மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 25 மார்ச், 2017பாலக்காட்டுத் தமிழரைப் பார்த்து வருவோமா..?

ன்று காலை எழுந்த போது இடி, மின்னலுடன் மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது. வெளியில் ஒரு சில வேலைகள் இருந்தாலும் மழை பெய்யும் போது எங்கு வெளியில் செல்வது என்ற யோசனையோடு இங்கு எதாவது கிறுக்குவோம் என்றும் வாசிப்பதும் விட்டுப் போச்சே என்பதால் சில பதிவுகளையாவது வாசிப்போமே என்றும் நினைத்த வண்ணம் லேப்டாப்பை எடுத்து அமர்ந்த போது 'ஏன் நெருஞ்சியும் குறிஞ்சியும் தொடர்கதையை மீண்டும் தொடரக் கூடாது' என்ற எண்ணம் மனசுக்குள் ஏறி உக்கார, கடைசியாக எழுதிய பகுதியை எடுத்து ஒரு முறை வாசித்து அடுத்த பகுதியை எழுதிப் பதியலாம் என்று முடிவு செய்து அடுத்த பகுதியை எழுதி வைத்துவிட்டு, முகநூலில் ஒரு ரவுண்ட்ஸ் போய் வரலாம் என இங்கிருந்து அங்கு தாவ, இன்றைய பிறந்தநாள் காண்பவர்கள் பட்டியலில்.... அட நம்ம அண்ணாச்சி... 'என்னைப் பற்றி நான்'  பகுதியைப் போல் என் நட்பு வட்டத்தில் இருக்கும் உறவுகளின் பிறந்தநாள் எனக்குத் தெரியும் பட்சத்தில்  பிறந்தநாள் பகிர்வு ஒன்றை தற்போது பகிர்ந்து வருகிறேன் என்பது எல்லாருக்கும் தெரியும். அட நம்ம அண்ணனுக்குப் பிறந்தநாள்... கண்ணன், பார்த்தசாரதி, சுபஸ்ரீ, அபியை எல்லாம்... அதாங்க நம்ம நெருஞ்சியும் குறிஞ்சியும்ல்ல முக்கியமானவங்க... இந்த முக்கியமானவங்களை அப்புறம் பாத்துப்போம்... முதல்ல இவங்களைவிட முக்கியமானவரைப் பற்றி கொஞ்சம் பேசுவோம்ன்னு பதிவை மாத்தியாச்சு.

ஆமா... எந்த அண்ணாச்சிக்குப் பிறந்தநாள்ன்னுதானே கேக்குறேள்... யோசிக்கிறேள்... சை...தொடர்கதையை தொடர்ந்து எழுதிய பாதிப்புல ஐயர் ஆத்துப்பாஷைக்குள்ள போகுது மனசு... சரி வாங்க எப்பவும் போல நம்ம எழுத்துக்குள்ள இறங்குவோம்.

யார் அந்த அண்ணாச்சி...? அப்படின்னு யோசிக்கிறீங்கதானே... அட அதாங்க... இந்த இரட்டையர்... என்னாது எழுத்தாளர்கள் சுரேஷ்-பாலா (சுபா)... இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி... நாதஸ்வர வித்வான்கள் வி.கே.கானமூர்த்தி-வி.கே.பஞ்சமூர்த்தி... இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு... அப்படின்னு நிறையப் பேர் ஒவ்வொரு துறையிலும் ஜெயித்திருக்கிறார்களே... அப்படி வலைத்தளத்தில் இரட்டையர்களாய்... மிகச் சிறப்பாக எழுதி வரும் நம்ம தில்லையகத்தாரில் ஒருவரான துளசிதரன் அண்ணன் அவர்களுக்குத்தான் இன்று பிறந்தநாள்.

