பார்க்க வேண்டும் என்று நினைத்த இரண்டு படங்களை பார்க்கும் வாய்ப்பு சென்ற வாரத்தில் கிடைத்தது. அந்தப் படங்கள் ராமானுஜன் மற்றும் தலைமுறைகள். இரண்டுமே ரொம்ப எதிர்ப்பார்ப்போடு இருந்த படங்கள். மேலும் இங்கு தியேட்டருக்கெல்லாம் வராத படங்கள் வரிசையில் இந்தப்படங்களும் இருந்ததால் இணையத்தில் பார்க்க காத்திருக்க வேண்டியிருந்தது.
கிறிஸ்தவப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் மகனை வீட்டை விட்டுத் துரத்தும் அப்பாவாக மறைந்த கேமராக் கவிஞன் இயக்குநர் பாலுமகேந்திரா... அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். தொப்பி போட்டு அளவான மீசை வைத்து போட்டோக்களில் பார்த்த பாலுமகேந்திராவா இது, வாழ்க்கை முதுமையில் அந்த உருவத்தை எப்படி மாற்றி வைத்திருக்கிறது என்ற நினைப்போடு பார்த்தபடம்.
அண்ணனின் காதல் திருமணத்துக்குப் பின் படிப்புக்கு தடை விதிக்கப்படும் தங்கை, திருமணம் செய்து பெண் குழந்தை பிறக்கும் என மூன்று ஆண்குழந்தைகளைப் பெற்றிருக்கிறாள். நான்காவதாய் வயிற்றில்... அப்பாவுக்கு முடியலை என்பதை அறிந்து அங்கு வரும் மகன் அவரின் மனசில் இடம் பிடித்தானா? மகனைத் தொடர்ந்து வரும் மருமகளையும் பேரனையும் அவர் ஏற்றுக் கொண்டாரா? மகளுக்கு பெண் குழந்தை பிறந்ததா? அவரின் வாழ்க்கை என்னவானது? என்பதை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் பாலுமகேந்திரா.
குழந்தை பிறந்து வீட்டுக்குத் திரும்பும் மகளிடம் என்ன குழந்தை என்று கேட்கும் தந்தை, அவளை மருத்துவமனையில் சேர்த்து வீட்டுக்கும் மருத்துவமனைக்குமாக அலையும் மகனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கமாட்டாரா? அவருக்கு இருக்கும் இரண்டாவது வீட்டில் அந்த அம்மா பெயரை மட்டும் சொல்லி அவரை திரையில் காட்டாவிட்டாலும் வீட்டுக்கு இரண்டு மூன்று முறை வரும் சித்தி பெண் என்ன ஆனாள்? காதல் மணம் புரிந்து வீட்டை விட்டுப்போன மகனின் மகன் மீது கொள்ளைப் பாசம் வைக்கும் தாத்தா, வீட்டிலேயே இருக்கும் மகள் வயிற்றுப் பேரன்கள் மூவருடனும் பேசவேயில்லையே ஏன்? வீட்டிலேயே இருக்கும் அத்தை பையன்களுடன் அந்தப் பேரன் பேசவும் இல்லை. அவர்களுக்கான காட்சியும் இல்லையே ஏன்? ஆங்கிலம் மட்டுமே பேசுவேன் என்று சொல்லும் பேரன் கிராமத்திலேயே தங்கி அங்கு படிப்பதென்பது சினிமாவுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்... நடைமுறைக்கு ஒத்துவருமா? என்பது போன்ற கேள்விகள் வரிசையாய் எழுந்தாலும் படம் ஒரு தலைமுறையின் வாழ்க்கையை அளவாய், அழகாய் காட்டியது.
பேரனுடனான தாத்தாவின் சந்தோஷங்களை அழகாய்ச் சொன்ன தலைமுறைகள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
*******************
கணிதமேதை இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை இரண்டரை மணி நேரப்படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஞான ராஜசேகரன். அவரின் கணித அறிவு, அதற்காக அவர் செய்யும் செயல்கள், திருமணம், தன்னோட திறமையை நிரூபிப்பதற்கான போராட்டம், வெளிநாட்டு வாழ்க்கை, காசநோய், மரணம் என அவரின் வாழ்க்கையின் ஒட்டு மொத்த நிகழ்வுகளையும் காட்டியிருக்கிறார்.
இராமானுஜர் வாழ்க்கை வரலாற்றைப் படித்ததில்லை. ஆனால் படத்தில் பெரியவரான பின்னர் அவர் எதற்கெடுத்தாலும் அழுவது போல் காட்டியிருப்பது ஏனோ பிடிக்கவில்லை. உண்மையில் அவர் அப்படிப்பட்டவரா என்பதை நன்கு விவரம் அறிந்த நட்புக்கள் சொன்னால் நன்றாக இருக்கும். அம்மாவாக வரும் சுகாசினி வில்லி போல் காட்சிப்படுத்தப்பட்டு கடைசியில் தாய்மனசைக் காட்டுகிறார். அப்பாவாக வரும் நிழல்கள் ரவி, அப்பாஸ், சரத்பாபு, ஓய்.ஜி என நிறைய நடிகர்கள் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.
