மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 15 மார்ச், 2017

9. என்னைப் பற்றி நான் - ஏஞ்சலின்

ன்னைப் பற்றி நான் பகுதி வாராவாரம் ஆராவாரமாகச் சென்று கொண்டிருக்கிறது. கேட்டதும் எழுதி அனுப்புவதும் தாங்களே மின்னஞ்சல் பண்ணி நான் இந்த வாரம் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அனுப்புவதும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

இந்த வாரம் ஆராவாரமாய்... அருமையாய்... தன்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் ஏஞ்சலின் அக்கா. இவரின் வலைப்பூவில் கருத்து இடுவது... அதுவும் நான் எப்படி கருத்திடுவேன் என்பது உங்களுக்கே தெரியும்... வாசித்தேன் என்பதை தெரியப்படுத்த ஒரு வார்த்தை / ஒரு வரி கருத்து மட்டும்தான் இடுவேன். அப்படியான ஒரு நட்புத்தான் இவரிடம்... நான் மலையாளப் படங்கள் குறித்து பகிரும் போது என் தளம் வந்து கேட்டு படங்களைப் பார்த்த சிலரில் அக்காவும் ஒருவர் அவ்வளவே. 

என்னைப் பற்றி நான் பகுதிக்கு எழுதி அனுப்ப முடியுமா என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பியதும் விரைவில் அனுப்புறேன் என்ற பதில் மின்னஞ்சல் வந்தது. அதன் பின் இரண்டு மூன்று நாளில் எழுதியும் அனுப்பிவிட்டார். இனி இரண்டு வலைப்பூக்களில் எழுதும் அவர், அவரைப் பற்றி பகிர்ந்தது தங்கள் பார்வைக்கு கீழே... வாசித்து கருத்தைச் சொல்லுங்க...



ன்னைப்பற்றி  பதிவுக்கு என்னை எழுத அழைத்த சகோதரர் குமாருக்கு நன்றி.

என்னைப்பற்றி நான் என்ன சொல்ல :) முதலில் வலைப்பூ ஆரம்பித்த கதையுடன் துவங்குகிறேன். 

பிப்ரவரி 2011 முதல் வலைப்பூவில் எழுதிக்கொண்டிருக்கிறேன். முதலில் துவங்கியது எனது ஆங்கில craft  வலைப்பூ papercrafts.

அப்படியே எல்லார் வலைப்பூக்களுக்கும் சென்று பின்னூட்டமிடுவேன் .ஆங்கில பின்னூட்டங்கள் தான். பிறகு மெதுவா தமிழில் பின்னூட்டமிட்ட ஆரம்பித்தேன். பிறகு சில நண்பர்கள் பிடிச்சி தள்ளிவிட்டதில் தமிழிலும் காகித பூக்கள்  என்ற வலைப்பூவில்  எழுத துவங்கினேன். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரியாமல் செய்து விட்டார்கள் .அதனால் அவங்களை ஒன்றும் சொல்ல வேண்டாம் :).

எனது முதல் பதிவில் ஒரு பிரமாணம் கூட எடுத்தேன் சமையல் குறிப்புகள் போட மாட்டேன்னு அதெல்லாம் காற்றில் போய்  அப்புறம் நான்  சமையல் குறிப்பிலும் கலக்க ஆரம்பிச்சுட்டேன் (நானே என்னை புகழ்ந்தால்தான்  உண்டு :)ஆரம்ப காலத்தில் இந்த கமெண்ட் மாடரேஷன் பற்றி எல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாதா...அப்போ கமெண்ட் போட்டு ஏன் வெளியாகல்லைனு மீண்டும் மீண்டும் போட்டு விடுவேன் எத்தனை பேர் நொந்து போனாங்களோ :)  ரொம்ப நாள் கழிச்சே கண்டுபுடிச்சேன் கமெண்ட் மாடெரேஷன் என்பது பற்றி...

