மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 21 ஜனவரி, 2015

அமைதியாய் தெரு...!

அமைதியாய்
இருந்தது
அந்தத் தெரு...

அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
சிதறிய செருப்புக்கள்...!

ஆங்காங்கே
நிகழ்வை உணர்த்த
அருவாளும் கம்புகளும்...!

கிழிசல்களாய்
ரத்தம் சுமந்த
வேஷ்டி துண்டுகள்
சில சட்டைகள்...!

வீசப்பட்டகற்கள்
உடைத்ததில்
சிதறிய கண்ணாடிகள்...!

புகையைக் கக்கியபடி
நகர்ந்து செல்லும்
போலீஸ் வண்டி...!

குலைத்தபடி
அதைத் துரத்திக்
கொண்டோடும்
தெரு நாய்...!

அடைக்கப்பட்ட
கேட்டின் உள்ளிருந்து
கேள்விக் குறியோடு
பார்க்கும் குழந்தை...!

அமைதியாய்த்தான்
இருந்தது அந்தத் தெரு....
அதுவும் மயான
அமைதியாய்...!

சாதி வெறியால்
களவாடப்பட்ட காதல்
களவாடிச் சென்ற
உடல்களைப் புதைப்பதில்
அமைதி இழந்திருந்தது
மயானம்...!

உடைந்த மண்டைகளும்
விழுந்த வெட்டுக்களும்
நிகழ்ந்த பொழுதுகளைக்
கொன்று அமைதியாய்
இருக்கிறது - அந்த
பாரதியார் தெரு...!
-'பரிவை' சே.குமார்.

33 எண்ணங்கள்:

Yarlpavanan சொன்னது…

சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அன்னா

காலம் தகுந்து கவி புனைந்த விதம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Kousalya Raj சொன்னது…

மிக அருமை ! எளிய வார்த்தைகளில் இன்றைய யதார்த்தம் !!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அந்த அமைதிக்குள் அப்படியொரு சோகமா? மனதில் நின்றது கவிதை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மை நிலை வலியுடன்...

சசிகலா சொன்னது…

சாதிகள் இல்லையடி பாப்பா பாடிய பாரதியார் பெயரைக் கொன்று நடக்கும் வன்முறைகள். நல்லதொரு ஆக்கம்.

UmayalGayathri சொன்னது…

இன்றைய நடப்பு...இப்படியாக கவிதை நயம்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலிக்க வைத்த கவிதை சகோ :(

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அமைதியாக கருத்தை கவிதையில் வடித்தவிதம் சிறப்பு! அருமை! வாழ்த்துக்கள்!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அமைதியாக உங்கள் கவிதையில் கருத்தை சொன்ன விதம் சிறப்பு! பாராட்டுக்கள்!

கோமதி அரசு சொன்னது…

கவிதை மிகவும் வேதனை தருகிறது.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வரிகள் அருமை...ஆனால் வலிகள் நிறைந்த வரிகள்...அதுவும் பாரதியார் தெரு!

KILLERGEE Devakottai சொன்னது…

முடிவில் பாரதியார் தெரு அருமையிலும் அருமை நண்பரே...
தமிழ் மணம் 7

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை குமார்.

ஸ்ரீராம். சொன்னது…

இத்துயர நிகழ்வுகள் இனியும் தமிழகத்தில் நடக்காதிருக்கட்டும். :(((

Unknown சொன்னது…

இதைதான் புயலுக்கு பின் அமைதி என்பதா :)
த ம 9

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பாவாணன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார், கீதா மேடம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Unknown சொன்னது…

எளிமை ,இனிமை கருத்து கவிதை சொன்ன விதம் நன்று!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...