Image may contain: 1 person
(பிறந்தநாள் கொண்டாடும் துளசி அண்ணனின் போட்டோ முகநூலில் இருந்து திருடப்பட்டது)
தில்லையகத்து க்ரோனிக்கல்ஸ் (THILLAIAKATHU CHRONICLES) என்னும் தளத்தில் கீதா அக்காவும் துளசி அண்ணாவும் மிகச் சிறப்பாக எழுதி வருவதுடன் எல்லாருடைய தளத்துக்கும் வந்து கருத்திட்டு வாழ்த்துவதிலும் சிறப்பானவர்கள். இவர்களின் எழுத்துக்கு எல்லாரும் நீளமான கருத்துக்களை இட, இவர்கள் பதில் சொல்ல... என பதிவை விட கருத்து இன்னும் விரிவான கருத்துக்களைச் சொல்லும். நானெல்லாம் அங்க போனாலும் ரெண்டு வரிக்குள்ள எதாச்சும் சொல்லிட்டு வந்திருவேன். ஆனா அவங்க நம்ம தளம் வந்தா ரசிச்சி... ருசிச்சு... விரிவா... கருத்துச் சொல்வாங்க... சில சமயங்கள்ல ரெண்டு பேரோட கருத்தும் இருக்கும்... சில சமயங்கள்ல அண்ணன் வர முடியலைன்னா அக்காவோட கருத்தும் அக்கா வரமுடியலைன்னா அண்ணனோட கருத்தும் இருக்கும்... அதனோடு அவங்க ஏன் வரமுடியலைங்கிற காரணமும் இருக்கும்.

ஜோதிஜி அண்ணன் எழுதிய 'என்னைப் பற்றி நான்'  பகுதியில் கருத்துத் தெரிவிக்கும் போது அவரின் பதிவுகளை வாசிப்போம்... ஆனால் அதற்கு ஆழ்ந்து சிந்தித்து கருத்திட முடியுமா என்ற யோசனையில் கருத்து இடாமல் வந்துவிடுவோம்... இப்ப இப்ப கருத்து இடுகிறோம் என்று சொல்லியிருப்பார்கள். ஜோதி அண்ணாவின் பகிர்வுக்கு விரிவாய் கருத்து இட முடியாமல் வருபவர்களில் நானும் ஒருவனே... :) அதே நிலைதான் பலரின் பகிர்வுகளுக்கும்... 

கேரளத்தில் ஆங்கில ஆசிரியர் பணி... குடும்பத்தை விடுத்து தனியாக தங்கி இருப்பதாகவும் வார விடுமுறையில் ஊருக்கு வருவதாகவும்... சினிமா பார்ப்பதில் ஆர்வம் அதிகம் என்றும் அவரைப் பற்றி வாசித்திருக்கிறேன். சினிமாவில் நாட்டம் உண்டு என்பதை அவரின் குறும்படங்கள் சொல்லும்... நல்லா நடிக்கத் தெரிந்தவர் (வாழ்வில் இல்லை என்பதைச் சொல்லிக்கிறேன்... இல்லேன்னா மதுரைத் தமிழன் அவர்கள் இந்த வரிகளை எடுத்து அதகளம் பண்ணிடமாட்டார்) என்பதை குடந்தை சரவணன் அண்ணன், கோவை ஆவி போன்றோரின் குறும்படங்களைப் பார்த்திருந்தால் தெரிந்து கொள்ளலாம். ஆம் நடிப்பில் அசத்தியிருப்பார்.

ஆங்கில ஆசிரியர்... பெரிய மனிதர்... என்பதாலும் பதிவு மூலமே பழக்கம்... இன்னும் நெருக்கமான பழக்கமில்லை என்பதாலும் 'சார்' என்றும் 'மேடம்' என்றும் அழைக்க... (இப்ப முத்துநிலவன் ஐயா, ஜெயக்குமார் ஐயாவெல்லாம் தமிழ்வழி ஆசிரியர்கள் என்பதால் ஐயா போடுறோமுல்ல... இவர் ஆங்கில வாத்தியார்ல்ல அப்ப ஆங்கிலத்தில் சார்ன்னு சொல்றதுதானே சிறப்பு) எங்களுக்குள் மின்னஞ்சல் தொடர்பு வந்த போது 'குமார்... இனி சார்ன்னு சொல்லாதீங்க... பேரைச் சொல்லுங்க... இல்லேன்னா அண்ணன்னே சொல்லுங்க' என்று சொன்னார். நம்மளைவிட ஒரு வயசு கூடன்னாலே அண்ணன் போடுறவன்... இவரைப் பேர் சொல்லி அழைப்பதா என அண்ணன் போட்டாச்சு... அண்ணன், அக்கா, அம்மா, ஐயா, தம்பி, தங்கைன்னு அழைப்பது ஒரு சுகம்தான் இல்லையா...

