மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 31 மார்ச், 2017ஸ்ருதியின் பிறந்தநாள் போட்டோஸ்

மார்ச் 26 - ல் ஸ்ருதியின் பிறந்தநாள்... ஒவ்வொரு வருடமும் எதாவது எழுதுவேன். இந்த வருடம் எழுத இயலா சூழல்...  எனவே பதிவெழுதாமல் முகநூலில் மட்டும் வாழ்த்தைப் பகிர்ந்து கொண்டேன். அங்கு நிறைய வாழ்த்துக்களும் ஆசிகளும்... இங்கு ஏன் பகிரவில்லை என ஏஞ்சலின் அக்கா கேட்டிருந்தார். உடல் சோர்வே பதிவெழுத... வாசிக்க யோசிக்க வைக்கிறது. என்னைப் பற்றி நான் மட்டும் தொடர்ந்து பதிய வேண்டும் என்பதில் கவனமுடன் இருக்கிறேன்...  சரி விஷயத்துக்கு வருவோம். 

எங்க வீட்டில் அம்மாவும் பையனும் ஜனவரியில்... நானும் பாப்பாவும் மார்ச்சில்... அதே தமிழ் மாதம் எனில் மார்கழி அம்மா... தை தம்பி... மாசி நான்... பங்குனி பாப்பா... இப்படி நாலு தமிழ் மாதங்களில் பிறந்தநாள் கொண்டாட்டம்.

வாட்ஸ்-அப்பில் எனக்கு வந்த பிறந்த நாள் போட்டோக்கள் சிலவற்றை இங்கு பகிர்கிறேன்... 


மேலே இருக்கும் படங்களில் பிறந்தநாள் கேக்குக்கு மேல் இருக்கும் படம் எங்க தேவகோட்டை வீட்டின் முன் எடுத்தது... கீழ் இருக்கும் படம் எங்க ஊர் பரியன்வயல் எங்க வீட்டில் பிறந்த நாள் கொண்டாடிய போது எடுத்த படம். பிறந்தநாள் முடிந்த அடுத்த நாள் எங்க ஊரில் அம்மாவின் வண்டியை எடுத்து ஓட்டிப் பழகியாச்சு... ஆஹா இனி பள்ளிக்குப் போக வண்டி கேப்பாங்களோ...:)

பிறந்தநாள் பதிவு ஏன் எழுதலைன்னு கேட்டதற்கான பதிவு இது...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
-'பரிவை' சே.குமார்.

15 கருத்துகள்:

 1. தாமதமானாலும் மகளுக்கு என் மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்!!

  பதிலளிநீக்கு
 2. மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு

 3. முதல் படம் மிக அட்டகாசம் கண்ணே பட்டுவிடும் போல இருக்குது,,,குட்டிக்கு மறுபடியும் என் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. ஸ்ருதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! அவளது எதிர்காலம் வளமானதாக எல்லாம் வல்ல அரவிந்த அன்னையின் அருளைக் கோருகிறேன்.

  - இராய செல்லப்பா நியூஜெர்சி

  பதிலளிநீக்கு
 5. தங்களது ஃபேஸ்புக்கில் ஏற்கனவே எனது வாழ்த்துகளை தெரிவித்து இருந்தாலும்,தங்கள் மகள் ஸ்ருதிக்கு மீண்டும் எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துக்கள் ஸ்ருதிக்கு ..சீக்கிரம் டூவீலர் வாங்கணும் மகளுக்கு :) இளங்கன்று பயமறியாது ..படங்கள் அழகு

  பதிலளிநீக்கு
 7. பாப்பாவுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 8. சுருதிக்கு அன்பார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. எனது இனிய பிறந்த நாள் வாழ்்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. பதிவு அருமை
  நான்
  முகநூலில் வாழ்த்தி இருந்தேன்.
  தங்கள் மகள்
  சிறந்த அறிஞராக வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 11. மக்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தெரிவித்துவிடுங்கள்.

  பதிலளிநீக்கு
 12. ஸ்ருதிக்கு எனது வாழ்த்துகளும் உரித்தாகுக....

  பதிலளிநீக்கு
 13. ஸ்ருதிக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. ஸ்ருதிக்கு அன்பின் நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 15. முந்தைய நாள் வாழ்த்திவிட்டுப் போய் மறுநாள் குழந்தை ஸ்ருதியின் பிறந்தநாள் அன்று வந்து வாழ்த்து தெரிவிக்க இயலாமல் போனது..தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள்! ஸ்ருதி!! மிக்க மகிழ்ச்சியுடன் எப்போதும் இருந்திட பிரார்த்தனைகளுடன் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...