மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 5 செப்டம்பர், 2015

கண்ணனின் காலடி...

இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்


ப்போதும் கையால்
கண்ணனின் பாதம்
வரையும் அம்மா...

தத்தி நடக்கும்
குட்டிக் கண்ணனின்
காலடியைப் பதியலாமென
அரிசி மாவில் அழகாய்
நனைத்து விட்டாள்....

மீண்டும் மீண்டும்
நனைக்கிறான்
நடக்கிறான்...

வீடெங்கும் கண்ணன்
வருவதும் போவதுமாய்
இருக்க...

நிறைந்து கிடக்கின்றன
கண்ணனின் காலடிச்
சுவடுகள்

கழுவி எடுப்பது
அம்மா வேலை
என்றாலும்
கண்ணனின்
காலடி அழகில்
சொக்கித்தான்
போகிறாள்...!


*************************
*************************

-'பரிவை' சே.குமார்.

18 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

அருமை. கோகுலாஷ்டமி மற்றும் ஆசிரியர் தின வாழ்த்துகள். கப்பலோட்டிய தமிழனுக்கும் இன்றுதான் பிறந்தநாள்.

KILLERGEE Devakottai சொன்னது…

அருமை நண்பரே டி.எம். எஸ் பாடலை மிகவும் ரசித்தேன் எவ்வளவு சாதாரணமாக பாடுகின்றார் முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு.... இது அவரைப்போல் சில பேரால் மட்டுமே முடியும்

சாரதா சமையல் சொன்னது…

கவிதை மிக அருமை. தங்களுக்கு கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்கள் !

இளமதி சொன்னது…

சின்னக் கண்ணனுக்கான சிங்காரக் கீதம்
காட்சியாய்க் கவிதையாய் காணொளியாய் அற்புதம் சகோதரரே!

கோகுலாஷ்டமி வாழ்த்துக்களுடன்
ஆசிரிய தின நல் வாழ்த்துக்களும்!

த ம 2

balaamagi சொன்னது…

அழகான சின்ன அடிகள், வாழ்த்துக்கள்,
ஆசிரியர் தினவாழ்த்துக்கள்.

துரை செல்வராஜூ சொன்னது…

ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி நல்வாழ்த்துகள்..

கரூர்பூபகீதன் சொன்னது…

சிங்கார கண்ணனுக்கு அருமை கவிதை?? கோகுகோகுலாகோகுலாஷ்கோகுலாஷ்டமி வாழ்த்துகள் +ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!! நன்றி

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அட அருமையான கவிதை!!! ஆசிரியர் தின வாழ்த்துகள்! கிருஷ்ணன் ஜெயந்தி வாழ்த்துகள்!

மனோ சாமிநாதன் சொன்னது…

உங்களின் கவிதை, பிரபலமான கண்ணன் ஓவியம், மறக்க முடியாத டி.எம்.எஸ்ஸின் பாட்டு எல்லாமே மிக அருமை!

Yarlpavanan சொன்னது…

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
என்ற
சிறந்த பாடல் பகிர்வு
கண்ணன் நினைவுகள் அருமை!

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா.

அருமையான கவிதையுடன். இனிமையான பாடலை பகிர்ந்துள்ளார்கள்.த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீமலையப்பன் சொன்னது…

அருமை அய்யா

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

கவி அருமை
வாழ்த்துக்கள் நண்பரே
தம +1

ராமலக்ஷ்மி சொன்னது…

படழும் பாடலும் அழகு. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.

சென்னை பித்தன் சொன்னது…

நானும் சொக்கித்தான் போனேன்!

Unknown சொன்னது…

பாடலை பலமுறை கேட்டதுண்டு ,TMS யேபாடக் கேட்டது இப்போதுதான் ....நன்றி ஜி :)

சசிகலா சொன்னது…

பாட்டு
படம்
சொக்க வைக்கும் வரிகள்... பிரமாதம்! பிரமாதம்! சகோ.

Unknown சொன்னது…

அருமை சகோதரா!