மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

மனசு பேசுகிறது : தெய்வமான குடி

ன்றைய நிலையில் நூத்துக்கு தொன்னூறு பேரு குடிக்கிறாங்க... ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் குடிக்கிறாங்கன்னு செய்திகள்லயும் இணைய வீடியோக்களிலும் பார்க்கிறோம். சமீபத்தில் கூட நயன்தாரா பாட்டில் வாங்கினார் என அவருக்கு எதிராக பொங்கி எழுந்தது ஒரு கூட்டம். அது சினிமா சூட்டிங் என்ற செய்தி வந்தபோதும் தேவையில்லாத ஒரு பிரச்சினையை தேவையான பிரச்சினையாகப் பார்த்தது அந்தக் கூட்டம். கடந்த வாரம் பள்ளி மாணவர்கள் குடித்து விட்டு ரோட்டில் விழுந்து கிடந்த காட்சிகளை முகநூலில் பார்க்க முடிந்தது. சமுதாய சீரழிவுக்கு முக்கிய காரணம் சினிமாதான். அதில்தான் சின்னப்பையன் சரக்கு வாங்கிக் கொடுப்பது போலவும், அடியாளுக்கு கத்தி எடுத்துக் கொடுப்பது போலவும் காட்டுகிறார்கள். சினிமா பற்றி இங்கு பேசப்போவதில்லை... குடி பற்றி மட்டுமே பேசுவோம்.


குடி குறித்து முன்னரே ஒரு பதிவு போட்டிருக்கிறேன். அதே போன்றதொரு பகிர்வை மீண்டும் பகிரக் காரணம், சென்ற மனசின் பக்கத்தில் மலையாளி நண்பர் தண்ணி அடிக்கிறார் என்று எழுதியிருந்ததற்கு அண்ணன் கில்லர்ஜியும் காயத்ரி அக்காவும் அவர்களுக்கு மலையாளம் தெரியாததால் எல்லாவற்றையும் எழுதுகிறீர்கள் இப்படியெல்லாம் எழுதணுமா யோசிங்க என்று சொல்லியிருந்தார்கள். அடுத்தவரைப் பற்றி அவர் அறியாமல் பேசுவது தவறுதான். ஆனால் இங்கே அந்த மனிதரைப் பற்றிப் பேசவில்லை... இப்படிக் குடிக்கிறாரே என்ற ஆதங்கத்தில் எழுதியதுதான் அது. 

கடந்த சனி அன்று நானும் கில்லர்ஜி அண்ணாவும் நம்ம முத்து நிலவன் ஐயாவின் மகனைச் சந்திக்கச் சென்றுவிட்டு வரும்போது இது குறித்துப் பேசினோம். அப்போ அண்ணனும் இந்தக் குடி குறித்து வருந்தினார். இன்னைக்கு பெரும்பாலான வீடுகளில் மனைவி ஆம்லெட் போட்டுக் கொடுக்க, கணவன் நண்பர்களுடன் அரட்டை அடித்தபடி வீட்டிலேயே சரக்கு அடிக்கிறார். எனக்குத் தெரிந்த ஒரு தண்ணி வண்டியைத் திருத்துகிறேன் என்று சபதமிட்ட மனைவி இன்று சிக்கன் வறுத்துக் கொடுப்பதுடன் வீட்டில் மட்டும் அடியுங்கள்... வெளியில் எல்லாம் வேண்டாம் எனச் சொல்லி வீட்டில் கடை திறக்க வைத்திருக்கிறார். திருத்துகிறேன் என்று வந்தவர் ரொம்பத் திருந்திவிட்டார்.

