மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 28 செப்டம்பர், 2015

குறுந்தொடர்: பகுதி - 2. கொலையாளி யார்?

தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையை வீட்டு வேலைக்காரியிடம் இருந்து ஆரம்பிக்கிறார் இன்ஸ்பெக்டர் சுகுமாறன்.

பகுதி -1 படிக்க கொலையாளி யார்?

இனி...


"எனக்கு உண்மையான பதில் வேணும்..." அவளை முறைத்துப் பார்த்தபடி அழுத்தமாய்ச் சொன்னார் சுகுமாரன்.  

"ம்..."

"உம் பேரு என்ன?"

"லதா"

"லதா.... ம்.. லதாதானா... இல்ல ஹேமலதா, சாருலதா இந்த மாதிரி..."

"லதாதான்..."

"கல்யாணம் ஆயிடுச்சா..?"

"ம்.."

"புருஷனுக்கு என்ன வேலை..?"

"பெயிண்ட் மேஸ்திரி..."

"பிள்ளைங்க...?"

"ஒரு பையன் ரெண்டாவது படிக்கிறான்..."

"சரி... நீ இங்க எத்தனை வருசமா வேலை பாக்குறே...?"

"ரெண்டு வருசமா?"

"ம்... பகல்ல மட்டும் வருவியா... இல்ல ராத்திரியில..?"

"ஆறுமணிக்கெல்லாம் வீட்டுக்குப் பொயிட்டு காலையில ஆறுமணிக்குத்தான் வருவேன்.... இங்க தங்க மாட்டேன்..."

"இன்னைக்கும் ஆறு மணிக்குத்தான் வந்தியா?"

"ம்..."

"வந்தோடனே கொலை செஞ்சி கிடக்கதைப் பார்த்தியா?"

"இல்ல... காபி போட்டுக்கிட்டு போயி ஐயாவை எழுப்புவேன்... அது மாதிரித்தான் இன்னைக்கும் போனேன்... அங்கே ஐயா... ஐயா..." அழுக ஆரம்பித்தாள்.

அவள் அடங்கும் வரை அமைதி காத்தவர், "இவரு மதுரைதானே... இங்க அடிக்கடி வருவாரா?" என்றார்.

"மாசத்துக்கு மூணு டைம் வருவாரு... ரெண்டு மூணு நாள் இருப்பாரு... அப்ப மட்டும்தான் எனக்கு வேலை... சம்பளமும் நிறையக் கொடுப்பாரு.... அதான் நான் இந்த வேலைக்கு ஒத்துக்கிட்டேன்..."

"ம்... எப்ப வருவேன்னு உனக்குச் சொல்லுவாரா..?"

"இல்ல.... அவரு வர்றதுக்கு முதல் நாள் ரத்தினண்ணன் போன் பண்ணிச் சொல்லும்..."

"அதாரு ரெத்தினம்..."

"இங்க வாட்ச்மேனா இருக்கு..."

"ம்... ஆளு எப்படி...?"

"யாரு...?"

"அந்த ரெத்தினம்..."

"ரொம்ப நல்ல மனுசன்..."

"சரி... இருக்கட்டும்... நல்லவனா கெட்டவனான்னு நான் பாத்துக்கிறேன்,, உங்க ஐயா இங்க வர்றப்போ யாராலயும் பிரச்சினை..?"

"அப்படியெல்லாம் தெரியலை..."

"இங்க எதுக்கு வர்றாரு... பொண்ணுங்க கூட..."

"அதெல்லாம் இல்லை.." அவசரமாக மறுத்தாள்.

"அப்ப குடி..."

"ம்... அதிகம்...."

"அவரு மட்டுமா?"

"இல்ல கொஞ்சம் பிரண்ட்ஸ் வருவாங்க... எல்லாரும் எல்லா நேரமும் வரமாட்டாக... டாக்டர் சிவராமன் மட்டும் பெரும்பாலும் இங்கயே இருப்பார்..."

"ம்... அப்ப சிவராமன் கொன்னிருப்பாரா...?"

(தொடரும்)

-'பரிவை' சே.குமார்.

13 எண்ணங்கள்:

கரூர்பூபகீதன் சொன்னது…

விறு விறுப்பு கூடுகிறது!
தொடர்கிறேன்!
நன்றி!!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல சஸ்பென்ஸ்.....தொடர்கின்றோம்...

KILLERGEE Devakottai சொன்னது…

விறுவிறுப்பாக செல்கிறது......

”தளிர் சுரேஷ்” சொன்னது…

தொடர்கிறேன்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அடுத்த சந்தேகம் சிவராமன் மீது......

தொடர்கிறேன்..

துபாய் ராஜா சொன்னது…

விறுவிறுப்பான விசாரணை...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

இரண்டு பகுதிகளையும் இப்போதுதான் படித்தேன், அடுத்த பகுதியை படிக்க காத்திருக்கிறேன்.கொலையாளி யாரென்று அறிய ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள்