எத்தனை கவலைகள் இருந்தாலும் 80, 90 களில் வந்த ராஜாவின் பாடல்களை ஒலிக்க விட்டு கண்ணை மூடி இசையை ரசிக்கும் போது கிடைக்கும் ஏகாந்தத்துக்கு ஈடு இணை ஏது... ராஜாவுக்கு முன்னர் கண்டசாலா, எம்.எஸ்.வி. உள்ளிட்ட இசை மாமேதைகள் எத்தனை இனிமையான பாடல்களைக் கொடுத்தனர். ராஜாவின் கொடி பறந்து கொண்டிருக்கும் போதே தமிழ் திரையுலகில் இசையில் தனிக்கொடி நாட்டிய ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான், சங்கர் கணேஷ், தேவா, வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா, இமான் , இன்னும் நிறைய இசையமைப்பாளர்கள் தங்களது இசையால் நம்மைத் தாலாட்டி வருகிறார்கள். இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் தமது இசையால் கவர்ந்தாலும் நம்மை எல்லாம் தாலாட்டும் உரிமை ராஜாவின் பாடல்களுக்கு மட்டுமே இருக்கிறது.
கிராமத்து இசையும் பாடலும் எல்லோரையும் கவரும் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன... இதோ கிராமத்து இசையில் நம் உள்ளம் கவர்ந்த முத்தான எட்டுப்பாடல்கள் இன்றைய வீடியோப் பகிர்வில் உங்கள் செவிக்கு இனிமை சேர்ப்பதற்காக...
படம் : பெரிய மருது
பாடல் : வெடலப்புள்ள நேசத்துக்கு...
படம் : சேரன் பாண்டியன்
பாடல் : சம்பா நாத்து...
படம் : சின்னத்தாயி
பாடல் : நான் ஏரிக்கரை மேலிருந்து....
படம் : ஆட்டுக்கார அலமேலு
பாடல் : பருத்தி எடுக்கயிலே...
படம் : அச்சமில்லை அச்சமில்லை
பாடல் : ஆவரம் பூவு ஆறேழு நாளா....
படம் : கிராமத்து அத்தியாயம்
பாடல் : ஆத்து மேட்டுல...
படம் : கன்னிப் பருவத்திலே
பாடல் : பட்டு வண்ண ரோசாவாம்...
படம் : முதல் மரியாதை
பாடல் : பூங்காத்து திரும்புமா...
பாடல்களை கண்டிப்பாக ரசித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இதே வரிசையில் இன்னும் சில முத்துக்களை அடுத்த பகிர்வில் பார்ப்போம்.
பகிர்வு தொடரும்...
-'பரிவை' சே.குமார்.
14 எண்ணங்கள்:
I like raja's songs too.
வணக்கம்
அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான பாடல்கள் நண்பரே
சரியாச்சொன்னீங்க ராஜாவுக்கு நிகர் யாருமில்லை
அவ்வளவாப் பிடிக்காதது ஆட்டுக்கார அலமேலு பாடல். ரொம்பப் பிடித்தது ஆவாரம்பூவு ஆறேழு நாளா பாடல்! :)
4, 5, 6, 7 மற்றும் 8 அனைத்துமே ரசித்த பாடல்கள்.... முதல் மூன்றும் கேட்ட நினைவில்லை. கேட்கிறேன்...
த.ம. 4
குறிப்பிட்ட பாடல்கள் அனைத்தும் மண்மணம் கமழும் பாடல்கள்.முதல் மூன்று பாடல்களும் அவ்வளவாக கேட்டதில்லை. மிகவும் நன்றாக நன்றாக இருக்கிறது பகிர்வுக்கு நன்றி
நெஞ்சை வருடும் இனிமையான பாடல்கள்.
அதிலும் ஆவாரம் பூவு அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்.
அடடா... அனைத்தும் என்றும் ரசிக்க வைக்கும் பாடல்கள்... ரசனைக்கு பாராட்டுக்கள்...
கிராமிய பாடல்கள் எப்போதுமே தித்திக்கும்!பாடல்கள் பகிர்வுக்கு நன்றி,ராக தேவனுக்கும்!
அத்தனைப் பாடல்களும் தாலாட்டு போல...ராஜா என்றுமே ராஜாதான்....
இதில் முதல் மரியாதை படப்பாட்டு புகழ் பெற்ற பாடல். மிக இனிமையும் கூட. ' நான் ஏரிக்கரை ' பாட்டும் கூட இனிமை தான்!
ரசிக்கத்தக்க பாடல்கள்.
ருத்ரையாவின் படத்தையும் நினைவு படுத்தி விட்டீர்கள்
கிராமியம் என்றால் அது ராஜாதான் அருமையான பாடல் தொகுப்புக்கள்§ தொடரட்டும் இன்னும்.
கருத்துரையிடுக