ஊரில் எந்த விசேசம் என்றாலும் இப்போ தண்ணிப் பார்ட்டி இல்லாமல் நடப்பதில்லை... எங்கள் மாவட்டத்தில் சில பணக்கார்களின் இல்ல திருமணங்களில் தண்ணி அடிப்பதற்கென்றே தனியாக பந்தல் அமைத்து அங்கு என்ன வேண்டுமோ அதை ஹோட்டல் பார்கள் போல் ஆட்களை வைத்துக் கொடுத்து சாப்பிட வைக்கிறார்கள். இது எங்கள் மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் எங்கும் நடைமுறைக்கு வந்துள்ளது என்பதே உண்மை. ஒரு முறை கோவில் திருவிழாவுக்காக உறவினர் வீடு சென்றபோது, மொட்டைமாடியில் டேபிள் சேர் போட்டு சிக்கன், மட்டன், மீன் என எல்லாம் வைத்து ஊத்திக் கொடுக்க ஆள்களும் நிறுத்தி, வருவோரிடமெல்லாம் தண்ணி சாப்பிடுவீங்களா... அப்படியே மாடிக்கு பொயிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பிக் குடிக்க வைத்தார்கள். அங்கு குடித்து சாப்பிட்டவர்கள் எல்லாம் 'ப்பா... என்ன கவனிப்பு... மனுசன் திருவிழாவுக்கு வந்தவங்களை எல்லாம் குளிப்பாட்டிட்டான்.. இவன மாதிரி எவனும் விருந்து போட முடியாது' என்று நாகுழற புகழ்ந்து பேசினர்.


இங்கு எப்படா வியாழக்கிழமை வரும் என்று பெருங்கூட்டமே காத்திருக்கும். வியாழன் மாலை அலுவலகம் முடிந்து வரும்போதே கையில் கருப்பு பிளாஸ்டிக் பைக்குள் பாட்டில்கள் சிரிக்கும். என்ன பாட்டிலோ வந்தாச்சா என்றால் வீக் எண்டுல்ல... பின்னே குடிக்காம என ஆரம்பித்தால் வெள்ளியும் தொடரும்... சிலருக்கு சனிக்கிழமை வேறு விடுமுறை கேட்கவா வேண்டும்... சனி இரவு வரை குடிக்க... சாப்பிட... தூங்க... என ரொம்ப சந்தோஷமாகவும் சின்சியராகவும் ஏதோ கண்டிப்பாகச் செய்ய வேண்டிய வேலை என்பது போலவும் செய்வார்கள். இதில் கூட்டணிகள் வேறு... பெரும்பாலான கூட்டணிகள் ஆரம்பிக்கும் போது சந்தோஷமாகவும் முடியும் போது அவர்களுக்கு என்னென்ன வெளியே தெரியாத பிரச்சினைகள் இருக்கோ எல்லாத்தையும் கடை விரித்து அடிதடியுடனும் முடியும். ஆனால் மறுநாள் காலையில் மாப்ள, மச்சான்னு மறுபடியும் குலதெய்வத்தைக் கும்பிட ஆரம்பிச்சிருவானுங்க.

மலையாளிகள் எல்லாருமே மொடாக் குடிகாரர்கள்தான். ஆனால் எத்தனை பாட்டில்களை முழுங்கினாலும் ஆட்டம் போட மாட்டார்கள். நம்மவர்களுக்கு ஒரு பெக் பொயிட்டாலே இல்லாத இங்கிலீசும் அடுத்தவனோட அந்தரங்கமும் பொதுக்குன்னு குதிச்சிரும். அந்த இடத்துல நாந்தான்டா ஹீரோன்னு வளவளன்னு பேசிக்கிட்டு, ஆட்டம் போட்டுக்கிட்டு சண்டைக்கு குதிச்சிக்கிட்டு... ஸ்... அப்பா... இடத்தையே ரணகளமாக்கிடுவானுங்க... இப்படி ஆளுகளை நான் இருந்த அறைகளில் சந்திச்சிருக்கேன். ஆங்கிலமே பேச வராத ஒருவர் தண்ணி அடித்தால் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார். இன்னொருத்தரோ நான் ஸ்டெடியா இருக்கேன்னு எந்திரிச்சி நடக்கும் போது ரொம்ப ஸ்டெடியாவே புதுசா கார் பழகுறவன் வண்டி ஓட்டுறமாதிரி நடப்பார். ஒருத்தருக்கு குடிச்சிக்கிட்டே இருக்கணும். இப்படி நிறைய கதாபாத்திரங்களைச் சந்தித்து இருக்கிறேன்.

