மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 18 செப்டம்பர், 2015பலாவின் சுவை..?


லையும் வாழ்க்கையில்
ஒதுங்கிய சுவரோரம்...
விரிந்த விரிசலும்
வரைந்த கோலங்களும்
காட்சிப் பொருளாய்...

வாழ்க்கை கோலம்
இதுவென்ற போதிலும்
வாழ்வின் வசந்தம்
இவளென கொஞ்சும்
ஏழைத் தாய்....

பழைய சேலையும்...
கலர் இழந்த தாலிக்கயிறும்...
பிளாஸ்டிக் வளையலும்...
செருப்பில்லாத காலுமாய்...
சிரிக்கும் முகத்தில்
வலிகளேயில்லாத சந்தோஷம்...

குட்டித் தேவதையின்
குடுமிக்குள் கூத்தாடும்
அதீத சந்தோஷத்தில்
எல்லாம் மறந்து
ஏகாந்தமாய் சிரிக்கிறாள்...

இவள் வாழத் தெரிந்தவள்...
வாழ்வின் வாசம் அறிந்தவள்...
கிடைக்காததை எண்ணி
கிடைத்த சந்தோஷத்தை
தொலைக்காதவள்...

தாய் என்னும் தெய்வம்
தன் தேவதையை
கொஞ்சுகிறாள்
முகமெல்லாம்
பௌர்ணமியாய்...

பூவின் சிரிப்பும்
பூரண அன்பும்
இனிக்கும் இடத்தில்
முன்னே கிடக்கும்
பலாவின் சுவை...?

(இதே படத்துக்கு முகநூலில் கவிஞர் பழனி பாரதி கவிதை எழுதியிருந்தார். அதைப் பார்த்த விளைவுதான் இது.... ஆனால் அவரின் கவிதை அளவுக்கு இருக்குமா தெரியவில்லை)
-'பரிவை' சே.குமார்.

28 கருத்துகள்:

 1. கவிதை அருமை நண்பரே வாழ்த்துகள்
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 2. வணக்கம் நண்பரே!!! பூவின் சிரிப்பும்
  பூரண அன்பும்
  இனிக்கும் இடத்தில்
  முன்னே கிடக்கும்
  பலாவின் சுவை...?கண்டிப்பாக கிடைக்காது! அழகு வரிகள்! நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. வாங்க நண்பரே...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. வாங்க ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 4. காட்சியும் கவிதையும் கண்களில் நீர்வர வைத்துவிட்டது சகோதரரே!

  காட்சி சொல்லும் காவியம் கற்பனைக்குள் அடங்காதது!
  உங்கள் கவிவரிகள் அதனையும் தாண்டி என்னை
  ஒரு நிகழ்வைப் பார்ப்பதாய் எண்ண வைத்துவிட்டது!

  அற்புதம்! உளமார்ந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அக்கா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே.

  தங்களின் கவிதை பலாவின் சுவையை விட இனித்தது. கவிதையில் செதுக்கிய வரிகளின் உண்மைகள் மனதை தொட்டுச் செல்கின்றன.

  \\இவள் வாழத் தெரிந்தவள்...
  வாழ்வின் வாசம் அறிந்தவள்...
  கிடைக்காததை எண்ணி
  கிடைத்த சந்தோஷத்தை
  தொலைக்காதவள்...//

  கிடைக்காததை எண்ணி ஏங்குவதை விட கிடைத்ததை நினைத்து சந்தோஷிக்கும் பண்பு சால சிறந்ததல்லவா.? பகிர்ந்தமைக்கு நன்றி.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அக்கா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 6. பலாவின் சுவை அருமையே....வாழ்த்துகள் சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அக்கா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 7. வருவதை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் வரிகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அக்கா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 8. மற்றவரின் கவிதையோடு ஒப்புநோக்கவேண்டிய அவசியமில்லை. ஒவ்வொருவருக்கும் பார்வையிலும், வெளிப்படுத்தும் விதத்திலும் வேறுபாடுகள் ஏற்படலாம். கவிதையை ரசித்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா.
   உண்மைதான் ஐயா... ஒப்பு நோக்கல் என்பது தேவையில்லாததுதான்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 9. பதில்கள்
  1. வாங்க ராஜா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 10. அருமையான கவிதை. பாராட்டுகள் குமார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 11. படத்துக்கு ஏற்ற கவிதை.

  குட்டித் தேவதையின்
  குடுமிக்குள் கூத்தாடும்
  அதீத சந்தோஷத்தில்
  எல்லாம் மறந்து
  ஏகாந்தமாய் சிரிக்கிறாள்.//

  உண்மை உண்மை. அற்புதம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 12. பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 13. //பூவின் சிரிப்பும்
  பூரண அன்பும்
  இனிக்கும் இடத்தில்
  முன்னே கிடக்கும்
  பலாவின் சுவை...?//

  மிக அருமை! கவிதையும் இந்த அசத்தலான புகைப்படமும் மிக அழகு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா
   ...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 14. பூவின் சிரிப்பும்
  பூரண அன்பும்
  இனிக்கும் இடத்தில்
  முன்னே கிடக்கும்
  பலாவின் சுவை//

  ஆஹா இதுவல்லவோ பலாவின் சுவை! இனிமை! அருமை! பாராட்டுகள் நண்பர் குமார்!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...