடில... கொஞ்சமாச்சும் ரசிகனுங்களை யோசிச்சுப் படமெடுங்கப்பா... திருட்டு வீசிடியை ஒழிப்பேன் சவால் விட்டுக்கிட்டு எம்படம் திருட்டு வீசிடி வந்தா அதை யார் எடுத்தான்னு கண்டுபிடிச்சு போலீசுல ஒப்படைப்பேன்னு வேற சொன்னாரு... இதை திருட்டு வீசிடியில பாக்குறதுக்குமா ஆள் இருக்கு... 

----------------

நானும் ஒவ்வொரு முறையும் திட்டமிடுவதும் அதை செயலாக்காமல் விடுவதும் எனத்தான் எல்லாமே தொடர்கிறது. இந்த முறை போடும் திட்டப்படி மனசு வலைத்தளத்திலாவது செயல்படலாம் என்ற எண்ணத்தில் இனி மனசில்...

ஞாயிறு        -      மனசு பேசுகிறது / மனசின் பக்கம்
திங்கள்   -      பல்சுவை (சினிமா / நூல் விமர்சனம் / படித்ததில் பிடித்தது)
செவ்வாய்   -      கவிதை / ஹைக்கூ
புதன்              -      சிறுகதை / கட்டுரை
வியாழன்    -      கிராமத்து நினைவுகள் / வாழ்க்கை
வெள்ளி       -       நண்பேன்டா / வெள்ளந்தி மனிதர்கள்
சனி                -      தொடர்கதை

மேற்குறிப்பிட்ட வரிசைப்படி தொடங்கலாம் என இன்று பிள்ளையார் சுழி போட்டாச்சு. சில நாட்கள் எழுத முடியாத சூழல் வந்தால் அன்று என்ன பதிய இருந்தேனோ அது அடுத்த வாரமே பதியப்படும் அடுத்த நாளில் பதியப்படமாட்டாது. பார்ப்போம்... இது எத்தனை நாளைக்குத் தொடர்கிறது என்பதை... இருப்பினும் எங்கள் பிளாக் ஸ்ரீராம் அண்ணன் போல இன்று இதுதான் என பதிவை பகிர வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறேன்.

----------------


கேபிள் அண்ணாவின் 'தொட்டால் தொடரும்' குறித்த விமர்சனங்கள் படம் நல்லாயிருக்கு என்று சொல்லும் போது வலைப்பதிவராய்... விமர்சகராய்... வசனகர்த்தாவாய்... நடிகராய்... பரிணமித்த கேபிள் அண்ணா இயக்குநராய் முத்திரை பதித்து விட்டார் என்று சந்தோஷப்படுகிறது மனசு. இங்கு தொட்டால் தொடரும் எப்போது வரும் என்பது தெரியவில்லை... எப்படியும் பார்த்து விடுவோம்... வாழ்த்துக்கள் கேபிள் சங்கர் அண்ணா.... தொடரட்டும் உங்கள் வெற்றி நடை.

மனசின் பக்கம் அடுத்த வாரம் வரும்...
-பரிவை' சே.குமார்.

40 கருத்துகள்:

 1. சரியான வேலைப்பளுவின் இடையிலும் சாப்பாட்டுக்கு சிரமப்பட்டுக்கொண்டு ஏன்? சொந்தமாகவே சமைச்சுடலாம்ல குமார்? (என் மகனும் அங்குதான் இருக்கிறான் நண்பர் கில்லர்ஜி சந்தித்தாராம்! இயலுமெனில் அவனை வரச்சொல்லி நீங்களும் சந்திக்க முடிந்தால் நான் மகிழ்வேன்). இவற்றுக்கு மத்தியில் கதை-கட்டுரை-தொடர்கதை-திரைப்பட விமர்சனம் (அதுவும் கூர்மையாக!) உங்களை நினைத்தால் வியப்பாகவும் என்னை நினைத்தால் ஆற்றாமையாகவும் இருக்கிறது... வாழ்த்துகள்..நன்றி தொடர்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா...
   நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களை என் மனசில் சந்திக்கிறேன்.
   ரொம்ப சந்தோசமாய் இருக்கு.
   அபுதாபியில் சொந்தமாகத்தான் சமைத்துச் சாப்பிட்டு வந்தேன் ஐயா...
   15 நாள் என்று சொல்லித்தான் அனுப்பினார்கள். தங்க இடம் கிடைத்தது மலையாளிகளுடன் அவர்கள் சமைத்துச் சாப்பிட்டாலும் நம்மைச் சேர்க்கும் எண்ணம் இல்லை. நானும் சரி பதினைந்து நாள்தானே என வெளியில் சாப்பிட ஆரம்பித்தேன். வியாழன் இரவு அபுதாபி போனால் சனி மதியம் வரை என் கையால் சமைத்துச் சாப்பிட்டு வருவேன். இப்போது யாருக்காக நான் இங்கு வந்தேனோ அவன் இன்னும் வரவில்லை எனச் சொல்ல சண்டையிட்டு இங்கு புராஜெக்ட் முடியும் வரை நானே இருக்கிறேன். அவன் வேண்டாம் எனச் சொல்லி விட்டேன். பிப்ரவரி முதல் சமையல் செய்து சாப்பிடும் அறையாக பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

   இந்த வாரம் அபுதாபியில் இருப்பார் என்றால் கில்லர்ஜி அண்ணாவுடன் போய் தங்கள் மகனைப் பார்த்து வருகிறேன் ஐயா... கண்டிப்பாக சந்திக்கிறேன். இப்போது அபுதாபியில் இருந்து 200 கிமிக்கு அங்கிட்டு இருக்கேன்.

   வேலை முடிந்து வந்தால் வீட்டுக்குப் போன் அப்புறம் வேறு வேலை இல்லை அதனால் எழுதுகிறோம்... தாங்கள் விழாக்கள், பட்டிமன்றம் என ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்.... எங்களால் உங்களுடன் இணைந்து ஓட முடியாது என்பதே உண்மை...

   தங்களது கருத்து எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது ஐயா...

   நன்றி.

   நீக்கு
 2. தங்களின் டைரியை படித்தேன் நண்பரே,,,,
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   ரொம்பச் சந்தோஷம்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 3. என்னை மாதிரி சுருக்கமா போட முடிந்தால் தினசரி பதிவு சாத்தியமே ...திட்டம் நிறைவேற வாழ்த்துக்கள் !
  த ம 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஜி....
   உக்கார்ந்தால் எழுதுவதற்கு நேரம் எடுப்பதில்லை... இருப்பினும் அசால்ட் அதிகமாகிவிட்டது.
   இப்போதும் தொடர்ந்து பதிவுகள் பதியத்தான் செய்கிறேன்... ஆனால் மனதில் தோன்றுவது போல் எழுதுவேன்.. இனி அதில் கிழமைகளின் கீழ் பதிவெழுத முயற்சி...
   பார்க்கலாம் ஜி... ஜெயிக்கப் போவது குமாரா.... அசட்டையான்னு...
   ஹி...ஹி...
   தங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 4. எல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 5. ///இன்று இதுதான் என பதிவை பகிர வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறேன்.//
  ஒரு வேளை இது உங்களுக்கு சாத்தியமே..... நான் நினைத்துபார்த்தேன் என்னால் அப்படி எல்லாம் எழுதவே முடியாது என்றுதான் தோன்றுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க...
   உங்கள் வருக்கைக்கு முதல் நன்றி.
   முயற்சித்தால் முடியும்... நாம் முயற்சிப்பதில்லை.
   முயன்று பார்க்கலாம்... இப்படி பலமுறை திட்டமிட்டாச்சு....
   இந்த முறை 30 நாட்களாவது தொடருமா பார்க்கலாம்...
   தங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 6. நீங்கள் உங்கள் பாணியிலே திட்டமிட்டு தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 7. அன்பின் குமார்..
  வாழ்க நலம்!..
  இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
   தங்களுக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

   நீக்கு
 8. மீகாமன் எதிர்பார்த்தபடி போகவில்லை... ஆம்பிள ஏதோ சன் டிவி காமெடி டைம் மாதிரி அமைந்திருந்தது...