இங்கே நான் சொல்லியிருந்த மலையாளியைப் பற்றிச் சொல்ல வேண்டும்.... காலையில் வேலைக்குச் செல்பவர் மதியம் மூணு மணிக்கு அறைக்குத் திரும்புகிறார். ஏதோ அவசரமான வேலை என்பது போல அறக்கப்பறக்க வருபவர், வந்ததும் வராததுமாக பாட்டிலை எடுத்து இரண்டு மூன்று பெக் அடித்து டிவி பார்த்து முடிக்கும்போது நாலரைக்கு மேலாகும். அதன் பின் மதியச் சாப்பாடு  சாப்பிடப் போகிறார். வந்து ஒரு உறக்கம்... ஏழு மணிக்கு எழுந்து முகம் கழுவி தலை சீவி மீண்டும் பாட்டிலுடன் பந்தம் பத்தாததுக்கு வெளியில் இருந்து ஒருத்தர் வேறு வந்துவிடுகிறார். அப்புறம் என்ன குடிமகனே... மொடாக் குடிமகனேதான்.. இரவு பத்துமணிக்குச் சாப்பிடச் செல்கிறார். வந்ததும் டிவியில் படம்... இரவு பனிரெண்டு மணி வரைக்கும் யாரையும் தூங்க விடுவதில்லை. 


இதில் என்ன உனக்குப் பிரச்சினை என்று நீங்க கேட்கலாம்... பிரச்சினை எனக்கில்லை... மற்றொரு அண்ணனுக்கு... அவருக்கு பகலெல்லாம் அலையும் பணி, மாலை 7 மணிக்குத்தான் வருவார். வந்ததும் குளித்து சாப்பிட்டு கொஞ்ச நேரம் டிவி பார்த்துவிட்டு 10 மணிக்குள்ளாக படுத்துவிடுவார். தண்ணிப் பார்ட்டி ஊருக்குப் போயிருந்த போது 10 மணிக்கு முன்ன லைட்டெல்லாம் அணைத்துவிட்டு உறங்கியவர், நேற்றிரவெல்லாம் எதுவும் சொல்ல முடியாமல் கிச்சனில் போட்டிருக்கும் சேரில் போய் படுத்துவிட்டார். 

இன்று காலை என்னிடம் நீ எப்ப அபுதாபி போவேன்னு கேட்டார். ஏண்ணா... என்னாச்சு... இந்த மாசம் இங்க வேலை முடியும் என்றதும் நானும் அடுத்த மாசத்துல இருந்து வேற ரூம் போறேன். இந்தாளு கூட இருக்கமுடியாது. உறங்க விடாம வெள்ளம் (தண்ணி) அடிச்சிட்டு குறைய (அதிக) நேரம் டிவியும் பின்ன லைட்டும் இட்டுட்டு நமக்கு நிம்மதி வேணாமா..? அதை யோசிக்கிது இல்லை... அவரு உச்சிக்கு (மதியம்) வந்துட்டு கிடக்கும் (உறங்கும்) நாம பகலெல்லாம் அலைஞ்சிட்டு கொஞ்ச நேரமாச்சும் கிடக்க வேண்டாமா என்று புலம்பினார்.  உண்மைதானே... இவர் தண்ணி அடித்து ஆட்டம் போடுவதால் பகலெல்லாம் வெளியில் வெயிலில் அலைந்து வரும் மனிதனுக்கு கோபம் வரத்தானே செய்யும். எத்தனை முறைதான் சொல்லுவார்.