'என்னைப் பற்றி நான்' பகுதிக்கு எழுதக் கேட்டபோது இருவரும் சேர்ந்து மிக அழகாக எழுதிக் கொடுத்தார்கள். அதில் குடும்பம், குணம் என இருவரும் மாற்றி மாற்றிச் சொல்லி நாம் அறியத் தந்தார்கள். மிகச் சிறப்பான குடும்பம்... சந்தோஷமான வாழ்க்கை... இதைவிட வேறென்ன வேண்டும் என்பதாய் இருந்தது இருவரின் பேச்சு வடிவிலான என்னைப் பற்றி நான்.

சரிங்க... ஊருக்குப் போகும்போது வாய்ப்பிருப்பின் சந்திக்க நினைக்கும் பலரில் இந்த தில்லையகத்து உறவுகளும் இருக்கிறார்கள். அப்படியே குடும்பத்தோட கேரளாவுக்கு ஒரு விசிட் அடிச்சிடலாம்....

துளசி அண்ணனைப் பிடிக்காத வலையுலக நட்புக்கள் இல்லை என்றே சொல்லலாம்... அவரை வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன். வாழ்வில் வளமும் நலமும் பெற்று வாழவும்... இந்த அன்பு என்றும் தொடரவும்... தில்லையகத்தில் இன்னும் சிறப்பான பகிர்வுகளை இருவரும் எழுதவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...

துளசிதரன் அண்ணாச்சி இன்றைய பிறந்தநாளை சந்தோஷமாய்... மகிழ்வாய்... கொண்டாடுங்கள்.

நாளை எங்கள் செல்ல மகளின் பிறந்தநாள்... அதற்கான பதிவு நாளை...

எனக்கென்னவோ ஜீனியஸ் எல்லாம் மார்ச்ல... நல்லா வாசிங்க மார்ச் மாதத்தில் பிறந்திருப்பாங்களோன்னு தோணுது.. :)... நீங்க என்ன சொல்றீங்க..?

வாங்க மக்களே... உங்கள் வாழ்த்துக்களால் அண்ணனின் மனசைக் குளிர வையுங்கள்... இங்கே மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டி குளிர வைக்குது... ஊர்ல வெயில் அதிகமா இருக்கும்ன்னு நினைக்கிறேன்... வாழ்த்தால் குளிர வையுங்கள்....

முகநூலில் 55 வயசு காட்டுது... அப்பன்னா நமக்கு ரொ....ம்...ப.... மூத்தவர்...  எனவே அவரோட பிறந்தநாள்ல நான் அவருக்கிட்ட ஆசி வேண்டிக்கிறேன்.

Image result for பிறந்தநாள் வாழ்த்துக்கள்

-'பரிவை' சே.குமார்.

53 கருத்துகள்:

 1. முகப்புத்தத்தின் மூலமாகத் தான் எனக்கும் இன்று அவரது பிறந்த நாள் என்று தெரிந்தது குமார். பார்த்தவுடன், உங்கள் பக்கத்தில் இந்தப் பதிவு வரும் என் நினைத்தேன். இதோ வந்து விட்டது. வாசித்துவிட்டேன்......

  நானும் கீதாஜியை நேரில் இரண்டு முறை சந்தித்து இருக்கிறேன் என்றாலும் இன்னும் துளசிதரன்ஜியை சந்திக்க முடியவில்லை. அலைபேசியிலும் இணையத்திலும் பேசிக்கொள்வதோடு சரி. விரைவில் சந்திப்போம்....

  மீண்டும் துளசிதரன்ஜி அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகளோடு.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வெங்கட்ஜி! தங்களது வாழ்த்திற்கு.

   விரைவில் சந்திப்போம் வெங்கட்ஜி!

   நீக்கு
 2. மென்மையா மனிதர் பற்றிய
  மேன்மையான பதிவு..
  இருவருக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. ஒருவர் நன்றாக இருக்கவேண்டும் என்று வாழ்த்துவதற்கு வயது எதற்கு? நல்ல மனம் இருந்தால் போதும் என்பது என் கருத்து!