சரி இப்போ கொஞ்சம் என்னைப்பற்றி சொல்லிக்கறேன்

நான் ஏஞ்சலின், பெங்களூரில் பிறந்து சென்னையில் வளர்ந்து பின்பு பல வருடங்கள் வெளி நாட்டு வாழ்க்கை... ரெண்டு பாட்டிகளோட  ஊரும் நாகர்கோயில்... ரெண்டு தாத்தாக்களோட  ஊரும் மதுரை... அப்பா ஊர் மதுரை...  அப்போ நான் எந்த ஊர்னு சொல்லுவது :??? யாதும் ஊரே யாவரும் கேளீர்னு சொல்லிக்கொள்கிறேன் :) 

ஒரு ரகசியம் சொல்லணும்... இப்போதெல்லாம் நான்  தமிழில் பேசினாலே வேற மொழியில் பேசுகிறாற்போலிருக்காம் சிலர் சொன்னாங்க :). ரொம்ப கஷ்டப்பட்டு சில நட்புக்களுக்கு வாழ்த்து அட்டையில் தமிழில் வாசகம் பேனாவால் எழுதினேன்.

கணவர்  மற்றும் மூன்று மகள்கள். மூத்த மகள் 11 ஆம் வகுப்பு படிக்கிறாள்... மற்ற இரண்டு மகள்களும் நாலுகால் மியாவ்  மகள்கள் :)

ஹோம் ஸ்கூலிங்தான்... இவங்க மட்டுமில்லாம அப்பப்போ வந்து என்னை சந்தித்து செல்லும் சில பறக்கும் மற்றும் நடக்கும் நாலு கால் செல்லங்களுமுண்டு... நான் வாயில்லா ஜீவன்களின் நண்பி மற்றும் அவற்றை நேசிக்கும் காதலி :)

நான் எங்கள் ஆலயம் மற்றும் எங்கள் பகுதி லைப்ரரியில் வாலண்டியரிங் செய்கிறேன்... படித்தது விலங்கியல்  மற்றும் ஆசிரியப்பயிற்சி... ஆனால் படித்த படிப்புக்கு துளியும் சம்பந்தமில்லாமல் வாழ்க்கை வேறு திசையில்  செல்கிறது...  பேப்பர் உருட்டுவதும் :) அதான் QUILLING  மற்றும் தோட்டம் போடுவதும்நடைப்பயிற்சிவாலண்டியரிங் மற்றும் எழுத்து என இவை அனைத்தையும் கால  அட்டவணை போட்டு செய்து கொண்டிருக்கிறேன். அதுவும் மீள்சுழற்சி கைவினைப்பொருட்கள் செய்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம்.

2012 முதல் பசுமை விடியல் மற்றும் நலம் ஆகிய இரு முகப்புத்தக பக்கங்களிலும் வீட்டு தோட்டக்குறிப்பு ஆரோக்கிய குறிப்பு விழிப்புணர்வு என எழுதி வருகிறேன். எழுத வேண்டும் என்கிற ஆர்வத்தில் சில நேரம் கட்டுப்பாடின்றி அரைப்பக்க செய்தியை மூன்று பக்கம் எழுதி விடுவேன் :) 

வெளிநாட்டு வாழ்க்கையில் பல்வேறு மனிதர்களை சந்தித்துள்ளேன் குறிப்பாக முதியோர் அப்புறம் குழந்தைகள்... இவர்களுடன் பேசுவது  பழகுவது மிகவும் பிடித்தமானது எனக்கு... நேருக்கு நேர் திட்டும் எதிரியை நேசிப்பேன் பின்னாலிருந்து குத்தும் நட்பை தூசியாய் தட்டி செல்வேன். 

இயற்கையை அதன் அழகை ரசிப்பதில் எனக்கு அதிக ஆர்வமுண்டு. சமீப காலங்களில் குமார் சகோவின் விமர்சனங்களை படித்து அதிகமாக மலையாள திரைப்படங்களை பார்க்க ஆரம்பித்துள்ளேன் :)

உடல் நலனை பேணிக்காப்பது அனைவருக்கும் அவசியம் ஆகவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுகிறேன்... உணவு கட்டுப்பாடு மற்றும் நடைப்பயிற்சி செய்கிறேன்... தொலைக்காட்சி நிகழ்சிகளைப் பார்ப்பதில்லை... குப்பை உணவுகளைத் தொடுவதில்லை... கோக் பெப்சிக்கு எங்கள் வீட்டில் அனுமதியில்லை... தோட்டத்து செடியின் பூச்சிகளுக்கு மட்டுமே அவை பயன்படுத்துகிறேன் :).
  