வீட்டுக்கு ஒரே பையன் கல்யாணமாகி ஆறே மாதத்தில் குடியால் இறந்தான். அதுவும் நாங்கள் தங்கியிருந்த பிளாட்டில் பக்கத்து அறையில் இருந்த சென்னைப் பையன் அவன், இது குறித்து ஒரு பதிவில் சொல்லியிருந்தேன். நைட் கிளப்புகளில் போய் குடித்து அங்கு டான்ஸ் ஆடும் பெண்களுக்கு காசு மாலை அணிவித்து ஆட்டம் போட கிரிடிட் கார்டுகளில் அளவுக்கு அதிகமாக பணம் வாங்கி கட்ட முடியாமல் சிறைக்குப் போய், பார்த்த நல்ல வேலையும் போயி.. இப்போ ஊரில் கிடைத்த வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான் செத்தவனின் நண்பனான மற்றொரு தமிழன். தண்ணியே தெய்வம் என்றிருந்த திருமணம் ஆகாத ஒருவன், சொந்தக்காரி என ஒருத்தியை குழந்தையுடன் கூட்டி வந்து வேலை வாங்கிக் கொடுத்து இப்போ அவளுடன் குடியும் குடித்தனமுமாக இருக்கிறான். குடித்துவிட்டு நடந்த தகராறில் மேலே இருந்து தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்ட எங்க மாவட்டக்காரரின் உடலை ஊருக்கு அனுப்ப எத்தனைநாள் சிரமப்பட்டிருக்கிறார்கள் எனது உறவுகள் என்பதை நேரில் பார்த்திருக்கிறேன்... அப்பா சம்பாதிக்கிறார் நாம் படித்து பெரியாளாவோம் என கல்லூரியில் படிக்கும் மகன் இப்போ குடும்பப்பாரம் சுமக்கிறான். இப்படி நிறையப் பேரைச் சந்திச்சாச்சு.


எதுக்கு இப்படி விழுந்து விழுந்து குடிக்கிறீங்க எனச் சத்தம் போட்டால் வாரமெல்லாமா குடிக்கிறேன் விடுமுறை நாளில்தானே என்று சப்பைக் கட்டுகிறார்கள். வாரமெல்லாம் குடிப்பவன் ஒன்றிரண்டு பெக்கோடு நிறுத்திக் கொள்கிறான். ஆனால் வார இறுதியில் குடிப்பவர்கள் விடுமுறை என்பது குடிக்க மட்டுமே என்பது போல் லிட்டர் கணக்கில் அல்லவா ஊற்றுகிறார்கள். இது வாரத்துக் குடியை விட அதிகமில்லையா? வெளிநாட்டு வாழ்க்கையில் பெரும்பாலும் குடியே பிரதானமாகிவிட்டது. இங்கே பிரிவுத் துயரில் வாழ்பவர்கள்... வாடுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். குடும்பம் அருகில் இல்லாதது குடிக்கக் கிடைத்த சந்தோஷமான வாழ்க்கை என்றே வாழ்பவர்கள் அதிகம். குடி குடியைக் கெடுக்கும் என்பதை அறியாதவர்கள் இல்லை இவர்கள் இருந்தும் சந்தோஷமாக அனுபவிக்கிறார்களாம். இது போன்ற குடிமகன்கள் நிலை அறிந்து அவர்களாகத் திருந்தினால்தான் உண்டு. அதுவரை இப்படிப் புலம்பிக் கட்டுரை போட வேண்டியதுதான் வேறென்ன செய்ய முடியும் பாட்டில்களுக்கு மத்தியில் படுத்திருக்கும் இவர்களை...

-'பரிவை' சே.குமார்.

31 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

வணக்கம் நண்பரே நான் கடந்த சனிக்கிழமை தங்களுடன் பேசிய நிறைய வார்த்தைகளை தங்களது பதிவில் கண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி.
சமூக சிந்தனைக்குறிய நல்ல பதிவு.
தமிழ் மணம் 2

Unknown சொன்னது…

பாட்டில்களுக்கு மத்தியில் படுத்திருக்கும் இவர்களை...பார்த்தால் ,ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு பாடல் நினைவுக்கு வருதே :)
த ம 1

Kasthuri Rengan சொன்னது…

வருத்தம் தரும் விசயம்...
எத்துனை இழப்புகள்..
பட்டியல் வேதனை..

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா
அருமையான கருத்தாடல்... இந்த நிலை தொடர்ந்தால் தாய்க்குலத்தின் நிலை என்னவாகும்.... நல்ல விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

த.ம 4

Angel சொன்னது…

:( உண்மை ..நான் இங்கே வெளிநாட்டிலும் நம் குடி மக்கள் செய்யும் அட்டூழியங்கள் நிறைய பார்க்கிறேன் .ஒரு பதிவு டிராப்டில் இருக்கு .வெளியிடுவேன் விரைவில் ..