  என் வாழ்த்துகளையும் திரு துளசிதரனுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தில்லையகத்து இரட்டையர்களில் கீதா அரட்டை அரங்கம்! துளஸிஜி சிந்தனைச் சுடர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஸ்ரீராம் தங்களின் வாழ்த்திற்கு!

   நான் சிந்தனைச் சுடர்! அப்படியா?? மிக்க நன்றி!!

   நீக்கு
  2. ஸ்ரீராம் ஹஹஹ் என்னை அரட்டை அரங்கம்னு சொன்னதுக்கு!! ரசித்தேன்....அது சரி துளசி சிந்தனைச் சுடரா!! ம்ம்ம் அப்புறம் கவனிச்சுக்கறேன்...
   ஆம் எனது கருத்தும் வாழ்த்துவதற்கு வயது எதற்கு???
   கீதா

   நீக்கு
  3. ஸ்ரீராம் ஹஹஹ் என்னை அரட்டை அரங்கம்னு சொன்னதுக்கு!! ரசித்தேன்....அது சரி துளசி சிந்தனைச் சுடரா!! ம்ம்ம் அப்புறம் கவனிச்சுக்கறேன்...
   ஆம் எனது கருத்தும் வாழ்த்துவதற்கு வயது எதற்கு???
   கீதா

   நீக்கு
  4. கீதா கோவிச்சுக்காதீங்க உங்களுக்கு காமெடி சுடர் என்ற பட்டத்தை நான் தருகிறேன்

   நீக்கு
 4. எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்.
  என்றும் நலமுடன் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் வாழ்த்திற்கு!

   நீக்கு
 5. செல்லின் வழி ஆகவே சிறிய அளவு.

  பதிலளிநீக்கு
 6. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் துளசி அண்ணா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஏஞ்சலின் சகோ தங்களின் வாழ்த்திற்கு!

   நீக்கு
 7. அன்பார்ந்த குமார் சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்கள் அன்பு திக்குமுக்காட வைத்துவிட்டது. அனைவருக்கும் நன்றியுடன், அனைவரும் மகிழ்வாக அன்புடன் வாழ்ந்திட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். ஒவ்வொருவரின் பிறந்த நாளையும் தாங்கள் இங்கு வாழ்த்திப் பகிர்வதுடன் நம் வலையுலக உறவுகள் எல்லாம் வந்து அன்புடன் வாழ்த்து கூறிச் செல்வது நம் உறவுகள் அனைவரின் அன்பையும் உறுதிப்படுத்துவதாக அமைகிறது. அப்படி அமைய தாங்கள் செய்யும் இந்த அருபெரும்பணிக்கு வாழ்த்துகள் பாராட்டுகள். என்னைப்பற்றி என்று வலையுலக உறவுகளின் பதிவு, பிறந்தநாள் வாழ்த்துப் பதிவு என்று எல்லொரையும் இணைக்கும் பாலமாக நீங்கள் திகழ்வது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

  மீண்டும் மீண்டும் நன்றி சொல்லி என் அன்பினையும் இங்கு தெரிவித்துக் கொண்டு சொல்ல வார்த்தைகளின்றி, வார்த்தைகள் தேடி தங்களின் மற்றும் வலையுலக உறவுகளின் அன்பில் திக்குமுக்காடிச் சொக்கி இருக்கிறேன்.

  ஆம் உறவுகளைச் சொல்லி அழைப்பது சுகம்தான் இல்லையா...அண்ணே, தம்பி, அக்கா தங்கச்சி என்று....

  மிக்க நன்றி குமார் தம்பி வாழ்த்த்துகள் பாராட்டுகள்...

  பதிலளிநீக்கு
 8. குமார் சத்தியமாக என்ன சொல்ல என்று தெரியவில்லை. எங்கள் இருவரை மீண்டும் இங்கும் குறிப்பிட்டுச் சொல்லியமைக்கும் மிக்க நன்றி.

  நம் எல்லோரது அன்பையும் பரிமாறிக் கொள்ளும் ஒரு நல்ல தளமாக அமைந்துள்ளது....முகம் காணாமலேயே உறவு வளர்த்து அன்பு சொல்லி...என்ன சொல்ல குமார்? வார்த்தைகள் இல்லை...

  மிக்க நன்றி..