  உங்க தொடர் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோதரி...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 9. திட்டம் போட்டு எழுத ஆரம்பித்தால் முடிந்தவரை சிறப்பாக எழுதலாம் என்பது எனது நம்பிக்கை. தங்களது முயற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். உங்களைப் போன்றோர் உடல் நலத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டியது மிகவும் அவசியம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 10. நீங்கள் வடிவமைத்திருக்கும் டைம் டேபில் படி இனி பதிவுகள் எழுத வாழ்த்துக்கள் அண்ணா! உங்களால் அது முடியும்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோதரி...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
   முயற்சிக்கலாம் அவ்வளவே...

   நீக்கு
 11. தீர்மானம் தொடரட்டும் சகோ :)

  பட விமர்சனங்கள் நச் :)

  தொட்டால் தொடரும் வெற்றிக்கு கேபிள் சங்கருக்கு எனது வாழ்த்துகளும் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அக்கா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 12. முத்துநிலவன் ஸார் சொல்லியிருப்பதுபோல எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்கிக் கொண்டு சிறப்பாகச் செயல்படுகிறீர்கள் குமார். பல்சுவையும் கலந்து சுவாரஸ்யமாக பதிவுகள் எழுதுகிறீர்கள். தொடர்ந்து கலக்குங்கள். எங்களையும் குறிப்பிட்டுள்ளதற்கும் நன்றிகள்! :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 13. வணக்கம்
  திட்டமிடல் முக்கியம்.... பகிர்வுக்கு நன்றி த.ம 8
  இனிய குடியரசு தினவாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ரூபன்...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
   தங்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.

   நீக்கு
 14. வணக்கம்!

  "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
  ஜெய் ஹிந்த்!

  நன்றியுடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  (இன்றைய எனது பதிவு "இந்திய குடியரசு தினம்" கவிதை காண வாருங்களேன்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோதரா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
   தங்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.

   நீக்கு
 15. //ஞாயிறு - மனசு பேசுகிறது / மனசின் பக்கம்
  திங்கள் - பல்சுவை (சினிமா / நூல் விமர்சனம் / படித்ததில் பிடித்தது)
  செவ்வாய் - கவிதை / ஹைக்கூ
  புதன் - சிறுகதை / கட்டுரை
  வியாழன் - கிராமத்து நினைவுகள் / வாழ்க்கை
  வெள்ளி - நண்பேன்டா / வெள்ளந்தி மனிதர்கள்
  சனி - தொடர்கதை///
  உங்களின் அட்டவனைப்படி ஞாயிறு வியாழன் வெள்ளி தவிர மற்ற நாட்களுக்கு நான் வரத்தேவையில்லை ஹீஹீஹீ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க
   இது என்னங்க வம்பாப் போச்சு... இப்படி எழுதலாமான்னு ஒரு அட்டவணை போட்டா நீங்களும் இன்ன இன்னிக்கு வாறேன்னு அட்டவணை போடுறீங்க... ஆட்டையைக் கலைச்சிடலாமோ.... ஹி.... ஹி...

   தங்கள் கருத்துக்கு நன்றி தலைவரே...

   நீக்கு
 16. பதில்கள்
  1. வாங்க ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 17. திட்டமிடுதல் ..மிக நல்ல விஷயம் ..வாழ்த்துக்கள் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோதரி...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 18. தினம் ஒரு பதிவுக்கான திட்டம்..... வாழ்த்துகள் குமார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா..
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 19. ஆஹா! திட்டக்கமிஷன் போல...அஹஹ்ஹ் உங்களால் முடியும் தம்பி என்று பாடத்தோன்றுகின்றது....நாங்க ரெண்டு பேரும் யோசிச்சுப் பார்த்தோம்....பார்க்கப் போனா நாங்கள் வடிவேலு ஸ்டைல்ல ப்..ளா...ண் பண்ணிப் பார்த்தோம்...வொர்க் அவுட் ஆகல....விட்டுட்டோம்....உங்கள் திட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துளசி சார்/ கீதா மேடம்...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
   இங்கயும் அப்படித்தான் ஆகும்... இது தொடர்வதென்பது கடினமே...
   அடிக்கடி திட்டமிடுவதுதான்... ஆனால் செயலாற்றுவதில்லை...

   நீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...