மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 20 ஜூலை, 2015

மனசின் பக்கம்: பலி பக்கா... மாரி சுக்கா... கொஞ்சம் கிக்கா...


பாகுபலி படம் பார்த்தாச்சு... வரலாற்றில் நிகழ்ந்தது போல் அரச பரம்பரை, வஞ்சகம், சூழ்ச்சி என எல்லாம் கலந்து மகிழ்மதி என்ற நகரத்தை கற்பனையில் உருவாக்கி பாடம் காட்டியிருக்கிறார்கள். ஆரம்பக் காட்சிகளில் அருவியின் கீழே இருக்கும் நாயகன் மேலே இருக்கும் நகருக்கு ஏற முயற்சிப்பதையும் பின்னர் அங்கு செல்வதையும் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போல் காட்டியிருக்கிறார்கள். நாயகன் பறந்து பறந்து செல்லும் போது இதெல்லாம் எங்க தளபதி குருவியில பறந்து பறந்து பண்ணிட்டாரேன்னு சொல்லத் தோணுச்சு. வரலாற்றுக் கதை என்றாலும் தெலுங்கு ரசிகர்களை மனதில் வைத்து டூயட் பாடல்களையும் இணைத்திருக்கிறார்கள். கேமரா மிக அருமை... காட்சிகளை அழகாக தனக்குள் வாங்கிக் கொண்டிருக்கிறது. கிராபிக்ஸ் கலக்கல்... போர்க்களக் காட்சிகள் மிக நேர்த்தி... 


சத்யராஜ், பிரபாஸ், ராணா, நாசர், ரம்யா கிருஷ்ணன் என நடிகர்கள் தங்களது தேர்ந்த நடிப்பால் படத்துக்கு பலம் சேர்க்கிறார்கள். தமனாவை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் முதல் முறை பார்ப்பதால் கொஞ்ச நேரத்துக்கு மனதில் ஒட்டவில்லை. அனுஷ்கா இரும்புச் சங்கிலிக்குள் சிரிக்கிறார். நடிக்க வாய்ப்பில்லை... இரண்டாம் பாதியில் இவர்தான் நாயகி... அதில் சிறப்பாக செய்வார் என்று நம்பலாம். இயக்குநர் ராஜமௌலி மிகச் சாதாரண ஒரு படத்தை கிராபிக்ஸ் மற்றும் அரண்மனை செட்களை வைத்து பிரமாண்டமாக கொடுத்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார். பாகுபலி கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம் என்பதே என் கருத்து. 

*************



மாரியும் பாத்தாச்சு... செஞ்சுடுவேன்னு சொல்லியே உக்காரவச்சி கழுத்தறுக்கிறானுங்க... தனுஷின் நடிப்பு மற்றும் ரோபோ சங்கரின் காமெடி இரண்டுமே படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. என் நண்பர் ஒருவர் இவனெல்லாம் ஒரு ரவுடியா... அதுக்குன்னு ஒரு உடம்பு வேண்டாமா என்றார். உண்மைதான்... ஆனா ரவுடியின்னா உடம்பு இருக்கணுமின்னு சட்டமா என்ன.. எங்க ஊர்ப்பக்கமெல்லாம் ரவுடித்தனம் பண்ணுறவென்னால் சுள்ளான் மாதிரித்தான் இருப்பானுங்க... தனுஷின் நடிப்பு செம... கலக்கல் காமெடி... இப்படி இரண்டும் இருந்தும் புறா பந்தயம் விடும் சொதப்பலான... அரதப்பழசான கதை மாரியை மண்ணைக் கவ்வ வைத்து விட்டது. காஜல் சும்மா வந்து போகுது...  அனிருத் பின்னணி இசையில் பட்டையை கிளப்பியிருக்காரு... ஆனா தனுஷ் வரும்போதெல்லாம் எதுக்கு இவ்வளவு பில்டப்புன்னுதான் தெரியலை... மாரி தனுஷ் ரசிகர்களுக்கு தீபாவளி சரவெடி... மற்றவர்களுக்கு மழையில் நனைந்த புஸ்வானம்...