  உங்கள் தளத்திலும் சரி, எங்கள் ப்ளாகிலும் சரி ஏஞ்சல், அதிரா, நிஷா, மதுரைத்தமிழன் நான் எல்லொரும் அடித்து ஆடி அதகளம் பண்ணிக் கொண்டிருக்கிறோம்....அதற்கும் நன்றி...

  வாழ்த்துகள் பாராட்டுகள் குமார்!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேற்றைய ஜோதிஜி பதிவில் இன்னும் இருபது பின்னூட்டம் சேர்ந்திருக்கும், குமார் நான் பின்னூட்டம் போடக்கூடாதுன்னு தடை செய்திருந்தாப்ல கீதா. என்னால் பின்னூட்டவே முடியல்ல. போகட்டும் என விட்டுட்டேன். ஆமாம் உங்க என்னைப்பற்றி நான் இன்னும் படிக்கவே இல்லப்பா. மேடம் நிஷா இப்ப ஹோட்டல் வேலையோட சேர்ந்து ஈழத்து பிரச்சனைகளில் கால் பதித்திருப்பதனால்.. அங்கே நடக்கும் ரஜனிகாந்த இலங்கை வருகைக்கு எதிரா கோசம் போட்டுகிட்டிருக்கோம். அது தான் இங்கே எஸ்,மிஸ் ஆகுவேன். அரட்டை கழக தளபதி மதிரைத்தமிழரும்,, செயலாளர் ஆதிராவும், பொருளாளர் ஏஞ்சலும் நிர்வாகி நீங்களும் தொடர்ந்து நடத்துங்கோ. நான் அப்பப்ப்ப்ப்ப்ப ஜாயின் செய்து கொள்வேன். ஆனால் யாருக்காகவும் நம்ம கொள்கையை... அதான் அப்படி ஒன்னு இருக்கா என என்கிட்ட கேட்காதிங்க...... யாருக்கும் முக்கியமா இந்த மதுரை அண்ணாச்சிகிட்ட விட்டு கொடுத்திராதிங்க.

   நீக்கு
  2. நிஷா பட்டங்கள் தரும் போது அதோடு சேர்ர்ந்து தக்க பண முடிப்பும்தரணும் சும்மா சும்மா பட்டங்கள் மட்டும் தந்துவிட்டு ஒடுவது தப்பும்மா

   நீக்கு
  3. அப்படிப் போடுங்க மதுரை!!!

   கீதா

   நீக்கு
 9. குமார் எதற்கு ஃபோட்டோ திருடப்பட்டது என்று சொல்கின்றீர்கள். உங்களுக்கு இல்லாத உரிமையா? முகநூலில் பகிர்ந்தாலே அது எல்லோருக்கும் பப்ளிக் என்றாகிவிடுகிறதே...!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த போட்டோவில் நீங்க வில்லன் போல இருந்தீயளாம், இப்ப ஹீரோ போல சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு அடுத்த போட்டியில் இருக்கிங்களாம். குமார் என் காதில் சொன்னார். நான் சொன்னேன் என நீங்க அவரிடம் சொல்லிராதிங்க சார். மீண்டும் இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள். நல்ல மனம் வாழ்க.. நாடுபுகழ வெல்க.

   நீக்கு
  2. ஹஹஹஹ்ஹ அப்படியய சொன்னார் குமார் ஹஹஹ் ஸூப்பர் ஸ்டார் ரேஞ்சா ஹஹ் ஐயையோ அஅவர் உங்க ஊருக்கு அதான் இலங்கைக்கு வரார்னுதானே போராட்டம் நடத்துகிறீர்கள்...ஹஹ்

   மிக்க நன்றி நிஷா சகோ! பாட்டிற்கும் சேர்த்து...

   நீக்கு
 10. தங்கள் செல்ல மகளுக்கு எங்கள்இருவரின் அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள்! இறைவன் எல்லா நன்மையும் அளித்திட எங்கள் இருவரின் பிரார்த்தனைகளுடன் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 11. இனிய பிறந்ததின நல்வாழ்த்துகள் ஐயா. அனைவராலும் நேசிக்கப்படுதல் வாழ்வில் பெரும் வரமாக இருக்கும். அவ்வரம் பெற்ற உங்களை வாழ்த்துவதில் எனக்கும் மகிழ்ச்சி. பல்லாண்டு வாழ்க-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்று நிஷா சகோ! ஐயாவா??!!!

