கொரோனா என்னும் கொடும் நோயின் பிடிக்குள் உலகமே சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது. இந்நிலை எப்போது மாறும் என்பது யாருக்கும் தெரியாது. நம் நாட்டிலும் பொழைக்க வந்த நாட்டிலும் தினந்தோறும் எகிறிப் போய்க் கொண்டிருக்கும் பாதிப்பு / இறப்பு எண்ணிக்கையைப் பார்க்கும் போது வருத்தமும் பயமுமே ஆட்கொள்கிறது. யாருக்கு வரும்..? எப்போது வரும்..? எப்படி வரும்..? என்பதெல்லாம் தெரியாது... ஆனாலும் வரும். நேற்று காரைக்குடியில் ஒரு நாலு வயதுக் குழந்தைக்கு வந்திருக்கிறது... இந்தச் செய்தியைக் கேட்டபோது அந்தக் குழந்தை மீண்டு(ம்) வர வேண்டும் என்றுதான் பிரார்த்தித்தேன்.
சி.சு.செல்லப்பாவின் வாடிவாசலைப் படித்த போது, அதன் வசீகரத்தில் இருந்து மீண்டு வர வெகு நேரமானது. அவ்வளவு நேர்த்தியாய்க் கதை வாடிவாசலைச் சுற்றியே நகர்த்தப்பட்டிருக்கும்.சி.சு.செல்லப்பாவின் எழுத்தில் வாசித்த ஒரே ஒரு கதையும் அதுதான்.
குடந்தையூர் ஆர்.வி. சரவணன் அண்ணன் எப்போதும் என் மீது பிரியம் கொண்டவர். சென்னைக்குப் போனபோது யாரையும் சந்திக்க முடியாத சூழலிலும் தொடர் போன் அழைப்பின் மூலம் தனது வீட்டுக்கே வர வைத்தவர் இவர். இவரின் திருமண ஒத்திகைக்கு எனது அணிந்துரை வேண்டுமெனச் சொன்ன போது நானெல்லாம் எழுதி என யோசித்தேன். விடவில்லை... நீதான் எழுதுறேன்னு சொல்லி வாங்கினார்.
எதிர்சேவை...
சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 12 கதைகள் உள்ளன. இந்தப் 12 கதைகளுமே நம்மைச் சுற்றியுள்ள யாரேனும் ஒருவரது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் அல்லது நாம் மறந்து போன நிகழ்வுகளை நமக்கு நினைவூட்டுகின்றன.
கிராமங்களில் திட்டும் போது நீ எல்லாம் எதுக்குப் பூமிக்குப் பாரமா இருக்கே... போய்ச் சேர வேண்டியதுதானே என்பார்கள்... அப்படியான ஒன்றைத்தான் இந்தப்படம் பேசுகிறது... இன்னும் கொஞ்சம் அழுத்தமாகப் பேசியிருக்கலாம்தான்... ஆனாலும் சொல்ல வந்ததைச் சொல்லியிருக்கிறது என்பதில் திருப்தி அடையலாம்.