*************

னது முதல் தொடர்கதையான கலையாத கனவுகளை சேனைத் தமிழ் உலா நிஷா அக்கா கேட்டுக் கொண்டதற்கிணங்க மீண்டும் அங்கு பதிந்து வருகிறேன். அந்தக் கதையை இதுவரை படிக்காத எனது நட்புக்கள் அங்கு படித்து கருத்திட்டால் எனது தவறுகளை திருத்திக் கொள்ள உதவும். முதன் முதலாக எழுதிய தொடர்கதை அது... மனசு வலையில் 80 வாரங்கள் எழுதினேன்... அப்போது அதிக வரவேற்ப்பு அதற்கு இல்லை என்பதை அறிவேன். வாசித்தவர்கள் நூறுக்கு மேல் இருந்தாலும் கருத்து ஒன்று இரண்டை தாண்டுவதில்லை. எந்த ஒரு படைப்புக்கும் கிடைக்கும் உண்மையான கருத்துக்களே அடுத்து வரும் பதிவுகளை இன்னும் சிறப்பாக எழுதத் தூண்டும். அந்த வகையில் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் இரண்டாவது தொடர்கதையான வேரும் விழுதுகளுக்கும் பிரபலங்கள் பலரும் வாசித்து கருத்துச் சொல்லும் போது இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்று தோன்றுவதோடு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இதை புத்தகமாக கொண்டு வர வேறு சில நண்பர்கள் சொல்கிறார்கள்... அடபோங்கப்பா சிறுகதையை புத்தகமாக்க நினைத்து ரெண்டாண்டுக்கு மேல் ஓடிப்போச்சுன்னு சொல்லி சிரிக்கத்தான்  முடிகிறது. சரிங்க... சேனைத் தமிழ் உலாவில் தொடர்கதை படிக்க நினைத்தால்...

சேனைத்தமிழ் உலா

இங்கே சொடுக்கிப் படியுங்கள். தவறாமல் தங்கள் கருத்தையும் சொல்ல மறக்காதீங்க...

*************

டந்த ஒரு மாதமாக ரம்ஜான் நோன்பு என்பதால் அலுவலக பணி நேரமும் குறைவு... வேலையும் அதிகமில்லை... இன்று மறுபடியும் பழைய வேலை நேரம்... ஒன்பது மணி நேரம் சும்மா கொன்னு எடுத்துப்புட்டானுங்கல்ல... அறைக்கு வந்ததும் எப்படா படுப்போம்ன்னு வந்திருச்சு... அறையில் நண்பரிடம் ரொம்ப டயர்டா இருக்குன்னு சொன்னப்போ அவரு கொஞ்சம் போட்டா போதுமாங்க... சும்மா கும்முன்னு இருக்குமாம்... வாங்கிருவமா என்றார் சிரித்துக் கொண்டே. ஆமாய்யா இன்னைக்கு உடம்பு வலிக்கிதுன்னு கொஞ்சம் போடச்சொல்லும்... அப்புறம் தினம் கேக்கும்... கொஞ்ச நாள்ல அது இல்லேன்னா தூக்கம் வரலைன்னு சொல்லச் சொல்லும்... அப்புறம் அதுதான் வாழ்க்கையாகும்... அப்படியே போய்ச் சேர வேண்டியதுதான் என்று சொன்னதும் இப்ப என்ன சொல்லிப்புட்டேன்னு இம்புட்டுக் கதை என்று சிரித்தாரே பார்க்கலாம்... இனி தண்ணியடிப்போமான்னு கேப்பாருங்கிறீங்க...

*************

னிக்கிழமை அன்று என்றும் இல்லாத திருநாளா பத்து நிமிஷம் ஒழுங்கா பேசாத விஷால், ரொம்ப நேரம் என்னுடன் ஸ்கைப்பில் பேசிக் கொண்டிருந்தான். உங்க பேரை குமாரசாமியின்னு எழுதி வச்சிருக்கேன்... ஸ்பெல்லிங் சொல்லுங்க பாப்போம் என்றான். குமாரசாமிதான் நமக்கு வச்ச பேரு... ஆனா பள்ளியில் சேர்க்கும் போது அம்மா அழகா இருக்கட்டுமேன்னு குமார்ன்னு சுருக்கிட்டாங்க... அதை அவனிடம் அம்மா ஒரு முறை சொன்னதில் இருந்து எப்போதாவது தோணினால் குமாரசாமியின்னு கூப்பிடுவான். சரியின்னு நான் K...U...M...A...R என ஒவ்வொரு எழுத்தா சொன்னதும் குமார் என்று சொன்னவனிடம் சாமிக்கு... என்று ஆரம்பிக்க அதுதான் எனக்குத் தெரியுமேன்னு சொல்லிட்டு குமாருக்குப் பக்கத்துல KUMAR கூட GOD சேர்த்தா KUMARGOD,  குமாரசாமி ஆயிடும்ல்ல என்றானே பார்க்கலாம். என்னமா இப்படிப் பண்றீங்களேம்மான்னு புல்லரிச்சிப் போச்சு போங்க...