   குமார் இதுக்குத்தான் என் வயசெல்லாம் சொல்லக் கூடாதுனு ஹஹஹஹ்....பாருங்க என்னைய ஐயானுட்டாங்க நிஷா சகோ!

   நீக்கு
 12. அறிமுகத்திற்கான அறிமுகம் அசத்தலாக இருந்தது. அருமையான நண்பர். பலதுறைகளில் எழுதுபவர். திரு துளசி அவர்களின் நிதான எழுத்துகளை ரசிப்பவர்களில் நானும் ஒருவர். அவருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி முனைவர் ஐயா தங்களின் வாழ்த்திற்கும், பாராட்டுகளுக்கும்...

   நீக்கு
 13. துளசிதரன் அவர்களின் புகைப்படத்தைப் பார்க்கும்பொழுது மிகவும் இளைத்திருக்கிறார் என்று தெரிகிறது.உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். அவருடைய எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிக்கிறேன். குறும்படங்களையும் பார்க்கிறேன். நேரத்திற்கு உணவும் இளைப்பாறுதலும் வேண்டும் என்று நினைவூட்டுகிறேன். பல்லாண்டு வாழப் பரமனி வேண்டுகிறேன்.

  - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை சார் நான் இளைக்கவில்லை. அப்படியேதான் இருக்கிறேன். அதே போன்றுதான். உடல் நலன் நன்றாக இருக்கிறது. தங்களின் அக்கறைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி செல்லப்பா சார்!

   நீக்கு
 14. துளசிதரனுக்கு எனது குடும்பதினர் சார்பாக ( அக்கா நிஷா, பெரிய அக்கா அதிரா, அக்காஏஞ்சல், அக்காகீதா) மற்றும் தம்பி மதுரைத்தமிழனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இன்று போல என்றும் மகிழ்வோடு வாழ்த்துக்கள்


  சில பேரை பார்த்தவுடனே நமக்கு சட்டென்று பிடித்துக் கொள்ளும் அதில் துளசியும் ஒருவர் அவரின் அமைதியும் மென்மையான தன்மை எல்லோரையும் கவரும்


  துளசி எனக்கு அண்ணனாக இருந்தாலும் நான் துளசிதரன் என்றுதான் அழைக்க விரும்புகிறேன் அப்படி கூப்பிடுவதில்தான் அதிக உரிமையாக இருக்கும் என நான் நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மதுரைத் தமிழன் வாழ்த்திற்கு! துளசிதரன் என்றே அழையுங்கள்! அதிக உரிமை இருக்கிறது உங்களுக்கு இல்லாத உரிமையா! க்ளோஸ்னெசும் அதில் கிடைக்கிறது. மிக்க நன்றி தமிழன் தங்களின் அன்பிற்கும்!! நான் கொடுத்துவைத்தவன் இப்படி எல்லோரது அன்பும் கிடைக்க!! எத்தனை நன்றி சொன்னாலும் தீராது!

   நீக்கு
  2. மதுரை புல்லரிக்குது! அதான் எங்களை உங்கள் குடும்பம் என்று சொல்லியதற்கு...ஜோக்ஸ் அபார்ட்

   நாம எல்லாரும் ஒரே குடும்பம் போலத்தான் ஃபீல் வருது! அழகா சொல்லிட்டீங்க...மதுரைத் தமிழன்
   மிக்க நன்றி

   கீதா

   நீக்கு
 15. அதிரா அவர்களே தேம்ஸ் நதிக்குள் இருந்து மீண்டும் வெளி வந்து உங்களின் இளைய தம்பி துளசிதரனுக்கு வாழ்ட்தை சொல்லிவிட்டு செல்லுங்கள் ..


  (கதைகளில் விக்கராமதித்தன் அரசமரத்தில் மீண்டும் மீஈன்டு ஏறுவது போல அதிரா தேம்ஸ்நதிக்குள் போய்விடுவார்கள்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா தேம்ஸிலிருந்து எழுந்து வாக் போகும் போது நேரே எங்கள் தளத்திற்கு வந்து வாழ்த்து சொல்லிட்டு ஓடிவிட்டார்கள்! நீங்கள் அப்போது தூங்கிக் கொண்டிருந்தீர்கள் ஹிஹிஹி

   கீதா

   நீக்கு
 16. துளசிதரனையும் கீதாவையும் சந்தித்து இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. நானும் முகநூலில் வாழ்த்து தெரிவித்திருந்தேன் முகநூலுக்கு நன்றி நண்பர்களின் பிறந்த நாலை நினைவு படுத்துவதற்கு இல்லையேன்றால்சரியான நாளில் வாழ்த்துவது சிரமமாயிருக்கும் சிரமம் என்று நான் சொல்வது நினைவில் வைத்துக் கொள்வதைத்தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஜிஎம்பி சார் தங்களின் வாழ்த்திற்கு. முகநூலிலும் தங்கள் வாழ்த்தினைக் கண்டு அங்கும் பதில் இட்டுருக்கிறேன் சார். மிக்க நன்றி

   நீக்கு
 17. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் துளசிதரன் சார் . குமார் அவர்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குடந்தை சார் மிக்க நன்றி தங்களின் வாழ்த்திற்கு

   நீக்கு
 18. உங்கள் டைரி பக்கம் ஒன்றைப் படித்து போல இருந்தது

  அருமை தோழர்

  துளசி எனக்கும் நண்பர் என்பது மகிழ்வு

  தலைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

  தம

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கஸ்தூரி தங்களின் வாழ்த்திற்கும். என்னையும் தங்களுடன் நெருக்கமாக்கிக் கொண்டதற்கும்...

   நீக்கு
 19. துளசி அண்ணாவிற்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

  பல பல செய்திகளை உங்கள் தளத்தின் வழியாக நாங்கள் தொடர்ந்து அறிந்துக் கொள்கிறோம்... அது போல் மேலும் பல பல பதிவுகள் இட்டு....

  மன நலத்தோடும், உடல் நலத்தோடும் வாழ இறைவனின் அருள் கொடை பொலியட்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அனு ப்ரேம்குமார் சகோ தங்களின் வாழ்த்திற்கும் பிரார்த்தனைகளுக்கும்

   நீக்கு
 20. துளசி அண்ணனுக்கு வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 21. சகோதரர் துளசிதரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 22. ...இயக்குனருக்கு இனிய வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 23. நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 24. தங்கள் மகளுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 25. அருமை..அருமை..அருமை..
  -அன்புடன்-
  S. முகம்மது நவ்சின் கான்(99likes.in)

  பதிலளிநீக்கு
 26. அருமையான அன்பான பதிவு. வாழ்த்துக்கள் மூவருக்கும் :)

  பதிலளிநீக்கு
 27. அறிஞர் துளசிதரன் அவர்களுக்கு
  பிறந்த நாள் வாழ்த்துகள்!
  அவரைப் பற்றித் தெரியாதெனச் சொன்ன தாங்களா
  அவரைப் பற்றி A - Z சொல்லி இருக்கிறியள்...
  தாங்களைப் போல - நானும்
  அவரை மதிப்புக்குரிய அறிஞராகவே
  உள்ளத்தில் பேணுகிறேன்!

  பதிலளிநீக்கு
 28. மகளின் பிறந்தநாள் பதிவுக்காக காத்திருந்தேன் குமார் ..நீங்க பதிவு போடல்லையா ..எனிவே வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் மகளுக்கு ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அக்கா
   பதிவெழுத ஆசைதான்.... என்ன செய்ய
   வேலை இல்லைன்னு எல்லாரையும் ஊருக்கு அனுப்பிட்டு இப்ப வந்த வேலையை என்னோட தலையில் மொத்தமா இறக்கிட்டானுங்க... காலை எட்டு முதல் மாலை ஆறு வரை எந்திரிக்க முடியாத அளவுக்கு வேலை... மவுசை நகர்த்தி நகர்த்தி இரவு படுத்தால் கை வலி எடுக்கிறது....
   இரண்டு வாரம் முன்பு வரை வேலை இல்லை...
   இப்போ ஓய்வுக்கு நேரமில்லை...
   அதான் எழுதலை...
   போட்டோஸ் இங்கு பகிர்கிறேன் அக்கா...
   தங்கள் வாழ்த்தையும் ஆசியையும் அவங்ககிட்ட சொல்லிடுறேன்...
   நன்றி.

   நீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...