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

படிக்கப் படிக்க வருத்தம் மேலிடுகிறது நண்பரே
தம +1

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

திருந்தும் நாள் வரும்... அப்போது தான் அனைத்தும் உணரவும் முடியும்... அதுவரை ம்ஹீம் திருத்த முடியாது...

முடியும் என்றால் அவரவர் துணையின் கையில்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

அம்மணி என்ன தைரியமா போஸ் குடுக்குது.
அப்படி என்னதான் இருக்கிறது குடியில்?

துரை செல்வராஜூ சொன்னது…

கல்யாண வீடுகளில் குடிப்பதற்கு வசதி தரும் கேவலம் - சில ஆண்டுகளாகவே நடந்து வருகின்றது.. மாப்பிள்ளையே போதை குறையாமல் தாலி கட்டுகின்றான்..

அரபு நாட்டுக்கு அனுப்பினால் திருந்திவிடுவான் என்று ஆயிரங்கனவுகளோடு அங்கிருந்து - இங்கும் (குவைத்) அனுப்பி பீடைகள் வைக்கப்பட்டுள்ளன.

Catering நிறுவனங்களில் கடைநிலை ஊழியத்திற்கே நல்ல சம்பளம். தகுதியை மீறியதாகக் கிடைக்கின்றது.

அதிலும் மேலதிக நேரமும் சேர்ந்து கொண்டால் - சொல்லவே வேண்டாம் - குரங்கின் கையில் கொள்ளிக் கட்டையைக் கொடுத்தது போல் ஆகின்றது.

என்ன இது!?.. கருத்துரை இட வந்தால் பதிவே போடலாம் போலிருக்கின்றதே!..

நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் - குமார்!..

துரை செல்வராஜூ சொன்னது…

தாய்க்குலமா!?.. சரியாய் போச்சு!.. குடிகாரப் பயல் என்று தெரிந்தே கழுத்தை நீட்டுகின்றார்கள்..

ஒருகாட்சி கை வசம் இருக்கின்றது. விரைவில் காண்க!..

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//இது போன்ற குடிமகன்கள் நிலை அறிந்து அவர்களாகத் திருந்தினால்தான் உண்டு. //

அப்படி ஏதாவது நடக்குமா?

ஸ்ரீராம். சொன்னது…

கொடுமையான நிலைமை. வெறும் பீர் மட்டும்தான், மாதத்துக்கு ஒருமுறைதான் என்ற பொய்களில் தொடங்குகிறது இந்தப் பொல்லாத பழக்கம்.

கோமதி அரசு சொன்னது…

இவர்களை நம்பி குடும்பம் இருப்பதை மறந்து குடிப்பவர்களை என்ன சொல்வது?
கவலை அளிக்கும் விஷயம். அவர்கள் குடியை நிறுத்த யாராவது கவுன்சிலிங் கொடுத்தால் நல்லது.

Kasthuri Rengan சொன்னது…

தம++கூடுதல் ஒன்று +++- ++

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மது சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
கைவசம் இருக்கும் காட்சியை விரைவில் வெளியிடுங்க....

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்...
தங்கள் வாக்குக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
சேமிப்பில் இருப்பதை விரைவில் வெளியிடுங்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
இப்ப சிலரின் துணைவிகளே தூண்டுகோலாய் இருக்கிறார்கள் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
உண்மைதானய்யா.... ஊரில் இருந்து இங்கு வந்து மது, மாதுன்னு அலையும் மானங்கெட்ட ஜென்மங்களைப் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது. 1000 பதிவுகள் எழுதினாலும் திருந்துவார்களா என்ன...
கேட்டால் பீர் மட்டுந்தான், வாரம் ஒரு முறைதான்... தினம் ஒரு பெக்தான் எனத்தான் சொல்லுகிறார்களே ஒழிய விட்டு ஓழிக்கிறார்கள் இல்லை.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மது சார்...
தங்கள் வாக்குக்கும் நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு.

அவர்களாகத் திருந்த வேண்டும். வேறு வழியில்லை.

ஆதங்கப்படுவது தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.