*************

ருங்க... இருங்க... அப்படியே இந்த தப்பாட்டத்தையும் பார்த்து கேட்டு ரசிச்சிட்டுப் போங்க... மனசுக்கு இதமாவும் சந்தோஷமாவும் இருக்கும்ல்ல....


-'பரிவை' சே.குமார்.

22 எண்ணங்கள்:

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே.

நலமா.? திரைப்பட விமர்சனங்களை மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் தொடர்கதை தொகுப்பை நூலாக்கி வெளியிடும் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வேரும் விழுதுகளும் தொடர் கதையை நான் விடாமல் படித்து வருகிறேன். தற்சமயம் எழுதிய பகுதியை மட்டுந்தான் இன்னமும் வாசித்து கருத்திடவில்லை. விரைவில் படித்து விடுவேன்.

நம் குழந்தைகளின் அறிவாற்றல்.அவர்களின் பேச்சாற்றல் நம் மனதை நிச்சயம் மகிழ்வூட்டத்தானே செய்யும். அந்த பேரானந்ததிற்கு சமமாக உலகில் வேறு என்னதான் உள்ளது.? தங்கள் குழந்தைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தங்கள் கடமைகளுக்கு நடுவிலும் மறவாமல் என் தளம் வந்து வாழ்த்துரைத்தமைக்கு என் நன்றிகள

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

UmayalGayathri சொன்னது…

பாகுபலி பார்த்தாச்சு.. ஆமாம் ஒரு முறை பார்க்கலாம்.
மாரி இன்னும் பார்க்கவில்லை...
தொடர்கதையை அங்கு சென்று வாசிக்கிறேன் சகோ.நேரம் இப்போதெல்லாம் குறைவாக இருக்கிறது. ஆகையால் இன்னும் வேரும் விழுதும் வாசிக்கவில்லை.
பையனின் சம்யோஜித புத்தி.....நன்று நன்று.
பாட்டையும் ரசித்து விடைபெறுகிறேன் சகோ

துபாய் ராஜா சொன்னது…

அழகான பார்வை. அருமையான பகிர்வு.

ஸ்ரீராம். சொன்னது…

பாஹுபலிக்கு எல்லாத் தரப்பிலிருந்தும் பாராட்டுகள். மகனின் சுருக்குவழி சிரிக்க வைத்தது!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விஷால் பேசியது குறித்து மிகவும் சந்தோசம்...

சாரதா சமையல் சொன்னது…

அருமையான பதிவு. விஷாலின் அறிவாற்றலை கண்டு வியந்தது என்னவோ உண்மை. விஷாலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் !

கோமதி அரசு சொன்னது…

விஷாலின் பேச்சு அருமை.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பாகுபலி பார்த்தாச்சு....ம்ம்ம் நல்லாருக்கு க்ராஃபிக்ஸ் அருமை...
மாரி இன்னும் பாக்கலை...ஆனா தனுஷ் நல்ல நடிகர்...ம்

அட விஷால் !! குமாரசாமி க்கு KUMARGOD, ஹாஹ்ஹ் அருமைப்பா...என்ன ஒரு புத்திசாலித்தனம் வார்த்தை வைச்சு விளையாடறாரு...
தப்பாட்டம் தலையாட்டி தாளம் போட வைக்குது...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

KUMARGOD - :))) அட!

சினிமா - பார்க்க முடிவதில்லை குமார்.....

தப்பாட்டம் - மிக அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ராஜா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்/ கீதா மேடம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வெங்கட் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

விமர்சனங்கள் அருமை. வித்தியாசமான அலசல். நன்றி.

Unknown சொன்னது…

பொதுவாக நான் கதைகளை படிப்பதில்லை !எனவேதான் உங்கள் கதைகளை படிக்க இயலாமல் போயிற்று!

சென்னை பித்தன் சொன்னது…

நல்ல விமரிசனம்.பையன் புத்திசாலி!

சென்னை பித்தன் சொன்னது…

த ம 7

Unknown சொன்னது…

குமாராவே இருங்க ,சமீப காலமா ,குமாரசாமிங்கிற பெயர் இங்கே பஞ்சராகி போச்சு :)