இராமானுஜராக வாழ்ந்திருக்கிறார் புதுமுகம் அபினவ், தேடிப்பிடித்துப் போட்டிருக்கிறார்கள். வீரபாண்டிய கட்டப்பொம்மன் என்றதும் நமக்கு சிவாஜி நினைவில் ஆடுவதுபோல் இனி இராமானுஜர் என்றாலே இந்த அபினவ்தான் நினைவில் ஆடுவார். பொருத்தமான மனிதர். அவரை மணந்து கொண்டு மாமியாரின் கொடுமைக்கு உட்பட்டாலும் வெளிக்காட்டாமல் வெகுளித்தனமான சின்னப்பெண்ணாக பாமா தனது பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்.
ஆங்கிலேயர்கள் அனைவரும் தமிழ் பேசுவதுதான் ஒட்டாமல் இருக்கிறது. ஆனால் அவர்களை ஆங்கிலத்தில் பேசவைத்து தமிழில் பொருள் போட்டிருந்தால் பாதிக்கும் மேலான படம் ஆங்கிலப்படம் போல் ஆகியிருக்கும் என்பதே உண்மை. அதனால் இயக்குநர் ஆங்கிலேயர்களை தமிழ் பேச வைத்திருக்கிறார்.
இன்றைக்கு நாம் பயன்படுத்தும் ATM, MAIL அனைத்துக்கும் இவர் கண்டுபிடித்த கணிதமே அடிப்படை என்பதை எத்தனை பேர் அறிவோம். சாகும் தருவாயில் கூட மார்க் தீட்டாவைக் கண்டுபிடித்த தமிழன் இராமானுஜரின் வாழ்க்கையை அழகாய் தொகுத்திருக்கும் இந்தப் படத்தை அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். பாரதியைப் போல்தான் ராமனுஜரின் மரணத்திலும் ஒரு சிலரே கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை படத்தின் மூலம் அறிந்தபோது வேதனையாக இருந்தது.
-'பரிவை' சே.குமார்.
19 எண்ணங்கள்:
விமர்சனம் அருமை நண்பரே....
தமிழ் மணம் 2
நல்ல இரு விமர்சனங்கள்.
இரு படங்களும் பார்த்தேன். இக்காலகட்டத்தில் இவை போன்ற படங்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. கும்பகோணத்தில் பிறந்தவன் என்ற நிலையில் கும்பகோணம் தொடர்பான நிகழ்வுகளை இராமானுஜன் திரைப்படத்தில் பார்த்தபோது மெய்சிலிர்த்துப்போனேன். ஒரு புறம் பெருமையாகவும் இருந்தது. அவர் நடந்த இடத்தில் நாம் நடந்திருக்கிறோம். அவர் இருந்த சார்ங்கபாணி கோயிலுக்குப் பல முறை சென்று நண்பர்களுடன் உரையாடி இருக்கிறோம் என்று நினைத்தபோது மனம் நிம்மதியாக இருந்தது.
இரண்டும் நன்று...
ராமானுஜன் பார்க்க வேண்டிய படம்...
இராமானுஜன் வாழ்வில் வேதனைகளை மட்டுமே அனுபவித்து,
மாபெரும் கணிதப் புதையலை இவ்வுலகிற்கு வழங்கிச் சென்ற
மாமனிதர்
நன்றி நண்பரே
தம +1
தங்களின் விமரிசனம் திரைப்படத்தினைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகின்றது..
ராமானுஜன் இன்னும் பார்க்கவில்லை பார்க்க வேண்டும்.
விமர்சனத்துக்கு நன்றி.
தம 7
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா...
பெரியவர்கள் வாழ்ந்த பூமியில் வாழ்தல் என்பதே சிறப்புத்தான், அதுபோக அவர்கள் நடந்த பாதைகளில் நடக்க வாய்க்கபெற்ற வாழ்க்கை எவ்வளவு சிறப்பானது. வாழ்த்துக்கள் ஐயா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சகோதரி...
தங்கள் வாக்குக்கும் நன்றி.
விமரிசனத்தில் உங்கள் ரசனை புரிகிறது.. நல்லதோர் பதிவு குமார்!
நல்ல விமர்சனம்! இரு படங்களும் பார்க்க வேண்டும். நன்றி நண்பரே! விமர்சனத்திற்கு!
நல்ல விமர்சனம்.
த.ம. +1
கருத்துரையிடுக