எழுத்து என்பது மிகவும் அற்புதமான விஷயம் நாம் பார்த்த தை அனுபவித்ததை உணர்ந்ததை எழுத்தாக்குவது உண்மையில் அழகான அனுபவம். எனக்கு வலைப்பதிவர்கள் பலரை பார்க்கும்போது எப்படி இவர்களால் மட்டும் இவ்வளவு அழகா எழுத முடியுது என வியப்பேன் !!! அவர்களில் சிலர் பற்றி சொல்கிறேன். 

வானதி மாதிரி திருமதி ஸ்ரீதர் எனும் ஆச்சி மாதிரி  எழுத ஆசை... அனுராதா பிரேம் போல் அழகாக பென்சில் ஓவியம் வரைய ஆசை... பிறகு சிரிக்க சொல்லிக்கொடுத்தது அதிரா... யோசிக்க சொல்லிக்கொடுத்தது கௌசல்யா தைரியமாய் கருத்துக்களை  சொல்ல வைத்தது கிரேஸ், நிஷாந்தி... அனுதினமும் அன்பு, அன்பே பிரதானம் என அனைத்தையும் நேசிக்க கற்றுக்கொண்டது  தில்லைஅகத்து கீதா மற்றும் துளசி அண்ணாவிடம்... ஆச்சர்யப்படுத்துவது சீனுகார்த்திக் சரவணன் எழுத்துக்கள். 

ஊக்கமூட்டுவது கோபு சார்கஸ்தூரிரங்கன்... உற்சாகப்படுத்துவது ஸ்ரீராம்கோமதி அக்காவல்லிம்மாமனோ அக்கா, மஹிதேனக்காநேசன், மனசு குமார்மதிப்பிற்குரிய துரை செல்வராஜூ ஐயா  மற்றும் சமீப காலமாக தொழில்நுட்ப பதிவர் மொஹம்மத்...    மலைக்க வைப்பது திருக்குறள் சொல்லும் சகோதரர் டிடி !!மற்றும் பின்னூட்டங்களால் நிறைய விஷயங்களை சுரேஜினிசித்ரா  மூலமாகவும் கற்றுக்கொண்டிருக்கிறேன். 

இப்படி எத்தனையோ பேர்...  அப்புறம் நம்பிக்கையும் தைரியமும் தருவது எங்க மதுரைத்தமிழனின், தம்பி சதீஷின் மற்றும் ஆனந்த் aka ஆவி யின்  நட்பு... சிலர் பெயரை விட்டுப்போயிருக்கலாம் ஆனால்  மறக்கவில்லை. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளேன். இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

என்னுடைய ஆசை எப்படியாவது வலைப்பூவை விட்டு ஒதுங்கியிருக்கும் அம்முலுவானதி, ஆச்சிஇளமதி   போன்றோரை மீண்டும் பதிவுகள் எழுத வைக்கணும்.

என்னைப்பற்றி வேறே சொல்ல ஏதாவது இருக்கிறதா விடுபட்டுள்ளதா என்று என்னுள்  தேடுகிறேன் :) அவ்வளவுதான் வேறொன்றுமில்லை.

குடும்பம்... வாயில்லா ஜீவன்கள்... அன்பான முகம்தெரிந்த / முகம் அறியாத, நேரில் சந்திக்காத நட்புக்கள்.... கைவினை... எனது வலைப்பூக்கள்... இதுதான் எனது அன்பு சூழ் சின்னஞ்சிறிய உலகம் .

மீண்டும் ஒருமுறை என்னைப்பற்றி பகுதி எழுத அழைத்த சகோதரர் குமாருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நட்புடன்,
ஏஞ்சலின்


என்னைப் பற்றி நான் பகுதிக்கு கேட்டதும் அனுப்பிக் கொடுத்தது மட்டுமில்லாமல் தாங்கள் விரும்பும் பதிவர்களாக நம் பதிவர் அனைவரையும் சொன்ன இடத்தில் எனக்கும் இடம் கொடுத்தமைக்கும் மிக்க நன்றி. தங்கள் வலைப்பக்கத்தில் தொடர்ந்து எழுதுங்கள் அக்கா...

