மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 31 ஜூலை, 2015கலாம் உனக்கு சலாம்...

குழந்தைகளில்
உலகில் மகிழ்ந்த
இதயம் 
அமைதித் துயிலில்...

மதங்களைக் கடந்த
மனங்களை வென்ற நீ
மண்ணுக்குள்
புதைக்கப்பட்டாய்
என்கிறார்கள்...
இல்லை... இல்லை...
விதைக்கப்பட்டாய்...

அன்று
உன்னைத் தவழவிட்டு
சந்தோஷம் கொண்ட
தாய் பூமி...
இன்று
தன்னுள் தாங்கி
பெருமை தேடிக்கொண்டது...

நீ உறங்கும்
பேக்கரும்பு ...
ஆகலாம் இனி
புண்ணியபூமியாய்...

உன்னை
மனுஷ்ய புத்திரர்களுக்கு
பிடிக்காமல் இருக்கலாம்...
மனித புத்திரர்களுக்கு
ரொம்பப் பிடிக்கும்...

 மனுஷ்ய புத்திரர்களின்
தலைவன் அல்ல...
மக்களின் தலைவன் 
நீ என்பதை
சொல்லாமல் சொல்லியது...
வழியனுப்ப வந்த
மக்கள் வெள்ளம்...

வாழும் காலத்தில் 
ஓய்வெடுக்காதவனே...
இனியேனும் 
நிம்மதியாய் உறங்கு...

சாதி... மதம்...
அழிக்க - நீ
விதைக்கப்பட்ட
உன் பூமியில் இருந்து
கிளம்பட்டும்...
அக்னிச் சிறக்கொன்று...

விதையாய் நீ...
உன்னில் இருந்து
வீரியமாய் கிளம்பட்டும்
விருட்சங்கள்...!
-'பரிவை' சே.குமார்.

12 கருத்துகள்:

 1. //மதங்களைக் கடந்த
  மனங்களை வென்ற நீ
  மண்ணுக்குள்
  புதைக்கப்பட்டாய்
  என்கிறார்கள்...
  இல்லை... இல்லை...
  விதைக்கப்பட்டாய்.//

  மிகவும் உண்மை. இந்த விதையிலிருந்து பல லட்சம் விருட்சங்கள் முளைத்து வரும்.

  பதிலளிநீக்கு
 2. மனுஷ்ய புத்திரர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் மக்கள் மனங்களில் வாழ்கிறாரே ,நமது உத்தம புத்திரன் !

  பதிலளிநீக்கு
 3. மண்ணில் மறைந்தாலும் மனங்களில் உலவும் மாமேதை...

  பதிலளிநீக்கு
 4. வீர வணக்கங்கள்...

  அவர் கண்ட கனவை நனவாக்குவோம்...

  பதிலளிநீக்கு
 5. நாம் காந்தியைப் பார்த்ததில்லை. படித்திருக்கிறோம். ஆனால் இத்தகைய ஒரு பெருமகனார் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தது பெருமையே.

  பதிலளிநீக்கு
 6. அருமை . உத்தம மனிதர்கள் உயிர் துறந்தால் புதைக்கப் படுவதில்லை அவர்கள் விதைக்கப் படுகிறார்கள்கலாம்விதையாய் உறங்குகிறார். விருட்சங்களாய் வளர்வார்

  பதிலளிநீக்கு
 7. சாதி... மதம்...
  அழிக்க - நீ
  விதைக்கப்பட்ட
  உன் பூமியில் இருந்து
  கிளம்பட்டும்...
  அக்னிச் சிறக்கொன்று...

  விதையாய் நீ...
  உன்னில் இருந்து
  வீரியமாய் கிளம்பட்டும்
  விருட்சங்கள்...!

  பதிலளிநீக்கு
 8. மாமனிதர்.. நெஞ்சார்ந்த அஞ்சலி!..

  பதிலளிநீக்கு
 9. அப்துல் கலாமுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

  பதிலளிநீக்கு
 10. அருமை நண்பரே! கலாம் ஒரு விதையே! ஐயமில்லை! அது விருட்சமாகும் நாள் அருகில்தான்...

  பதிலளிநீக்கு
 11. விதைத்தவன் உறங்கலாம். விதைகள் உறங்குவதில்லை.

  தொடர்கிறேன் நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...