மீண்டும் ஒரு முறை நன்றியைச் சொல்லிக்கிறேன்.

அடுத்த வாரம் மற்றுமொரு வலை ஆசிரியரின் பகிர்வோடு....
 -'பரிவை' சே.குமார்.

223 எண்ணங்கள்:

«மிகவும் பழையது   ‹பழையது   223 இல் 201 – 223
Avargal Unmaigal சொன்னது…

எஸ்கேப் எல்லாம் ஆகலை அடுத்த ரவுண்ட் அடிச்சு ஆடலாம் என்று வீட்டில் உள்ள சரக்கு எடுத்து நாலு ரவுண்ட் போட்டேனா அதுற்கு அப்புறம் நிஷா ஏஞ்சல் அதிரா கிதா என பெயர் சொல்லி உளருவதை பார்த்த பின் எங்க வீட்டம்மா என்னை நல்லா அட்சிச்சு துவைச்சிட்டாங்க..... இப்பதான் ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்தேன்

Avargal Unmaigal சொன்னது…

அய்யோ அடுத்த புதன் கிழமை நிஷாவை பற்றி அல்லவா பதிவு வருகிறது என்று பட்சி சொல்லுது அவர்கள் எழுதும் கருத்தே மிகப் பெரிய பதிவா இருக்குமே இப்ப அவரை பற்றி பதிவு வந்தா கடவுழே நீதானப்பா எங்களை காப்பாற்றனும்

நிஷா சொன்னது…

அய்யோ அடுத்த புதன் கிழமை நிஷாவை பற்றி அல்லவா பதிவு வருகிறது என்று பட்சி சொல்லுது அவர்கள் எழுதும் கருத்தே மிகப் பெரிய பதிவா இருக்குமே இப்ப அவரை பற்றி பதிவு வந்தா கடவுழே நீதானப்பா எங்களை காப்பாற்றனும்///////////////////////////////

இப்படி ஒரு பதில் அவர்கள் உண்மைகள் இட்டதாக மெயில் வந்திருக்கு, ஆனால் பதிவில் காணோம், என்னாச்சு?

நிஷா சொன்னது…

அய்யோ அடுத்த புதன் கிழமை நிஷாவை பற்றி அல்லவா பதிவு வருகிறது என்று பட்சி சொல்லுது அவர்கள் எழுதும் கருத்தே மிகப் பெரிய பதிவா இருக்குமே இப்ப அவரை பற்றி பதிவு வந்தா கடவுழே நீதானப்பா எங்களை காப்பாற்றனும்///////////////////////////////

ஆமாம் பொன்னியின் செல்வன் ஐந்து பாகத்தை தாண்டி எழுத வேண்டும் எனும் திட சங்கற்பம் எடுத்திருக்கின்றேன். என் பின்னூட்டம் ஐந்து பாகம் எனில் பதிவு எத்தனை இருக்கணும் என நீங்க தீர்மானிக்க முடியாதே?

நிஷா சொன்னது…

1.100,200 ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அப்படியே 300 க்கும் வழி காட்டுங்கோ அப்பனே. புண்ணியமாக போகும்,

நிஷா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நிஷா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நிஷா சொன்னது…

அப்படியாச்சும் பதிவை முழுதாக படித்து கருத்திட்டால் போதும்,

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

என்னாது மதுரைத் தமிழன் உங்களுக்கு மூளை இல்லையா!!! சரி சரி எனது மூளை வொர்க்ஷாப் போய் தொலைந்து போனது போல் உங்களதுமா...ஸ்பேர் வேண்டுமா சொல்லுங்கள் இங்கு நிறைய இருக்கிறது!!ஹிஹிஹிஹி...இந்த ஸ்பேரும் காமெடி ந்யூரான்ஸ் உள்ளதுதான்..க்வாலிட்டி உள்ளதுதான்.....ச்சே அன்று இங்கு வர முடியாமல் போய்விட்டது....சூடு ஆறிப் போய்கமென்ட்...கொடுக்கிறேன்...

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஐயோ மதுரை நீங்க இப்ப சிரிப்பது போல எழுதியிருக்கீங்களே இப்படித்தான் நாங்கள் உங்கள் பதிவைப் பார்த்துச் சிரிப்போம்....அது சரி சொல்லவே இல்ல ஏஞ்சல் சொல்றாங்க பூரிக்கட்டை கின்னஸிலாமெ...

ஏஞ்சல் அப்ப மதுரை நமக்கெல்லாம் அவரே அவர் கையால சமைச்சு விருந்து தரப் போறாருனு சொல்லுங்க....

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஓ சூப்பர்!!! அதிரா டீல் ஓகே!!! ஆனா பாவம் தேம்ஸ்ல எதுக்குத் தள்லணும்...அவர் இருக்கறதே கடல் பக்கத்துலதானே!!!

கீதா

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

@மதுரைத் தமிழன்....ஹஹஹஹஹ் ரசித்தேன் உங்கள் கமென்டை டைம்லி விட்!!!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஐயோ மதுரை உங்கள் கமென்ட்ஸை எல்லாம் அன்று சூடாக இருக்கும் போது மிஸ் பண்ணிவிட்டேனே....செம டைம்லி இதுவும் "சர்ச்"!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மதுரை, ஏஞ்சல் அன்ன நடையாக்கும் தெரியாதா!!! அன்னம் போல நடை நடந்து என்று அவர் வாக் போகும் போது பார்க்கும் அன்னங்களைப் போலவே நடப்பார்!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அதிரா பூனைக் கண் பதிலாக பூனைக் கண்ணாடியா ஹஹஹ...

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஹஹஹ் மதுரை அதான் ஏஞ்சல் நடை பற்றி மேலே பாருங்கள்...

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஹை நிஷாநீங்களும் நம்ம கட்சிதானா சூப்பர்..ஸோ நிஷா, ஏஞ்சல் ஹைஃபைவ்

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நிஷா உங்கள் திறமை கண்டு வியக்கிறேன்! வாழ்த்துகள் நிஷா! ஸ்விஸ் வந்தால் உங்கள் வீடுதான் கண்டிப்பாக!! யுகே போனால் ஏஞ்சல் அதிரா....

நியூஜெர்சியும்ஏ லிஸ்டில் இருக்கிறது!!! யாருனு தெரியும்ல...இது!!

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆமாம் நிஷா இவங்க மூனு பேரும் ஏன் நீங்களும் சேர்ந்தால் அதிரா போல் அதிரும்தான்!!ஹிஹிஹி அதிரா மீ எஸ்கேப்!!

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நிஷா உங்கள் பதிவுக்கு வெயிட்டிங்க் ரிசர்வ்ட்!! என்ன நெட் அன்று படுத்தாமல் இருக்கணும்னு பிரார்த்தனை....அடுத்து உங்கள் பதிவுதான் என்று நினைக்கிறேன் யூகம் தான்!! மதுரையும் அப்படித்தான் சொல்லியிருக்கிறார்...

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் மிக்க நன்றி மிக்க நன்றி குமார். இப்படியான அதிரடி பின்னூட்ட ஆட்டம் ஆஹா போட வைக்கிறது எத்தனை இனிய நட்புகள்!! அன்பு பறிமாற்றங்கள்....உங்களுக்கு ஹேட்ஸ் ஆஃப் குமார்!! உங்களால்தான் இப்படி ஒன்று இங்கு அமைந்திருக்கிறது!!! இதற்கு வழி வகுத்துக் கொடுத்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றி உரைக்க்கிறோம்...எத்தனை நன்றி சொன்னாலும் தீராது! ரொமப்வே எஞ்சாய் செய்தோம்!! குமார்...நன்றி மீண்டும்....

கீதா

Angel சொன்னது…

நன்றி :) நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

222 கருத்துக்களை வழங்கி அனைவருக்கும் நன்றி.....

«மிகவும் பழையது ‹பழையது   223 இல் 201 – 223   புதியவை› புத்தம் புதியவை›